திங்கள், 29 ஜூலை, 2013

உலகில் பேரின்பம் தருவது எது ?


பல கால ஆராய்ச்சியின் சாரத்தை இப்போது நான் உங்களுக்குக் கொடுக்கப் போகிறேன். அதை ஏற்றுக் கொள்வதும் கொள்ளாததும் உங்கள் விதிப்பயனால் தீர்மானிக்கப்படும்.

உலகில் பேரின்பம் மற்றும் சிற்றின்பம் என்று இரண்டு வகை இருப்பதை எல்லோரும் அறிவீர்கள். சிறிது நேரமே இருந்து பின் மறைந்து போவதை சிற்றின்பம் என்று சொல்வது மரபு. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். சாப்பிடும்போது இன்பமாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இன்பம் மறைந்து விடுகிறது.

இவ்வுலகில் நாம் அனுபவிக்கும் பெரும்பாலான இன்பங்கள் இவ்வகையைச் சேர்ந்ததுதான். அதனால்தான் பெரியவர்கள் பேரின்பத்தை நாடு என்று சொல்லி வைத்துப் போனார்கள். ஆனால் பேரின்பம் என்றால் என்ன, அதை அடைவது எப்படி என்கிற வழிவகைகளை அவர்கள் சொல்லவில்லை.

ஆண்டவனை உணர்வதுதான் பேரின்பத்திற்கு வழி என்று பொத்தாம் பொதுவாக சொல்லி விட்டார்கள். ஆனால் இந்த வழியில் போய் பேரின்பத்தை நுகர்ந்தவர்களை யாரையும் காணோம்.

இவ்வுலக மாந்தர் உய்யும்பொருட்டு பலகாலம் சிந்தித்து பேரின்பம் அடையும் மார்க்கத்தை இங்கே கொடுத்திருக்கிறேன். இந்தப் பொருளை நினைக்க நினைக்க இன்பம் தரும். பார்த்தால் இன்பம் பலமடங்கு பெருகும். தொட்டாலோ பேரின்பம் பயக்கும்.

இந்த இன்பம் எப்போதும் தெவிட்டாது. இந்தப் பொருளை எவ்வளவு அடைந்தாலும் மேலும் மேலும் வேண்டும் என்றே தோன்றும்.

அது என்னவென்று அறிய ஆவலாய் இருக்கிறீர்களா?

இதோ பாருங்கள்.

பணம் ஒரு பேய், பணத்தாசை கூடாது, பணத்திற்கு அடிமையாகாதீர்கள் என்றெல்லாம் கூறுபவர்களை நம்பாதீர்கள். ஒன்று அவர்களிடம் பணம் இல்லை அல்லது ஏற்கெனவே ஏகப்பட்ட பணத்தைச் சேர்த்துவிட்டார்கள். நம்ம கார்பரேட் சாமியார்களைப் பாருங்கள். அவர்களிடம் ரிசர்வ் பேங்க் கஜானாவே இருக்கிறது. ஆனால் அவர்கள் போதிப்பது என்னவென்றால் பணத்தாசை கூடாது என்று.

ஆகவே பதிவர்களே, விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்.

34 கருத்துகள்:

 1. //ஆகவே பதிவர்களே, விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்//

  அன்றாட ஐஸ்கிரீம் போன்ற சிற்றின்பங்களை நாம் தொடர்ந்து அனுபவிக்கவே, தாங்கள் சொல்லும் பணம் பேரின்பம் தான் தேவைப்படுகிறது.

  அருமையாக ’பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்ற இவ்வுலக உண்மைகளைப் புட்டுப்புட்டு வைத்துள்ள தங்கள் சேவை தொடர்க.

  http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_16.html

  இந்த லிங்கின் இறுதியில் ஒரு குட்டியூண்டு கதை உள்ளது. அதுவும் இதே கருத்தையே தான் வலியுறுத்திச் சொல்கிறது. படித்துக் கருத்துச் சொல்லுங்கள், ஐயா.

  vgk

  பதிலளிநீக்கு
 2. //அவர்களிடம் ரிசர்வ் பேங்க் கஜானாவே இருக்கிறது. ஆனால் அவர்கள் போதிப்பது என்னவென்றால் பணத்தாசை கூடாது என்று.//
  ஹா ஹா ஹா உண்மை உண்மை

  பதிலளிநீக்கு
 3. இன்றைக்கு உண்மை தான் ஐயா... அதிகமாக இருந்தால் நம்மை தெரிவதில்லை... குறைவாக இருந்தால் நம்மை யாருக்கும் தெரிவதில்லை...

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் சொல்வது உண்மை.. அதனால் தான் அவ்வைப் பாட்டியே சொன்னார்.

