சனி, 13 ஏப்ரல், 2013

சில வில்லங்கமான எண்ணங்கள்



1.   ஒரு மனிதனின் பலமும் பலவீனமும்.


ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பலமும் பலகீனமும் இருக்கும். நான் இந்த விதிக்கு விதி விலக்கல்ல. என்னுடைய பலமும் பலகீனமும் ஒன்றே. அதாவது நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன். இது எனக்கு பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பல நண்பர்களை எதிரிகளாகவும் மாற்றியிருக்கிறது.

என்னால் இந்த குணத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை. காரணம் இது என் மூதாதையர்களிடமிருந்து வழிவழியாய் வந்தது. ஆனாலும் இந்த குணத்தை வைத்துக் கொண்டே தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஓரளவு முன்னேறியிருக்கிறேன். குடும்பத்தை நல்ல நிலையில் வைத்திருக்கிறேன். நானும் உடல், மன, பொருளாதார ரீதியில் நன்றாகவே இருக்கிறேன்.

பதிவுலகத்திலும் என்னுடைய இந்த குணத்தின் தாக்குதல்கள் இருக்கின்றன. அதை வைத்துக் கொண்டே ஓரளவு நண்பர்களையும், என் கருத்தை எதிர்ப்பவர்களையும் சம்பாதித்திருக்கிறேன்.

என்னுடைய மன நலத்திற்காகத்தான் இந்த பதிவுலகில் பிரவேசித்தேன். கம்ப்யூட்டரிலும் பதிவுலகத்திலும் மாறி வரும் மாற்றங்களுக்கு என்னால் முடிந்த அளவிற்கு ஈடு கொடுத்து வருகிறேன். ஆனாலும் சமீப காலமாக என்னால் முன் போல் இணையத்தில் வலம் வரமுடிவதில்லை. ஏதோ பதிவுகளை ஒருவாறு ஒப்பேற்றி வருகிறேனே தவிர, மற்ற பதிவுகளுக்கு சென்று முழுவதும் படித்து, பின்னூட்டம் போட முடிவதில்லை.

சில பதிவுகளைப் படிக்கிறேன். ஆனால் பின்னூட்டம் போட முடிவதில்லை. இது என்னுடைய ஒரு பெரிய பலகீனம்தான். இந்த குறைக்காக மக்கள் என்னை பொறுத்துக்கொள்ளவேண்டும்.
பதிவுகளில் நான் எழுதும் கருத்துக்களை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை. அது தேவையுமில்லை. எதிர்மறை கருத்துக்களை என் பார்வையில் பார்த்து, அவைகளுக்கு காரசாரமாய் பதில் கொடுத்திருக்கிறேன். என் கருத்துக்களில் தவறு இருந்தால் ஒத்துக்கொள்ள தயங்குவதில்லை.

நான் சொல்ல வந்ததை விட்டு விட்டு வேறெங்கேயோ போய்க்கொண்டு இருக்கிறேன். என் பதிவில் ஏதாவது சிந்திக்க விஷயம் இருந்தால் படியுங்கள். கருத்து வேறுபாடு இருந்தால் பின்னூட்டம் போடுங்கள். என் கருத்துகளைத் திட்டுங்கள். இது பொது வெளி. என்னுடைய இயலாமை காரணமாக உங்கள் பதிவுகளில் பின்னூட்டம் போடாவிட்டால் வருந்த வேண்டாம். அதற்காக என்னை பொறுக்கவேண்டும். 

   2. ஈழம் பற்றி யாரும் எதுவும் பேசலாம்.


சில சமாச்சாரங்கள் காலத்தால் அழியாவரம் பெற்றவை. சில வீடுகளில் பெரிசுகள் தாங்கள் புருஷனோடு வாழ்ந்த காலத்தை அவ்வப்போது நினைத்து, ஒப்பாரி வைத்துக் கொண்டிருப்பார்கள். புருஷன் போய்ச்சேர்ந்து நாப்பது ஐம்பது வருஷம் ஆகியிருக்கும்.

