திங்கள், 13 ஜனவரி, 2014

எலும்பு முறிவு வைத்தியம்.

டிஸ்கி; இந்தப் பதிவை டாக்டர்கள் குறிப்பாக எலும்பு வைத்திய டாக்டர்கள் படிக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இதில் கூறப்பட்டுள்ள கருத்துகள் அனைத்தும் ஒரு சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து எழுதப்பட்டிருக்கின்றன. உண்மை எப்போதும் கசப்பாகத்தான் இருக்கும். இந்தப் பதிவைப் படித்து விட்டு யாருக்காவது ஏதாவது ஆட்சேபணை இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். தரக்குறைவான பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும்.



சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் யாருக்காவது எலும்பு முறிந்து போனால் ஆங்காங்கே இருக்கும் நாட்டு வைத்தியரிடம் போவார்கள். அவர்கள் எலும்பு முறிந்த இடத்தை கையால் தொட்டுப் பார்த்தே அந்த முறிவு எப்படிப்பட்டது என்று கண்டுபிடித்து அதற்குத் தக்கவாறு மூங்கில் தப்பைகளை வைத்து துணியினால் இறுகக் கட்டி அதன் மீது அவர்கள் கொடுக்கும் அவர்களுடைய ஸ்பெஷல் எண்ணை ஒன்றை அடிக்கடி ஊற்றச்சொல்வார்கள்.

வாரத்திற்கு ஒரு முறை நோயாளியை வந்து போகச் சொல்லுவார்கள். கட்டுப்போட்ட இடம் மிகவும் வீங்கியிருந்தால் கட்டை அவிழ்த்து விட்டு மறுகட்டு போடுவார்கள். எப்படிப்பட்ட எலும்பு முறிவாக இருந்தாலும் இந்த வைத்தியத்தில் எலும்பு கூடிவிடும். பெரிய காயங்கள் இருந்தால்தான் கொஞ்சம் சிரமம். முதலில் காயம் ஆறவேண்டும். பிறகுதான் எலும்பைக் கவனிக்க முடியும். அதற்குள் எலும்பு எசகு பிசகாக ஒட்டிவிடும் வாய்ப்பு உண்டு. அப்போது அந்த எலும்பு ஓரளவு சரியாகச் சேர்ந்திருந்தால் அப்படியே விட்டு விடுவார்கள். இல்லையென்றால் அப்படி சேர்ந்த எலும்பை மறுபடியும் உடைத்து, பிறகு அதை நேராக வைத்து கட்டுப்போடுவார்கள்.

எல்லாம் நாட்டு வைத்தியம்தான். கோவையில் தெலுங்குபாளையம் உடையார் வைத்தியசாலை மிகப்பிரசித்தம். இங்கு சரியாகாத உடைந்த எலும்பு எங்கு போனாலும் சரியாகாது என்று சொல்வார்கள். இப்படி ஊர் ஊருக்கு ஒரு வைத்தியசாலை இருக்கும். சென்னைவாசிகள் புத்தூர் வைத்தியத்தைப்பற்றி கட்டாயம் தெரிந்திருப்பார்கள்.

இந்த வைத்தியம் மிகவும் எளிமையானது. ஏழைகளுக்கும் கட்டுப்படியாகக் கூடியது. என்ன, வீட்டில்  மற்றும் துணிமணிகளில் எண்ணை நாற்றம் போக ஓரிரு வருடங்கள் ஆகலாம். அவ்வளவுதான். இந்த மாதிரி வைத்தியங்கள்
வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்ததற்கு காரணம் எலும்புகளின் தன்மைதான்.

மனித உடம்பு மற்றும் சகல உயிருள்ள ஜீவராசிகளின் தனித்தன்மை என்னவென்றால் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்ள முடிவது. எந்த வியாதியாய் இருந்தாலும் சும்மா விட்டு விட்டால் தானாகவே சரியாய் விடும். என்ன, கொஞ்ச நாள் பிடிக்கும். ஆனால் மனிதனுக்கு மட்டும் ஆத்திரம். நோய் சீக்கிரம் குணமாக வேண்டும். இதற்காகத்தான் வைத்தியர்கள் பிறந்தார்கள்.

