வெள்ளி, 17 மே, 2013

தமிழீழம் பற்றி ஒரு சந்தேகம்.


எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டே இருக்கிறது.

தமிழீழம், தமிழீழம் என்று தமிழர்கள் உயிரை விடுகிறார்களே, இலங்கைக்கு அந்தக் காலத்தில் கேரளாவிலிருந்தும் கணிசமான மக்கள் போயிருப்பார்கள் அல்லவா, அவர்களும் கேரள ஈழம் கேட்பதில்லையா?

படம்: கூகுளாண்டவர் உபயம்

76 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. உங்கள் கருத்துக்கு நன்றி. என் மேலோட்டமான இலங்கைத் தமிழ் பிரச்சினை பற்றிய அறிவு என்ன சொல்கிறது என்றால் தமிழ் நாட்டில் தமிழீழம் பற்றிப் பேசுபவர்கள் அனைவரும் சுயலாபத்திற்காகவே பேசுகிறார்கள் என்பதே. தவிர என் சிற்றறிவிற்கு எட்டியவரை தமிழீழம் என்பது எட்டாக்கனி என்பதே.


   //கேரளாவிலிருந்து போனவர்கள் இப்போது முழுதாகத் தமிழராகவும் அல்லது சிங்களவராயும் ஆய் விட்டனர்.//

   தமிழராக ஆனவர்கள் அடிமுட்டாள்கள். சிங்களவராக ஆனவர்கள் பிழைக்கத்தெரிந்தவர்கள்.

   நீக்கு
 2. இந்தமாதிரி எடக்குமடக்காக் கேட்டால்.... தமிழின விரோதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள்(என்று நினைக்கிறேன்):-)))))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிப்பார்த்தா, அந்த லிஸ்ட்டிலே இன்று முண்ண்ணியில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளையும் சேர்க்கவேண்டும். ஒவ்வொருவனும் தமிழினத்துரோகிதான்.

   நீக்கு
 3. ரொம்பச் சுருக்கமான சந்தேகமா இருக்கே....! :)))

  பதிலளிநீக்கு
 4. நல்ல கேள்வி அய்யா. எனக்கும் நீண்ட நாட்களாக இந்த சந்தேகம் உண்டு.

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கு மட்டும் எப்படி ஐயா இப்படி சந்தேகம் வருகிறது...? ஹிஹி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது வந்துங்க, உங்களுக்கு 80 வயசானா இதைவிட பெரிய சந்தேகம் எல்லாம் வரும்.

   நீக்கு
 6. எம் ஜி ஆர் தமிழர்தான்.ஜெயமோகனை கேட்டு பாருங்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம் ஜி ஆரை கொங்கு வேளாளராக சேர்த்துக்கொள்ள தயாராக இருந்தோம். அவர் மட்டும் எங்கள் சமூகத்தை மிகுந்த பிற்போக்கு இனம் என்று உத்திரவு போட்டிருந்தாரென்றால் அவர் எம். ஜி. ராமச்சந்திர கவுண்டர் ஆகியிருப்பார்.

   நீக்கு
 7. கேரளா என்பது பழைய சேர நாடு என்பதும் மலையாள மொழி தோன்றியே 1000 ஆண்டுகள் ஆகின்ற என்பதாலும், கேரளாவில் இருந்து சென்றவர்கள் பழங்கால தமிழர்கள் என்பதால் இந்த கேள்வி எழத் தேவையேயில்லை. திரு பிரபாகரனின் அத்தை கொல்லத்துக்கு (கேரளா) அருகே உள்ளவர் எனக் கேள்வி.அப்படி இருந்தால் திரு பிரபாகரன் கேரள ஈழம் அல்லவா கேட்டிருக்கவேண்டும். எனவே இது யாரோ வேடிக்கைக்காக கேட்ட கேள்வி என நினைக்கிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிங்களத்திற்கு தென்னிந்தியாவில் இருந்து மக்கள் கூலிகளாகப் போனது இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான். அந்தக் கால கட்டத்தில் தமிழன், மலையாளி என்ற வித்தியாசம் ஆழமாக வேறூன்றி விட்டது. அதனால் அவர்களை தமிழர் என்று சொல்வது அவ்வளவு சரியல்ல.

   நீக்கு
  2. இந்த ஆளுக்கு இல‌ங்கையைப் ப‌ற்றி ஒரு இழ‌வும் தெரியாது என்ப‌து இந்த‌ப்ப‌திலிருந்தே தெரிகிற‌து. :))

   நீக்கு
 8. இதற்கான பதில் 'தமிழர்களும் கேட்கவில்லையே' என்பதே!

  இலங்கையில் இரண்டுவிதமான தமிழர்கள் இருக்கிறார்கள். (1) ஆதிகாலம் தொட்டு (தமிழ்நாட்டுத் தமிழர்களைப் போல) இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்து வருபவர்கள். (2) தென் இல்ங்கையில் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஆங்கில ஆட்சியின்போது தமிழ்நாட்டிலிருந்து கூலிகளாகச் சென்றவர்கள். இவர்களுக்கு இந்திய வம்சாவளித் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் என்ற பெயர்களும் உண்டு.

  தமிழ் ஈழம் கேட்பவர்கள் முதலாவது வகையினரே. அப்பகுதிகள் தொன்றுதொட்டு அவர்களது தாயகம். தோட்டத் தொழிலாளர்களான 200 ஆண்டுகளுக்கு முன் இந்தியவிலிருந்து சென்றவர்கள் தனி நாடு கேட்கவில்லை. சொல்லப்போனால் அவர்களுக்கு இலங்கையின் குடியுரிமை கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. அவர்களுக்குக் குடியுரிமை இல்லை, இந்தியாவிற்குப் போய்விட வேண்டும் என்று இலங்கை ஒரே நாளில் திடீரென்று அறிவித்தது. பிறகு சாஸ்திரி - சிரிமாவோ ஒப்பந்தப்படி பாதிபேருக்குக் கொஞ்சம் கூடுதலான எண்ணிக்கையில் குடியுரிமை வழங்கியது. மீதிப்பேர் தமிழகம் திரும்பி ஊட்டியில் அரசால் குடியமர்த்தப் பட்டார்கள்.

  மலையகத் தமிழர்களின் கட்சி தோட்டத்தொழிலாளர் காங்கிரஸ். அதற்கும் தனித் தமிழ் ஈழம் கேட்கும் அமைப்புகளுக்கும் சம்பந்தம் இல்லை. தமிழ்ஈழப் பகுதிகளில் மலையகம் அடங்காது. தமிழ்ஈழம் கிடைத்தாலும் மலையக மக்கள் இலங்கை (சிங்கள) நாட்டில்தான் வசிப்பார்கள்.

  இந்திய வம்சாவளித் தமிழர்கள் தமிழ்ஈழப் போராட்டத்தில் பங்குபெறவில்லை. அதிகபட்சம் தார்மீக ஆதரவு மட்டுமே அளித்தார்கள். அவர்களது காங்கிரஸ் கட்சியின் பிரதான நோக்கம் தொழிலாளர் உரிமைகளை உறுதிசெய்வது, அடிப்படை வாழ்க்கை வசதிகளைப் பெறுவது என்பவையே. தற்போதைய ஆளும் கூட்டணீயிலும் பங்குபெற்றுள்ளது.

  எந்த அடிப்படை விஷயமும் தெரியாமல் ஈழம் பற்றிப் பதிவிடாதீர்கள். முன்பும் இப்படியே, போராடும் மாணவர்கள் அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று கேட்பதாக உளறியிருந்தீர்கள் - அவர்கள், தாம் அந்த கண்டனத் தீர்மானத்தை முற்றிலும் நிராகரிப்பதாகவும், அது வெறும் கண்துடைப்பு என்றும் வலியுறுத்திக் கூறிவந்த நேரம் அது.

  சரவணன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆதிகாலம் தொட்டு இருக்கும் ஒரு இனம் இன்று கேவலமான நிலையில் இருக்கிறதென்றால் அது அந்த இனம் அழிவதற்கான அறிகுறி.

