திங்கள், 20 ஜனவரி, 2014

குற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்.

சுப்ரீம் கோர்ட்

பெயரில்லாஞாயிறு, 20 அக்டோபர், 2013 4:14:00 PM IST
உங்கள் அடுத்த பதிவுக்கு ஒரு தகவல்.
ஒரு வலைபதிவில் படித்தேன்
இது ஏன் என்று எழுதுங்களேன்


2012 இந்தியாவின் குற்ற வீதப் பட்டியல் படி, கேரள மாநிலத்திலேயே அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஒரு லட்சம் பேருக்கு சுமார் 455.8 சம்பவங்கள் படி இங்கு குற்றங்கள் பதியப்பட்டுள்ளன.

நாகலாந்து மிகக்குறைவான குற்றச்சாட்டுக்கள் பதிவான மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேரள தலைநகர் கொச்சியில் ஒவ்வொரு ஒரு லட்சம் பேருக்கும் சுமார் 879.9 குற்றச்சம்பவங்கள் படி பதியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஒரு இலட்சம் பேருக்கும் 294.8 குற்றங்கள் படி பதியப்பட்டுள்ளன. இந்தியாவில் கல்வியறிவைப் பொருத்தவரை எப்போதும் முதல் நிலையில் இருக்கும் கேரளா அதிக குற்றங்கள் பதியப்பட்ட மாநிலமாக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் குரு

இது ஒரு முக்கியமான செய்திதான். கேரளாக்காரர்களைத் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்த மனப்பான்மை புரியாது. நான் கேரளாவிற்கு வெகு சமீபத்தில் இருப்பதால் நான் ஓரளவு இவர்களின் சுபாவத்தை அறிந்திருக்கிறேன்.

பெரும்பாலும் அங்குள்ள மக்கள் வேலை வெட்டி ஒன்றுக்கும் போகாமல் திண்ணைகளில் உட்கார்ந்து வெட்டி அரட்டை அடித்துக் கொண்டிருப்பார்கள். சரியான சண்டைக்கோழிகள். எவனாவது ஒருவன் அடுத்தவனைப் பற்றி ஏதாவது சொல்லி விட்டால் போதும். உடனே இவன் " அதெங்ஙன அவன் இங்ஙன பறைஞ்ஞது. ஞான் சுப்ரீம் கோர்ட்டு வரை போயி அவனை ரெண்டில ஒண்ணு ஆக்கும்' அப்படீன்னு சொல்லிட்டு நேரா வக்கீல் வீட்டுக்குப் போய் விடுவான்.

நான் கோவை விவசாயப் பல்கலைக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவன் என்பது உங்களில் அநேகருக்குத் தெரிந்திருக்கும். நான் வேலை பார்த்த காலத்தில் எங்களுக்கு உத்தியோக உயர்வு கொடுக்க சில நடைமுறைகள் உண்டு. உத்தியோகத்தின் தரத்தைப் பொறுத்து ஒரு செலக்ஷன் கமிட்டி போடுவார்கள். அந்தக் கமிட்டி அந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களை எல்லாம் நேர்முகத் தேர்விற்கு அழைத்து பேட்டி காண்பார்கள். அதன் முடிவில் ஒரு தரப் பட்டியல் தயாரித்து அதை துணை வேந்தரிடம் கொடுப்பார்கள். அவர் அதில் உள்ளவர்களுக்கு வரிசைப் பிரகாரம் பதவி உயர்வு உத்திரவு போடுவார்.

இதுதான் நடைமுறை. இதை எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். எனக்குத் தெரிந்து ஒரே ஒரு முறைதான் இருவர் இந்த தேர்வை எதிர்த்து கோர்ட்டுக்குப் போனார்கள். தோற்றுப் போனார்கள். கேரளாவிலும் இதே போல் ஒரு விவசாயப் பல்கலைக்கழகம் உள்ளது. அங்கு எனக்குத் தெரிந்த பலர் பணி புரிந்தார்கள்.

அங்கும் பதவி உயர்விற்கு இதே நடைமுறைதான். ஆனால் ஒரு வித்தியாசம். தேர்வுக் கமிட்டியின் முடிவை சம்பந்தப்பட்டவர்கள் லேசில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள். தேர்வுக் கமிட்டியின் முடிவுகள் ரகசியமாக இருக்கவேண்டியவை. ஆனாலும் சம்பந்தப்பட்டவர்கள் இந்த கமிட்டியின் முடிவை எப்படியோ மோப்பம் பிடித்து விடுவார்கள். அதில் எப்படியும் ஓரிருவர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள்.

