திங்கள், 7 ஜூலை, 2014

பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட்டும் நானும்


நான் ஐந்து வருடங்களாக பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் இன்டர்நெட் உபயோகித்து வருகிறேன். பிளான் பெயர்   BSNL FN COMBO 500.
இந்த பிளான் எனக்கு மிகவும் சௌகரியமாக இருந்தது. எப்படியென்றால் இந்த பிளானில் காலை 2 மணி முதல் 8 மணி வரை இன்டர்நெட் உபயோகத்திற்கு கட்டணம் இல்லை. காலை 8 மணி முதல் மறுநாள் காலை 2 மணி வரையிலான உபயோகத்திற்கு 1.5 GB இலவசமும் அதற்கு மேல் உபயோகித்தால் ஒரு MB க்கு 20 பைசா என்றும் கட்டணம் நிர்ணயித்திருந்தார்கள். இன்டர்நெட் நல்ல வேகமும் கூட ( 2 MBPS).

என்னைப்போல் ஜாமக்கோடங்கிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருந்தது. காலை 3 மணிக்கு எழுந்திருந்து 8 மணிக்குள் இன்டர்நெட் வேலைகளையெல்லாம் முடித்து விடுவேன். பகல் நேரத்தில் இன்டர்நெட் மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய உபயோகிப்பதில்லை. பகல் நேர உபயோகத்தை இலவச லிமிட்டை தாண்டாமல் உபயோகித்து வந்தேன்.

இரவு நேர இலவச உபயோகத்தில் மாதத்திற்கு ஏறக்குறைய 50-60 GB உபயோகித்து விடுவேன். இது மிகவும் சலீசான பிளானாக இருந்தது. இதைப் பொறுக்காத யாரோ ஒரு பிஎஸ்என்எல் ல் வேலை பார்க்கும் பொறாமைப் பிண்டம், மேலிடத்திற்குப் போட்டுக்கொடுத்து விட்டார்கள் போல இருக்கிறது. பிஎஸ்என்எல் ஏற்கனவே எதிலெல்லாம் ரேட்டை உயர்த்தலாம் என்று கண்ணில் விளக்கெண்ணெய் போட்டுக்கொண்டு காத்திருந்தார்கள். காரணம் பிஎஸ்என்எல் நஷ்டத்தில் ஓடுகிறதாம். மந்திரிகள் போன் பில்லை வசூல் செய்வதே இல்லை. அப்புறம் என்ன லாபம் வரும்?


வெறும் வாயை மெல்லுபவனுக்கு அவல் கிடைத்து விட்டது. சும்மா இருப்பார்களா? இரவு இலவசத்திற்கு வேட்டு வைத்து விட்டார்கள். அதற்குப் பதிலாக சலுகை கட்டணம் வழங்கப் போகிறார்களாம். எவ்வளவு தெரியுமா?
ஒரு  MB க்கு வெறும் 15 பைசாதானாம். அப்போ ஒரு  GB க்கு எவ்வளவு ஆகிறது என்று பார்த்தால் வெறும் 150 ரூபாய்தான். என்னுடைய மாத உபயோகமான 50  GB க்கு சும்மா 7500 ரூபாய் கொடுத்தால் போதும்.

ஒரு பிளாக்கருக்கு வந்த சோதனையைப் பாருங்கள். இந்த ரேட்டில் நான் என் தலையை அடகு வைத்தால் கூட டெலிபோன் பில் கட்டமுடியாது. என் தலையை எவன் அடகு வாங்குவான் என்பது வேறு விஷயம்.

உடனே வேறு மாற்று ஏற்பாடு செய்தாகவேண்டுமே. பிஎஸ்என்எல் ஆபீசுக்கு ஓடினேன். இந்த மாதிரி கஸ்டமருக்கு சொல்லாமல் பிளானை மாற்றுவது நியாயமா என்று கேட்டேன். அங்கிருந்தவர்கள் அப்படியா, ஏதோ நைட் பிளானை மாற்றுவதாக ஒரு பேச்சு அடிபட்டது, மாற்றி விட்டார்களா என்று என்னையே திருப்பிக் கேட்டார்கள். இது எப்படி இருக்கு பாருங்க.