  ‘’கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன் றுண்டாயின்
  எல்லாரும் சென்றங் கெதிர்கொள்வர் -இல்லானை
  இல்லாளும்வேண்டாள் (;)மற் றீன்றெடுத்த தாய்வேண்டாள்
  செல்லா(து) அவன்வாயிற் சொல்’’

  என்று.

  பதிலளிநீக்கு
 5. மிகவும் அற்புதமான பதிவு. பணமும், பண ஆசையும் தீது எனக் கூறியவர்கள் உண்மையில் அதனை அடைய வக்கற்றோர், அல்லது ஏற்கனவே நிறைய சேர்த்து விட்டோர் தான். பணம் தீயதா? இல்லை தீய மனிதரிடம் தீய வழியில் பணம் சம்பாதிக்க முனைவதே தீயது. பொருள் இல்லாதோர்க்கு இவ் வுலகம் இல்லை என்றவர் வள்ளுவர், ஆனால் பொருளை சேர்த்துக் கொண்டு அருள் ( கருணையை ) மறப்பதே தீயது. எல்லாவிடத்திலும் பணம் தீதன்று மனிதரே தீயவராய் உள்ளனர். உழைத்துச்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மைதானே...! பணம் சம்பாதிக்க முயற்சி செய்பவர்களுக்கும் நாம்மாலான உதவிகளைச் செய்து அவர்களுக்கும் மீன்பிடிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். வக்கற்றவர்களை, வறியவர்களை, இல்லாதவர்களை நம்முடன் இணைத்து கைகோர்த்து வழிகாட்ட வேண்டும். நிறையபேர் இதை செய்வதே இல்லை..

   தான் மட்டும் பிழைத்தால் போதும் என்ற சுயநலம்.. தன்னுடைய வாரிசுகள் மட்டுமே பரம்பரை பரம்பரையாக பணக்காரரகளாக இருக்க வேண்டும் என்ற ஒருதலைப்பட்ச உணர்வாலேயே இன்றும் பரம்பரைப் பணக்காரர்கள் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

   தொண்ணூறு சதிவிகித பெரும்பணக்காரர்கள் இப்படிதான் உள்ளனர் என்பதும் கசப்பான உண்மை.

   இதில் என்ன வேடிக்கை என்றால் பரம்பரை ஏழையாக இருந்து தனது சுய முயற்சியால் பெரும்பணக்காரராக மாறியவர்கூட தனது முந்தைய நிலையை மறந்துவிடுவதுதான். தன்னைப் போன்றவர்களை உயர்த்த ஒருபோதும் இவர்கள் எண்ணுவதில்லை. காரணம் பணக்காரன் என்ற போர்வையில் அவர் ஒளிந்துகொண்டிருக்கிறார்கள். போர்வையை எடுத்தால் உண்மையான நிலைமை அனைவருக்கும் தெரிந்துவிடும் என்ற பயம்கூட காரணமாக இருக்கலாம்.

   நீக்கு
  2. தீய வழியில் பணம் சம்பாதித்தால் தப்பு. அப்ப, ஒரு பணக்காரன் அரசாங்கத்தை கைக்குள் போட்டுக்கொண்டு, ஏழை விவசாயிகள் வயிற்றில் அடித்து, அவர்கள் நிலத்தை அடிமாட்டு விலைக்கு வாங்கி, சுற்றுப்புற சூழலைக் கெடுத்து, தொழிற்சாலை நடத்திப் பணம் சம்பாதிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயி, அந்த முதலாளியிடம் கொள்ளை அடிக்கிறான். இப்ப யார் பணம் சம்பாதித்தது தப்பான வழி என்பீர்கள்?சட்டப்படி பார்த்தால் அந்த ஏழையை சிறையில் தள்ளி, அவன் கொள்ளையடித்த பணத்தை அந்தப் பணக்காரனுக்கு காவல்துறையினர் 'மீட்டு'த்தருவார்கள். அப்ப அதுதான் சரியா?

   நீக்கு
 6. விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்.

  அருமையான அனுபவ வரிகள்..!

  பதிலளிநீக்கு
 7. நான் நினைச்சேன். தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்கு இதுபோல்தான் இருக்குமென்று தோன்றியது... படித்துப் பார்த்தால் அதேதான்.. எப்படியும் நீங்கள் வித்தியாசமாகத்தான் சிந்தித்து எழுதுவீர்களென தெரியும்.. எனது நம்பிக்கை வீண் போகவில்லை..

  பணமில்லையென்றால் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாது..


  இதை நான் தற்பொழுது அனுபவ பூர்வமாக உணர்ந்துகொண்ருக்கிறேன்.

  உங்களுடைய கருத்தில் உண்மை இருக்கிறது...

  சிற்றின்பம், பேரின்பம் என்று சொல்லி அதற்கு விளக்கம் அளித்த விதமும் நன்று.

