திங்கள், 10 ஆகஸ்ட், 2015

தமிழ் விக்கிபீடியா

                                             Image result for தமிழ் விக்கிபீடியா

விக்கிபீடியா என்ற சொல்லை அன்பர்கள் கேளவிப் பட்டிருக்கலாம். இது ஒரு கலைக் களஞ்சியம். இது பல வருடங்களாக ஆங்கிலத்தில் இருக்கிறது. இதில் கிடைக்காத விவரங்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு விளக்கமான கட்டுரைகள் இருக்கின்றன. சமீப வருடங்களில் தமிழிலும் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது நாள் வரை நான் இதை எப்போதாவது உபயோகித்து வந்திருக்கிறேனே தவிர இதில் கட்டுரை எல்லாம் எழுதியதில்லை. பதிவர் முனைவர் ஜம்புலிங்கம் இதைப் பற்றி இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பதிவு போட்டிருக்கிறார். விக்கிபீடியாவில் பயனராகி அதில் கட்டுரைகள் எழுதிவது எப்படி என்று விளக்கங்கள் அளித்திருக்கிறார்.

பல பதிவர்கள் அதில் தாங்களும் சேர்வதாகப் பின்னூட்டங்கள் இட்டிருக்கிறார்கள். நான் இன்னும் ஒரு படி மேலே சென்று இந்த தமிழ் விக்கிபீடியாவில் பயனராக இணைந்து ஒரு கட்டுரையையும் அதில் பதிந்து விட்டேன். (இந்த மாதிரி அவசரங்களுக்குத் தேவைப் படும் என்று சில கட்டுரைகளை கைவசம் வைத்திருப்பேன்)

இதன் தொடர்பு: https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D&redirect=no

முடிந்தவர்கள் சென்று பார்க்கவும்.

 பதிவர் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் கடிதத்தைப் பாருங்கள்.

அன்புடையீர், 
வணக்கம்.
தமிழ் விக்கிபீடியாவில் அண்மையில் 200ஆவது பதிவினை (article) நிறைவு செய்ததை நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டபோது, வலைப்பூ நண்பர்கள் தமிழ் விக்கிபீடியாவில் எழுதும் முறையைப் பற்றி ஒரு பதிவினைப் பதியும்படிக் கேட்டிருந்தனர். எனது அனுபவத்தில் நான் கற்றவற்றைப் பகிர்கிறேன். இன்னும் பல நான் கற்கும் நிலையில் உள்ளேன். இப்பதிவில் விக்கிபீடியாவில் பயனராவதைப் (User) பற்றி அறிவோம். பயனராவோம். வாருங்கள்.
அன்புடன்,ஜம்புலிங்கம்
இணைப்பு : 


பதிவுகள் எழுதினால் அதற்கு உடனேயே கருத்துகள்  வந்து விடும். அப்படியேதான் முகநூல், ட்விட்டர் போன்றவைகளும். ஆனால் விக்கிபீடியாவில் எழுதினால் அதை யாராவது படித்தார்களா இல்லையா என்கிற விவரங்கள் நமக்கு உடனடியாகத் தெரியாது. அது ஒன்றே இதில் உள்ள குறைபாடு. 

நாம் விக்கிபீடியாவில் எழுதுகிறோமோ இல்லையோ, அதை பல விவரங்கள் சேகரிப்பதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். என் மாதிரி பதிவர்கள் பதிவுகளுக்கு விசயம் இல்லையென்றால் உடனே இங்கு சென்று ஏதாவது ஒரு கட்டுரையை காப்பி பேஸ்ட் செய்து ஒரு பதிவை உடனடியாகத் தேத்திக்கொள்ளலாம். பதிவுலகில் சிலர், ஐயோ, என் பதிவைக் காப்பி அடிச்சிட்டான் என்கிற மாதிரி இந்த விக்கிபீடியாவில் யாரும் புலம்ப மாட்டார்கள். அது ஒரு பெரிய சௌகரியமல்லவா?

11 கருத்துகள்:

  1. விக்கிபீடியா : சிந்தனையும் தேடுதலும் அதிகமாகும் ஐயா...

    பதிலளிநீக்கு
  2. சில வருடங்களுக்கு முன்னர் நானும் இதில் பயனர் ஆனேன். ஆனால் அதற்குப் பிறகு அதை பயன்படுத்தவில்லை.

    மீண்டும் சேர வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. தளம் திறக்க அதிக நேரம் ஆகிறது... (waiting for tamilmanam.net) காரணம் தமிழ்மணம் வேலை செய்யவில்லை... சரியாகும் வரை நம் தளத்தில் சரி செய்யலாம்... வாசகர்களுக்கு பதிவை வாசிக்க, கருத்துரை இட உதவும்...

    வழிமுறை : http://dindiguldhanabalan.blogspot.com/2013/05/Speed-Wisdom-1.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. DD,
      எனக்கு நீங்கள் சொன்ன வேலையை எல்லாம் செய்ய பயமாயிருக்குங்க. நான் மாட்டேன். ஆளை விடுங்க.
      எங்காச்சும் கை தவறுதலா ஒரு தப்பு நடந்து போச்சுன்னு வச்சுக்குங்க. அப்புறம் ஆட்டம் அம்பேல்.அப்புறம் டிடி யைத்தான் தேடி ஓடவேண்டியிருக்கும்.

      நீக்கு
  4. விக்கி பீடியாவில் எங்கள் ஊர் கோயில் பற்றி ஒரு முறை எழுதி உள்ளேன்! பயனர் ஆனேனா என்பது நினைவில் இல்லை! மீண்டும் சென்று பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு

  5. நீங்கள் கொடுத்த இணைப்பின் மூலம் தங்களது கட்டுரையை வாசிக்க தேடினேன். ஆனால் தேடல் தோல்வியில் முடிந்துள்ளது. படித்தபின் பின்னூட்டம் எழுதுகிறேன்

    பதிலளிநீக்கு
  6. விக்கியெல்லாம் எனக்கு வேண்டாம் ஸார்! அவ்வப்போது சென்று தேடி ஏதாவது விவரம் எடுப்பதோடு சரி.

    பதிலளிநீக்கு
  7. என்ன? தங்களது கட்டுரையை நீக்கி விட்டார்களா?
    தம +1

    பதிலளிநீக்கு