அந்த மாதிரி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு போராட்டம் நடத்த சப்ஜெக்ட் கிடைக்காவிட்டால் ஈழத்தை கையிலெடுத்துக் கொள்வார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் பெரும்பாலானோருக்கு ஈழப் பிரச்சினையின் உண்மை நிலை என்னவென்றே தெரியாது. ஆனாலும் தமிழீழம் வாங்கியே தீருவோம் என்று கோஷமிடுவார்கள்.

ஈழத்தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே இன்னும் ஒருமனதாக முடிவு செய்யவில்லை. ஆனால் இங்குள்ள அரசியல்வாதிகளோ தமிழீழம் வாங்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு திரிகிறார்கள்.

ஆகமொத்தம் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேச, போராட இந்த சப்ஜெக்ட் கைகொடுக்கும்.


3.   இந்தியாவை நல்ல நாடாக்குவது எப்படி?


ஏண்டா, கல்யாணம் பண்ணிக்கலே என்று ஒருத்தன் அடுத்தவனைப் பார்த்துக் கேட்டானாம். அதற்கு அவன், சரி நீயே பொண்டாட்டியா இருந்துக்கோயேன் அப்படீன்னானாம்.

அந்த மாதிரி நம்ம நாட்டுக்கு ஏதாச்சும் விடிவு பிறக்காதா அப்படீங்கற ஆதங்கத்தில எதாச்சும் எழுதினா, நம்ம வாசகர்கள். நீதான் மேதாவி ஆச்சுதே. நீயே வழியும் சொல்லு அப்படீன்னு பின்னூட்டம் போடறாங்க. 

எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான். ஒரு பத்து வருடத்திற்கு குழந்தைகள் பிறக்காது. ஜனத்தொகை ஓரளவிற்காவது கட்டுப்படும். கற்பழிப்பு குற்றங்கள் இருக்காது.

ஆனால் இதைச் சொன்னா என்னை துவைத்து காயப்போட்டு விடுவார்கள். எனக்கெதற்கு வம்பு?

23 கருத்துகள்:


  1. இந்தியா போன்ற நாட்டில் ஜனநாயகம் என்பது ஒரு சோகமான நகைச்சுவை கலந்த நிகழ்வு. சஞ்சய் காந்தி போல சிந்திக்கும் ஒரு நபர் தான் இப்போது நமக்குத் தேவை. அப்படி ஒருவர் வந்தாலும் கொன்று விடுவார்கள் போல இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. எதையும் வெளிப்படையாக, உண்மையாக சொல்வது நல்லது... அதற்கே தைரியம் வேண்டும்... அது உங்களிடம் நிறையவே உள்ளது... பின்னூட்டம் தொடரா விட்டாலும் பகிர்வுகளை தொடருங்கள் ஐயா... சொல்வதை சொல்லி விட்டு, "வம்பு ஏன்" என்று சொல்வதும் மிகவும் பிடித்திருக்கிறது... ஹிஹி... வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  3. பதிவுகளில் நான் எழுதும் கருத்துக்களை எல்லோரும் அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நான் எதிர்பார்ப்பதில்லை.///
    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. //ஈழத்தமிழருக்கு தனி ஈழம் வேண்டுமா வேண்டாமா என்பதை அவர்களே இன்னும் ஒருமனதாக முடிவு செய்யவில்லை//
    இதன் அர்த்தம் என்ன? இதென்ன உங்கள் கிராமத்து பஞ்சாயத்தா? நீங்களே சொல்லி இருக்கின்றீர்கள் உங்களுக்கு ஈழம் பற்றிய புரிதல் இல்லை என்றும் அதைபற்றி அதிகம் தெரியாது என்றும். பின்னர் ஏன் அதை பற்றி உங்கள் அறை குறை புரிதல்களை எழுதுகின்றீர்கள்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களைப்போன்ற அரை வேக்காட்டுகளுக்கு பதில் சொல்வதற்காகவே ஈழத்தைப் பற்றி படித்து அறிந்து கொண்டேன். அ\என்னுடையது அரைகுறை புரிதல்கள் என்று சொல்வதற்கு நீங்கள் ஒன்றும் ஈழத்தைப் பற்றி எல்லாம் அறிந்த அறிஞர் இல்லை. உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அந்த அளவு எனக்கும் தெரியும்.

