வியாழன், 7 மே, 2015

ஆத்மாவும் அனாத்மாவும்

                                       Image result for ஞானம்
வாசகர்கள் என்னை மன்னிக்கக் கோருகிறேன். இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. அதனால் ஒரு காப்பி பேஸ்ட் பதிவு. இந்தப் பதிவைப் படித்து மூளை கலங்கினால் கம்பெனி பொறுப்பேற்காது.

ஆத்ம ஞானம் என்பது எது இந்த உலகத்திற்கு காரணமாக இருக்கிறதோ; எதனால் இந்த உலகம் பிரகாசிக்கிறதோ; அந்த பிரம்மவடிவாகவே உலகம் உள்ளதோ; இப்பிரபஞ்சம், பிரம்மத்திலிருந்து வேறானதல்ல - என்ற முடிவு பல்வேறு சாத்திரங்களால் நிலை நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி அறிவதே ஆத்ம ஞானம் ஆகும். இந்த ஆத்ம ஞானத்தை அறிந்தவரை ஆத்ம ஞானி என்பர்.
தங்கத்தால் வளையல், கடுக்கன், மோதிரம் போன்ற நகைகள் செய்யப்படுகிறது. ஆபரணமாக ஆவதற்கு முன்னும், அவை உருக்கப்பட்டு ஆபரணத்தின் தன்மையை இழந்துவிட்ட போதும், தங்கம்தான், இடைப்பட்ட காலத்தில், பெயரும், உருவமும் பலவாக கூறப்படுகிறது. அது போல, உலகத் தொடக்கம் - நடு - முடிவு எல்லாம் இறைவனே.
வேதாந்த சாத்திரங்களை மரபு வழியாக வந்த குருவின் வழியாக கேட்பது சிரவணம், கேட்டதில் சந்தேகங்களை நீக்கிக்கொள்ளுதல்மனனம், கேட்டதை மனதில் அசைபோடுதல் (நிதித்யாசனம்), வேதம், குரு, சாத்திரங்கள், யுக்தி, அனுபவம் முதலிய சாதனங்கள் வழியாக மட்டுமே ஆத்ம ஞானம் எனும் பிரம்ம ஞானத்தை அறிந்து கொள்ளமுடியும். ஆத்ம ஞானம் பெற்ற குருவின் மூலம் ஆத்மாவை விசாரனை செய்து பழகி, உடல் போன்ற அனாத்மா, ஆத்மாவிற்கு புறம்பாக பொருட்களைப் பற்றிய சந்தேகங்களை நீக்கிவிட வேண்டும். பின்னர் ஆனந்தமயமான ஆத்மாவில் மூழ்கி, பொருட்களில் பற்று இல்லாதவனாக ஆகிவிட வேண்டும்.
இது போன்ற அனாத்மா (ஆத்மாவின் எதிர்மறை பொருள்) பொருட்களை எவ்வாறு ஒதுக்குவது எனில், இந்த உடல், உணவின் மாற்று உருவம் என்பதால் அது ஆத்மா இல்லை; புலன்கள், அவைகளின் அதிஷ்டான தேவதைகளான பிராணன், வாயு, நீர், அக்னி, மனம் ஆகிய எதுவும் ஆத்மா அல்ல. ஏன் எனில், இவைகளும் உடலைப் போல உணவின் மூலம் உண்டாகிறது. மனம், புத்தி, சித்தம், அகங்காரம், ஆகாயம், மண், நீர், காற்று, நெருப்பு, சப்தம், சுவை, தொடு உணர்வு, முதலிய புலனுகர் விஷயங்கள் மற்றும்முக்குணங்களின் சாம்ய அவஸ்தையான பிரகிருதியும் (இயற்கை) ஆத்மா அல்ல. (ஆத்மாவிற்கு புறம்பான இந்த அனாத்மா வஸ்துகளை நேதி - நேதி (இதுவல்ல, இதுவல்ல) என்று ஒதுக்கிவிட்டு, ஆத்மா ஒன்று மட்டுமே சத்தியம் (உண்மை) என்று உறுதி கொள்ள வேண்டும்.

துயரத்திற்கு காரணம் தன்னைப் பற்றிய அறியாமை எனும் அஞ்ஞானமே. ஞானிகள் துயரப்படுவதில்லை. ஞானத்தினால் வாழ்க்கைத் துயரத்திலிருந்து விடுபடலாம். ஆத்மாவைப் பற்றிய அறியாமையால் மனிதர்கள் துயரப்படுகிறார்கள். ஆத்மா நிலையானது, மாறாதது, என்றும் நித்தியமாக இருப்பது. ஆனால் அனாத்மா எனும் இந்த உடல் பிறப்பு, வளர்வு, தேய்வு மற்றும் இறப்புடன் கூடியது. அனாத்மா அழிவுக்கு உட்பட்டது என்று ஆத்ம-அனாத்மா தத்துவம் விளக்கப்படுகிறது.