பல விதமான வைத்திய முறைகள் ஒவ்வொரு நாட்டிலும் தோன்றி வளர்ந்தன. இதில் நம் நாட்டு ஆயுர்வேத முறை சிறந்து விளங்கியது. உணவே மருந்து என்ற முறையில் வளர்ந்தது. பண்டைக்காலத்தில் நாவிதர்கள்தான் மருத்துவர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மேலை நாடுகளிலும் அப்படித்தான் நாவிதர்கள்தான் மருத்துவம் செய்திருக்கிறார்கள். இந்த முறைகளே பிற்காலத்தில் மாறி பல வித வைத்திய முறைகள் உருவாக வழி வகுத்தது.

எலும்பு வைத்தியத்திற்கு வருவோம். நாட்டு வைத்தியர்கள் குறைந்த செலவில் வைத்தியம் செய்து கொண்டிருந்தார்கள். பிறகு இங்கிலீஷ் வைத்தியம் வந்தது. எக்ஸ்-ரே மிஷின் கண்டு பிடித்தார்கள். இந்த மிஷின்கள் எலும்புகளை துல்லியமாய் படம் எடுத்தன. எலும்பு உடைந்ததை சரியாக கண்டு பிடிக்க முடிந்தது. இதனால் எலும்பு வைத்தியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டது. தெலுங்குபாளையம் வைத்தியர் கூட எக்ஸ்-ரே மிஷின் வாங்கி வைத்தார்.

நாட்டு வைத்தியத்திற்கும் இங்கிலீஷ் வைத்தியத்திற்கும் ஒரே வித்தியாசம், இல்கிலீஷ் வைத்தியத்தில் மாவுக்கட்டு போட்டார்கள். எண்ணை வாசம் இல்லை. ஆகவே மக்கள் இந்த முறையை அதிகம் விரும்பலானார்கள். இப்படி எலும்பு வைத்தியம் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் மற்ற இங்கிலீஷ் வைத்தியத்துறைகளில் பலவிதமான முன்னேற்றங்கள் ஏற்பட்டு டாக்டர்கள் புகழ் பெற்றார்கள். குறிப்பாக அறுவை சிகிச்சைகளில் நூதன உத்திகள் கண்டு பிடிக்கப்பட்டு டாக்டர்களால் பின்பற்றப்பட்டன. அவர்களின் கல்லாவும் நிறைந்தது.

பாவம், எலும்பு வைத்தியர்கள்! வெறும் மாவுக்கட்டு மட்டும் போட்டுவிட்டு என்ன பில் போட முடியும்? ஏதோ ஓரிரு ஆயிரம் ரூபாய்கள் மட்டுமே பில் போட முடிந்தது. இந்த காலத்தில் மேலை நாடுகளில் சிக்கலான எலும்பு முறிவுகளுக்கு ஆபரேஷன் செய்து எலும்புகளுக்கு சப்போர்ட்டாக துருப்பிடிக்காத இரும்புத்துண்டுகளை வைத்து ஸ்குரூ ஆணி வைத்து முறுக்கி வைத்தியம் செய்தார்கள். இப்படி செய்யும்போது  நோயாளிக்கும் டாக்டர்களுக்கும் சேர்த்து நல்ல பலன் கிடைத்தது.

இங்கிலீஷ் வைத்தியத்தில் கத்தி வைத்தால்தான் மதிப்பு. வெறும் மருந்து மட்டும் கொடுக்கும் டாக்டர்களுக்கு மதிப்பு கொஞ்சம் குறைச்சல்தான். ஆகவே எலும்பு வைத்தியத்துறையிலும் கத்தியையும் புத்தியையும் உபயோகிக்கும் பல நூதன உத்திகளை கடந்த இருபது முப்பது ஆண்டுகளில் கண்டுபிடித்துள்ளார்கள். இவை நோயாளியை சீக்கிரம் குணப்படுத்தவும் அவனுடைய பர்சை சீக்கிரம் இளைக்க வைக்கவும் உதவின.

இன்று எலும்பு வைத்தியத்திற்கென்றே ஸ்பெஷலிஸ்ட்டுகளும் ஸ்பெஷல் ஆஸ்பத்திரிகளும் உருவாகி மக்களுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றன.
ஏறக்குறைய இருதய ஆபரேஷன் அளவிற்கு எலும்பு வைத்தியமும் முக்கியத்துவம் அடைந்துள்ளது எல்லோருக்கும் (குறிப்பாக எலும்பு வைத்திய டாக்டர்களுக்கும்) மகிழ்ச்சியளிக்கிறது.