   மாணவர்கள் போராட்டத்தினால் தமிழீழம் வந்து விட்டதா? எவனோ காசு கொடுத்து அவர்களை ஆட்டுவித்தார்கள். காரணம் இலங்கையில் அமைதி ஏற்பட்டுவிட்டால் பல புலம் பெயர் அகதிகளுக்கு அவர்களின் அகதி நிலை போய்விடும், அனுபவிக்கும் வசதிகளை விட்டு விட்டு தாயகம் திரும்ப வேண்டும். அதற்காக நடத்தும் சூழ்ச்சிகள் இவை.

   நான் உளறுவதாக வைத்துக்கொள்வோம். அன்று போராடிய மாணவர்கள் சாதித்தது என்ன என்று எனக்கு கொஞ்சம் கூற முடியுமா?

   நீக்கு
  2. //தமிழ் ஈழம் கேட்பவர்கள் முதலாவது வகையினரே.//

   இரண்டாயிரம் வருடங்களாக வாழும் ஒரு இனம் தமிழ்நாட்டு தமிழருடன் எவ்வாறு சொந்தம் கொண்டாடுகிறது? இரண்டாயிரம் வருடத்தில் அவர்கள் மொழி, கலாச்சாரம் ஆகியவை முழுவதும் மாறி இருக்கவேண்டுமே? இப்போது சிங்களவர் என்று கூறப்படுபவர்களும் அதற்குப் பிறகு இந்தியாவிலிருந்து அங்கு சென்றவர்களின் வம்சாவளியினர்கள்தானே? அவர்கள் இன்று ஆளும் வர்க்கத்தினராக இருக்கிறார்கள். இந்த ஆதி தமிழர்கள் ஏன் அவ்வாறு வளரவில்லை?

   நீக்கு
 9. தமிழீழம் பற்றிப் பேசுபவர்கள் அனைவரும் சுயலாபத்திற்காகவே பேசுகிறார்கள் என்பதே. தவிர என் சிற்றறிவிற்கு எட்டியவரை தமிழீழம் என்பது எட்டாக்கனி என்பதே. ....ஐய்யா உங்கள் கருத்தை நான் ஏற்கிறேன்

  பதிலளிநீக்கு
 10. பூர்வீகத் தமிழர்கள் இலங்கையில் 1000 அல்லது 2000 வருடங்களுக்கு மேலாகவே வாழ்ந்து வந்திருக்கின்றனர் என்பது தான் உண்மை. நீங்கள் மலையகத் தமிழர்களையும் பூர்வீகத்தமிழர்களையும் ஒன்றாக நினைத்து குழப்ப வேண்டாம். 1000 வருடங்களாகவே பூர்வீகத்தமிழர்கள் அங்கிருப்பதாக அனைவரும் ஏற்றுக் கொண்டாகி விட்டது. ஆனால் சிங்களர்கள் அங்கு 3000 வருடங்களாகவே இருப்பதாக மகாவம்சம் கூறுவதாக ஒரு வரலாறு. சிங்களர்கள் வங்கத்தில் இருந்து சென்றவர்கள். வங்கத்திலிருந்து 3000 வருடங்கள் முன்பே ஒரு இனம் இடம் பெயர்ந்திருக்க முடியும் என்றால்... நீச்சல் அடிக்கும் தூரத்தில் இருக்கும் தமிழன் இலங்கையில் ஏன் தொன்றுதொட்டு இருந்திருக்க முடியாது?

  பதிலளிநீக்கு
 11. இதுக் குறித்து விளக்கமாய் ஒரு பதிவு இடலாம் என நினைக்கின்றேன். 18-ம் நூற்றாண்டு வரை ஈழத்தமிழர்கள் மலபார், மலவார் என்றழைக்கப்பட்டனர். ஈழத்தமிழர்களில் பெருமளவானோர் கேரளத்தில் இருந்து போனோர். மொழி, கலாச்சார தொடர்புகள் உண்டு. அவை ஏன் கிழக்கிலங்கை தமிழர், முஸ்லிம்கள் மருமக்கள் வழிதாய முறை வழக்குடையோர், தென் கேரளத்தில் இருந்தது. பல கேரளர்கள் சிங்களர்களாகவும், தமிழர்களாகவும் மாறிக் கொண்டனர். நல்லதொரு ஐயம் ஐயா, ஆனால் ஈழத்தமிழர் தம் மலையாளத் தொடர்புகளில் இருந்து விலகிப் போய் விட்டனர். 19-ம் நூற்றாண்டிலேயே அவர்கள் தமிழர் என அறிவித்தும் கொண்டனர் பொன். அருணாச்சலம் தயவால். செவி வழி செய்தி ஒன்று யாரோ ஒரு ஈழத்தமிழ் அறிஞர் ஈழத்தமிழை தனிமொழியாக கருத வேண்டும் எனக் கூறியிருந்தாராம். ஈழத்தமிழ் பேசாமல் மலையாளிகளாக மாறி இருந்திருக்கலாம், அல்லது சிங்களவராய் மாறி இருந்திருக்கலாம், பல உயிர்கள் காக்கப்பட்டு இருக்கும். தமிழராய் மாறி மாண்டதே மிச்சம். :(

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //ஈழத்தமிழ் பேசாமல் மலையாளிகளாக மாறி இருந்திருக்கலாம் அல்லது சிங்களவராய் மாறி இருந்திருக்கலாம் பல உயிர்கள் காக்கப்பட்டு இருக்கும்.//
   உண்மை தான் சகோ உயிர்கள் காக்கப்பட்டு இருக்கும்,அழிவுகள் இல்லாமல் இருந்திருக்கும். ஆனா தமிழக அரசியல்வாதிங்க தான் தான் பாவம். தமிழகத்தை ஏமாற்றுவதற்க்கு ஈழம் மாதிரி ஒன்றும் கிடையாம திண்டாடியிருப்பாங்க.

   நீக்கு
 12. முட்டாள்தனமான கேள்விகளை விடுத்து ஈழத்தைப்பற்றிய வரலாறுகளைத் தேடிப்பிடித்துப் படித்தால் உங்கள் கேள்விக்கு நீங்கள் எதிர்பார்பதையும் விட விடயங்கள் தெரிந்து கொள்ளலாம். விதண்டாவாதப் பதில்களை விடுத்து அந்த தமிழர்களின் வலிகளைப் புரிந்து கொண்டு பதில் இடுங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழ்நாட்டு போலித் தமிழர்களின் தமிழீழம்தான் அந்தத் தமிழர்களின் வலி.

   நீக்கு
 13. You dont have any knowledge, Tamil people will not go to srilanka.. They are already lived in srilanka.. ok, Some tamil and kerala people went there.

  that is reason tamil people only asking separate country.. One more malayalam people also tamil people, but now they are separated in recent years..