15 கருத்துகள்:

  1. திருவாவடுதுறை ஆதீனம் நடத்திய சைவ சித்தாந்த வகுப்பில் நான் கலந்துகொண்டு சித்தாந்த ரத்னம் விருது பெற்றேன். தங்களது இப்பதிவைப் படித்ததும் சித்தாந்த வகுப்பு நாட்கள் நினைவிற்கு வந்தன.

    பதிலளிநீக்கு

  2. +2 தேர்வை நன்றாக எழுதாதவர்கள் தான் கலங்கவேண்டும். நாம் ஏன் கலங்கவேண்டும்? பதிவைப் படித்து குழம்பிப் போனேன். இந்த கட்டுரைக்கு தங்களது கருத்துக்களை தந்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. //துயருக்கு காரணம் தன்னைப் பற்றி அறியாமைதான்//
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  4. ஆத்மாவைப்பற்றி ஆத்மார்த்தமாக எழுதியுள்ளது, மிகச்சிறப்பாக உள்ளது. பாராட்டுக்கள்.

    //இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது. //

    ஏன்? தாங்களும் மீண்டும் ஒருவேளை +2 பரீக்ஷை எழுதியுள்ளீர்களா என நினைக்கத் தோன்றுகிறது. :)

    பேரன் பேத்திகளில் யாராவது +2 எழுதியிருப்பார்களோ எனவும் நினைக்கத்தோன்றுகிறது.

    எப்படியிருப்பினும் +2 எழுதியுள்ள அனைவருக்கும் நிறைய (மதிப்) பெ ண் க ள் உடன் வெற்றி கிடைக்க வாழ்த்துகள். :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் பேரன் பிளஸ் 2 எழுதியிருக்கிறான். குடும்பத்திலுள்ள சீனியர் உறுப்பினர் என்ற முறையில் என் பங்கிற்கு நான் கவலைப் படுகிறேன். கவலைப் படுவதால் ஒன்றும் மாறப்போவதில்லை என்பது உறுதியாகத் தெரிந்தாலும் நான் என் கடமையை ஒழுங்காகச் செய்யவேண்டுமல்லவா?

      நீக்கு
  5. //இன்று +2 ரிசல்ட் வருவதால் என் மூளை வேலை செய்ய மறுக்கிறது.//

    கவலைப்படாதீங்க, நிச்சயம் பாஸ் பண்ணிடுவீங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாஸ் பண்ணுவது இக்காலத்தில் ஒன்றுமேயில்லை. சென்டம் வாங்கவேண்டுமே? அதுதான் கவலைப் படுகிறேன்.

      நீக்கு
  6. ஐயா

    ஆர்டர் கொடுத்த காவி துணி வந்துவிட்டது போல் தெரிகிறது. அந்தப்புர ராணிகள் கவலைப்படப் போகிறார்கள். நித்யானந்தாவாகவோ பிரேமானந்தா ஆகவோ ஆகாமல் இருந்தால் சரி.

    காபி பேஸ்ட் பண்ணினால் மூலத்துக்கு நன்றி கூறுவீர்கள். இதில் அதைக் காணோம்.
    இது தெய்வத்தின் குரல் (காஞ்சிப் பெரியவாள்) இல் இருந்து எடுக்கப்பட்டதா ? அல்லது பகவான் ரமணர் மொழிகளில் இருந்து எடுக்கப்பட்டதா?

    மூலத்தைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு கொடுத்தால் என்ன.?

    ஒரு சந்தேகம் +2 ரிசுல்ட்டுக்கும் Phd கந்தசாமிக்கும் என்ன சம்பந்தம்? பேரன் தான் MD போகிறாரே.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. அவனும் வெற்றி பெறுவான்! ஐயா! கவலை வேண்டாம்!

    பதிலளிநீக்கு
  8. ஒரு வழியா ரிசல்ட் வந்திருக்குமே
    உங்க விருப்பப்படி (எங்கள் வேண்டுதலின்படி)
    நல்ல மார்க் கிடைச்சுதா உடனே
    பிளாக் வழியே இனிப்பு கொடுப்பது எப்படின்னு ஒரு பதிவிடுங்க

    பதிலளிநீக்கு
  9. தெய்வத்தின் குரலையோ வேறு ஆத்ம போதனை நூல்களையும் படிப்பதால் வரும் வினை. எனக்கெல்லாம் மனம் வேறு விதமாக சிந்திக்கத் தொடங்கும். அப்படியான ஒரு சிந்தனையின் போது நான் ஜீவாத்மா பரமாத்மா பற்றி எழுதீருக்கிறேன் வித்தியாசமான வியாக்கியானம். படித்துப் பாருப்க்களேன்
    http://gmbat1649.blogspot.in/2012/06/blog-post.html இதில் சித்தாந்த ரத்னத்துக்கு வாழ்த்துக்களைப் பதிவு செய்கிறேன்

    பதிலளிநீக்கு