24 கருத்துகள்:


  1. //இப்படி செய்யும்போது நோயாளிக்கும் டாக்டர்களுக்கும் சேர்த்து நல்ல பலன் கிடைத்தது.//
    //நோயாளியை சீக்கிரம் குணப்படுத்தவும் அவனுடைய பர்சை சீக்கிரம் இளைக்க வைக்கவும் உதவின.//

    தங்களின் கூற்று சிரிக்க வைத்தாலும், நோயாளிகளுக்கு நல்ல பலன் கிடைக்கின்றன என்பதை தெளிவாக சொல்லிவிட்டீர்கள்.

    பதிலளிநீக்கு
  2. எலும்பை எண்ணுவது மாதிரி எலும்பு வைத்தியத்தை எண்ணிவைத்த பகிர்வுகள்..

    சேல்த்தில் பூமிசெட்டி வைத்தியர் எலும்பு சிகிச்சைகளிக்கு பிரபலமானவ்ர்..!

    பதிலளிநீக்கு
  3. //இதில் நம் நாட்டு ஆயுர்வேத முறை சிறந்து விளங்கியது.///

    சித்த மருத்துவத்தை விட்டுடீங்களே ஐயா....


    மணி---

    பதிலளிநீக்கு
  4. # பண்டைக்காலத்தில் நாவிதர்கள்தான் மருத்துவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.#
    இதனால்தான் நாவிதர்கள் இன்றும் மருத்துவர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள் !
    +1

    பதிலளிநீக்கு
  5. உள்ளே ப்ளேட் வைத்துத் தைப்பது, ஸ்பூன் வைத்துத் தைப்பது என்று சரவணா ஸ்டோர் ரேஞ்சுக்குப் போய்விட்டது! செலவும் லட்சங்களில்! :)))

    பதிலளிநீக்கு
  6. Dr ஐயா...

    கோவையில் Dr. C. REX, MS (Orth), Dip NB(Orth), FRCS(Ed), MCh Orth (Liverpool), FRCS Trauma & Orth (UK) , Phd பிரபலமான எலும்பு முறிவு மருத்துவர். அவர் படித்த படிப்பின் பட்டங்கள் மலைக்க வைக்கிறது.

    குறிப்பு: நான் விடுமுறை முடிந்து என் இருப்பிடம் வந்து சேர்ந்து விட்டேன். உங்களுக்கும் குடும்பத்தினர்க்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    நட்புடன்.
    சங்கர நாராயணன், தி

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வு.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் ஐயா
    அருமையான தகவல்கள். தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  9. எலும்பு மருத்துவர்கள் கத்திக்கும் புத்திக்கும் வேலை தருவதான சிகிச்சைக்கே முன்னுரிமை தருகிறார்கள். இடுப்பு வலி முட்டு வலி என்று போவோரைக் கண்டுகொள்வதே இல்லை. அப்படியே கண்டுகொண்டாலும் பிசியோ தெரபி என்று காசு பார்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான பகிர்வு ஐயா பகிர்வுக்கு மிக்க நன்றி .
    இனிய தைப் பொங்கல் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள்
    குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக
    மலரட்டும் !