  பதிலளிநீக்கு
 14. அண்மையில் ஒரு பத்திரிகையில் வாசித்த ஞாபகம் -

  கருணாநிதி ஒரு மேடையில் பேசும் போது "இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கடல் இல்லை என்றால் நான் எப்பொழுது ஈழத்தை பெற்று கொடுத்திருப்பேன்" என்றாராம். அப்போது முன் வரிசையில் இருந்த ஒருவர், அப்படி கடல் இல்லை என்றால் சிங்களவர்கள் தான் தனி நாடு கேட்டு போராடிகொண்டு இருப்பார்கள்" என்றாராம்.  பதிலளிநீக்கு
 15. நீங்கள் கூறுவது போல் ஈழதமிழர்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் அல்ல.
  அவர்கள் இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த இயக்கர்,நாகர் வழி வந்தவர்கள்.
  இலங்கையில் மலையகத்தில் வாழும் தமிழர்கள் தான் பிரித்தனியார் காலத்தில் தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய இந்தியாவில் இருந்து போனவர்கள்.
  சிங்கள இளவரசன் ஆன விஜயன் இலங்கைக்கு வர முன்பே இலங்கையின் வடக்கு,கிழக்கு பிரதேசங்களில் இயக்கர்,நாகர் வாழ்ந்ததற்கான சான்று சிங்களவர்களின் நூலன மகாவம்சத்தில் உள்ளது.
  இயக்ககுல இளவரசியான குவேனி விஜயன் வருவதை பார்ப்பது போன்று இலங்கை அரசாங்கம் வெளியிட்ட தபால்தலை

  http://www.google.lk/imgres?q=old+srilankan+stamps+about+kuveni&client=firefox-beta&hs=ZlE&rls=org.mozilla:en-US:official&biw=1366&bih=622&tbm=isch&tbnid=7E627vvWRQHldM:&imgrefurl=http://tvaraj.com/2012/04/05/ceylon-3-cents-postage-stamp/&docid=WEkqKsLcGturZM&imgurl=http://tvaraj.files.wordpress.com/2012/04/3-cents-stamp-2b.png&w=1366&h=768&ei=fsGVUYCrGOmsiAK284HICg&zoom=1&ved=1t:3588,r:0,s:0,i:78&iact=rc&dur=685&page=1&tbnh=168&tbnw=300&start=0&ndsp=14&tx=226&ty=83

  http://www.google.lk/imgres?q=old+srilankan+stamps+about+kuveni&client=firefox-beta&hs=ZlE&rls=org.mozilla:en-US:official&biw=1366&bih=622&tbm=isch&tbnid=-8EJbgqEoI1ZpM:&imgrefurl=http://tvaraj.com/2012/04/05/ceylon-3-cents-postage-stamp/&docid=WEkqKsLcGturZM&imgurl=http://tvaraj.files.wordpress.com/2012/04/3-cents-stamp-4.png%253Fw%253D529&w=303&h=252&ei=fsGVUYCrGOmsiAK284HICg&zoom=1&ved=1t:3588,r:3,s:0,i:87&iact=rc&dur=470&page=1&tbnh=199&tbnw=240&start=0&ndsp=14&tx=113&ty=73

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிஸ்டர் பெயரில்லா,
   //ஈழதமிழர்கள் இந்தியாவில் இருந்து போனவர்கள் அல்ல.அவர்கள் இலங்கையின் வடக்குகிழக்கு பிரதேசங்களில் வாழ்ந்த இயக்கர் நாகர் வழி வந்தவர்கள//
   இயக்கருக்கோ நாகருக்கோ சொந்தமா ஒரு பாஷை கிடையாதா? எதற்காக தமிழக தமிழை பேசிறாங்க?
   ஏன் ஈழஇயக்கர் என்றோ ஈழநாகர் என்றோ சொல்லாம இலங்கை தமிழர்கள் அல்லது ஈழதமிழர்கள் என்கின்றனர்?
   நாகர் சிங்கலவர்களா? அல்லது நாகர்கள் ஈழதமிழர்கள் இயக்கர் சிங்கலவர்களா?
   சிங்கலவருக்கு என்று சிங்களம் என்று ஒரு மொழி இருக்கே!

   நீக்கு
  2. ச‌கோ.வேக‌ந‌ரி,

   ம‌ன்னிக்க‌வும், பெய‌ரில்லா அவ‌ர்க‌ள் சொல்வ‌தும் ச‌ரிதான். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், சிங்க‌ள‌வ‌ர்க‌ள் என இல‌ங்கையின் பூர்வீக‌ குடிக‌ள் எவ்வாறு மாறினார்க‌ள் என்பது ப‌ற்றி நீங்க‌ள் இன்னும் கூடுத‌லாக‌ வாசிக்க‌ வேண்டும்.

   நீக்கு
 16. http://karuppurojakal.blogspot.com/2013/03/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 17. நல்ல கேள்வி கேட்டீங்க! 80 வயதானால் இதைவிட பெரிய சந்தேகம் வருமா? கடவுளே!

  பதிலளிநீக்கு
 18. தமிழீழம் என்பது தமிழக அரசியல்வாதிங்க தமிழகத்தின் பிரச்சனைகளை திசை திருப்புவதற்காக கண்டு பிடித்த அற்புதமான மோசடி.
  தமிழக தமிழர்கள் சிலர் உயிரையே விட்டுட்டாங்களே :(

  பதிலளிநீக்கு
 19. இலங்கைக்குச் செரன்டீவ்(Serendib) (சேரன் தீவு)எனும் பெயரும் இருந்துள்ளது. அரபியர் இட்ட பெயர் எனப் படித்துள்ளேன். அந்தச் சேரன் தமிழ் மன்னன் என்கிறார்கள் . அதே சேர மக்கள்தான், இப்போ கேரள மலையாள மக்கள் என்கிறார்கள்.
  ஈழத்தில் தமிழகப் பழக்கவழக்கங்களுடன், மலையாளப் பழக்க வழங்கங்களும் உண்டு. நடனசபாபதி அண்ணர் கூறுவதுபோல் பிரபாகரனின் தந்தையார் கேரளாவைச் சேர்ந்தவர் என விகடனில் வாசித்தேன். அவர் உறவுகள் இப்போதும் கேரளத்தில் வாழ்கிறார்கள் என அதில் குறிப்பிட்டிருந்தது.
  அன்றைய இலங்கையில் தென் இந்தியாவில் இருந்து வந்து இங்கு குடியேறி, குடும்பமாகி பின் இலங்கைப் பிரஜையானோர் பலர்.
  அதில் சிங்கள பக்கம் சென்றோர், சிங்களவரானது உண்மையே! நடைமுறையும் அதே!
  இவை ஒரு 500 வருடங்களுக்குள் நடந்தவை. அதற்கு முன் பூகோள ரீதியில் தமிழகத்துக்கு நெருக்கமாக உள்ளதால் இலங்கை தமிழ் மண்ணாக இருக்கவே வாய்ப்புண்டு.
  இங்கு வந்த மலையாளிகள், எவருமே மலையாளம் பேசுவதில்லை. அத்துடன் தாம் தொழில் புரியுமிடத்தில் பேசிய மொழியைப் பேச்சு மொழியாகக் கொண்டு, சிலர் இலங்கையருடன் மணவுறவால் கலந்து, குடும்பமாக வந்தோரும் பிள்ளைகளுக்கு தாம் வாழ்ந்த பகுதி மொழியையே தாய்மொழி, பயிற்று மொழியாக்கி இலங்கையராகிவிட்டார்கள்.
  அதனால் மலையாளம் இங்கு வாழும் ஒரு மொழியல்ல. எனவே கேரள ஈழம் எனும் தேவையேயில்லை.
  இப்படி அன்றைய காலக்கட்டத்தில் தொழில் நாடிப் புறப்பட்டவர்கள், பெரிய அரசியல் பின்புலமற்ற அன்றாடம் காச்சிகள். இன்று தமிழகத்தில் தெருவோரம் வாழுவோர் போல், தேவையற்ற ஆறாம் விரலாகத் தொங்கியோர் எனக் கொள்ளலாம்.
  "சோறு கிடைத்த இடம், சொர்க்கம்" -இதுவே பலர் கொள்கை , அவர்கள் கொள்கையும் அதுவானதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
  இங்கைகையில், நீர்கொழும்பில் என் மாமா வீட்டில் ஒரு படம் இன்றும் உண்டு. அப்படத்தில் உள்ளவரை "நாயர் மாமா" என்பார்கள். என் மாமனாருடன் 1940 ல் வியாபாரத் தொடர்பு வைத்திருந்த நண்பர்.
  அவர் குடும்பம் கேரளாவில் இருந்துள்ளது. வியாபாரத்துக்கு வரும்போது மாதக்கணக்கில் மாமா வீட்டில்
  தங்குவாராம்- மாமா குடும்பமே மிக மரியாதையாக அவரைப் பற்றிப் பேசுவார்கள். குடும்பத்தில் ஒருவர் போல், இவர் கேரளாவைச் சேர்ந்தவர்,மலையாளி என்பதை நான், அறியும் போது.
  அவர் தொடர்புகளே இல்லாமல் போய்விட்டது. ஆனால் இன்றும் படம் சுவரில் உள்ளது.
  மலையாள அரசியல் எம்மைத் தள்ளிவிடலாம். ஆனால் சில மலையாளிகளை "நாயர் மாமா" போல் என்றும் தள்ளமுடியாது.
  இலங்கைத் தமிழன் நிலை இன்று கேலிக்குரியதாகிவிட்டது. ஆனால் இதற்காக எவரையுமே வெறுக்க முடியாது.
  ஏனெனில் இலங்கைத் தமிழருக்குள் ஒற்றுமை உண்டா? இல்லையே!
  கேலி, இழிவு, தோல்வி சந்தித்தே ஆகவேண்டும்.
  "ஒற்றுமை நீங்கில் அனைவற்கும் தாழ்வு".
  இதுவும் கடந்து போகும் எனக் கொள்வோம்.
  இவை என் சிற்றறிவுக் கெட்டிய வரை.


