செவ்வாய், 1 ஜனவரி, 2013

புதுவருடத் தீர்மானங்கள்


புது வருடம் என்றால் புது வருடத் தீர்மானங்கள் மிக அவசியம். மனிதன் தன்னை எப்பொழுதும் உயர்த்திக்கொள்ளவே விரும்புகிறான். அதற்கு இந்த புது வருடத் தீர்மானங்கள் மிகவும் உதவுகின்றன.

நான் ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி புது வருடத் தீர்மானங்கள் போடுவது வழக்கம். இத்தனை வருடங்காக நான் போட்ட தீர்மானங்களை எல்லாம் நடைமுறைப் படுத்தியிருந்தால் நான் இப்போது கடவுளர் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால் விதி வலியது. அந்த மாதிரி எதுவும் நடக்காமல் அந்தக் கடவுள்தான் காப்பாற்றினார்.

அதற்காக புது வருடத்தில் தீர்மானம் போடாமல் இருக்க முடியுமா? ஆகவே என்னுடைய புது வருடத் தீர்மானங்களை உங்கள் மேலான பார்வைக்கு வைக்கிறேன்.

கருப்பு எழுத்தில் இருப்பது என் தீர்மானம்.

சிவப்பு எழுத்தில் இருப்பது நிஜத்தில் நடக்கப்போவது.


1. பெண்டாட்டி சொல்வதைத் தட்டக்கூடாது.

(அதாவது காதில் விழுந்தால். காதுதான் டமாரமாகி பல வருடம்                                                                                                                                                             ஆகிவிட்டதே.) 

2. கோபத்தை ஒழிக்க வேண்டும்.

கார் ஓட்டும்போது பின்னால் வருபவன் ஹார்ன் அடிக்காதவரை.

3. அளவாக சாப்படவேண்டும்.

கல்யாண விருந்துகள் எக்செப்ஷன்.

4. தினமும் டைரி எழுதவேண்டும். முதல் பக்கத்தில் இந்த தீர்மானங்களை எழுதி வைத்து, தினமும் படிக்கவேண்டும்.

டைரியை ஒன்றாம் தேதி மூடி வைத்தால் அடுத்த வருடம் வரையில் திறக்கக் கூடாது.

5. நாட்டு நடப்புகளை கண்டும் காணாதது போல் இருக்கவேண்டும்.

முடியலையே. ஏதாவது சொல்லணும் போல் அரிக்குதே.

6. இந்த வருடம்  நல்ல விஷயங்களைப் பற்றி மட்டுமே பதிவு எழுதவேண்டும்.

அநேகமா இந்தத் தளத்தில பதிவுகள் வராது என்று தினைக்கிறேன்.

7. டெம்ப்ளேட் கமென்ட்டுகள் போடக்கூடாது.

அதாவது மொத்தத்தில் கமென்ட்டுகள் போடக்கூடாது.

8. இந்த வருடத்தில் உலக மக்கள் எல்லோரும் நல்லவர்களாக   மாறவேண்டும்.

அதாவது இந்த வருடமும் மாயன்காரர்கள் உலகம் அழியும் என்ற புரளியை பரப்ப வேண்டும்.

9. கொலை, கொள்ளை, வழிப்பறி, பலாத்காரம் சம்பந்தப்பட்ட செய்திகளைப் படிப்பதில்லை.

அப்புறம் என்னத்துக்கு பேப்பருக்கு வீண் செலவு. நிறுத்திடவேண்டியதுதான்.

10. சாப்படுவதற்கு மட்டும்தான் வாயைத் திறக்கவேண்டும்.

வயிறு வீங்கி செத்துப் போயிடுவீங்க.


இவ்வளவு போதும் என்று நினைக்கிறேன். இது போன்று வேறு நல்ல தீர்மானங்கள் நேயர்களுக்குத் தோன்றினால், பின்னூட்டத்தில் தெரிவித்தால், அவைகளையும் சேர்த்துக்கொள்கிறேன்.

31 கருத்துகள்:

 1. நல்லா காமெடி பண்ணறீங்க, சார். இனிமேற்கொண்டு பாசிடிவ் பதிவுகள் மட்டும்தான் போடுவீர்களாக்கும். பார்ப்போம், எத்தனை நாளைக்கு இந்த வைராக்யம்னு.

  இப்படித்தான் பதிவுலகத்தை விட்டுப் போறேன்னு சொன்னீங்க, ஒரு வாரத்தில வந்துட்டீங்க.

  எல்லாத்துக்கும் ஒரு சமாதானம் வேற சொல்லிடுவீங்க. உங்களை நம்ப முடியாது, சார்.

  பதிலளிநீக்கு
 2. ஒரு சின்ன 2013 சந்தேகம்.