      ஈழத்தமிழரின் இன்றைய நிலைப்பாடு என்ன? அவர்களே இன்னும் ஒரு மனதாக அதை முடிவு செய்யவில்லை. இதில் அர்த்தம் அதில் சொல்லியதுதான். தமிழுக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் ஒரு நல்ல தமிழ் ஆசிரியரிடத்தில் பாடம் கேட்கவும்.

      நீக்கு
    2. உண்மையில் இலங்கையில் வசித்து வரும் நம்மூர் மக்களை கேட்டால் உண்மை வெளி வருகிறது.
      புலம் பெயர்ந்த மக்களும் நம் ஊரில் இருந்து கொண்டு உணர்ச்சி பூர்வமாக சத்தம் போட்டுகொண்டிருக்கும் சிலரும்தான் தனி ஈழம் என்று கோஷம் போட்டுகொண்டு அங்கிருக்கும் தமிழ் மக்களுக்கு தொந்திரவு கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.
      பிரபாகரன் ஆட்சி (!) புரிந்த நேரம், அந்த ஊர்களில் எல்லாம் காந்தி கண்ட கனவு போன்று நடு ராத்திரியில் வயசு பெண் நகைகளை அணிந்து கொண்டு செல்லலாம். காரணம் ஆரம்பத்தில் நடைமுறைபடுத்தப்பட்ட கடுமையான தண்டனைகள்தானாம். அப்படிபட்ட குற்றத்தில் ஈடுபட்ட ஆட்களுக்கு நடு ரோட்டில் தண்டனை நிறைவேற்றபட்டதாம். அந்த பயம் பிரபாகரன் சாகும் வரை இருந்ததாம். இப்போது மீண்டும் குற்றங்கள் தலை தூக்க ஆரம்பித்து விட்டனவாம்
      வட இலங்கை தவிர மற்ற இடங்களில் அந்த அளவு தொந்திரவு இல்லையென்பதுதான் உண்மை என்கிறார்கள்

      சேலம் குரு

      நீக்கு
  5. //எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான்//
    நீங்க "ஆம்பளை" ....????

    பதிலளிநீக்கு
  6. //எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான். ஒரு பத்து வருடத்திற்கு குழந்தைகள் பிறக்காது.//

    முன்னர் அல்லது இப்போதும் உசிலம்பட்டிக்குப் பக்கத்தில் இதற்கு வேறு மாதிரி வழி கண்டு பிடித்து வைத்திருக்கிறார்கள்! நெல் வைத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆனால் அது பெண் குழந்தைகளுக்கு மட்டும்தானே

      சேலம் குரு

      நீக்கு
  7. வில்லங்கமான எண்ணங்களானாலும் அவைகள் சிந்திக்க வைத்தன என்பது உண்மை.

    பதிலளிநீக்கு

  8. இலங்கையின் வரலாறு பற்றிய புரிதலுக்கு...


    http://vazhipokkanpayanangal.blogspot.com/2013/03/2.html

    பதிலளிநீக்கு
  9. வெளிப்படையான உங்கள் கருத்துகள்
    சத்தியமானவை
    அருமையானவை

    பதிலளிநீக்கு
  10. எல்லாவற்றையும் எப்போதும் வெளிப்படையாகப் பேசுவது சிறப்பான குணம் அல்ல என்பது என் கருத்து.நாம் சொல்லும் கருத்து மற்றவர்களை புண்படுத்த கூடும். அதுவே என் பலகீனமும் .என்று ஒப்புக் கொண்டிருப்பது உங்கள் பெருந்தன்மை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்து மிகச் சரியானதே. என்னுடைய ஒப்புதல் வாக்குமூலம் ஒரு தற்காப்பிற்காகவே. என்னங்க இப்படியெல்லாம் எழுதறிங்க அப்படீன்னு யாராவது கேட்காமலிருக்க ஒரு யுத்தி. அவ்வளவே. நிஜ வாழ்க்கையில் இடம் பொருள் ஏவல் அறிந்துதான் நடந்து கொள்ள வேண்டும்.