  பதிலளிநீக்கு
 20. பதில்கள்
  1. வாடா தம்பி, உன்னைத்தான் இத்தனை நாளா எதிர்பார்த்திருந்தேன்.

   நீக்கு
  2. ஐயா!
   இந்த வார்த்தைகளை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இணைப்பு மெட்ராஸ் பவன் சிவகுமார் profile க்கு செல்கிறது. உடனே அவருடன் தொடர்புகொண்டு செய்தியைக் கூறினார். அதிர்ச்சி அடைந்த சிவகுமார் தான் அப்படி ஏதும் கருத்திடவில்லை என்று கூறியதோடு என்னுடைய பெயரை யாரோ தவறாக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்றும் கணினி சிக்கல் காரணமாக மறுப்பு தெரிவிக்க முடியாததால் யாரோ செய்த விஷமத்தனம் என்பதை தன சார்பாக தெரிவிக்க சொன்னார். உங்கள் தொலைபேசி என்னை கேட்டார். எனக்கு தெரிவில்லை. கிடைத்தால் உங்களுடன் தொடர்பு கொள்வதாக கூறினார்.
   உங்க பதிவுகளில் கருத்துக்கான தேர்வுகளில் பிரைதைய சுட்டியைப் பயன்படுத்தும் வகையில் ஆப்ஷன் உள்ளது. அதை பயன்படுத்தி யாரேனும் இதை செய்திருக்கக் கூடும் என்று கருதுகிறேன்.

   நீக்கு
 21. ஈழம் பற்றி உனக்கு என்னடா தெரியும் கிழட்டு வேசி மகனே. சீக்கிரம் சாவுடா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாடா, தம்பி, உன்னையும் கூட்டிட்டுதான் சாவேண்டா. ஈழத்தைப் பற்றி உனக்கு என்ன XXX தெரியுமோ அதைச் சொல்லுடா மொதல்ல.

   இதுதான் ஈழக் கலாச்சாரமோ?

   நீக்கு
  2. இவர்களுடைய கலாச்சாரமே இது தான் சார். இவர்களை எதிர்தார்கள் என்பதிற்காக இவர்கள் கொன்று குவித்த தமிழர்கள் இலங்கையில் அதிகம்.

   நீக்கு

 22. உங்கள் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டங்களும், உங்கள் சில பதில்களும் ரசிக்க வைக்கின்றன. எது எப்படி இருந்தாலும் , ஈழத்தமிழர்கள் அண்மையில் பட்ட அவதிகள் ஏராளம். .நிலைமையை சரிசெய்ய என்ன செய்ய முடியுமோ அதை அக்கறை உள்ளவர்கள் செய்ய வேண்டும்.

  பதிலளிநீக்கு
 23. தமிழ் ஈழத்துக்காகப் போராடிய புலிகள் [அவர்கள் போராட்டம் நியாயமானதோ அல்லவோ] சிங்கள அரசால், இந்திய அரசின் உதவியுடன் ஏறத்தாழ முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டார்கள்.

  உறவுகளையும் உடைமைகளையும் இழந்து, வாழ்வாதாரங்களுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறான் மிச்சமுள்ள தமிழன்.

  இந்நிலையில், இங்குள்ளவர்கள் தமிழ் ஈழம் பேசுவதைச் சாக்காக வைத்துக்கொண்டு, இம்மாதிரியான பதிவுகளை [மலையாளி ஏன் கேரள ஈழம் கேட்கவில்லை என்று கிண்டலடித்து] எழுதுவது, வெந்த புண்ணில் வேல் சொருகும் ஈவு இரக்கமற்ற செயல் என்பதே என் தாழ்மையான கருத்து.

  மன்னியுங்கள் கந்தசாமி ஐயா. இதுவும் கொங்குக் குசும்புதானா?  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பரமசிவம் அவர்களே,
   யாரையும் கிண்டலடிக்கவில்லை. என்னுடைய வாதம் மலயாளிகள் எங்கு போனாலும் அங்குள்ளவர்களுடன் அனுசரித்துப் போகிறார்கள். ஆனால் தமிழனோ, தன்மானம், தமிழ்க் கலாச்சாரம், புடலங்காய் என்று பேசிக்கொண்டு தான் வாழும் மக்களுடன் ஒத்துப் போவதில்லை. இலங்கையை விடுங்கள். இங்கு தமிழ் நாட்டில் தமிழன் ஒற்றுமையாய் இருக்கிறானா? ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு தலைவன். அடுத்த ஜாதிக்காரனுடன் வம்புக்குப் போவதே ஒவ்வொருவனுக்கும் தொழில். சொந்த வீட்டை சரி செய்து விட்டு, அடுத்தவனுக்கு அறிவுரை கூறுங்கள்.

   நீக்கு
  2. ”சொந்தவீட்டைச் சரி செய்துவிட்டு அடுத்தவனுக்கு அறிவுரை கூறுங்கள்” என்கிறீர்கள்.

   என் கருத்தை முன்வைத்தேன். அவ்வளவுதானே? யாருக்கு நான் அறிவுரை சொன்னேன்?
   புரியலையே ஐயா.

   நீக்கு
  3. //”சொந்தவீட்டைச் சரி செய்துவிட்டு அடுத்தவனுக்கு அறிவுரை கூறுங்கள்”//

   பரமசிவம். மன்னிக்கவும். இந்த வார்த்தை உங்களுக்காக அல்ல. தமிழ்நாட்டு ஈழத்தமிழ்வாதிகளுக்காக சொன்னேன். வாக்கிய அமைப்பில் இங்களுக்கு என்று தோன்றிவிட்டது. மன்னிக்கவும்.

   நீக்கு
  4. திருத்தம்: இங்களுக்கு = உங்களுக்கு,
   தவற்றுக்கு மன்னிக்கவும்.