உங்களுக்கு எப்படித் தெரிந்தது என்று அடுத்த கேள்வி. நான் தினமும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதும் இன்டர்நெட் உபயோகக் கணக்கை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். இதனால் கணக்கில் ஏதோ தவறு மாதிரி தெரிந்ததும் உஷாராகி விட்டேன். இப்போது இந்தப் பிரச்சினைக்கு என்ன பண்ணலாம் என்று கேட்டேன்.

நீங்கள் இன்டர்நெட் பிளானை மாற்றி விடுங்கள், அது ஒன்றுதான் வழி என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டு புளியமரம் ஏறமாட்டேன் என்றால் எப்படி? இருக்கிற பிளானில் என் பர்சுக்கு ஏற்றமாதிரி எனக்கு கண்ணில் பட்ட ஒரு பிளானுக்கு மாற்றித் தரும்படி கேட்டேன். ஒரு விண்ணப்பம் எழுதிக்கொடுத்து விட்டுப் போங்கள். நாளைக்கு மாற்றி விடுகிறோம் என்றார்கள். அப்படியே எழுதிக்கொடுத்து விட்டு வந்தேன்.

சொன்னபடி அடுத்த நாள் மாற்றி விட்டார்கள். எஸ்எம்எஸ் என் செல் போனுக்கு வந்தது. நான் மிக உற்சாகமாகி கம்ப்யூட்டரை ஆன் பண்ணி இனடர்நெட்டை ஓபன் செய்தேன். தலையில் கல் விழுந்தது போல் உணர்ந்தேன். காரணம் இன்டர்நெட் ஆமை வேகத்தில் நகர்கிறது. போன் பண்ணிக் கேட்டால், நாங்கள்தான் அப்போதே சொன்னோமே, வேகம் குறைவாக இருக்கும் என்று, நீங்கள் சரியென்று மண்டையை ஆட்டினீர்களே என்று என் தலை மீது இன்னொரு கல்லைப் போட்டார்கள்.

அவர்கள் கொடுத்திருந்த லிஸ்ட்டில் பார்த்தால் வேகம் அதிகமுள்ள பிளான்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் விலை போட்டிருக்கிறது. என்ன ஒரே ஆறுதல் என்றால் நான் வாங்கிய பிளான் அன்லிமிடெட் டவுன்லோடு உள்ள பிளான். நேற்று ஒரு டவுன்லோடை டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். முன்பு ஒரு மணி நேரத்தில் முடிந்த டவுன்லோடு இப்போது ஒரு இரவில் முடிந்து விட்டது.

நான் வாங்கிய பிளான். 650 C Home ULD. மாதம் 650 ரூபாய். வரிகள் தனி.

கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !

31 கருத்துகள்:

  1. மிகவும் அருமையான அலசல். அனுபவித்து சுவாரஸ்யமாக எழுதியுள்ளீர்கள். இந்த வார சிறுகதை விமர்சனப்போட்டியில் தாங்கள் இன்னும் கலந்து கொள்ளவில்லையே என நினைத்து ஆச்சர்யப்பட்டேன். காரணம் இப்போது தான் புரிகிறது.

    //கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! அதே அதே !! ;)))))))

    பகிர்வுக்கு நன்றிகள். VGK

    பதிலளிநீக்கு
  2. //மந்திரிகள் போன் பில்லை வசூல் செய்வதே இல்லை. அப்புறம் என்ன லாபம் வரும்?//

    அதானே...

    தினமணியில் இது பற்றி செய்தி வந்திருந்தது. நான் முக நூலில் இது பற்றிப் பகிர்ந்திருந்தேன்.

    பதிலளிநீக்கு
  3. // தினமும் காலையில் கம்ப்யூட்டரை ஆன் பண்ணினதும் இன்டர்நெட் உபயோகக் கணக்கை பார்த்து விட்டுத்தான் அடுத்த வேலை பார்ப்பேன். //

    முன்னெச்சரிக்கை முனுசாமி ...!

    பதிலளிநீக்கு
  4. //கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். விதி வலியது என்று சும்மாவா சொன்னார்கள் !//

    நாம் எழுதுவதை வீட்டிலுள்ளவர்கள் வாசிப்பதில்லையென்றால் எவ்வளவு வசதியாகி விடுகிற்து. இல்லையா ...?

