சனி, 17 டிசம்பர், 2011

ஈமு கோழி பித்தலாட்டம்

விவசாயிகளை தொழிற்சாலைகள் எவ்வாறு பழி வாங்குகின்றன என்று பலருக்கும் தெரியும். அவர்களை இப்போது சில சமூக விரோதிகளும் எப்படி ஏமாற்றுகிறார்கள் என்று பார்ப்போம்.

ஈமு கோழி என்று ஒரு ரகம்.


சுமார் 5 அல்லது 6 அடி உயரம் வளரும். அறுபது அல்லது எழுபது கிலோ எடை இருக்கும். ஒன்றரை வயது ஆன கோழி முட்டையிட ஆரம்பிக்கும். முட்டை ஒன்று ஆயிரம் ரூபாய்க்கு விலை போகும் என்று சொல்கிறார்கள். ஆனால் இப்போதைக்கு கோழியின் இறைச்சிக்கோ முட்டைக்கோ மார்க்கெட் இல்லை.

ஆனால் இந்தக் கோழியைக் காட்டி பலர் லட்சக்கணக்கில் விவசாயிகளை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறார்கள். கூகுளில் பல ஏமாற்றுக்கதைகள் வெளியாகி உள்ளன. ஆனாலும் மக்கள் மேலும் ஏமாறத் தயாராக இருக்கிறார்கள்.

லேடஸ்ட்டாக கோவை சாயிபாபா காலனியில் ஒரு கம்பெனி ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டால் உங்களுக்காக அவர்களே அவர்கள் வைத்திருக்கும் ஈமு பண்ணையில் ஆறு ஈமு கோழிகள் வாங்கி விட்டுவிடுவார்கள். அவைகளைப் பராமரிப்பது, முட்டைகளை விறபது ஆகிய அனைத்து வேலைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

ஈமு கோழி வளர்ப்பில் எக்கச்சக்கமான லாபம் வருவதாக அவர்கள் சொல்லுகிறார்கள். அதனால் உங்கள் முதலீடான ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள். எவ்வளவு பேர் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரம் தெரியவில்லை. ஆனால் மற்ற மாவட்டங்களில் இந்த மாதிரி கம்பெனிகளுக்கு இருக்கும் ஆதரவைப் பார்த்தால் ஏகப்பட்ட பேர் முதலீடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம் கொடுக்கக் கூடிய தொழில் மீட்டர் வட்டித் தொழில்தான். அதிலும் அதிக முதலீடு செய்தால் அந்த அளவுக்கு லாபம் காண முடியாது. ஆகவே இந்த கம்பெனி முழுதுமாக மோசடிக் கம்பெனி என்று படுகிறது. மக்கள் விழிப்புடன் இருக்கவேண்டும்.


18 கருத்துகள்:

 1. நானும் கேள்விப்பட்டுள்ளேன்..... ஈமு கோழி வளர்ப்பில் நம்பிக்கை மோசடி இருப்பதாக.....

  மக்கள் திண்டாடும் முன் அரசு கவனிக்க வேண்டும்....

  பதிலளிநீக்கு
 2. சரியான நேரத்தில் எச்சரிக்கை மணி அடித்துள்ளீர்கள் சார்

  பதிலளிநீக்கு
 3. பேராசை பெருநஷ்டம் தான் சார்...விழிப்புனர்வு பதிவுக்கு நன்றி!

  சமீபகாலமாக ஈமு கோழிப்பண்ணைகள் நிறைய விளம்பரங்கள் வருது..

  ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஈமு கோழியும், நெருப்புக்கோழியும் ஒன்றா?
  நெருப்புக்கோழியின் சாது அவதாரமா இந்த ஈமு?
  சற்று விளக்குங்களேன்

  பதிலளிநீக்கு
 4. //குடிமகன் said...
  பேராசை பெருநஷ்டம் தான் சார்...விழிப்புனர்வு பதிவுக்கு நன்றி!
  ஐயா எனக்கு ஒரு சந்தேகம் ஈமு கோழியும், நெருப்புக்கோழியும் ஒன்றா?
  நெருப்புக்கோழியின் சாது அவதாரமா இந்த ஈமு?
  சற்று விளக்குங்களேன்//

  நெருப்புக் கோழியும் ஈமு கோழியும் மரபு ரீதியாகத் தொடர்புடையவை. ஆனால் இரண்டும் வேறு வேறு.

  ஈமு கோழி சாது என்று உங்களுக்கு யார் சொன்னது? புது ஆள் போனால் ஒரே கொத்தில் ஆள் சாய்ந்து விடுவான் தெரியுமுங்களா?