  பதிலளிநீக்கு
 8. விவேகத்துடன் பணத்தை சேமியுங்கள்.....

  நல்ல அறிவுரை.....

  பதிலளிநீக்கு
 9. பணத்தை சேமியுங்கள் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாளைக்கு, நாளைக்கு என்று இன்றைய வாழ்க்கையை வாழ மறந்துவிடாதீர்கள். பிறகு நாளை என்பது வராமலே போகும்.

  பதிலளிநீக்கு
 10. பணத்தை சேமியுங்கள். அதற்காக இன்றைய தேவைகளையும் மறந்துவிடாதீர்கள். இன்றைக்கு வாழாமல் நாளைக்கு, நாளைக்கு என்று சேமிப்பதில் என்ன பயன்? நம்மில் பலர் இதைத்தான் செய்கிறோம்.

  பதிலளிநீக்கு

 11. "பொரு ளில்லாதவனை தாய் நிந்திப்பாள் ;தகப்பன் சந்தோஷியான் ;உடன் பிறந்தவன்
  பேசான் ;வேலைக்காரன் கோபித்துக்கொள்வான் ;மகன் பின் செல்லான்;மனைவி தழுமாட்டாள் ;தன்னை பொருள் கேட்பானோ என்ற அச்சத்தினால் ஸ்நேகிதன் கூட
  குசலம் விசாரிக்கமாட்டான் ;ஆகையால் ஓ ,புத்திசாலியே பணத்தை சம்பாதி ;பணத்தினால்
  எல்லோரும் ச்வாதீனமாவார்கள் " ( நீதி சாஸ்திரம் )
  மாலி.  பதிலளிநீக்கு
 12. "பொரு ளில்லாதவனை தாய் நிந்திப்பாள் ;தகப்பன் சந்தோஷியான் ;உடன் பிறந்தவன்
  பேசான் ;வேலைக்காரன் கோபித்துக்கொள்வான் ;மகன் பின் செல்லான்;மனைவி தழுமாட்டாள் ;தன்னை பொருள் கேட்பானோ என்ற அச்சத்தினால் ஸ்நேகிதன் கூட
  குசலம் விசாரிக்கமாட்டான் ;ஆகையால் ஓ ,புத்திசாலியே பணத்தை சம்பாதி ;பணத்தினால்
  எல்லோரும் ச்வாதீனமாவார்கள் " ( நீதி சாஸ்திரம் )
  மாலி.  பதிலளிநீக்கு
 13. பணமும் தேவைதான். ஆனால் படத்தில் பணத்துடன் அமர்ந்திருக்கும் இன்னொரு செல்வம்! அதுவும் தேவை. அதைவிட மகிழ்ச்சி தரும் சொத்து உலகில் வேறேதும் இல்லை. கொழுத்த பணம் இருந்து குழந்தை செல்வம் இல்லாமல் வருந்துவோருடைய வருத்தம் வறுமையை விடவும் கொடிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. innum sariyaga sollapponal: Andhakkuzandaiyaippol kodikkana paNaththinidaiye irundapodilum, athu etahiyam kandu koLLmal irundal, anadam eppodum nichchayam. Thevaikku paNaththai upayogippathil thavaRethum illai.

   நீக்கு
 14. சார்! உங்களிடம் ஒரு கேள்வி-

  தமிழ்நாட்டில் 550 பொறியியல் கல்லூரிகள் இருக்கு. இதில் சுமார் 15 தவிர மத்த எல்லாமே தனியார் சுயநிதி கல்லூரிகள். 1 லட்சம் பேருக்கு மேல் முதலாம் ஆண்டில் சேருகிறார்கள். இதெல்லாம் உங்களுக்குத் தெரிந்த செய்தி. இதுவே விவசாயம்-கால்நடை மருத்துவம் போன்றவை தொடர்பான கல்லூரிகள் 4 - 5 தான் இருக்கு. எல்லாமே அரசுக் கல்லூரிகள் தான். இப்ப என் கேள்வி என்னன்னா, விவசாயப் படிப்பு உலகெங்கும் நல்ல வாய்ப்புகள் உள்ள புரொபஷனல் படிப்பு. இருந்தும் அதில் சேர மாணவர்களோ, அல்லது கல்லூரி ஆரம்பிக்க 'கல்வித் தந்தைகளோ' முன்வராதது ஏன்? இந்தத் துறை பிரபலமாக்க என்ன செய்ய வேண்டும்? பின்னூட்டத்துக்கு பதிலாக எழுதினால் மகிழ்ச்சி. தனிப் பதிவாகவே எழுதினால் இரட்டிப்பு மகிழ்ச்சி!