  தினமும் புத்தகங்கள் ஏதாவது படிப்பீங்களா?அதற்கு நேரம் உங்களுக்கு கிடைக்குமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நேரம் நிறைய இருக்கிறது. ஒரு காலத்தில் ஏகப்பட்ட தமிழ் ஆங்கில நாவல்கள் படித்திருக்கிறேன். ஆனால் இப்போது ஆர்வம் மகவும் குறைய்து போய்விட்டது. அத்தகைய புத்தகங்கள் அனைத்தையும் தானம் பண்ணிவிட்டேன. இப்போது ஆன்மீகப் புத்தகங்கள் மட்டுமே என்னிடம் இருக்கின்றன. அவைகளை அவ்வப்போது புரட்டுவதுண்டு.

   நீக்கு
 3. "இதுவரை நாங்க தீர்மானம் போட்டதில்லை."
  போன வருஷம் கூட தீர்மானம் போட்டீங்களே! என்ன ஆச்சு"
  "அது போன வருஷம்! நான் சொல்றது இந்த வருஷம்"

  பதிலளிநீக்கு
 4. ரசிக்கும்படியான சுவாரஸ்யமான சிறப்புப் பதிவு
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
  உங்களுடைய தீர்மானங்களோடு இதையும் சேர்த்துக்கொள்ளவும்.

  யாருக்கும் அறிவுரை சொல்லக்கூடாது.

  சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடுமே!

  பதிலளிநீக்கு
 6. புத்தாண்டு தீர்மானங்களுக்கு பாராட்டுக்கள்..

  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் .

  பதிலளிநீக்கு
 7. 4 வது சூப்பர்.. இன்னும் சிரித்துக்கொண்டேதான் இருக்கிறேன் :))

  பதிலளிநீக்கு
 8. அன்புடையீர் வணக்கம்! எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!

  //நான் ஒவ்வொரு வருடமும் இந்த மாதிரி புது வருடத் தீர்மானங்கள் போடுவது வழக்கம்.இத்தனை வருடங்காக நான் போட்ட தீர்மானங்களை எல்லாம் நடைமுறைப் படுத்தியிருந்தால் நான் இப்போது கடவுளர் வரிசையில் இருக்க வேண்டும். ஆனால் விதி வலியது. அந்த மாதிரி எதுவும் நடக்காமல் அந்தக் கடவுள்தான் காப்பாற்றினார்.//

  அய்யா! அடுத்த ஆண்டு (2014) ஜனவரி முதல் தேதிக்கும் இப்போதே முன்னுரை எழுதி வைத்துக் கொண்ட மாதிரி இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. நாம அதிகமா ஆன்மீகத்துல ஈடுபடுகிறதா முடிவெடுத்திருக்கிறோம்...:)
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்

  பதிலளிநீக்கு
 10. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் கந்தசாமி ஐயா.

  பதிலளிநீக்கு
 11. மனதில் தோன்றும் எதிர்மறை எண்ணங்களை புறந்தள்ளி, நேர்மறை எண்ணங்களை மட்டுமே நினைத்துக் கொள்ளலாம்.

  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 12. நடைமுறைக்கு எந்த ஆண்டு வரும் என்ற தீர்மானமும் சேர்த்துக்கொள்ளலாம்.

  வரும் ஆனா...........?

  புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல தீர்மானங்கள்!!
  இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 14. இனி பதிவுலகம் பக்கமே வருவதில்லை... புதிய பதிவுகள் போடுவதும் இல்லை, மற்ற பதிவுகளைப் படிப்பதும் இல்லை!

  "இரவு 10 மணி முதல் காலை நாலு மணி வரை மட்டும்"

  பதிலளிநீக்கு
 15. நினைப்பதும், நடப்பதும் இதுதான்! உண்மை !

  இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 16. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் அய்யா

  பதிலளிநீக்கு
 17. இந்த வருடம் பதிவுகள் நிறைய படித்து நேர விரயம் பண்ணக்கூடாது

  சொறி பிடிச்சவன் கை சும்மா இருக்குமா. வேலையே பாக்கறத்துக்கு முன்ன ப்ளாக் படிக்கத்தானே ஓடுது!

  பதிலளிநீக்கு

 18. எல்லா தீர்மானங்களையும் நீங்கள் நிறைவேற்றலாம். ஆனால்..... அந்த எட்டாவது தீர்மானம் உங்களால் முடியுமா.?

  பதிலளிநீக்கு
 19. நல்ல தீர்மானங்கள். புத்தாண்டு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 20. என்னோட தீர்மானம்

  மத்தவங்களுக்கு அறிவுரை சொல்லக் கூடாது!!

  பதிலளிநீக்கு