அவர்கள் அடுத்த நாள் காலையில் முதல் வேலையாக உயர் நீதி மன்றத்திற்குப் போய் இந்த தேர்விற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார்கள். அவ்வளவுதான். இந்த தடையை நீக்க ஆறுமாதம் ஒரு வருடம் போல் ஆகிவிடும். தடையை நாளைக்கு நீக்கப்போகிறார்கள் என்ற செய்தி சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படியோ கசிந்து விடும். அவர்கள் முன்னேற்பாடாக டில்லியில் ஒரு வக்கீலை ஏற்பாடு செய்து வைத்திருப்பார்கள்.

இங்கு உயர்நீதி மன்றத்தில் இடைக்காலத்தடை நீக்கப்பட்டது என்று நீதிபதி ஆர்டர் போட்டவுடன் டில்லிக்குத் தந்தி கோடுத்து விடுவார்கள். அங்குள்ள வக்கில் உச்ச நீதி மன்றத்தில் இந்த உத்திரவிற்கு இடைக்காலத் தடை வாங்கி விடுவார். அப்புறம் இன்னும் ஒரு ஆறு மாதமோ ஒரு வருடமோ ஓடிவிடும். இப்டியாக அந்தப் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு உத்தியாக உயர்வும் உச்ச நீதி மன்றம் போய்த்தான் முடிவு ஆகும்.

பொது வாழ்க்கையிலும் இப்படித்தான். எந்தவொரு சமாச்சாரமானாலும் கோர்ட்டிற்குப் போய்விடுவார்கள். இது கேரள மண்ணின் கலாசாரம். அதனால்தான் அங்கு அதிகமான வழக்குகள் பதிவாகின்றன.

19 கருத்துகள்:

  1. கேரளா குறித்த தகவல்கள் அதிர்ச்சியானதுதான்.
    ஆனாலும் சிறிது யோசித்தால், படித்தவர்கள் மட்டும்தான்
    அதிகமாக நீதித் துறையினை நாடுகிறார்கள். எங்காவது, படிக்காத
    விவசாமி விவாகரத்து கேட்டு நீதி மன்றத்தை நாடினார் என்று படித்திருக்கிறோமா?
    அதையும் செய்பவர்கள் படித்தவர்கள்தான்
    இன்றைய கல்வி முறை மன முதிர்ச்சியை அளிக்கவில்லை என்பதே உண்மை

    பதிலளிநீக்கு

  2. கேரளாவில் அதிக குற்றங்கள் பதியப்பட்டுள்ளதாக தேசிய குற்றப்பதிவு அலுவலகம் தெரிவித்துள்ளது என்ற தங்கள் தகவலைக் காணும்போது அதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.

    இந்த விஷயத்தில் திரு சேலம் குரு அவர்கள் சொல்வது முற்றிலும் சரி. நான் கேரளாவில் ஒரு சிறிய வங்கியின் தலைமைப்பொறுப்பில் இருந்தபோது இதைப் பார்த்திருக்கிறேன். நான் அங்கு தலைமைப் பணியைஏற்றுக்கொள்ளும் வரை எந்த பதவி உயர்வுக்கு நேர்முகத்தேர்வு நடத்தினாலும் தேர்வின் முடிவை வெளியிடு முன்பே நீதி மன்றங்களின் மூலம் அதற்கு தடை ஆணை வாங்கிவிடுவார்கள். அதை அவ்வப்போது நீட்டிக்கும் ஆணையையும் பெற்றுவிடுவார்கள். இதனால் யாருக்குமே பதவி உயர்வு என்பது ஒரு கனவாகவே இருந்தது. அதை எப்படி நான் முறியடித்தேன் என்பதை விரிவாக எனது பதிவில் எழுத இருக்கிறேன்.

    கேரளாவை God’s own country என்பார்கள். நான் கேரளாவில் நடக்கும் அவலங்கள் பற்றி ஒரு ஆங்கில நாளிதழுக்கு எழுதியபோது எழுதினேன் இப்படியே நடந்தால் God will disown his country என்று!

