சனி, 23 மே, 2015

உடல், மனசு, அறிவு

நான் யார், நீ யார், இப்படி மக்கள் திலகம் ஒரு படத்தில் பாடினார்.நம் ஆன்மீக வாதிகளும் இதை வைத்தே பிழைப்பை ஓட்டுகிறார்கள்.உடல் வேறு, மனசு வேறு, புத்தி வேறு என்று யாராவது சொன்னால் தயவு செய்து நம்பாதீர்கள். உடல் இருந்தால்தான் மனசு இருக்கும். மனசில்தான் புத்தி இருக்கிறது. மூன்றும் ஒன்றேதான். வீணாகக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.

19 கருத்துகள்:

 1. படித்தேன், ரசித்தேன். நல்ல விஷயங்கள் மனதில் நிற்பதே இல்லை! இதுவும் மறந்து போகும்!

  பதிலளிநீக்கு
 2. ஐயா

  அதாவது matter வேறு energy வேறு என்று குழப்பிக் கொள்ளாதீர்கள். matter இருந்தால்தான் energy உண்டாகும். அதே போல் energy உண்டானால் matter அழிந்து விடும்.

  இந்த மாதிரி குழம்பலமா

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படியல்லைங்க, ஜெயக்குமார். எதுவும் எப்போதும் அழிவதில்லை. உருமாறலாம். ஆனால் அழிவு இல்லை. நான் இப்போது matter. உயிர் போனபிறகு நான் energy ஆக மாறுவேன். எப்போதும் நான் இருப்பேன். குழப்பம் தீர்ந்ததா?

   நீக்கு
  2. அப்படி வாங்க வழிக்கு, நான் யார் என்றெல்லாம் குழப்பிக் கொள்ளாதீர்கள் என்று கூறிவிட்டு இப்போது " நான் அழிவதில்லை நான் எப்போதும் இருப்பேன்." என்று நீங்களே "நான்" ஐக் கண்டு பிடித்து விட்டீர்கள்!!!!.
   Jayakumar

   நீக்கு
  3. எப்போதும் இருப்பது எதுவோ அதில் நானும் அடக்கம்.. இதைத்தான் ஆத்மா என்று கூறலாமா?

   --
   Jayakumar

   நீக்கு
  4. ஆஹா, எதிரி எய்த ஆயுதத்தையே பிடித்து திரும்ப அந்த எதிரி மேலேயே எய்வதுதான் யுத்தத்திலேயே சிறந்த தந்திரம். அந்த தந்திரத்தில் நான் மாட்டிக்கொண்டேனா?

   ஆத்மாவிற்கு இன்னுமொரு விளக்கம். நல்லா இருக்கு.

   நீக்கு
 3. நல்ல ஒரு கருத்தை நுணுக்கமாகப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 4. //வீணாகக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.//

  ஆலோசனை அருமை. அனைவரும் குழப்பமேதும் இல்லாமல் எப்போதும் எல்லாவற்றையும் மனதுக்கு மிகவும் திருப்தியாக ENJOY செய்துகொண்டே இருக்கவும். :)

  பதிலளிநீக்கு
 5. // உடல் இருந்தால்தான் மனசு இருக்கும். மனசில்தான் புத்தி இருக்கிறது. மூன்றும் ஒன்றேதான். வீணாகக் குழப்பிக்கொண்டு வாழ்க்கையைத் தொலைத்து விடாதீர்கள்.//

  சரியான அறிவுரை!

  பதிலளிநீக்கு
 6. உங்களை உங்கள் பதிவிற்குப் பாராட்டுகிறேன்

  பதிலளிநீக்கு
 7. என்னங்க சார்? திடீரென்று ’மக்கள் திலகம்’ பக்கம் வந்து விட்டீர்கள். இன்று நாடெங்கும் வாத்தியார் பாட்டுதான். அதன் பாதிப்பு என்று நினைக்கிறேன். சினிமா பக்கம் வந்ததுதான் வந்தீர்கள். அப்படியே அந்தக்கால சினிமா தியேட்டர்கள், அந்தக்கால சினிமா ரசிகர்கள், உங்கள் அனுபவங்களையும் எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். செய்வீங்களா ... செய்வீங்களா ...
  த.ம.7

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா கந்தசாமியின் அடுத்த பதிவு "அம்மா என்றால் அன்பு " பாடல் இடம் பெறும்.

   --
   Jayakumar

   நீக்கு
  2. அம்மாவைப் பற்றி ஒரு பதிவு கண்டிப்பாகப் போடவேண்டும். அம்மா பதவி ஏற்றவுடன் என் தமிழ்மணம் ரேங்க்கை 6 லிருந்து 5 க்கு ஏற்றியிருக்கிறார்களே, அதைக் கவனித்தீர்களா?

   தமிழ் இளங்கோ வேண்டுகோளைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறேன்.

   நீக்கு
 8. அருமை! தங்கள் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு
 9. nainaa ennal tharpOthu thamizil pathiya mutiya villai mannikkavum
  thamizil virivaaka pEsuven.

  பதிலளிநீக்கு
 10. ஐயா! சூப்பர்! அருமையான ஆலோசனைப் பதிவு! உங்கள் விளக்கம் எனர்ஜி, மேட்டர் விளக்கம் அருமை...இதைத்தான் பௌதீகமும் சொல்லுகின்றது...சுஜாதா அவர்கள் கூட இதைப் பற்றியும், அவருக்கு மறு பிறவியில் நம்பிக்கை இல்லாத போதும், இந்த மறு பிறவி பற்றியும் கூட சொல்லி இருந்தார்....ஒரு பௌதீக விஞ்ஞானியின் புத்தகத்தை மேற்கோள் காட்டி இதுதானோ என்று கேட்டிருந்தார்...

  எல்லாவற்றையும் விட, வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதன் வழியில் பயணித்து எப்போதும் சந்தோஷமாக மனதை வைத்துக் கொண்டாலே போதும் என்பது எங்கள் தாழ்மையான கருத்து...

  பதிலளிநீக்கு