   நீக்கு
 24. நண்பர்களே...
  நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
  அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
  நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
  பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
  எதுவும் வெளியிடாமல்...
  அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
  இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

  அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
  இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. அன்புடன் சிவகுமாருக்கு!
  எப்போதும் நிதானம் முக்கியம், அவர் எழுதிவிட்டார் நீங்கள் திட்டுகிறீர்கள்.
  எத்தனை கோடிப் பேர் மனதுக்குள் வைத்துள்ளார்களே! அவர்களை என்ன? செய்யப் போகிறீர்கள்.
  ஆகவே நீங்கள் உங்கள் நிலையில் இருந்து வழுவக் கூடாது. முகம் தெரியாத இடமென்பதால்
  வசைக் சொற்கள் கூடாது.
  கருத்தைக் கருத்தால் தகர்க்க முற்படவும்.
  எதிரியாலானும் அவர் வயதை மனதில் நிறுத்துங்கள்.
  பொறுமை முக்கியம்.
  இது தான் ஈழப் பண்பா? கலாச்சாரமா? எனும் கேள்வி எவர் மனத்திலும் எழா வண்ணம், உங்கள் தரப்பு வாதத்தை வைப்பீர்கள் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 26. ஐயா உங்கள் அரசியல்வாதிகள் ஈழத்தை தமது சுயநலன்களுக்காக உபயோகிப்பவர்களாக இருக்கலாம் ஆனால் ஈழத்தமிழரின் உயிர் மூச்சு எமது இறுதி இலட்சியம் தமிழீழம். நாம் எங்கிருப்பினும் எனது எண்ணம் எல்லாம் அதைப்பற்றியதே. சுயநலன்களுக்காக யாரோ ஏதோ செய்வதால் ஈழம் என்பது போலியல்ல. அரசியல்வாதிகளை விடுங்கள் எதற்காக தமிழக மாணவச் செல்வங்கள் எழுச்சி கொண்டு போராடுகின்றார்கள். மலபாரிகள் கேரளத்தான்கள் தமது சுயநலன்களுக்காய் தம்மையே விற்று உண்பவர்கள். அவர்ளையும் ஈழத்தமிழரையும் ஒப்பிடாதீர்கள். முடிந்தால் ஈழ வரலாறுகளை எடுத்துப் படித்து தெளிவு பெற முயலுங்கள். உங்கள் போலி வாதங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதையா. உங்கள் பதில்களிலிருந்து ஒன்றை புரிந்து கொள்ள முடிகின்றது யாரையோ திருப்திப்படுத்த ஏதோ கையுட்டிற்காய் அலைபவர் என்பது.

  பதிலளிநீக்கு
 27. "ஆளும் வ‌ள‌ர‌ணும் அறிவும் வ‌ள‌ர‌ணும் அது தாண்டா வ‌ள‌ர்ச்சி" :)

  பதிலளிநீக்கு
 28. நீ ஒருத்தன் வளர்ந்ததே போதும். எனக்கு வளர்ச்சி தேவையில்லை.

  பதிலளிநீக்கு
 29. அன்புள்ள சிவக்குமாருக்கு,

  இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?

  தயவுசெய்து வருத்தம் தெரிவியுங்கள்.

  இது, என் வேண்டுகோள்தான்......please.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர் இந்த மாதிரி மொழிப்பிரயோகம் செய்ய எது காரணமாக இருக்கும் என்று யோசித்தேன். பின்வரும் காரணங்கள் என் மனதில் தோன்றின.
   1. அவருடைய தந்தை இவரை அப்படிக்கூப்பிட்டு வளர்த்திருப்பார்.
   2. அல்லது இவர் தனது தந்தையை அவ்வாறு கூப்பிட்டிருப்பார்.
   3. அல்லது இவர் தனது மக்களை இவ்வாறு கூப்பிட்டுக்கொண்டு இருக்கலாம்.
   4. அல்லது இவருடைய நண்பர்களை இவரை அவ்வாறு கூப்பிடுவது வழக்கமாக இருக்கலாம்.
   5.அல்லது இவர் உண்மையிலேயே அந்த மாதிரி ஆளாக இருக்கலாம்.

   எப்படி இருந்தாலும் இவர் வளர்க்கும் தமிழ்ப் பண்பு வாழ்க.

   நீக்கு
  2. இது மெட்ராஸ் பவன் சிவகுமார் பெயரில் வந்துள்ளது .உண்மையல்ல அன்றே கருதுகிறேன்.ஒருபோதும் அப்படி பேசக்கூடியவர் அல்ல அவருக்கு தகவல் தெரிவித்து உண்மையானது என்றால் நிச்சயம் கண்டிக்கப் படவேண்டியதே!

   நீக்கு
 30. Since you speak a different language than the majority in a country you get pulled out of your house and spit on, your house is burned and your business is killed and your life is ruined you will strike back, hit back like a volcano. That is what the Tamils in SriLanka did. Srilankan army threw sewage from a helicopter on to the Tamil areas. How does that feel if sewage and human waste is thrown on top of your house? Have a heart man.

  பதிலளிநீக்கு
 31. கந்தசாமி இந்த வயதில் ஈழம் பற்றி புரட்டு எழுதி ஹிட்ஸ் பெற நினைக்கின்றாய். உனக்கு வெட்கமாயில்லையா ? நாம் ஈழத்தை விரும்பவில்லை என்று எந்த ஈழ தமிழனாவது சொன்னானா? புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றுவரை ஈழத்தில் தேர்தலில் வெல்வது தெரியாதா உனக்கு?

  முதலில் மலையாளம் என்னும் மொழி உருவானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே என்பதும் அதற்க்கு முன்னர் அவர்கள் சேரர்கள் என்னும் தமிழர்களே என்பதை அறியாத நீ , சும்மா சும்ம்மா இப்படி எழுதுகின்றாயே? முட்டாளே, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே எல்லாளன் என்னும் தமிழ் மன்னன் ஈழத்தை ஆண்டான். ஒன்றுமே தெரியாத நீ, இவ்வாறு வாந்தி எடுக்காதே

  பதிலளிநீக்கு
 32. 1. பல பதிவுகளில் படித்ததைத்தான் நான் சொல்லியிருக்கிறேன்.

  2. 2000 வருடத்திற்கு முன்பே இலங்கையை தமிழன் ஆண்டான் என்றால் பிறகு தமிழன் ஏன் இன்று இருக்கும் நிலையை அடைந்தான். பொழைக்கத் தெரியாத இனம் என்றுதானே நிரூபணம் ஆகிறது. எங்கேயாவது ஒரு மலையாளி இலங்கையில் இந்த மாதிரி இருக்கிறானா? அவனைப் பார்த்தபிறகும் பொழைக்கத்தெரியாத இனம் அழிந்துதான் போகும்.

  3. நான் வாந்தி எடுப்பதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படத்தேவையில்லை, ஈனத்தமிழனே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உனக்கு ஈழம் பற்றியும் சிங்களவனின் இனவெறி பற்றி ஒன்றும் தெரியாது என்று மீண்டும் மீண்டும் நிருபிகின்றாய் . சிங்களவன் தமிழன் மேல் கைவைக்கும் முதலே, மலையாளிகளை கொழும்பில் இருந்து 1931 இல் விரட்டிவிட்டான். //1920-லிருந்து 1935-வரை சிங்களத் தலைவர்கள் இந்திய வம்சாவளியினரான கேரள மலையாளிகளுக்கெதிரான போராட்டங்களை நடத்தி மலையாளிகளைக் கொழும்பிலிருந்து விரட்ட முயற்சி செய்தனர். 1939-ல் இந்தியாவிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.கே.கோபாலன் கொழும்பு சென்று அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களோடு பேசி மலையாளிகளை வெளியேற்றும் முயற்சியைத் தடுப்பதற்கு முயன்றார். ஆனால் சிங்கள வெறியர்களின் பிடிவாதம் காரணமாக முயற்சி வெற்றியடையவில்லை. மலையாளிகள் வெளியேற்றப்பட்டனர். //

   https://groups.google.com/forum/#!msg/anbudan/4PR7FnUW4MQ/D-E7EeWDxIMJ

   நீக்கு
 33. //ஈழத்தமிழன் சனி, 18 மே, 2013 12:03:00 PM IST
  கந்தசாமி இந்த வயதில் ஈழம் பற்றி புரட்டு எழுதி ஹிட்ஸ் பெற நினைக்கின்றாய்.//
  ஏங்க ஈழத்தமிழன் இலங்கயை பற்றி பொய்யும் புரட்டும் எழுதினா இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக கொல்லபடுறாங்க இலங்கை தமிழங்க பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு சிங்கலவங்களால ஆளாக்கபடுகிறாங்க என்று எழுதினா மட்டுமே தமிழகத்தில் ஹிட்ஸ் பெற முடியும். ஆது தான் நடைபெற்றுவருகிறது.

