புதன், 16 ஜனவரி, 2013

நவீன டாய்லெட்களை உபயோகிப்பது எப்படி?அதி நாகரிக சுந்தரர்கள் - சுந்தரிகள், மற்றும் மென்மையான இருதயம் படைத்தவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம். அவர்கள் இதில் எழுதப்பட்டிருக்கும் விளக்கங்களைப் படித்து அருவருப்படைவார்கள். ஏனெனில் அவர்கள் தேவலோகத்திலிருந்து நேரடியாக பூமிக்கு வந்தவர்கள். அவர்களுக்கு இந்த மாதிரி காலைக் கடன்களுக்கு அவசியம் இல்லை.

இந்தப் பதிவு, காலைக் கடன்களில் அதிமுக்கியமானதைப் பற்றியது. இதைப் பற்றிய தெனாலிராமனின் வேடிக்கைக் கதை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தெரியாதவர்களுக்காக இந்தப் பதிவில் அந்தக் கதையை போட்டிருக்கிறேன்.

உங்கள் சொந்த வீடானாலும் அடுத்தவர் வீடானாலும் இந்த செயலில் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் ஒன்றே.

நெ.1 மற்றும் நெ.2 என்று மறைபொருளாகக் குறிப்பிடப்படும் இந்த "வெளிக்குப் போதல்" என்ற காலைக் கடனைப் பற்றி ஒரு பெரிய புத்தகமே எழுதலாம். அவ்வளவு விஷயங்கள் இதில் இருக்கின்றன. "லண்டனுக்குப் போய்ட்டு வரேன்" என்றும் இதைக் குறிப்பிடுவதுண்டு.

காலை பொழுது விடிவதற்கு முன் எழுந்து காலாற கம்மாய்க் கரைக்குப் போய் "உட்கார்ந்து" விட்டு கம்மாயில் "கால் கழுவி" விட்டு, வரும் வழியில் ஒரு வேப்பங்குச்சியை முறித்து வாயில் வைத்துக் கொண்டு எதிரில் வருபவர்கள் எல்லோருடனும் ஊர் வம்பு, வழக்கு பேசிவிட்டு, வீட்டிற்கு வந்து வாய் கொப்பளித்து விட்டு, கால்கை கழுவிவிட்டு, காப்பி குடிக்கும் அனுபவமே தனி சுகம். சொர்க்கத்தில் கூட இத்தகைய சுகம் கிடைக்காது என்று சத்தியம் செய்யும் பெரிசுகள் இன்றைக்கும் நம் கிராமங்களில் உண்டு.

ஆனால் இன்றைய நகர (நரக) வாழ்க்கையில் இந்த சுகத்திற்கு இடம் இல்லை. "டாய்லெட்" என்று நாகரிகமாக அழைக்கப்பெறும் நவீன கக்கூஸ்கள் தவிர்க்க முடியாதனவையாக ஆகிவிட்டன.


இவைகளில் "இந்தியன் டைப்" எனப்படுபவை இந்திய பாணிக்காக வடிவமைக்கப்பட்டவை. குத்துக்காலிட்டு உட்காரும் வழக்கத்திற்கேற்ப உள்ளவை. வெட்டவெளியில் காலைக்கடனைக் கழிப்பது போன்றது. என்ன, இது நாலு சுவர்களுக்குள் இருக்கும். இவைகளில் நம் காரியம் முடிந்து வெளியில் வரும்போது தண்ணீர் விட்டு கிளீன் செய்து விட்டு வெளியில் வரவேண்டும். (இப்போதெல்லாம் தானியங்கி பிளஷ்கள் வந்து விட்டன). ஆனாலும் அவைகளை இயக்குவதற்கு உண்டான பட்டனை அழுத்தவேண்டும் அல்லது செயினை இழுக்கவேண்டும்.


இங்குதான் நம் "கனவான்கள்" சொதப்பும் இடம். தண்ணீர்விட்டு பேசினை கழுவ மாட்டார்கள். வெட்ட வெளியில் வெளிக்குப் போனபின் எழுந்து நடையைக் கட்டுவது போலவே இங்கும் போய்விடுவார்கள். அடுத்து அங்கு செல்லும் நபர் என்ன பாடுபடுவார் என்று சிறிது கற்பனை பண்ணிப் பாருங்கள்.

இந்த நிலை மறதியால் ஏற்படுவது அல்ல. அறியாமையினால் ஏற்படுவது. அதற்காகத்தான் இந்தப் பதிவு. பல பொது இடங்களில் இதைப் பற்றிய ஒரு அறிவிப்பு வைத்திருப்பார்கள். "டாய்லெட்டை உபயோகித்தபின் பிளஷ்ஷை உபயோகியுங்கள்" என்று அறிவிப்பு இருக்கும். பலர் அந்த அறிவிப்பு தங்களுக்குத்தான் என்று உணராமல் டாய்லெட்டை உபயோகித்த பின் அப்படியே வந்து விடுவார்கள். இதைப் போன்ற கொடுமை வேறு இல்லை.


அடுத்தது "வெஸ்டர்ன் டைப்" டாய்லெட்டுகள். WC என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். வெளி நாடுகளில் இந்த சௌகரியம் உள்ள பொது இடங்களில், இதை Comfort Room, Rest Room என்று பலவாறாக அழைப்பது உண்டு. Rest Room என்றால் ஏதோ ஓய்வு எடுப்பதற்கான இடம் என்று தவறாகப் புரிந்து கொள்ளவேண்டாம்.


இதை உபயோகப் படுத்துவதில் உலகம் முழுவதும் கொஞ்சம், கொஞ்சம் என்ன, நிறையவே, குளறுபடிகள் உண்டு. இந்தப் படத்தைப் பார்க்கவும்.


நாகரிகமடைந்த மேலை நாடுகளிலேயே இப்படி படம் போட்டு விளக்க வேண்டியிருக்கிறது என்றால், நம் நாட்டைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை.

டாய்லெட்டில் உட்காருவதற்கு முன், அதன் அமைப்பை சற்று பாருங்கள்.


1 = டாய்லெட் மூடி
2 = டாய்லெட் சீட்
3 = டாய்லெட் பேசின் (மேல் பாகம் மட்டும் காட்டியிருக்கிறது)


டாய்லெட் சாதாரண நிலையில் இப்படி இருக்கும்.நீங்கள் டாய்லெட்டை உபயோகிக்கு முன் டாய்லெட் கவரை மேலே தூக்கி விடவேண்டும். இந்த நிலையில் டாய்லெட் மேல் உட்கார்ந்து கொண்டு, வெளிக்குப் போவதும் சிறுநீர் கழிப்பதும் செய்யலாம். எக்காரணம் கொண்டும் இந்த நிலையில் ஆண்கள், நின்று கொண்டு சிறுநீர் கழிக்கக்கூடாது. டாய்லெட் சீட்டில் சிறுநீர் பட்டு அதை அசுத்தம் செய்தால் அடுத்து வருபவர்கள் எப்படி அதன் மேல் உட்கார முடியும்? பொது கழிப்பறைகளில் இந்த சீட்டில் உட்காரும் முன், இந்த சீட்டை தண்ணீரால் நன்கு கழுவிவிட்டு பின்பு உட்காருவது நல்லது.ஆண்கள் நின்று கொண்டு சிறுநீர் கழிப்பதானால், டாய்லெட் சீட்டையும் மேலே தூக்கி வைத்து விட்டு உபயோகிக்க வேண்டும். இந்த நிலையில் வெளிக்குப் போகும் அன்பர்கள் டாய்லெட் பேசின் மேல் நேரடியாக உட்காருவது ஏற்படலாம். அது மகாத் தவறு.

இதன் பிறகு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது. (அடுத்த பதிவில்)

இந்த டாய்லெட்டை உபயோகப் படுத்திய பின் தவறாமல் டாய்லெட்டை பிளஷ் செய்யவேண்டும். பிளஷ் செய்த பின் டாய்லெட் பேசின் சரியாக சுத்தமாய் விட்டதா என்று பார்த்து, ஏதாவது அசுத்தம் இருந்தால் பிரஷ் உபயோகித்து சுத்தம் செய்ய வேண்டும். பின்பு டாய்லெட் சீட்டையும் கவரையும் கீழ்நோக்கி தள்ளி டாய்லெட்டை மூடி விட்டு வரவும்.

வெளிநாடு செல்லும் அன்பர்களுக்காக இன்னொரு குறிப்பு. எல்லா ஊர்களிலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியான கழிப்பறைகள் உண்டு. குறிப்பாக விமான நிலையங்களில். இந்தக் கழிப்பறைகளுக்கு உண்டான அடையாளங்களைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இதில் தவறு ஏற்பட்டால் பெரும் சங்கடங்கள் ஏற்படும். இந்தப் படத்தைப் பாருங்கள்.

பெண் ஆண்

இந்தப் படத்திலும் சந்தேகம் ஏற்பட்டால், யாராவது டாய்லெட்டை உபயோகிக்க வரும் வரையிலும் காத்திருந்து அவர்கள் பின்னால் போகவும்.

பதிவு நீளமாகி விட்டதால் அடுத்த பகுதியில் பாக்கியை விளக்குகிறேன். பாக்கி எது என்பதை யூகித்து வைக்கவும்.

23 கருத்துகள்:

 1. டாய்லெட் பற்றி முக்கியமான தகவல்களை தொகுத்து வழங்கிய நல்ல பகிர்வு!

  பதிலளிநீக்கு
 2. கேட்கத் தயங்கி பலவிஷயங்கள் தெரியாமல் போவதுண்டு.உண்மையில் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அதனால்தான் இந்தப் பதிவை தைரியத்துடன் (?!) எழுதினேன்.

   நீக்கு
 3. இதுபற்றி வெளியில் பேசுவதோ மற்றவர்களுக்குச் சொல்லித்தருவதோ அசிங்கமான விஷயம் என்றும் இதைப்போய் எப்படிச் சொல்லுவது என்றும் தொண்ணூற்றொன்பது சதம் பேர் நினைக்கிறார்கள். அதனால் இது பேசப்படாத ஒரு விஷயமாகவே போய்விட்டது இந்தியாவில். குறிப்பாக இதுபற்றி மாணவர் பருவத்திலிருந்தே கற்பிக்கப்பட வேண்டும். எந்தவிதமான கற்பித்தலும் இல்லாமல் இருப்பதனால்தான் தொண்ணூற்றொன்பது சதம் பேருக்கு டாய்லெட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பதே தெரியாமல் இருக்கிறது. சுகாதாரத்துறை பள்ளிகளில் இதுபற்றிய விளக்கம் தரவேண்டுமென்று கல்வித்துறைக்கு எடுத்துரைத்தல் நலம்.
  நிச்சயமாய் மிக நல்லதொரு சமூகசேவைப் பதிவைத் தந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, அமுதவன். பள்ளிகளில் இதைப் பற்றி நிச்சயம் போதிக்க வேண்டும். இன்றும் பலர் நவீன டாய்லெட்டுகளை எப்படி உபயோகிப்பது, தெரியவில்லை என்றால் எப்படி கேட்பது என்று கூச்சப் பட்டுக்கொண்டே, தவறாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள்.