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்!
  //ஈமு கோழி சாது என்று உங்களுக்கு யார் சொன்னது? புது ஆள் போனால் ஒரே கொத்தில் ஆள் சாய்ந்து விடுவான் தெரியுமுங்களா?//
  புதிய வகை ஈமு கோழியின் குணத்தைப் பற்றி தங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.எச்சரிக்கை செய்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. தங்களது விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி. நம் மாநிலத்தில் விலை நிலங்கள் எல்லாம் பிளாட்டு போட்டு விற்றுத் தள்ளுகிறார்கள், அதை வாங்குபவர்களில் பெரும்பாலும் ஒரு முதலீடாகத்தான் வாங்குகிறார்களே தவிர வீடு கட்டுபவர்கள் மிகக் குறைவு. ஒரு புறம் பெருகி வரும் மக்கட் தொகை, இன்னொரு புறம் சுருங்கும் விவசாய நிலங்கள். இது எங்கு போய் முடியுமோ தெரியவில்லை. இதிலிருந்து நமது சமூகம் விடுபட தங்களைப் போன்றவர்கள் ஏதாவது செய்ய வேண்டும், செய்வீர்களா?

  பதிலளிநீக்கு
 7. /////ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் பத்தாயிரம் லாபம் கொடுக்கக் கூடிய தொழில் மீட்டர் வட்டித் தொழில்தான்////

  சரியாச் சொன்னீங்க ஐயா...


  ////ஈமு கோழி வளர்ப்பில் எக்கச்சக்கமான லாபம் வருவதாக அவர்கள் சொல்லுகிறார்கள். அதனால் உங்கள் முதலீடான ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு மாதம் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுப்பதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள்.//////

  இதுபோன்ற மக்களை ஈர்க்கும் போலி வியாபாரிகளை
  அரசு கண்காணிக்க வேண்டும். ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்னர்
  இதே போல தேக்கு மரம் ப்ளான்டேசன் அப்படின்னு ஒன்னு வளம் வந்துச்சு
  அங்கே பணம் போட்டோறேல்லாம் துண்டை தலையில் போட்டுட்டு
  போனது தான் மிச்சம்,
  அருமையான விழிப்புணர்வு பதிவுக்கு நன்றிகள் பல ஐயா.

  பதிலளிநீக்கு
 8. நம் மக்களுக்கு இருக்கும் பேராசை, ஒரே இரவில் சினிமா போல குபேரனாகிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை இவ நடந்தே தீரும். ஈந்த வாரம் ஜூனியர் விகடனில் வந்த ஒரு கட்டுரை இதை தெளிவாகச் சொல்கிறது. 150000 ரூபாய்க்கு 10000 ரூபாய் கொள்ளஒயடித்தாலும் கொடுக்க முடியாது. அப்படியும் அவர்கள் பணம் கட்டுகிறார்கல் என்றால் அநட்்ஹ விவசாயிகள் பணத்தை இழப்பதற்குக் கடமைப் பட்டவர்கள்.

  பதிலளிநீக்கு
 9. விதவிதமாக ஏமாற்றுவதற்கு ஆட்கள் புற்றீசல் போல கிளம்பிக் கொண்டு இருக்கும் வேளையில் நல்லதோர் விழிப்புணர்வு பதிவு....

  பதிலளிநீக்கு
 10. விழிப்புணர்வை ஏற்ப்படுத்தக்கூடிய பதிவு , என்னதான் எச்சரிக்கையோடு இருந்தாலும் மக்களை ஏமாற்ற புது புது ரூட்டுல வந்துகிட்டே இருக்காங்க, தண்டனைகள் கடுமையான இந்த மாதிரி தப்புகள் குறையும்,

  பதிலளிநீக்கு
 11. there is no details about what is wrong.... it just saying... don't go generally.. give full details... what is wrong with this?

  பதிலளிநீக்கு
 12. யாருங்க நம்ம ஊருல சொன்னா கேக்கறாங்க....... பட்டாத்தான் புத்தி வரும்.

  பதிலளிநீக்கு
 13. அய்யா என் பெயர் க,ம, குபேரன் நான் ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் வசித்து வருகிறோன் நான் கணினி விற்பனை மற்றும் சேவை செய்து வருகிறேன் எங்கள் மாவட்டத்தில் தான் நீங்கள் கூறும் ஈமு கோழி மோசடி அதிகம் உள்ளது மேலும் தற்போது நாட்டுக் கோழி பண்னை மோசடி உருவாகி கெண்டு வருகிறது இதை அனைத்தையும் ஆரம்பகாலத்தில் தடுத்து நிறுத்த காவல் துறைக்கு தகவல் தந்து அவர்களை தடுக்க முடியாதா?????

  காவல் துறை இது போல நடக்கும் மோசடியை தடுக்க நாம் என்ன சொய்யலாம்,

  பதிலளிநீக்கு