வெள்ளி, 29 மே, 2015

போட்டி உலகில் ஓடியே ஆகவேண்டும்.

                                    
வியாபாரத்திலும் தொழில்துறையிலும் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அடிக்கடி சொல்லப்படும் அறிவுரை என்னவென்றால் - நீ ஆரம்பத்தில் போட்டிகளைச் சமாளித்து முன்னேற ஓடியிருப்பாய். ஓரளவு முன்னேறிய பிறகு, போதும் இந்த ஓட்டம், இனி கொஞ்சம் ஓய்வெடுப்போம் என்று நினைப்பாய். அங்குதான் நீ தவறிழைக்கிறாய்.

இந்தத் துறைகளில் மட்டுமல்ல, எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஓரளவு முன்னேறிய பிறகு நீ அடைந்த இடத்திலேயே இருப்பதற்கே ஓடித்தான் ஆகவேண்டும். நீ ஓய்வெடுத்தால் உன் போட்டியாளர்கள் வேகமாக ஓடி உன்னை விட முன்னேறி விடுவார்கள். நீ பின்னுக்குத் தள்ளப்படுவாய்.

இந்த உபதேசம் தொழில் துறை, வியாபாரத்துறைக்காரர்களுக்கு மட்டுமல்ல, வாழ்க்கையின் அனைத்துத் துறைகளுக்குமே பொருந்தும். அவ்வாறு ஓட முடியாதவர்கள் போட்டியில் பின்தங்கித் தோற்றுப் போவார்கள். இதை நாம் பலவகைகளில் அன்றாடம் பார்க்கிறோம். ஆரம்பத்தில் வெகு ஆடம்பரமாக ஆரம்பித்த நிறுவனங்கள் நாளாக நாளாக அதன் பளபளப்பு குன்றி விடுவதை நாம் பலமுறை பார்த்திருக்கிறோம்.

இதை நான் இப்போது இங்கு ஏன் சொல்லுகின்றேன் என்றால் நானும் இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். எதைச் சொல்லுகிறேன் என்று புரியும் என்று நம்புகிறேன். தமிழ்மணம் ரேங்க் ஒன்றை அடையவேண்டும் என்று நினைக்கிறேன். அது எங்கே என் கண்ணுக்கே தெரியவில்லை (படத்தைப் பார்க்கவும்). முதல் ரேங்க்கை கட்டாயம் அடைந்துதான் ஆகவேண்டும் என்ற கொள்கை ஒன்றுமில்லை. முடியுமா என்று பார்ப்போம் என்பதுதான் என் எண்ணம்.

இப்போது ஐந்தாவது ரேங்கில் என் தளம் இருக்கிறது. இதற்காக ஓடினது அதிகம். மூளையைக் கசக்கிப் பதிவுகள் போட்டதில் இப்போது மூளை இருக்குமிடமே தெரியாமல் போய்விட்டது. மண் சுவரில் மோதினால் ஏதாவது கொஞ்சம் உடையும். ஆனால் கருங்கல் சுவற்றில் மோதினால் என்ன நடக்கும்? மண்டைதான் உடையும். என்னுடைய தளத்திற்கு மேலே இருப்பவர்களெல்லாம் கருங்கல் சுவர்கள்.

இது வரை எனக்கு ஆதரவு கொடுத்த பதிவர்களுக்கு மிக்க நன்றி.

16 கருத்துகள்:


 1. நன்றாகவே சொன்னீர்கள். வாழ்க்கையே ஓட்டமும் நடையும்தான்.

  முதலில் முதலிடத்தை நோக்கி ஓட்டம். அப்புறம் அந்த முதலிடத்தை நிறுத்திக் கொள்வதில் ஓட்டம். அப்புறம் கொஞ்சம் தளர்ந்த பின் இருக்கும் இடத்தை தக்க வைத்துக் கொள்வதில் ஓட்டம். அந்தக்கால சினிமா அனுபவங்களைப் பற்றி இரண்டு பதிவுகள் போடுங்கள். கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். மறுபடியும் ஓடலாம்.