    பதிலளிநீக்கு
  3. Wonderful blog! I found it while surfing around on Yahoo News.
    Do you have any suggestions on how to get listed in Yahoo News?
    I've been trying for a while but I never seem to get
    there! Cheers

    Take a look at my webpage; http://www.comoganhardinheiro101.com/slide-central/

    பதிலளிநீக்கு
  4. கேரள மக்களின் சுபாவம் பற்றி இதுவரை அறியாத தகவல்

    பதிலளிநீக்கு
  5. கேரளா பற்றிய தகவல் அறியாதவை... அதிர்ச்சியூட்டுபவை...!

    பதிலளிநீக்கு
  6. இடதுசாரிகள் விட்டு விட்டு ஆளும் கேரளாவிலா பதவி உயர்வில் இத்தனை குளறுபடி ?
    த.ம .6

    பதிலளிநீக்கு
  7. புதிய தகவல்! படித்தவர்கள் அதிகம் இருக்கும் மாநிலம் கேரளா என்று சொல்வார்கள். இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். இந்த பதிவினுக்கு கருத்துரை தந்த, அய்யா வே நடனசபாபதி அவர்களின், இது சம்பந்தமான பதிவை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. ஐயா
    சேலம் குரு கேட்டது குற்றப்பதிவு பற்றி. நீங்கள் எழுதியது வழக்குப் பதிவு பற்றி. குற்றங்கள் போலீஸ் ஸ்டேசனில் பதியப்படும். வழக்கு கோர்ட்களில்.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தற்குறியாகிவிட்டேன் போல் இருக்கிறதே? எப்படியோ ஒரு பதிவு தேற்றி விட்டேன். குற்றங்கள் அதிகமாக பதிவு ஆவதைப் பற்றி எனக்கு ஒண்ணும் தெரியலயே? இல்லைன்னா அதுக்கும் ஒரு பதிவு தேத்தியிருப்பேனே?

      நீக்கு
    2. இதைப் பற்றி யோசித்தபோது ஒரு உண்மை புலனாகியது. வழக்குகளை ஏன் அதிக அளவில் பதிவு செய்கிறார்களோ, அதே மனப்பான்மைதான் சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் போலீஸ் ஸ்டேஷன் போவதும். பொதுவாக கேரளாக்காரர்களுக்கு தங்கள் உரிமைகளை நிலை நாட்டுவதில் விருப்பம் அதிகம். ஆகவேதான் குற்றங்கள் அதிக அளவில் அங்கே பதிவாகின்றன. அவர்கள் படித்தவர்கள். அதனால் சட்ட பூர்வமான வழிகளையே நாடுகிறார்கள்.

      ஆனால் தமிழ் நாட்டு மக்கள் தங்கள் பிரச்சினைகளை அவ்வப்போது தாங்களே தீர்த்துக் கொள்வார்கள். எப்படி? அருவாள்கள் எதற்காக இருக்கின்றன? இதற்காகத்தானே!

      நீக்கு
  9. What you said made a ton of sense. But, think about this, suppose you were to create a awesome post title?
    I mean, I don't wish to tell you how to run your blog, however what if you
    added a title to maybe grab people's attention?
    I mean "குற்றங்களும் அவை பதிவாகும் அளவுகளும்." is kinda vanilla.
    You ought to look at Yahoo's home page and note how they create
    news titles to grab viewers interested. You might add a
    related video or a pic or two to grab readers interested about
    what you've got to say. Just my opinion, it could bring your blog a little livelier.


    Also visit my weblog :: ganhe dinheiro

    பதிலளிநீக்கு
  10. statistics often is misleading. it's said "lies,damn lies and statistics"
    the types of crimes that are predominant in the average figures ,possibly may be a better indicator.
    else, one may conclude education breeds crimes;well educated tend to be criminals

    பதிலளிநீக்கு
  11. Educating the mind without educating the heart is no education at all
    ― Aristotle

    பதிலளிநீக்கு
  12. குற்றங்கள் இழைக்கப் படுகின்றன என்பதற்கும் குற்றங்கள் பதிவு செய்யப் படுகின்றன என்பதற்கும் இடையே நிறைய இடைவெளி இருக்கிறது. கேரளா பஞ்சாப் வங்காளம் போன்ற மாநிலத்தவர் அதிக உணர்ச்சி வசப் படுபவர்கள். எந்த அநியாயத்தையும் கண்டுகொள்ளாதவர் தமிழ் நாட்டினர். ஒரு வேளை இதுதான் காரணமோ.?

    பதிலளிநீக்கு
  13. கேரளர்கள் சுறுசுறுப்பானவர்கள் கடின உழைப்பாளிகள் என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறேன். புதிய தவகல்

    பதிலளிநீக்கு