வைகோ வின் அஞ்சலை கதையைப் படிக்க இங்கே சுட்டவும்.
இந்தக் கதைக்கு என் விமர்சனம். ஒரு சமாச்சாரம். எனக்கு சிறுகதை எழுதத் தெரியாது. ஒரு செய்தியை விரிவாக எழுதவும் தெரியாது. ஆகவே சுருக்கமான விமர்சனம் மட்டுமே எழுதியிருக்கிறேன். இந்தக் கதைக்கு பல உப-சிறுகதைகளை பலரும் எழுதியிருக்கிறார்கள். அவைகளைப் படிக்க இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற விமர்சனங்களைப் பார்க்கவும்.
விமர்சனம்.
“அஞ்சலை”
தாய்ப் பாசம் என்பது
பல வகைகளில் வெளிப்படும். மனிதர்களிடையே மட்டுமல்ல,
விலங்குகளிடையேயும் இந்தப் பாசத்தை காண்கிறோம்.
ஆனால் இந்தப் பாசம்
சூழ்நிலையின் அழுத்தத்தால் மாற வேண்டிய அவசியம் உண்டாகிறது. இந்தக் கதையின் கதாநாயகியும்
இந்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறாள்.
தன் குழந்தை தன்னிடமே
இருக்கவேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம். ஆனால் இதை குழந்தை இல்லாத தம்பதியினருக்கு கொடுத்தால்
அது நல்ல சூழ்நிலையில் வளருமே என்ற ஆசை இன்னொரு பக்கம்.
இந்த பாசப் போராட்டத்தில்
அவள் தன் குழந்தையை தத்துக் கொடுத்து விடலாம் என்கிற முடிவை எடுக்கிறாள். இதைத் தவிர
அவளுக்கு தான் இருக்கும் சூழ்நிலையில் வேறு வழியில்லாமல் போகிறது. இந்த சோக முடிவில்
நாமும் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்துகிறோம்.
அன்புள்ள ஐயா, வணக்கம்.
பதிலளிநீக்குதங்களின் இந்த விமர்சனம் சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது.
தங்கள் தள வாசகர்களையும் அந்த என் சிறுகதையை வாசிக்க வைக்கத் தூண்டுதலாகவும் அமைந்துள்ளது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
என் ’சிறுகதை விமர்சனப் போட்டி’யில் கலந்துகொண்டு சிறப்பித்திருந்ததற்கும் அதை இன்று இங்கே தனிப்பதிவாக வெளியிட்டுள்ளதற்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா.
அன்புடன் கோபு [VGK]
>>>>>
//இந்த சோக முடிவில் நாமும் நம்மை அறியாமல் கண்ணீர் சிந்துகிறோம். இதுவே கதாசிரியரின் வெற்றியாகும். //
பதிலளிநீக்குமிக்க நன்றி, ஐயா.
>>>>>
இந்த ‘அஞ்சலை’ கதைக்கு விரிவாக விமர்சனம் எழுதி பரிசுகள் வென்றுள்ள ஐவர். இணைப்பு இதோ:
பதிலளிநீக்குமுதல் பரிசு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-01-03-first-prize-winners.html
திருமதி. இராஜராஜேஸ்வரி அவர்கள் +
திரு. J. அரவிந்த் குமார் அவர்கள்
>>>>>
இரண்டாம் பரிசு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-02-03-second-prize-winners.html
கீதமஞ்சரி திருமதி கீதா மதிவாணன் அவர்கள் +
திருமதி ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்கள்.
>>>>>
மூன்றாம் பரிசு:
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-09-03-03-third-prize-winner.html
திருமதி. ஞா. கலையரசி அவர்கள்
இது தங்களின் வலைத்தள வாசகர்களின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
திரு வைகோ அவர்களின் ‘அஞ்சலை’ சிறுகதையில் வரும் அந்த ஓலைக் குடிசையை நேரில் பார்ப்பது போன்று உணர்ந்தேன் கதையைப்படிக்கும்போது. அத்தனை நேர்த்தியாக அந்த குடிசையில் உள்ளவைகளை விவரித்திருக்கிறார் திரு வைகோ.
பதிலளிநீக்குமதிப்புரையின் முடிவில் நீங்கள் கூறியதுபோல அஞ்சலைக்கு தான் இருக்கும் சூழ்நிலையில் குழந்தையை தத்து கொடுப்பதைத்தவிர வேறு வழியில்லை என்பதை வாசகர்களும் ஒத்துக்கொள்ளும் வகையில் அழகாக முடித்திருக்கிறார் கதாசிரியர்.
அந்த குழந்தையை தத்து கொடுத்துவிட்டு அந்த வீட்டில் இருப்பது தன் குழந்தை எனக் காட்டிக்கொள்ளாமல் எப்படி அஞ்சலை வாழ்கிறாள் என்பதை அவசியம் திரு வைகோ அவர்கள் இன்னொரு சிறுகதையில் எழுதவேண்டும் என்பது என் அவா.
பரிசுபெற்ற கதையின் படைப்பாளி திரு வைகோ அவர்களுக்கும் அவரது கதையை மதிப்புரை செய்து படிக்க தூண்டிய உங்களுக்கும் வாழ்த்துக்கள்!
பி.கு: தலைப்பில் உள்ள தவறை சரி செய்ய வேண்டுகிறேன்.
சரிசெய்து விட்டேன். நன்றி.
நீக்குஐயா
பதிலளிநீக்குபதிவுக்கோளாறு/கனினிக்கொளாறு/கண் கோளாறு/ எது உண்மை. சரியாகிவிட்டதா?
--
Jayakumar
அந்தக் கோளாறு தானாகவே சரியாய் விட்டது. நன்றி.
நீக்குசுருக்கமான விமர்சனம் என்றாலும் அருமையான விமர்சனம் ஐயா...
பதிலளிநீக்குவிமர்சனம் சுருக்கம். ஆனாலும் விளக்கம் விரிவு, சிறப்பு
பதிலளிநீக்குநீண்ட தீஸிஸ் மாதிரி வந்திருக்கும் விமரிசனங்களுக்கு நடுவில் ஒரு குட்டியான மனம் நிறைந்த விமரிசனம் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குஎங்கள் டிபார்ட்மென்ட்டிலேயே சிறிய Ph.D. thesis என்னுடையதுதான்.
நீக்கு