  பதிலளிநீக்கு
 34. இந்த‌ ஆள் ம‌லையாளிக‌ளைப் புக‌ழ்ந்து த‌ள்ளுகிறார். ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளை ஈன‌த்த‌மிழ‌ர் என்கிறார். இவ‌ருக்கும் ம‌லையாளிக‌ளுக்கும் என்ன‌ தொட‌ர்பு. இவ‌ர‌து ஊர் கேர‌ளாவுக்குப் ப‌க்க‌த்திலா என்ப‌து என‌க்குத் தெரியாது. சில‌வேளை இவ‌ர‌து அப்ப‌ன் ம‌லையாளியாக‌ இருக்க‌லாம் அல்ல‌து இவ‌ர் ம‌லையாளிக் க‌ல‌ப்புத் த‌மிழ‌னாக‌ இருக்கலாம் போலிருக்கிற‌து அல்ல‌து எத‌ற்காக‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் மீது இவ்வ‌ள‌வு காழ்ப்புண‌ர்வு, க‌ருமாதிக்கு ந‌டுவில‌ க‌க்கூசுக்கிருந்த‌வ‌ன் மாதிரி, போரிலே கொல்லப்பட்ட‌ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளின் நினைவு நாளில் ஒரு உண்மையான‌ த‌மிழ‌ன் இப்ப‌டி வ‌சைபாடுவானா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா, என்ன பண்பான வார்த்தைகள். உண்மைத்தமிழன் வாழ்க.

   நீக்கு
  2. ''அவர் இந்த மாதிரி மொழிப்பிரயோகம் செய்ய எது காரணமாக இருக்கும் என்று யோசித்தேன். பின்வரும் காரணங்கள் என் மனதில் தோன்றின.
   1. அவருடைய தந்தை இவரை அப்படிக்கூப்பிட்டு வளர்த்திருப்பார்.
   2. அல்லது இவர் தனது தந்தையை அவ்வாறு கூப்பிட்டிருப்பார்.
   3. அல்லது இவர் தனது மக்களை இவ்வாறு கூப்பிட்டுக்கொண்டு இருக்கலாம்.
   4. அல்லது இவருடைய நண்பர்களை இவரை அவ்வாறு கூப்பிடுவது வழக்கமாக இருக்கலாம்.
   5.அல்லது இவர் உண்மையிலேயே அந்த மாதிரி ஆளாக இருக்கலாம்.''

   கந்தசாமி

   ''ஆஹா, என்ன பண்பான வார்த்தைகள். உண்மைத்தமிழன் வாழ்க.''
   '' நான் வாந்தி எடுப்பதைப் பற்றி நீ ஒன்றும் கவலைப்படத்தேவையில்லை, ஈனத்தமிழனே.''

   முட்டாள் கந்தசாமி இந்த வயதில் வளர்க்கும் தமிழ்ப் பண்பு வாழ்க.
   இப்படிப்பட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தலாமா?முட்டாள் கந்தசாமி
   தயவுசெய்து வருத்தம் தெரிவியுங்கள்.

   நீக்கு
  3. நான் முட்டாளாக இருப்பதில் உனக்கு என்ன கஷ்டம் பெயரிலியே?

   நீங்கள் பெரிய பண்பாளர்கள், இருந்து விட்டுப் போங்கள். எனக்கு ஒன்றும் ஆட்சேபணையில்லை.

   உங்களில் ஒருவன்தான் என்னை வேசிமகன் என்று சொன்னான். அதற்குப்பிறகுதான் எனக்கும் அந்த மாதிரி எழுதவரும் என்று காண்பித்தேன்.

   இந்த மாதிரி பேசிக்கொண்டேதான் ஈனத் தமிழன் அழிந்து போகப் போகிறான்.

   நீக்கு
 35. நடந்தது, நடப்பது பிடிக்காமல் இருக்கலாம். ஆனால் அப்பாவி மக்கள் கஷ்டப்படுவது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அடுத்தவன் மனது நோகும்பட்சத்தில், அதனால் நல்ல விளைவு இல்லாவிட்டால், ஒரு செயலை செய்யாமல் இருப்பது நல்லது என்பது என் கருத்து.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தெரிவித்த சந்தேகத்தில் யாருடைய மனதையும் நோகடிக்கவில்லை.

   பின்னூட்டங்களில் தெரிவித்த கருத்துகளுக்கு என் மறு கருத்தை தெரிவித்திருக்கிறேன்.

   நீக்கு
 36. ஈழத் தமிழனின் வாரிசுகளுக்கு,

  தமிழ் நாட்டில் இருக்கும் 99 சதம் பேர்களுக்கு ஈழத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய அறிவோ, அக்கறையோ இல்லை. என் போன்ற சிலர் ஒரு அனுதாபத்துடன் அந்தப் பிரச்சினையைப் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினால், முதலில் இலங்கை சரித்திரத்தைப் படித்து விட்டு வா, பிறகு நீ ஈழத்தமிழர்களைப் பற்றி பேசலாம் என்று ஆளாளுக்கு கும்மி அடிக்கிறீர்கள்.

  ஈழத்தமிழ் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு கும்மியடிப்பவர்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்கிறேன். இதுவரை ஈழத்தமிழர்களின் பிரச்சினை என்னவென்று தமிழ் நாட்டில் இருக்கும் சாதாரண தமிழனுக்கு புரிந்துணர்வு ஏற்படுத்தியிருக்கிறீர்களா? ஈழத் தமிழனைப் பற்றி என்ன பேசினாலும் தமிழின விரோதி அல்லது தேவடியா மகன் என்று சொல்லத்தான் பழகியிருக்கிறீர்களே தவிர, ஆக்க பூர்வமாக ஈழத் தமிழனுக்கு என்ன செய்திருக்கிறூர்கள் என்ற விவரத்தை எங்களுக்கு எடுத்துச்சொல்லுங்கள்.

  தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் அல்லது உங்கள் பாஷையில் தேவடியா மகன்களுடைய ஆதரவும் அனுதாபமும் உங்களுக்குத் தேவையில்லைநென்றால் உங்கள் இஷ்டத்திற்கும் எழுதுங்கள். என்ன எழுதினாலும் அதை என் தளத்தில் பிரசுரிப்பேன். உங்கள் மேலான பண்பு எல்லோருக்கும் தெரியட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு. ப‌ழ‌னி க‌ந்த‌சாமி அவ‌ர்க‌ளுக்கு

   நாங்க‌ள் ஏதாவ‌து த‌வ‌றாக‌ எழுதியிருந்தால் ம‌ன்னிக்க‌வும். எங்க‌ளில் சில‌ரின் ப‌தில்க‌ளும் உங்க‌ளின் கேள்வியைப் போல‌வே கொஞ்சம் க‌டுமையாக‌ இருப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் உங்க‌ளுக்கு எப்ப‌டிக் கேள்வி கேட்ப‌தென்று தெரிய‌வில்லை. உங்க‌ளின் கேள்வி, ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றி அறிய‌ ஆர்வ‌ப்ப‌டும் தாய்த்த‌மிழ‌க‌த்தின் உட‌ன்பிற‌ப்புக்க‌ளில் ஒருவ‌ர‌து கேள்வியாக‌ அல்லாம‌ல், எங்க‌ளின் முன்னோர்க‌ள் தம‌து இர‌த்த‌த்தைச் சிந்திப் பாதுகாத்த‌ த‌மிழ் அடையாள‌த்தையே இழிவு ப‌டுத்தும், கொங்கு நாட்டுக் கோண‌ங்கிக‌ளின் கேள்வியாக‌, இல்லை, கேலியாக‌ இருந்ததால் தான் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிட‌ம் வாங்கிக் க‌ட்டினீர்க‌ள். நீங்க‌ள் ஒழுங்காக‌க் கேள்வியைக் கேட்டிருந்தால், எத்த‌னையோ ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் அன்புட‌னும், ம‌ரியாதையுட‌னும் உங்க‌ளுக்குப் ப‌தில‌ளித்திருப்பார்க‌ள். உங்க‌ளுக்குத் தெரியுமோ என்ன‌மோ, நாங்க‌ள்- ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள், எங்க‌ளுக்கு முன்பின் தெரியாத‌ சிறுவ‌ர், சிறுமிக‌ளுட‌ன் பேசும் போது கூட நீ ஒன்று ஒருமையில் பேச‌மாட்டோம். அப்ப‌டியான‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளுட‌ன் ஒரு வ‌ய‌தில் பெரிய‌வ‌ராகிய‌ நீங்க‌ள் வாங்கிக் க‌ட்டிக் கொண்டிருக்கிறீர்க‌ள் என்றால் அத‌ற்குக் கார‌ண‌ம் உங்க‌ளின் வ‌ய‌துக்கு மீறிய‌ குசும்பும், வாய்க்கொழுப்பும் தான். அத‌னால் உந்த‌ குசும்புத்த‌ன‌த்தை எல்லாம் மூட்டை க‌ட்டி விட்டு உங்களின் இல‌ங்கை ப‌ற்றிய‌ கேள்விக‌ளைக் கேளுங்க‌ள், ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளைப் போல் ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்கு ம‌ரியாதை கொடுப்ப‌வ‌ர்க‌ள் யாருமே கிடையாது என்ப‌தை நீங்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ உண‌ர்வீர்க‌ள்.

