வெள்ளி, 24 அக்டோபர், 2014

அமுதைப் பொழியும் நிலவே ! இந்தக் கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.

“காற்று வாங்கப்போனேன், காதல் வாங்கி வந்தேன்” என்ற சினிமா பாட்டு பாணியில் நம் கதாநாயகர் பஸ் பிரயாணத்தில் ஒரு காதலியைக் கண்டு பிடித்திருக்கிறார். ஆனால் அது ஒரு பகல் கனவாய்ப் போனதுதான் ஒரு சோகம். கனவென்றால் சாதாரணக் கனவா? அப்படியே ஆகாயத்தில் பறக்க வைத்த கனவு.

இருந்தாலும் அந்த நினைவுகள் இனிமையானவைகளே. கனவில் வந்த நிலவின் அழகு, படிக்கும் நம்மையே சொக்கவைக்கிறது. அரைத்த சந்தனம் போல் மேனி. மேனியில் இருந்து சந்தன வாசம் வந்திருக்குமோ. வந்திருக்கலாம்.

பாரதியிலிருந்து இன்றைய கதாசிரியர் வரை கேரள அழகிகள் மேல் அப்படியென்ன மோகமோ தெரியவில்லை. அதுவும் பாலக்காடாம். நானும் பாலக்காட்டுக்குப் பக்கத்தில்தான் வசிக்கிறேன். என் கண்ணில் அப்படி சந்தன மேனிக்காரிகள் யாரும் கண்ணில் படக் காணோம்.

இப்படி சொர்க்க லோகத்தில் உலா வந்து கொண்டிருந்தவரை பூலோகத்திற்கு இழுத்த அந்த படுபாவி கண்டக்டர் அடுத்த ஜன்மத்தில் நபும்சகனாகத்தான் பிறப்பான்.

அத்தோடு விதி விட்டதா? திரும்பி வரும்போது பக்த்து சீட்டில் ஒரு கர்ண கடூரக் கிழவி. இதுதான் விதியின் விளையாட்டோ?

ஒரு சாதாரண நிகழ்வை ரசனை மிக்க கதையாக மாற்றிய வைகோவும் கேரள கன்னிகளும் நீடூழி வாழ்க.

5 கருத்துகள்:


 1. ஒரு நகரப் பேருந்து பயணத்தை இது போன்ற சிறுகதையாக வடிக்க சிறு கதை மன்னன் (அப்படி அழைக்கலாமா?) திரு வைகோ அவர்களால்தான் முடியும். அவருக்கு எனது வாழ்த்துக்கள். இந்த கதையை படிக்க உதவிய தங்களுக்கும் நன்றி! நீங்கள் சொல்வதுபோல் ஏனோ தெரியவில்லை பக்கது மாநில பெண்கள் பேரில் என்ன ஈர்ப்போ தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள ஐயா, வணக்கம்.

  தங்களின் இந்த விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது.

  தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.

  தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

  என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  அன்புடன் கோபு [VGK]

  ooooooooooooooooooooooooooo

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய இந்தப் பதிவுகளின் நோக்கமே உங்கள் சிறு கதைகளை இன்னும் சில பேர் படிக்க வேண்டும் என்பதே.

   நீக்கு
 3. //கனவென்றால் சாதாரணக் கனவா? அப்படியே ஆகாயத்தில் பறக்க வைத்த கனவு.
  இருந்தாலும் அந்த நினைவுகள் இனிமையானவைகளே. கனவில் வந்த நிலவின் அழகு, படிக்கும் நம்மையே சொக்கவைக்கிறது.//

  தங்களையும் சொக்க வைத்ததா ?

  இதைக்கேட்கும் நான் இப்போது அப்படியே சொக்கிப்போனேன் ஐயா :)

  //அரைத்த சந்தனம் போல் மேனி. மேனியில் இருந்து சந்தன வாசம் வந்திருக்குமோ. வந்திருக்கலாம்.//

  என் கற்பனைகளில் அடிக்கடி இதுபோன்ற பல்வேறு வசந்த வாசங்கள் பலமுறை வருவதுண்டு. கற்பனையில் மட்டுமே இது சாத்தியமாகும் ஐயா.

  நேரில் நிஜ வாழ்வில் என்றால் அதுவே பல்வேறு [துர்] வாடைகளாக அல்லவா மாறிவிடும். :)

  >>>>>

  பதிலளிநீக்கு
 4. வே.நடனசபாபதி வெள்ளி, 24 அக்டோபர், 2014 9:24:00 முற்பகல் IST

  வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.

  //ஒரு நகரப் பேருந்து பயணத்தை இது போன்ற சிறுகதையாக வடிக்க சிறு கதை மன்னன் (அப்படி அழைக்கலாமா?) திரு வைகோ அவர்களால்தான் முடியும்.//

  ஆஹா, தன்யனானேன். மிக்க நன்றி, ஐயா. தாங்கள் தங்கள் விருப்பம்போல என்னை அழைத்துக்கொள்ளலாம்.

  ஆனால் நான் மிகச்சாதாரணமானவன் மட்டுமே என்பதைப் பணிவுடன் தங்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

  // அவருக்கு எனது வாழ்த்துக்கள்.//

  தங்களின் வாழ்த்துகளுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு