திங்கள், 22 ஏப்ரல், 2013

17. ஆணும் பெண்ணும் சமம்.



இந்த தேர்தல்கள் முடிந்து எல்லோரும் பதவி ஏற்றுவிட்டார்கள். மகளிர் அமைப்புகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க மகளிருக்கு 33 சதம் இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டது. இந்த பஞ்சாயத்து உறுப்பினர் அனைவருக்கும் ஒரு வார காலப் பயிற்சி தேவலோகத் தூதரகத்தில் கொடுக்கப்பட்டது.

இந்தப் பயிற்சியில் நடைமுறை அலுவல்கள் மட்டுமல்லாது, ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள மக்களை நல்வழிப்படுத்துவதற்குத் தேவையான பயிற்சிகளும் கொடுக்கப்பட்டன. மக்களின் நலவாழ்விற்காக பல திட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவைகளை செயல்படுத்தத் தேவையான வழிமுறைகளும் சொல்லிக் கொடுக்கப்பட்டன.

இதேபோல் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்களுக்கும் பயிற்சி கொடுக்கப்பட்டது. அனைவருக்கும் கடைசியாக ஒரு அறிவுரை வழங்கப்பட்டது. எல்லோருக்கும் அவர்கள் நல்லமுறையில் வாழ்க்கை நடத்தத் தேவையான ஊதியம் கொடுக்கப்படும். ஆகவே எந்த திட்டத்திலும் ஊழல் என்பதே தலைகாட்டக்கூடாது. அனைத்து நலத்திட்டங்களும் கச்சிதமாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இந்த செயல்பாடுகள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் மேற்பார்வையில் நடக்கும். இந்த செயல்பாடுகளை ஒரு சூபர் கம்ப்யூட்டர் கண்காணிக்கும். எங்கு தவறு நடந்தாலும் அது என் தனிப்பட்ட கவனத்திற்கு வந்து விடும். அதற்கான தீர்வுகள் உடனடியாக எடுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.

பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள்:

   1.   எல்லோருக்கும் குடியிருக்க கழிவறை வசதியுடன் கூடிய வீடுகள்
   2.   அனைவருக்கும் வேண்டிய குடிநீர்
   3.   அனைவருக்கும் வேலை வாய்ப்பு 
   4.   கிராமத்திலேயே தரமான கல்வி
   5.   எல்லோருக்கும் மருத்துவ வசதி
   6.   நல்ல சாலைகள்
   7.   விளைபொருட்கள் கொள்முதல் நிலையங்கள்
   8.   மக்களுக்குத் தேவையான பொருட்களின் விற்பனை நிலையங்கள்
   9.   சமூக கூடங்கள்
10. வேலை வாய்ப்பு சுய உதவிக் குழுக்கள்.
11. விவசாயத்திற்கு முன்னுரிமை

இந்த வசதிகள் அனைத்தும் அந்தந்த கிராமங்களிலேயே மக்களின் தேவையை அனுசரித்து இருக்கும். கிராம மக்கள் பெரும்பாலான தேவைகளுக்கு கிராமத்தை விட்டு வெளியில் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

அனைத்து அரசு துறைகளும், அனைத்து கிராமங்களுக்கும் சென்று அந்த கிராமங்களை முன்னேற்றுவதற்கான திட்டங்களை தயாரித்து அவைகளை அந்தந்த பஞ்சாயத்துகள் மூலமாக நிறைவேற்றுவார்கள். இதற்கான நிபுணர்கள் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு செயல்படுகிறது. இந்த திட்டங்களை நிறைவேற்றுவதற்கான போதிய நிதி வசதிகள் ஒவ்வொரு பஞ்சயத்திற்கும் தடையில்லாமல் வழங்கப்படும். எங்கும் எதிலும் இலவசம் என்ற பேச்சுக்கு இடமே கொடுக்கப்பட மாட்டாது.

இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.

வேலை வாய்ப்பு சுய உதவிக்குழுக்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் அமைக்கப்பட்டன. அந்தந்த தொழிலுக்குத் தேவையான வேலைகளை இந்த குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் செய்து கொடுக்கும். அந்தந்த குழுக்களுக்குத் தேவையான தொழில் நுட்ப பயிற்சிகள் தகுந்த நிபுணர்களால் கொடுக்கப்பட்டது. விவசாய வேலைகளுக்கு தனிப்பட்ட பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. குறிப்பாக இயந்திரங்களை வைத்துக்கொண்டு ஆட்களின் தேவைகளைக் குறைக்கும் தொழில் நுட்ப பயிற்சிகள் விரிவாக கொடுக்கப்பட்டன.

இதனால் குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது. அனைத்து விளைபொருட்களுக்கும் உற்பத்திச் செலவை அனுசரித்து விற்பனை விலை நிர்ணயிப்பதால் உற்பத்தியாளர்களுக்கு எந்தக் குறையும் இல்லை.

கிராமங்கள் செழிப்படைய ஆரம்பித்தன. இந்நிலையில் நாட்டின் பொதுத் தேர்தலுக்கான நேரம் வந்து விட்டது. பிரதம மந்திரியின் குழுவை வரச்சொல்லி தகவல் அனுப்பினேன்.

12 கருத்துகள்:

  1. இந்த கிராம நலத்திட்டங்கள் எல்லாம் உண்மையிலேயே நடந்தால் எப்படி இருக்கும்...! ...ம்...

    பதிலளிநீக்கு
  2. இதற்கான நடைமுறை உத்திரவுகள் பிறப்பிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும், பஞ்சாயத்துகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அனுப்பப்பட்டன. இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.


    கற்பனையிலாவது நல்லது நடக்கிறதே ..!

    பதிலளிநீக்கு
  3. பிரதமர் குழுவின் வருகைக்கும், பொதுத் தேர்தல் எப்படி நடக்கவேண்டும் என்று நீங்கள் பிரமருக்கு கொடுத்த அறிவுரைக்கும் காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  4. ஆதங்கங்கள் பதிவின் ஊடே. கனவு மெய்ப்படவேண்டும்! கூடவே ஒரு சொல் வழக்கும் நினைவுக்கு வருகிறது. “ ஆசை இருக்கு தாசில் பண்ண ..........”

    பதிலளிநீக்கு
  5. காந்தி கண்ட கிராம ராஜ்ஜியம் இதுதானோ?
    கொஞ்சம் நிதானமாக இருந்தாலும் நேருவின் பாலிசிக்கு பதில் காந்தியின் பாலிசியை 1947ல் நடைமுறைபடுத்தியிருந்தால் இன்று நாடு நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.
    இன்று பேசப்படும் இன்க்ளுசிவ் குரோத் என்பதெல்லாம் பேச்சளவில் இல்லாமல் நடைமுறையில் இருந்திருக்கும்.

    ஹூம் எல்லாம் கனவில்தான் காண வேண்டியிருக்கிறது

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. // பஞ்சாயத்துகள் செயல்படுத்த வேண்டிய கிராம நலத்திட்டங்கள் : //

    மனுஷனோட ஆசைக்கு அளவு வேண்டாம்? You are greedy.

    பதிலளிநீக்கு
  7. உண்மையில் நடந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்....

    பதிலளிநீக்கு
  8. //இரண்டு நாட்களில் அனைத்து உத்திரவுகளும் நடைமுறைக்கு வந்தன.//
    பூலோக இரண்டு நாட்களா இல்லை தேவ லோக இரண்டு நாட்களா
    தேவ லோகத்தில் ஒரு நிமிடம் என்றால் இங்கு ஓராயிரம் ஆண்டுகள் என்று ஒரு கதை உண்டு.
    அந்த மாதிரி தேவலோக இரண்டு நாட்களுக்காக நமது ஆட்கள் காத்திருக்கபோகிறார்கள். நமது பூலோக இரண்டு நாட்கள்தான் என்று யாராவது சொல்லவேண்டும்.

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  9. //குறிப்பாக விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்ற குறை தீர்ந்தது.//

    எவ்வளவு அருமையான விஷயம்
    100 நாள் வேலை என்று சொல்லி விவசாயத்தை ஒழிக்கும் யுக்தி ஒன்றுமில்லையே என்று நினைக்கையிலேயே சந்தோசமாக இருக்கிறது.
    இப்படி விவசாயிகளை பற்றி நினைப்பதற்காவது ஒருவர் இருக்கிறார் என்பது பாராட்டப்படவேண்டிய ஒன்று

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  10. சார் ஆணும் பெண்ணும் சமம்ன்னு சொல்லிட்டு, பெண்களுக்கு 33 பர்சன்ட் தான் இடஒதுக்கீடா? அதே போல தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை ஓர் அலுவலர் (மா. ஆட்சியர்) கண்காணிப்பது அடிப்படை மக்களாட்சி தன்மைக்கே எதிரானது. மற்றபடி, புதிய சிந்தனைகளுடன் ஆக்கப்பூர்வமான இருக்கிறது தங்களின் கனவு ராஜ்ஜியம். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு சம உரிமை அளிக்கும் நாள் நெருங்கிக்கொண்டு வருகிறது.

      எந்த ஜனநாயக அமைப்பானாலும், அதை நெறிப்படுத்த, வழிகாட்ட, ஊக்கமூட்ட ஒரு அதிகார மையம் தேவைப்படுகிறது. மாவட்ட கலெக்டர்களுக்கு மேல் அரசு செக்ரடரிகள் இருக்கிறார்கள். இப்படி படிப்படியாக ஒவ்வொரு சூபர்வைசரி அதாரிட்டி வேண்டுமல்லவா? கடைசியாக அது மக்களிடம் வந்து சேரும். அவர்கள்தானே ஓட்டுப் போடுகிறார்கள்.

      நீக்கு