   ந‌ன்றி.
   வியாச‌ன் :)


   நீக்கு
  2. என்னுடைய பதிவில் உள்ள கேள்வி எந்த விதத்தில் உங்கள் மனதைப் பாதித்தது அல்லது எந்த விதத்தில் தவறானது என்று சொன்னால் நலமாக இருக்கும்.

   நீக்கு
  3. hmmm நீங்க‌ள் கேட்ட‌ கேள்வியே உங்க‌ளுக்குப் புரிய‌வில்லையென்றால் உங்க‌ளுக்கு நிச்ச‌ய‌மாக‌ உத‌வி தேவைதான். :)

   உங்க‌ளின் கேள்வி ஒருபுற‌மிருக்க‌, உங்க‌ளின் ப‌தில்க‌ளிலிருந்து ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ள் புரிந்து கொண்ட‌தென்ன‌வென்றால், உங்க‌ளுக்கு இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளைப் ப‌ற்றி எதுவும் தெரியாது. அதாவ‌து இல‌ங்கையில் த‌மிழீழ‌ம் கேட்டுப் போராடும் த‌மிழ‌ர்க‌ள் அங்கு வாழும் பூர்வீக‌த் தமிழ‌ர்க‌ள், அவ‌ர்க‌ள் சில‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்னால் இல‌ங்கைக்குப் போன‌வ‌ர்க‌ள‌ல்ல‌, அவ‌ர்க‌ள் தம‌க்கென‌ சொந்த‌மாக‌ யாழ்ப்பாண‌ இராச்சிய‌த்தைக் கொண்டிருந்தார்க‌ள், அதையும் போத்துக்கேய‌ரிட‌ம் போரிட்டுத் தான் இழ‌ந்தார்க‌ளே த‌விர‌, நாடு பிடிக்க‌ வ‌ந்த‌வ‌ர்க‌ளிட‌ம் அவ‌ர்க‌ளை எதிர்க்காம‌ல் ச‌ர‌ண‌டைய‌வில்லை. அந்த‌ இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கையின் ம‌ண்ணின் மைந்த‌ர்க‌ள், தாம் இழ‌ந்து த‌மிழ்ம‌ண்ணைத் மீட்க‌த் தான் போராடுகிறார்க‌ள் என்ற‌ அடிப்படை உண்மைகள் கூட உங்க‌ளுக்குத் தெரிய‌வில்லை என்ப‌தை உங்க‌ளின் ப‌தில்க‌ள் வெளிப்ப‌டுத்தின‌, அதுவும் ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளுக்கு எரிச்ச‌லையூட்டிய‌து. அதாவ‌து எங்க‌ளைப் ப‌ற்றிய‌ அடிப்ப‌டை அறிவு கூட‌ இல்லாத‌ இந்த‌ ம‌னுச‌ன் ந‌க்க‌ல் விடுகிறார், அவ‌ருக்கு அவ‌ரது பாணியில் சொன்னால் தான் ச‌ரி என்று நினைத்துக் கொண்ட‌தால் தான் அப்ப‌டியான ம‌ரியாதையில்லாத ப‌தில்க‌ள் சில ஈழ‌த்த‌மிழ‌ர்க‌ளிட‌மிருந்து உங்க‌ளுக்குக் கிடைத்திருக்கலாம்.

   நீக்கு
  4. சரி, உங்களின் கேள்வியை ஆராய்ந்து பார்ப்போம். :)

   //தமிழீழம், தமிழீழம் என்று தமிழர்கள் உயிரை விடுகிறார்களே,//

   இத்த‌னை ஆயிர‌ம் த‌மிழ் உயிர்க‌ள், பால்ம‌ண‌ம் மாறாக் குழ‌ந்தைக‌ள் கூட‌ முள்ளிவாய்க்காலில் த‌மிழ‌ர்க‌ளாக‌ப் பிற‌ந்த‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌, செல்ல‌டித்துக் கொல்ல‌ப்ப‌ட்ட‌பின்ன‌ர், யாராவ‌து வ‌ந்து ஏன் இவ‌ர்க‌ள் இப்ப‌டி உயிரை விடுகிறார்க‌ள், த‌மிழீழ‌மா, அதற்காக ஏன் சாகிறார்கள் அப்படி என்றால் என்ன‌ என்று அச‌ட்டுத்த‌ன‌மாக‌க் கேட்டால், கோபம் வ‌ருமா வ‌ராதா, அதிலும் ப‌டிப்ப‌றிவில்லாத‌ பாம‌ர‌ன் என்றால் கூட‌ப் ப‌ர‌வாயில்லை, நீங்க‌ள் பெரிய‌ விஞ்ஞானி என்று பீற்றி விட்டு, இப்ப‌டி கொஞ்சம் கூட‌ ம‌னித‌த்த‌ன்மை இல்லாம‌ல், வ‌க்கிரமாக‌க் கேள்வி கேட்டால், யாருக்குத் தான் கோப‌ம் வ‌ராது. அதைப் பற்றிக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.   //இலங்கைக்கு அந்தக் காலத்தில் கேரளாவிலிருந்தும் கணிசமான மக்கள் போயிருப்பார்கள் அல்லவா//

   இத‌ற்கு நான் என‌து வ‌லைப்ப‌திவில் ஏற்க‌ன‌வே ப‌திலளித்துள்ளேன். த‌மிழ்நாட்டைத் த‌மிழ்நாடு என்று அழைப்ப‌த‌ற்குக் கார‌ண‌ம் த‌மிழ்நாட்டிலுள்ள‌ பெரும்பான்மை ம‌க்க‌ள் த‌ம்மைத் த‌மிழ‌ர்க‌ள் என‌ அடையாள‌ப்ப‌டுத்துவதுட‌ன், பெரும்பான்மை ம‌க்க‌ள் பேசும் மொழி த‌மிழ். ஆனால் த‌மிழ்நாட்டைத் த‌மிழ‌ர்க‌ள் ஆண்ட‌தை விட‌ அன்னிய‌ர்க‌ள் ஆண்ட‌ கால‌ம் தான் அதிக‌ம் அக்கால‌த்தில் ப‌ல‌ அன்னிய‌ர்க‌ள் த‌மிழ்நாட்டில் குடியேறியிருப்பார்க‌ள், த‌மிழ‌ர்க‌ளுட‌ன் க‌ல‌ந்திருப்பார்க‌ள் அத‌னால் த‌மிழ்நாட்டை த‌மிழ்நாடு என்று அழைக்க‌க் கூடாது என்று யாராவ‌து சொன்னால் அது நிச்ச‌ய‌மாக‌ அவ‌ர்க‌ளின் அறியாமையை ம‌ட்டும‌ல்ல கோண‌ங்கித் த‌ன‌த்தையும் தான் காட்டுகிற‌து என்ப‌தில் ஐய‌மில்லை.
   //அவர்களும் கேரள ஈழம் கேட்பதில்லையா?//