  த.ம.2

  பதிலளிநீக்கு
 2. சீக்கிரமே முதல் இடத்தைப் பிடிப்பீர்கள் ஸார்.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் எண்ணம் நிறைவேற வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. சளைக்காமல் ஓடுங்கள்
  தமிழ் மணம் முதலிடம் தங்களின் கைக்கெட்டும் தூரத்தில்
  தங்களுக்காகக் காத்திருக்கிறது
  வாழ்த்துக்கள் ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 5. //முதல் ரேங்க்கை கட்டாயம் அடைந்துதான் ஆகவேண்டும் என்ற கொள்கை ஒன்றுமில்லை. முடியுமா என்று பார்ப்போம் என்பதுதான் என் எண்ணம்//

  இப்படி உண்மையிலேயே நினைத்திருந்தீர்கள் என்றால் இப்படி ஒரு பதிவே வந்திருக்காதே....

  பதிலளிநீக்கு
 6. ரேங்க் எவ்வாறு கணக்கிடப் படுகிறதென்றெ தெரிவதில்லை கடந்த மூன்று மாத வாசகர் எண்ணிக்கை என்னும் கணக்கு சொல்லப் படுகிறதுஇரண்டு நாள் முன்பு எழுதிய பதிவில் ரேங்க் 28 என்றிருந்தது. அதற்கு அடுத்த பதிவில் இன்னும் வாசகர்கள் அதிகமாய்ப் படித்தும் ரேங்க் 30 ஆகிறது. நான் ரேங்க் பற்றியெல்லாம் கவலைப் படுவதில்லை. இந்த ஓட்டம் புரியாதது.

  பதிலளிநீக்கு
 7. அதி சீக்கரமாக முதலிடம் பெற என் அட்வான்ஸ் நல்வாழ்த்துகள். :)

  பதிலளிநீக்கு
 8. முதலிடத்தைப்பிடித்து இப்போது ’முதல்வர்’ ஆகவும்
  அதன்பின் மேலும் உச்சத்தை எட்டி ’பிரதமர்’ ஆகவும்
  ஆகக்கடவது ! :)

  பதிலளிநீக்கு
 9. அது சரி நாம் ஏன் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும்?
  இது நமக்குள் திணிக்கப்பட்ட ஒரு சித்தாந்தம் என நினைக்கிறேன்.
  கார்போரேட்கள் மனிதர்களல்ல அது ஒரு கூட்டுக் குழுவின் அடையாளம். ஓடிய இன்ஃபொசிஸ் நாராயணசாமியே நின்றுவிட்டாரே..

  தமிழ்மணத்தில் ஒன்றில் வராவிட்டால் என்ன.. உங்கள் எழுத்தைப்பிடித்து வருகிற எங்களுக்காக, வீட்டு சமையலை எண்ணி வரும் மெஸ் வாடிக்கையாளர்களைப்போல, எழுதுங்கள். உங்கள் எழுத்தில் ஒரு சரளம் தெரிகிறது, ஒரு அன்னியோன்யம் தெரிகிறது, கலாச்சார முத்திரை தெரிகிறது. அதுதான் மிக முக்கியம்..

  வாழ்த்துக்கள்.

  God bless You.

  பதிலளிநீக்கு
 10. முதலிடத்தைப் பிடிப்பதற்க்கு..
  தமிழ் மணம் 8

  பதிலளிநீக்கு
 11. 'அலைகள் ஓய்வதில்லை', ஓயாத அலைகள்=ஒன்றாம் வகுப்பு சே ஒன்னாம் ரேங்க். இதே முனைப்பு பள்ளியிலும் இருந்ததா? ஒன்றாம் ரேங்க் வாங்கினீர்களா?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 12. முதலிடத்தைப் பிடித்துவிடுவீர்கள் என்பது நிச்சயம். ஆனால் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தினம் மூளையை கசக்கிக்கொள்ளவேண்டும். விரைவில் முதலிடத்தை எட்ட வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. முதலிடத்தை அடைவீர்கள் ஐயா! தங்களுக்கு வாழ்த்துகள்! ஆனா என்ன ! ரொம்பவே ஓடணும்.....நீங்கள் இந்த வயதிலும் ஓடுவீர்கள்! உங்கள் மூளை அத்தனை சுறுசுறுப்புடன் யோசிப்பதால்!

  வாழ்த்துகள் ஐயா!

  பதிலளிநீக்கு