    பதிலளிநீக்கு

  5. எல்லாம் அகல உழவா , ஆழ உழவா கணக்குதேன்.

    பதிலளிநீக்கு
  6. அரசுத் துறையை நாசமாக்கி தனியாரை வாழ வைக்கும் அரசின் கொள்கை இது !பாதிக்கப் படுவது பொது மக்கள் தானே ?
    த ம 5

    பதிலளிநீக்கு
  7. நானும் ஒரு காலத்தில் BSNL தான் வைத்திருந்தேன். இப்போது ரிலையன்ஸ். 10 GB ரூ.900/- வேகத்திற்கு குறைவில்லை (3.1 MB). அதற்கு மேல் ஆனால் 240 KBPS வேகம்தான். எனக்கு இந்த 10GBயே தேவைப்படுவதில்லை. நீங்கள் சொல்வதுபோல் மாதம் 50 GB பயன்படுத்த எவ்வளவு நேரம் கணினி முன் அமர்ந்திருக்க வேண்டும்! என்னால் முடியாது!!

    பதிலளிநீக்கு
  8. //zகழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும்.//
    விவாகரத்து பத்தி யோகிச்சி பாருங்க.

    பதிலளிநீக்கு
  9. அவுங்க (BSNL) வலைத்தளம் வேலை செய்ய மாட்டேங்குதே அண்ணாச்சி.

    பதிலளிநீக்கு
  10. 3 வருடம் உபயோகித்தேன், அதில் மொத்தம் 6 மதம் வரை pazhuthu,
    போன், பண்ணினால் எடுப்பதில்லை, துரித நடவடிக்கை இல்லை

    ஆகா துண்டிப்பு செய்தேன், கொடுமாயில் என்ன வென்றால் ,9 மதம் ஆகியும் என்னுடைய அட்வான்ஸ் பணம் இன்னும் varalai.
    வொர்ஸ்ட் bsnl.

    பதிலளிநீக்கு
  11. 3 வருடம் உபயோகித்தேன், அதில் மொத்தம் 6 மதம் வரை pazhuthu,
    போன், பண்ணினால் எடுப்பதில்லை, துரித நடவடிக்கை இல்லை

    ஆகா துண்டிப்பு செய்தேன், கொடுமாயில் என்ன வென்றால் ,9 மதம் ஆகியும் என்னுடைய அட்வான்ஸ் பணம் இன்னும் varalai.
    வொர்ஸ்ட் bsnl.

    பதிலளிநீக்கு
  12. எனக்கு இந்த கணக்கெல்லாம் தெரியாது. நானும் BSNLதான் ஏதோ combo 500 ப்ளான் என்றார்கள். என் உபயோகத்தில் எனக்கு தொலைபேசி சார்ஜையும் சேர்த்து மாதம் ரூ. 1000-துக்குள்தான் வருகிறது. ஒரு வேளை என் உபயோகம் குறைவோ என்னவோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1-7-2014 தேதியிலிருந்து இந்த பிளானின் கட்டணங்களை மாற்றியிருக்கிறார்கள். கவனிக்கவும்.

      நீக்கு

  13. நானும் BSNL இன் இணைய இணைப்பை வைத்திருக்கிறேன். 900 ரூபாய் Combo திட்டத்தில் சேர்ந்தபோது ஆரம்பத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு 20 விழுக்காடு கழிவு போக ரூபாய் 720 கட்டினால் போதும் என்றார்கள். வரியோடு சேர்த்து கட்டணம் மாதம் 900 ரூபாய்க்குள் வரும். இப்போது அதை மாதம் 999 ஆக உயர்த்திவிட்டு 20 விழுக்காடு கழிவை 10 விழுக்காடாக குறைத்துவிட்டார்கள். இப்போது மாதக் காட்டணம் ரூப்ய 1000க்கு மேல் போய்விட்டது. என் செய்ய! பேய்க்கு வாழ்க்கைப்பட்டால் முருங்கை மரத்தில் தானே குடியிருக்கவேண்டும்!