  இன்னொரு விஷயம். தமிழ்நாட்டில் புரொபஷனல் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவு தேர்வு எம்.ஜி. ஆர். ஆட்சிகாலத்தில் வந்தது. முதல் வருடம் தேர்வை சென்னை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தியது. இரண்டாவது ஆண்டு (மருத்துவம்+பொறியியல்+வேளாண்மை) நுழைவு தேர்வை கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகம் நடத்தியது! இது இன்று நிறைய பேருக்குத் தெரிந்திருக்காது! பிறகு 3-ஆம் ஆண்டிலிருந்து எல்லா ஆண்டும் அண்ணா பல்கலையே நடத்தும்படி ஏற்பாடு செய்துவிட்டார்கள். வேளாண்மைப் பல்கலை ஒரே ஒருமுறை நுழைவு தேர்வு நடத்தும் பொறுப்பை ஏற்றபொழுது நீங்கள் அது சம்பந்தமான பணிகளில் ஈடுபட்டிருந்தால் அல்லது, அது தொடர்பான சுவாரசியமான தகவல்கள் ஏதாவது உங்களுக்குத் தெரிந்திருந்தால், அதுபற்றிப் பதிவு எழுதலாமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொறியியல் கல்லூரிகள் நிறைய உள்ளன என்று சுட்டிக்காட்டி உள்ளீர்கள். இந்த ஆண்டு சேர்ப்பு காலம் முடிந்தவுடன் சுமார் நான்கில் ஒரு பங்கு இருக்கைகள் காலியாக உள்ளன/இருக்கும். இதன் காரணமாக சில கல்லூரிகள் காலப்போக்கில் மூடப்படும். அவை கட்டிடம், கல்லூரி நடத்துவதற்கான கட்டமைப்பு உள்ளவை; அந்த கட்டமைப்பை வேறு வழிகளில் பயன் படுத்திக்கொள்ளவே விரும்புவர்; அதுவே சரியும் ஆகும். அங்கு, அப்போதைக்கு அவசியமான படிப்புக்களை பயிற்றும் கல்லூரிகள் துவங்கப்படும் என நம்புகிறேன். நீங்கள் கூறியது போல் விவசாயக் கல்லூரிகளும் வரக்கூடும்.

   நீக்கு
 15. பொருளை விவேகத்துடன் தேட சொல்லி அதுவே பேரின்பம் என்று அழகாக சொல்லிவிட்டீர்கள் உண்மைதான்! ஈட்ட ஈட்ட இன்பம் தருவது பொன்! அதை நியாயமாய் ஈட்டும் வரை இன்பம்தான்! நன்றி!

  பதிலளிநீக்கு
 16. நல்ல யோசனைதான். கொடுங்களேன். சேமிக்கிறேன்! :)))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைத்தான் தீட்டின மரத்திலேயே பதம் பார்க்கறது என்று சொல்வார்கள்.

   நீக்கு
 17. பணம் ஒரு பேய், பணத்தாசை கூடாது, பணத்திற்கு அடிமையாகாதீர்கள் என்றெல்லாம் கூறுபவர்களை நம்பாதீர்கள். ஒன்று அவர்களிடம் பணம் இல்லை அல்லது ஏற்கெனவே ஏகப்பட்ட பணத்தைச் சேர்த்துவிட்டார்கள். நம்ம கார்பரேட் சாமியார்களைப் பாருங்கள். அவர்களிடம் ரிசர்வ் பேங்க் கஜானாவே இருக்கிறது. ஆனால் அவர்கள் போதிப்பது என்னவென்றால் பணத்தாசை கூடாது என்று.

  உண்மையை இதைவிட நாசூக்காச் சொல்ல யாராலும் முடியாது :)
  வாழ்த்துக்கள் ஐயா மனம் தொட்ட பகிர்வுக்கு .

  பதிலளிநீக்கு
 18. //சிறிது நேரமே இருந்து பின் மறைந்து போவதை சிற்றின்பம் என்று சொல்வது மரபு. ஐஸ்கிரீம் சாப்பிடுகிறோம். சாப்பிடும்போது இன்பமாக இருக்கிறது. சாப்பிட்டு முடித்தவுடன் அந்த இன்பம் மறைந்து விடுகிறது.//

  இதான் சிற்றின்பமா? நான்தான் என்னவோ, ஏதோன்னு நினைச்சுட்டேன்.

  பதிலளிநீக்கு
 19. ரொம்பச் சரி.

  பேரின்பத்தின் வழியாக சிற்றின்பம் அடைகிறேன்.

  பதிலளிநீக்கு
 20. என்னய்யா இது! உண்மையைச் சொல்வதற்காகவே ஒரு வலைப்பதிவா!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா, நெசமாத்தான் சொல்றீங்களா இல்ல என்னை கிண்டல் பண்றீங்களா என்று புரியலை. எதுவாக இருந்தாலும் நன்றி.

   நீக்கு