திங்கள், 10 ஜூன், 2013

டிராபிக் ரூல்ஸ்


சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானவை என்றுதான் நாம் அனைவரும் நம்பிக்கொண்டு இருக்கிறோம். ஆனால் நடைமுறை அப்படியில்லை என்பதை பலர் தங்கள் அனுபவத்தில் அறிந்திருப்பார்கள்.

சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம்.

கோவையில் உள்ள ஒரு முக்கிய ரோட்டில் ஒரு பக்கத்தில் "நோ பார்க்கிங்க்" போர்டுகள் வைத்திருக்கிறார்கள். அந்த போர்டுகள் ஒரே சீரான இடைவெளியில் இல்லை. ஒரு இடத்தில் அந்த மாதிரி போர்டு இல்லாத இடம் இருந்திருக்கிறது. அங்கு சில கார்களை நிறுத்தி வைத்திருந்தார்கள். என் நண்பர் "இந்த இடத்தில் கார்களை நிறுத்தலாம் போல் இருக்கிறது" என்று தன்னுடைய காரை நிறுத்திவிட்டு அவர் வேலையை கவனிக்கப் போய்விட்டார்.

திரும்பி வந்து பார்க்கையில் அவர் கார் சக்கரத்திற்கு ஒரு பூட்டுப் போட்டிருந்தது. கார் கண்ணாடியில் ஒரு போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் உங்கள் கார் "நோ பார்க்கிங்" இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் உங்கள் காரை லாக் செய்திருக்கிறோம். இந்த போலீஸ் ஸடேஷனுக்கு வந்து உங்கள் காரை ரிலீஸ் செய்து கொள்ளவும் என்று எழுதியிருந்தது.

அந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற கார்களை எனது நண்பர் பார்த்தார். அந்தக் கார்களுக்கு இந்த மாதிரி பூட்டு போடவில்லை. இவர் சிரமப்பட்டு போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய் விசாரித்தார். அந்த டூட்டியில் இருக்கும் போலீஸ்காரர் இந்த ரோட்டில் இப்போது இருக்கிறார், அங்கு சென்று பாருங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவரும் அங்கே சென்று சிரமப்பட்டு அவரைக்கண்டுபிடித்து கார் நிறுத்தியிருந்த இடத்திற்கு கூட்டிவந்தார்.

அவர் 300 ரூபாய்க்கு பைன் எழுதி பணத்தை வாங்கிக்கொண்டு பூட்டை திறந்துவிட்டார். என் நண்பருக்கு வயித்தெரிச்சலும் கோபமும் ஒரு சேர வந்தன. அவர் போலீஸ்காரரிடம் "இங்கே இன்னும் நாலு கார்கள் இருக்கின்றனவே, அவைகளுக்கு ஏன் பூட்டு போனவில்லை, என் காருக்கு மட்டும் ஏன் பூட்டு போட்டீர்கள்" என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த போலீஸ்காரர் சொன்ன பதில் பொன்னெழுத்தில் பொறிக்கப்படவேண்டியவை. "சார், இப்போ விவகாரம் எனக்கும் உங்களுக்கும் மட்டும்தான், அடுத்தவர்களைப்பற்றி நீங்கள் பேசவேண்டாம்" என்று சொல்லியிருக்கிறார்.

இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும் என்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள்தான் உண்மையான இந்தியப் பிரஜை.

10 கருத்துகள்:

  1. இந்தியப் பிரஜை.ஆவதற்கு சரியான பயிற்சி..!

    பதிலளிநீக்கு
  2. //இதிலிருந்து என்ன தெரிகிறதென்றால் சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும் என்பதுதான். இதைப் புரிந்து கொண்டால் நீங்கள்தான் உண்மையான இந்தியப் பிரஜை.//
    இது வரை புரியாமல் இருந்தால்தானே! இது 100 க்கு 100 பேருக்கு தெரியும். ஆனால் புரியாத மாதிரி நடிப்பார்கள். ஏனென்றால் அவர் தான் இந்தியப் பிரஜை

    பதிலளிநீக்கு
  3. அப்போதே 'கவனித்து' இருந்தால் சரியாகி இருக்கும்...

    பதிலளிநீக்கு
  4. //சட்டம் என்பது எல்லோருக்கும் பொதுவல்ல. ஆளாளுக்கு மாறுபடும்.//
    இது இந்தியாவில் எழுதப்படாத விதி. நாம் தான் உஷாராக இருக்கவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. திருச்சி சிந்தாமணி கிராசிங்-கில் ஒரு lady seargent தலைமையில் 2-3 போலீஸ் காரர்கள்
    போகும்,வரும் வாகனங்களை நிறுத்தி அபராதத்தொகை வசூலித்துக்கொண்டிருந்தார்கள் ;
    'என்னிடம் எல்லா documents -ம் சரியாக வைத்திருப்பதாக கூறினேன் ;அத்ற்கு அந்த
    lady seargent ' சார் , சும்மா argue பண்ணிக்கிடிருக்காதீர்கள் ;நான் உங்களிடம் ஒன்றும்
    அதிகமாக கேட்கவில்லை ,பேசாமல் Rs 50/-கொடுத்துவிட்டுப போய் கொண்டிருங்கள் ;
    அவர் என்னிடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே station -லி ருந்து அவருக்கு call
    வந்தது;" அவசரமாக திரும்பி வரவேண்டாம்;target முடித்து விட்டு வந்தால் போதும் "

    மாலி .

    பதிலளிநீக்கு
  6. // சமீபத்தில் என் நண்பருக்கு ஏற்பட்ட அனுபவம். //

    அந்த நண்பர் நீங்கள்தான் என்று நினைக்கிறேன். வேறு யார் துணிச்சலாக அந்த போலீஸ்காரரிடம் கேட்கமுடியும்?



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை துணிச்சல்காரன் என்று கூறியதற்கு நன்றி. ஆகவே என் நண்பர்களும் அப்படித்தானே இருப்பார்கள். இந்த அனுபவம் நிஜமாகவே என் நண்பருக்கு ஏற்பட்டதுதான்.

      நீக்கு
  7. எல்லா ஊர்களிலும் நடக்கும் அவலம் இது.
    யாரை நோவது?

    பதிலளிநீக்கு