    பதிலளிநீக்கு
  14. மாதம் 50 ஜி.பி யா! நீங்க பெரிய பிளாக்கர்தான்! நானெல்லாம் ஒரு ஜீ.பி ஒன்றரை ஜி.பியை தாண்டியது இல்லை!

    பதிலளிநீக்கு
  15. //கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும்//
    ஐயா!
    முகஸ்துதி அல்ல! உண்மையில் உங்கள் பதிவுகளை படித்ததால் சொல்லுகிறேன். கழுதையென்ன ! பேயோடும் குடித்தனம் நடத்தும் நெளிவு சுளிவு உங்களுக்கு அத்துப்படி!

    கலக்குங்க!!!

    பதிலளிநீக்கு

  16. ஒரு செய்தியை அழகாக மாற்றி உங்கள் பாணியில் சொன்னவிதம் கவர்ந்தது. எழுதுவது அல்லது சொல்வது என்றால் இப்படிதான் இருக்க வேண்டும்.... இப்ப உள்ள பிரபல பத்திரிக்கைகளை படித்தால் செய்தியை அவர்கள் சொல்லும் விதம் கண்ணில் இரத்தத்தைதான் வரவழைக்கிறது....

    பதிலளிநீக்கு
  17. 999 ப்ளான் ஒன்று இருக்கின்றது. நான் இதில் தான் உள்ளேன். வரியோடு சேர்த்து 1100 வரும். ஐந்து ஜிபி வரைக்கும் குதிரை வேகம். ஆனால் வீட்டில் என்னோடு சேர்த்து நான்கு பேர்கள் தட்டு தட்டு என்று தட்டுகின்றோம். அப்படியும் வேகம் குறைந்தபாடில்லை. எல்லோரும் பிஎஸ்என்எல் என்றால் புலம்புகின்றார்கள். ஆனால் எனக்கு பல லட்சங்களை சேமித்துக் கொடுத்ததே பிஎஸ்என்எல் தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பிளான்தான். என்னுடைய உபயோகத்தில் 5 GB இரண்டு நாட்களில் முடிந்து விடும் பிறகு பழைய குருடி கதவைத்திறடி என்ற மாதிரி இதே 512 KBPS தான் கிடைக்கும். அதனால்தான் இந்த பிளானை நான் தேர்ந்தெடுத்தேன்.

      நீக்கு
  18. //கழுதைக்கு தாலி கட்டி கூட்டிக்கொண்டு வந்தாயிற்று. எப்படியாவது குடித்தனம் பண்ணித்தான் ஆகவேண்டும். //

    ம்ம்ம்.... அதே அதே....

    பதிலளிநீக்கு
  19. பிரச்னையை அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். பி.எஸ்.என்.எல். மட்டுமல்ல எல்லாருமே இப்போது விலையை ஏற்றவிட்டார்கள். சலுகையைக் குறைத்து விட்டார்கள்.

    பதிலளிநீக்கு
  20. ஹா... ஹா... இதே நிலைதான் எங்கள் வீட்டிலும்...
    700 ரூபாய் வாங்குகிறார்கள்... இழுக்கத்தான் மாட்டேங்குது....

    பதிலளிநீக்கு
  21. ஐயா வணக்கம். இன்டர்நெட் உபயோகத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை மிகச்சரியாக அலசி, சிறப்பான முறையில் யதார்த்தமாக எழுதியுள்ளீர்கள். அருமையான பயனுள்ள பகிர்வு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  22. ஐயா தாங்கள் கூறியது சரிதான் உங்களை மாதிரி நிறையபேர் பாதிக்கப் பட்டுள்ளனர்.
    you can see here. http://telecomtalk.info/unethical-move-by-bsnl-customers-not-intimated-about-major-plan-changes/119380/

    பதிலளிநீக்கு
  23. 999 ப்ளான் உள்ளது அதை தான் பயன் படுத்துகிறேன்....
    நீங்கள் உங்களின் தளத்திற்கு google adsence போடக்கூடாது..அதன் மூலம் உங்களுக்கு வருமானம் வரும் அதன் மூலம் உங்களுக்கு சில செலவுகளை சரி செய்யலாம்
    http://www.puthiyatamil.net/

    பதிலளிநீக்கு