   நீக்கு
 4. காலை பொழுது விடிவதற்கு முன் எழுந்து காலாற கம்மாய்க் கரைக்குப் போய் "உட்கார்ந்து" விட்டு கம்மாயில் "கால் கழுவி" விட்டு, வரும் வழியில் ஒரு வேப்பங்குச்சியை முறித்து வாயில் வைத்துக் கொண்டு எதிரில் வருபவர்கள் எல்லோருடனும் ஊர் வம்பு, வழக்கு பேசிவிட்டு, வீட்டிற்கு வந்து வாய் கொப்பளித்து விட்டு, கால்கை கழுவிவிட்டு, காப்பி குடிக்கும் அனுபவமே தனி சுகம். சொர்க்கத்தில் கூட இத்தகைய சுகம் கிடைக்காது ஃஃஃ
  உண்மைதான்..நவீன யுகத்தில் இந்த சுகங்களையும் நாம் இழந்துவருகின்றோம்...நல்ல பதிவு கந்தசாமி சார்..
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  பதிலளிநீக்கு
 5. இன்னும் விலாவரியாக எதிர்பார்க்கிறேன்.... நன்றி....

  பதிலளிநீக்கு
 6. // நன்றி, அமுதவன். பள்ளிகளில் இதைப் பற்றி நிச்சயம் போதிக்க வேண்டும். இன்றும் பலர் நவீன டாய்லெட்டுகளை எப்படி உபயோகிப்பது, தெரியவில்லை என்றால் எப்படி கேட்பது என்று கூச்சப் பட்டுக்கொண்டே, தவறாக உபயோகித்துக் கொண்டிருக்கிறார்கள். //

  எல்லோருக்கும் உபயோகமான பதிவு. நீங்கள் அமுதவனுக்கு சொன்ன பதிலில் சொன்னது போல பள்ளிகளில் இதைப் பற்றி நிச்சயம் போதிக்க வேண்டும். இந்த கட்டுரையைப் படிப்பவர்களும் அவரவர் வீட்டில் உள்ளவர்களையும் படிக்கச் செய்தால் நல்லது.

  பதிலளிநீக்கு
 7. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 8. ‘இடக்கரடக்கல்’ என தமிழ் இலக்கணம் கூறும் சொற்றொடரை சொல்லவேண்டிய நேரத்தில் சொன்னால் முகம் சுளிக்கத்தேவையில்லை என்பதை உணர்த்தும் பதிவு இது. இதனுடைய விரிவாக்கத்தை எதிர்நோக்கியுள்ளேன். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. பல குப்பைகளை படிக்கையில் இது உண்மையிலேயே உருப்படியான,உப்யோகமான பதிவு. நன்றி--செழியன்

  பதிலளிநீக்கு
 10. Anonymous
  10:39 AM (29 minutes ago)

  நல்ல முக்கியமான பதிவு.

  பதிலளிநீக்கு
 11. சாதாரணமாக தோன்றினாலும், அடிப்படை விஷயங்களை கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள்.

  படிப்பதற்கு இதில் ஏதும் அருவருப்பு இல்லையே...!!!

  எத்தனையோ பேர் நாகரீகமான நவீன கழிப்பிடங்களை உபயோகித்தெரியாமலேயே இருக்கின்றனர்.

  அவர்களுக்கும் இப்பதிவு பயன்படும்...!!

  பதிலளிநீக்கு
 12. நிச்சயம் அவசியமான பகிர்வுதான்.

  ஆண்கள் சிறுநீர் கழிக்கும் விளக்கம் - தெரிந்தே தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள். அடுத்தது என்னவென்று புரிகிறது.


  பதிலளிநீக்கு
 13. Currently it looks like Movable Type is the top blogging platform out there right now.
  (from what I've read) Is that what you are using on your blog?
  Here is my website ; ray ban uk

  பதிலளிநீக்கு

 14. நீங்கள் you tube-ல் வில்பர் சற்குணம் என்பவரின் டாய்லெட் உபயோகம் பற்றிய காணொளி பார்த்திருக்கிறீர்களா.?நான் வெகு நாட்களுக்கு முன் பார்த்தது. உங்கள் பதிவைப் பார்த்ததும் நினைவுக்கு வந்தது.

  பதிலளிநீக்கு
 15. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்.

  பதிலளிநீக்கு
 16. I am not sure where you are getting your info, but great
  topic. I needs to spend some time learning more or understanding more.
  Thanks for fantastic info I was looking for this info for my mission.


  Here is my blog: buy followers on twitter

  பதிலளிநீக்கு