   இப்ப‌டியான‌ கேள்வி கேட்ப‌வ‌ர்க‌ளை ஈழ‌த்தில் மொட்டைத் த‌லைக்கும் முழ‌ங்காலுக்கும் முடிச்சுப் போடும் முட்டாள்க‌ள் என்பார்க‌ள். அதிலும் கேர‌ள‌ம் என்ப‌து ஒரு மாநில‌த்தின் பெய‌ர் ஆனால் த‌மிழீழ‌த்திலுள்ள‌ த‌மிழ் என்ப‌து இல‌ங்கையில் த‌மிழ‌ர்க‌ளின் பார‌ம்ப‌ரிய‌ தாய‌க‌மாகிய‌ வ‌ட‌ கிழ‌க்கில் பெரும்பான்மையாக‌ வாழும் த‌மிழ் பேசும் ம‌க்க‌ளின் மொழி அடையாள‌த்தைக் குறிப்ப‌து. "ஏன் ம‌லையாள ஈழ‌ம் கேட்ப‌தில்லையா?" என்று கேட்டிருந்தால், technically அந்தக் கேள்வி சரியானதாக இருந்திருக்கும், அப்படிக் கேட்காம‌ல் அதையும் கோட்டை விட்டு விட்டீர்கள். தமிழ்நாட்டில் எப்படியோ எனக்குத் தெரியாது, இலங்கைத்தமிழர்கள் எவரும் தம்மை யாரும் மலையாளி என்று அழைப்பதைப் பெருமையாகக் கருதுவதாகத் தெரியவில்லை. ஒருவரை மலையாளிகளின் பரம்பரை என்றால் அவர் கள்ளத்தோணி மாதிரி, அதாவ‌து அவ‌ர்க‌ளின் முன்னோர்க‌ள் சில‌ நூற்றாண்டுக‌ளுக்கு முன்பாக‌ ப‌ஞ்சம் பிழைக்க இல‌ங்கைக்கு வந்த‌வ‌ர்க‌ள். அப்ப‌டி அழைப்ப‌து அவ‌ர்க‌ளை அவ‌ம‌திப்ப‌து போன்றது. :)


   நீக்கு
 37. ayya,

  1, Tamils of TN, India are not united. They are separated by caste. They will never unit.

  2. Tamils of Srilanka are also not united. Three groups are there 1. LTTE 2. LTTE supporters 3. Actual suffering people.

  3. Maximum number of srilanka tamils are killed by srilankan army and next maximum of tamil killed by LTTE.

  4. after kiling Rajiv Gandhi, LTTE or Tamils of srilanka lost their support from Tamilnadu and they will never gain confidence of India/TN

  பதிலளிநீக்கு
 38. //சிங்களத்திற்கு தென்னிந்தியாவில் இருந்து மக்கள் கூலிகளாகப் போனது இரண்டு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பாகத்தான்// என்று ஒரு தமிழ் நாட்டிலிருக்கும் ஒரு முதியவர் சொல்கின்றார் என்னும்போது இதை நம்பமுடியவில்லை. இது உண்மையாக இருந்தால் இவ்வாறு அடி முட்டாள்களாக கிணற்று தவளைகளாக சிலர் தமிழ் நாட்டில் இருக்கின்றனரே என்ற வேதனை ஏற்படுகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எப்போ போனாங்கன்னு நீதான் சொல்லேன்?

   நீக்கு
  2. பதிவிடும் நீங்கள் தான் தரவுகளை முன் வைக்க வேண்டும். இதற்கு முன் தமிழர்கள் சிங்கப்பூர், மலேசியா சென்று வாழ்ந்தார்கள். அங்கெல்லாம் அவர்கள் தனி நாடு கேட்க வில்லையே. இலங்கையில் பெரும்பான்மை தமிழர்கள் பூர்விக குடியினரே. இங்கிருந்து சென்றவர்கள் ஒரு சிறு பகுதி தான். அவர்களில் பெருந்தொகையே பண்டரனயகே திருப்பி அனுப்பி விட்டார் என்பதும் தெரிந்த உண்மையே. நீங்கள் நெற்றியில் போட்டிருக்கும் திருநீறு மாட்டு சாணத்துக்கு பதிலாக மனித சாணத்தில் எடுத்து அணிந்திருக்கர்கள் என்று சொன்னால் எவ்வளவு கோபம் வருமோ அது போல் எங்களுக்கு உணர்வு பூர்வமான பிரச்சனை. எதையும் எள்ளி நகையாடி பதிவிடாதீர்கள். இலங்கை பிரச்னை இவ்வளவு வளர்ந்து எட்டா கனி என்று நீங்கள் சொல்லுமளவுக்கு ஆனதற்கும் குட்ட குட்ட குனியும் உங்களை போன்ற எங்கள் முன்னாள் தலைமுறையினர்தான் காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மை.

   நீக்கு
 39. அடேய் வாய்க்கால்வெட்டி நாயே... ஒழுங்கா வரலாறு தெரிஞ்சா எழுது அத்தவிட்டு மங்குனி மாதிரி பேசிகிட்டே இருந்தேன்னு வை...உன்ன பைத்தியக்காரன் கணக்குல தான் சேர்க்கோணோம்..

  பதிலளிநீக்கு
 40. இலங்கை வரலாறு சிக்கல் நிறைந்தது. அங்கு முன்பு வேடுவர்கள், பழங்குடிகள் வாழ்ந்தார்கள். தம்பபண்ணி என்ற நாடும் இருந்தது, அவர்கள் நாகர், யக்கர் என்ற அமானுசியர்கள் என வட இந்திய நூல்கள் கூறின. பின்னர் தென்னிந்தியா, வட இந்தியாவில் இருந்து குடியேறி சிங்களம் என்ற நாடும், இனமும் உருவாகியது. பின்னர் தமிழக மன்னர்கள் படையெடுத்தனர் அப்போது தமிழர்கள் குடியேறினார்கள், தமிழர்கள் என்பதில் மலையாள கரை மக்களும் அடக்கம். அத் தமிழர்கள் பின்னர் தனி இனமாக மாறிக் கொண்டனர். நீங்கள் கேட்ட கேள்வி சரியே ஈழத்தமிழரில் கணிசமான மலையாளக் கலப்புண்டு. மொழி, வாழ்வியல், உணவு, என்பதில் அது காண முடியும். ஆனால் மலையாளி என்று தம்மை அவர் கூறுவதில்லை. கிழக்கு தமிழர் - முஸ்லிம் மலபார் கரைவாசிகள் என்பதை கார்த்திகேசு சிவத்தம்பி போன்றோர் கூறியுள்ளனர். வடக்கில் கோரமண்டலக் கரைவாசிகளும், மலபார் கரைவாசிகளும் கலந்துள்ளனர். இது பிரதேசம், சாதியமாக உருமாறிக் கொண்டன. வன்னியின் மன்னார் வாசிகள் பெரும்பாலும் தூத்துக்குடி, நெல்லையோடும், முல்லைத்தீவு, வவுனியா வாசிகள் புதுக்கோட்டை, மதுரை, மற்றும் சிங்களத்தோடும், யாழ்ப்பாண வடமராட்ச்சி வாசிகள் ஆந்திரம், தொண்டை நாடு, கலிங்கத்தோடும், தென்மராட்சி மற்றும் வலிகாமம் வாசிகள் மலபார், திருச்சி - தஞ்சையோடும், தீவு வாசிகள் ராமனாடோடும். புத்தளம் - நீர்கொழும்பு வாசிகள் நாகப்பட்டினம், தூத்துக்குடியோடும், மட்டக்களப்பு - அம்பாறை வாசிகள் கேரளக்கரையோடும் தொடர்பு பட்டவர். ஈழத்தமிழர் அரசியல் காரணங்களுக்காக இதை மறுத்தாலும் இதுவே உண்மை.

  பதிலளிநீக்கு