    பதிலளிநீக்கு
  11. ஆங்கிலேய மருத்துவம் நாட்டில் கால் ஊன்றிய பிறகு சித்தா, ஆயுர்வேதா போன்ற தமிழ் மருத்துவ முறைகளுக்கு முக்கியத்துவம் குறைந்துதான் போய்விட்டது. முழுமுதல் காரணம் நமது மக்கள்தான். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த நமது மூதாதையர்களின் ' உணவே மருந்து மருந்தே உணவு' என்ற அடிப்படை கொள்கையிலிருந்து மாறுபட்டு விட்டோமே. நமது தட்ப வெப்ப நிலைக்கும் உடல் நிலைக்கும் ஏற்ற உணவுகளை தூக்கிபோட்டு விட்டு வெளிநாட்டு உணவுகளை உண்ண ஆரம்பித்த பிறகுதான் இவ்வளவு வியாதிகள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக விஷயம் தெரிந்த சில பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்களும் அது குடும்ப ரகசியம் என்ற பெயரில் ரகசியம் காப்பதால் அவர்கள் காலத்தோடு அதுவும் போய்விடும். பாட்டி வைத்தியம் என்பது இப்போதைய தனிகுடித்தன வாழ்க்கைகளில் தொலைந்தே போய்விட்டது. அஎத்தகைய பொக்கிசத்தை இழந்து விட்டோம் என்று புரியும் போது அது சரி செய்யப்பட முடியாத (Beyond reapir) நிலையை அடைந்திருக்கும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் போற்றி வைத்திருந்த நமது வைத்திய முறைகள் ஒரு சில நூற்றாண்டுகளிலேயே நம் கண் முன்னாலேயே ஒழிக்கப்பட்டுவிட்டது என்பது நிதர்சனமான உண்மை. இதற்கு நாம் அனைவரும் வெட்கப்பட வேண்டும் வேதனைப்பட வேண்டும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  12. I partially agree with you. However I feel we pay the price for the time it take to heal. Any person with the broken bone can walk in 5 days by surgery versus months to take by the conventional treatment. I realized the worth of bone specialists when my 95 year old grandfather broke the hip... The successful surgery made him walk today to use the indian style toilet... Until it happens to us everything on paper seems be good... But reality is tad different...

    பதிலளிநீக்கு
  13. எங்கள் ஊரிலும் எலும்பு முறிவு வைத்திய சாலை உண்டு தொடர்புக்கு .9942299496
    8883872210

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா வணக்கம் ஏனக்கு எலும்பு முறிவு ஏற்ப்பட்டு அறுவை சிகிச்சை செய்து குணமாகி நால்ல நடந்தேன் ஆனால் சிழ் வருவது நிற்கவில்லை மின்டும் எலும்பு முறிவு ஏற்ப்பட்டு மாவுக்கட்டு போட்டுள்ளேன் சீழ் வந்துக்கொண்டு இருக்கின்றது இதை சறி செய்ய முடியுமா?

      இது எனது தொலைபேசி எண் : 8939378245,9500031940

      நீக்கு
    2. சீழ் வருவதற்குக் காரணம் ஆபரேஷன் செய்த காயத்தில் ஏதோ ஒரு தொற்று ஏற்பட்டதுதான். இதற்கு ஆபரேஷன் செய்த டாக்டரே பொறுப்பு. ஆனால் அதைப்பற்றிப் பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை.

      இப்போதைக்கு இதை உடனடியாக குணப்படுத்த வேண்டும். இல்லையென்றால் இன்னும் சிக்கலில் கொண்டுபோய்விடும். உடனடியாக ஒரு நல்ல பெரிய எலும்பு முறிவு டாக்டரிடம் போகவும்.

      நீக்கு
  14. இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்பு தேய்மான நோய் காணப்படுகின்றது

    பதிலளிநீக்கு
  15. எலும்பு மஜ்ஜை (Bone marrow) என்பது எலும்பு களின் உட்பகுதியில் காணப் படும் மென்மையான இழையமாகும்

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் ஐயா எனது அண்ணனுக்கு சோல்டர் ஜாய்ன்ட் எழும்பில் முறிவு ஏற்பட்டுள்ளது கோவை எழும்பு முறிவுக்கான சிறப்பு மருத்துவமனை டாக்டர் தானாக கூடிவிடும் ப்ளேட் தேவையில்லை எனக்கூறியுள்ளார் அவர் கூறியது சரியான பரிந்துரையா தற்போது முறிவு ஏற்பட்டு இரண்டுமாதமாகிறது எனது ஊர் சேலம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. டாக்டர் சொல்லி விட்டார் என்றால் அது சரியாகத்தான் இருக்கும். அந்தக் கையினால் எப்போதும் போல் வேலைகளைச் செய்ய முடிந்தால் மற்றும் வலிகள் ஏதும் இல்லையென்றால் கை முழுவதும் சரியாகி விட்டது என்று எடுத்துக்கொள்ளலாம். ஏதாவது தொந்திரவு இருந்தால் டாக்டரைப் பார்க்கவும்.

      நீக்கு