திங்கள், 15 ஜூன், 2015

வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம்

வலைச்சரம் ஒரு இரண்டு மாதங்களாக செயல்படவில்லை என்பதை பதிவர்கள் அனைவரும் அறிவார்கள், காரணங்கள் பல இருக்கலாம் அதைப் பற்றி எனக்கு கருத்துக் கூற ஒன்றுமில்லை.

ஆனால் சமீபத்தில் அதை செயல்படுத்த முன் வந்த பிரபல பதிவர் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. அவர்களின் பாணி வலைச்சர விதிகளுக்கு ஒத்துப்போகவில்லை என்று தெரிகிறது. அதைச் சுட்டிக்காட்டியவுடன் அவர் வலைச்சர ஆசிரியர் பணியிலிருந்து விலகி விட்டார் என்று அவர் பதிவுகளிலிருந்து தெரிகிறது.

வலைச்சரத்திற்கு என்று ஒரு பாரம்பரியம் இருக்கிறது. திரு. சீனா அவர்களும் மற்றும் பலரும் இதை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த வலைச்சரம் பல சாதனைகளைச் செய்திருக்கிறது. அதற்காக அதன் நிர்வாகிகளைப் பாராட்ட வேண்டும்.

இப்போது கடைசியாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிய திரு வை.கோபாலகிருஷ்ணன் வலைச்சர விதிகளைச் சரியாக கடைப்பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அதை ஒரு காரணமாக வைத்து அவருடைய பதிவில் (http://gopu1949.blogspot.in/2015/06/14.html) திரு தமிழ்வாசி அவர்கள் இட்டுள்ள பின்னூட்டங்கள் அவசியமற்றவை என்று நான் கருதுகிறேன். தனிப்பட்ட பிரச்சினை இதில் ஏதுமில்லை. ஆனாலும் பல பின்னூட்டங்கள் போடப்பட்டுள்ளன. என்ன காரணம் என்று தெரியவில்லை?

இது பதிவுலக தர்மத்திற்கும் வலைச்சர பாரம்பரியத்திற்கும் பெருமை சேர்க்கும் செயலல்ல என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

19 கருத்துகள்:

  1. அன்பின் ஐயா.,
    தங்களின் கருத்தே என் மனதிலும்!..

    பதிலளிநீக்கு
  2. நடந்தவை கடந்தவையாய் இருக்கட்டும். நடப்பவை நல்லதாய் இருக்கட்டும். உங்கள் கருத்துடன் ஒத்துப் போகிறேன். நாமெல்லோரும் நண்பர்கள் என்கிற உணர்வு கெடக் கூடாது. 'சும்மா' வலைப்பதிவின் உரிமையாளர் சகோதரி தேனம்மையின் வார்த்தைகள் இங்கு நினைவுக்கு வருகின்றன. "வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். நம்முள் ஒற்றுமை பெருகட்டும்"

    பதிலளிநீக்கு
  3. ஐயா. நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். இதை இத்தோடு விட்டுவிடலாம்.

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர்கள் ஒறுமையாய் அன்புடன் செயல்படுவதே நல்லது வலை உலகிற்கு. பிரச்சனைகள் என்பது சகஜமே. நாம் அதனை வின் வின் சிச்சுவேஷனாக மாற்ற வேண்டும். இதுவும் கடந்து போகும்......நடந்தவை போகட்டும். நமக்குள் அன்பு என்ற ஒன்று இருந்தால் வலை உலகு மட்டுமல்ல இந்த உலகையே நம் வசம் ஆக்கலாம். நடந்தவற்றை மறப்போம். அது நமக்கு அவசியமில்லை. இனி நடப்பதை நல்லதாக நினைப்போம். சகோதரி தேனம்மை அவர்கள் சொல்லும் "வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். நம்முள் ஒற்றுமை பெருகட்டும்" என்பதை நாம் எல்லோருமே கடைப்பிடிக்கலாமே. அவர்களது இந்த வார்த்தைகள் மிகவும் பாசிட்டிவ் எண்ணம் உடையவை. நண்பர்கள் நம் அனைவரின் ஒற்றுமையும் அன்பும் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  5. என்னைப் பொருத்தவரை
    பதிவுலகப் பிதாமகர் விலகிக் கொண்டது
    மிகச் சரி

    விதி மீறல் இருப்பின் நாசூக்காக
    அவரிடம் மட்டும் தெரிவிக்க
    எத்தனையோ வழிகள் இருக்கிறது

    அதை விடுத்து பதிவில் பின்னூட்டமாய்
    பதிவிட்டது சரியானதில்லை
    என்பதே என் கருத்து

    பதிலளிநீக்கு
  6. கருத்து மாறுபாட்டால் ஏற்பட்ட விபரீதம் இது! தவிர்த்து இருக்கலாம்தான்! அனைவரும் சொல்வது போல் இதை இத்தோடு விட்டுவிடலாம்!

    பதிலளிநீக்கு
  7. வலையுலகில் பொதுவாக யாருமே மனதில் பட்டதைச் சொல்லாமல் , அப்படிச் சொன்னால் பதிவர் ஒற்றுமை குறையும்( இப்போது மட்டும் நிறைந்திருப்பது போல) என்று எண்ணி எதிர்மறையாக எதுவும் சொல்வதில்லை. அதனால் பலரும் தங்களது நடவடிக்கைகளே சரியென்று நினைக்கின்றனர். தவறு என்று யாராவது சுட்டிக்காட்டினால் பொங்குகிறார்கள். இந்த நிலையில் பதிவர் ஒற்றுமையை நான் ஏன் குறைக்கவேண்டும்.?

    பதிலளிநீக்கு
  8. இந்த பதிவைப் பார்த்த பிறகுதான் ஒரு மிகப் பெரிய விவாதமே அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வலைத்தளத்தில் நடைபெற்று இருப்பதைப் பார்த்தேன். திரு V.G.K அவர்கள் ஆர்வமாக வலைச்சரம் ஆசிரியர் பணி செய்ய தானாகவே முன்வந்தார். வலைச்சரத்தில் உள்ள சில விதிமுறைகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றதும் விலகிவிட்டார்.

    ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.

    நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்

    ”புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.”

    எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே..
    த.ம. 4

    பதிலளிநீக்கு
  9. வலைச்சர நடவடிக்கை ஒரு நெருடலாக இருக்கிறது என்பது உண்மைதான். இதுவும் கடந்து போகும் என்று நம்புவோம்.

    பதிலளிநீக்கு
  10. லா லல்லல்லா லாம்... எல்லாமே லாம் என்றும் எடுத்துக் கொள்ள..லாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியானால் யாருக்கும் இது சரி. இது சரியல்ல என்ற நியாய உணர்வுகள் வேண்டாமா?

      நீக்கு
  11. மறப்போம் ஐயா !ஓற்றுமையுடன் வலைச்சரத்தை பாதுக்காப்போம்!!!

    பதிலளிநீக்கு
  12. இவ்வாறான நிகழ்வுகளில் நிதானத்தைக் கடைபிடிப்பதே சரி. நடந்தது நடந்ததாக இருக்கட்டும். நடப்பவை இனி நல்லதாக அமையட்டும்.

    பதிலளிநீக்கு
  13. எனக்கும் வலைச்சர நிர்வாகிகள் இதை தனிப்பட்ட முறையில் வை.கோ. அய்யாவிடம் மட்டும் தெரிவித்திருக்கலாம் என்றே படுகிறது. பொதுவில் பகிர்ந்தது நெருடலாகவே உள்ளது. அருமையான பதிவு!
    த ம 10

    பதிலளிநீக்கு