      நீக்கு
  11. /நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன்/
    நல்ல பண்புதான் . போற்றத்தக்க ஒன்று.

    /இந்தியாவை நல்ல நாடாக்குவது எப்படி//
    நம் நாடு நல்ல நாடுதான்., சுற்றியுள்ள மற்ற நாடுகளைபார்க்கும் போது.;
    ஆனால், இன்னும் மேம்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.

    /எனக்குத் தெரிந்த ஒரே வழி இந்தியாவில் உள்ள ஐந்து வயதிற்கு மேற்பட்ட அனைத்து ஆண்களுக்கும் கருத்தடை ஆபரேஷன் செய்து விடுவதுதான்//
    Population explosion என்பது நன்மை தீமை இரண்டும் கலந்தது.
    http://careerride.com/view.aspx?id=801பெருகி வரும் ஜனத்தொகை மட்டும்தான் நமது முன்னேற்றத்திற்கு தடை கல்லா? ஆட்சியில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படுமேயானால் இப்போதுள்ள resources களை சரியாக உபயோகித்து மேன்மை அடைய முடியம் அல்லவா?
    விவாதத்திற்கு நீங்கள் எடுத்திருக்கும் தலைப்புகள் மிகவும் ஆழமானதும் அகலமானதுமாய் இருக்கிறது.
    can you please narrow it down. for example can we just focus on eliminating poverty (one item of measurement of country's progess)? Bring BPL people above poverty line, that would provide food,dress and shelter for all
    இதில் முதலாவதாக பிச்சை எடுப்பதை ஒழிப்பது.. தமிழக அரசு பல தரப் பட்ட இலவசங்களை வழங்கி வருகிறது. தவிர சட்டத்தில் பிச்சை ஒழிப்பிற்காக அமைப்புகள் உள்ளன. பின் ஏன் இன்றும் பிச்சை எடுக்கும் மக்கள் தமிழ் நாட்டில் தென்படுகிறார்கள். இலவசம் தவிர்த்து மற்ற அமைப்புகள் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது. But begging continues to be pervasive all over the nation. சக பதிவர்களும் நண்பர்களும் ஒரு திட்டமிட்டு இந்த பிச்சை ஒழிப்பு இயக்கத்தை செயல்படுத்தல்லாம்.

    இந்த விஜய வருட தமிழ் புத்தாண்டில் அனைவரும் உடல், மன நலம் பெற்று மகிழ்வுடன் வளமாக வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு நாட்டை, அதுவும் இந்தியா போன்ற ஒரு பாரம்பரியம் மிக்க நாட்டை, வெறும் ஐடியாக்களினால் திருத்தவோ, முன்னேற்றவோ முடியாது என்று நான் நன்கு உணர்ந்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு பகற்கனவு அல்லது ஆகாசக் கோட்டை கட்டுவது ஒரு சுகமான அனுபவம் அல்லவா?

      நீக்கு
  12. //அதாவது நான் எதையும் வெளிப்படையாக சொல்லி விடும் பழக்கமுடையவன். இது எனக்கு பல எதிரிகளை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது. பல நண்பர்களை எதிரிகளாகவும் மாற்றியிருக்கிறது.//

    If you do not know how to sugar coat a bitter medicine, then there could be few reasons.

    1. You are not aware there is such thing. OR
    2. You do not care about others feelings. OR
    3. The situations is such a way that only others are affected, not yourself.

    I believe you belong to the first category.

    Be happy. Take it easy, when others also as open as you are.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி, பக்கிரிசாமி அவர்களே.

      நீக்கு
  13. அருமையான பகிர்வு...
    உண்மையை அழகாக சொல்லியிருக்கிறீர்கள்...
    இனிய தமிழ் வருடப் பிறப்பு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. நல்ல நகைச்சுவையாளர்தான் நீங்கள் ......

    பதிலளிநீக்கு