செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015

தமிழ் இளங்கோவும் நானும்.

                               Image result for five star hotel
தமிழ் இளங்கோவை அறியாதவர்கள் பதிவுலகில் யாரும் இருக்க மாட்டார்கள். அவருக்கு என் மேல் ஒரு பூனைக்குட்டி விசுவாசம் இருக்கிறது. அடிக்கடி என் பதிவுகளைப் படிப்பார் போல இருக்கிறது !  அப்படி படிக்கும்போது என்னுடைய பழைய பதிவு ஒன்றை படித்திருப்பார் போல் இருக்கிறது.

அந்தப் பதிவு.

"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":   இதைச்சுட்டினால் அந்தப் பதிவைப் பார்க்கலாம். படிப்பது உங்கள் சௌகரியம்.

இந்தப் பதிவு நீண்ட நாட்களுக்கு முன் போட்ட பதிவு. நானும் அந்தப் பதிவை இப்போது போய்ப் படித்தேன். என்னால் நம்ப முடியவில்லை. இந்தப் பதிவை எழுதியது நான்தானா என்று சந்தேகம் வந்து விட்டது.


எனக்கு சில சமயம் என்னை அறியாமல் சில மேதைத்தனமான கருத்துகள் தோன்றி விடும். இது சாதாரணமாக நடக்காது. அபூர்வமாக நடக்கும் ஒரு நிகழ்வு. அப்படிப்பட்ட சமயத்தில் இந்த பதிவை எழுதியிருப்பேன் போல இருக்கிறது.

தமிழ் இளங்கோ அவர்கள் இதைப் படித்தவுடன், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற பெரு நோக்கில் இந்தக் கருத்துகளைத் தொகுத்து என்னை ஒரு புத்தகமாக வெளியிடச்சொல்லி ஒரு அன்பு மடல் எழுதியிருக்கிறார்.

அதற்கு நானும் தனிப்பட்ட முறையில் ஒரு பதில் அனுப்பினேன். அப்புறம்தான் எனக்கு ஒரு யோசனை வந்தது. திரு தமிழ் இளங்கோ மாதிரி இன்னும் பல பதிவர்கள் என்னை ஒரு பெரிய மேதை என்று தவறாகப் புரிந்து கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட தவறான எண்ணங்களைப் போக்குவது என் கடமை என்று கருதுகிறேன்.

அதனால் தமிழ் இளங்கோவின் மடலையும் அதற்கு நான் எழுதின பதிலையும் இங்கே கொடுக்கிறேன். என்னைப் பற்றி சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள் என்னை சரியாகப் புரிந்து கொள்ள இந்தக் கடிதம் பயன்படும் என்று நம்புகிறேன்.

தி.தமிழ் இளங்கோ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விட்டுச் சென்றுள்ளார்"வயதுக்கு (60+) வந்தவர்களுக்கும் வராதவர்களுக்கும்":

இன்று மீண்டும் இப்பதிவை படிக்க நேர்ந்தது. இதுபோன்ற உங்களது வாழ்வியல் சிந்தனை பதிவுகளை தொகுத்து ஒரு புத்தகமாக வரும் வலைப்பதிவர் திருவிழாவில் புதுக்கோட்டையில் வெளியிட்டால் என்ன? (அதிகம் அச்சடித்து கையை சுட்டுக் கொள்ள வேண்டியதில்லை. சிக்கன முறைகளை கரந்தை ஜெயக்குமாரிடம் கேட்டால் சொல்லுவார்)

வெளியிடு
நீக்கு
ஸ்பேம் என குறி

இந்த வலைப்பதிவின் கருத்துரைகளை மதிப்பாய்வு செய்க

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2015 ’அன்று’ 9:03:00 முற்பகல் IST அன்று மனஅலைகள் இல் தி.தமிழ் இளங்கோ ஆல் உள்ளிடப்பட்டது

DrPKandaswamyPhD drpkandaswamy1935@gmail.com

9:45 AM (0 minutes ago)
to தி.தமிழ்
அன்புள்ள திரு. தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
உங்கள் அன்பு உள்ளத்திற்கு மிக்க நன்றி.

என் முக்கிய குணத்தைப் பற்றி சொல்ல எனக்கு வெட்கமாக இருக்கிறது. இருந்தாலும் சரித்திரத்திற்காக சொல்லித்தானாக வேண்டும். நான் ஒரு வாழைப்பழ சோம்பேறி. ஏதோ என் மண்டைக்குள் களிமண் அதிகம் இல்லாததினால் பெரிய சாதனையாளன் மாதிரி உலகிற்கு ஒரு பாவ்லா காட்டிக்கொண்டு வாழ்ந்து வருகிறேன். அவ்வளவுதான். நான் ஒரு மேதை அல்ல. மூளை மட்டும் எப்போதாவது சில சமயம் சுறுசுறுப்பாக வேலை செய்யும். மற்ற சமயங்களில் நன்றாக குறட்டை விட்டுத் தூங்கும்.

புத்தகம் எழுதி, அதை அச்சிட ஏற்பாடுகள் பண்ணி, அதை புரூப் பார்த்து, புத்தகங்கள் வந்தவுடன் அதை வீட்டில் வைத்துப் பாதுகாத்து (வீட்டுக்காரி தினமும் அவைகளைப் பார்த்து முணுமுணுப்பாள்) அதை வருகிறவர் போகிறவர்களுக்கெல்லாம் கொடுத்து, ஐயா, எனக்கு வேண்டாம் இந்த புத்தகம் போடும் வேலையும் அதனால் வரக்கூடிய புகழும்.

ஒரு நல்ல பைஃவ் ஸ்டார் ஓட்டலில் ரூம் போட்டு ஓரு வாரம் நன்றாகச் சாப்பிட்டு (சோமபானம் உட்பட) தூங்கச் சொல்கிறீர்களா? இப்பவே ரெடி. இந்தப் புத்தகம் போடற வேலையெல்லாம் வேண்டாங்க. அதுக்குன்னு சில ஆட்கள் இருக்கிறார்கள். அது அவர்கள் வேலை. அவர்கள் செய்யட்டும். எனக்கு அது ஒத்துக் கொள்ளாது.

அன்புள்ள,
பழனி. கந்தசாமி

19 கருத்துகள்:

  1. ஊக்கப் படுத்தி உற்சாகமூட்டுவதில் திரு தி தமிழ் இளங்கோ வல்லவர். உங்களைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும்.

    பதிலளிநீக்கு
  2. திரு தி.தமிழ் இளங்கோ அவர்கள் தங்கள் பேரில் உள்ள நன் மதிப்பால் தங்களது கருத்துக்களை நூல் வடிவில் கொண்டுவர சொல்லியிருக்கிறார். ஆனால் நூல் வெளியிட்டு கையை சுட்டுக்கொண்டவர்கள் அநேகம். எனவே தாங்கள் எடுத்த முடிவு சரியே.

    பதிலளிநீக்கு
  3. சோமபான சுகர் வேறா...!?!

    இருந்தாலும் உங்கள் நூல் விழாவில் வர வேண்டும் ஐயா...

    பதிலளிநீக்கு
  4. அய்யா ! ஏதோ ஆர்வக் கோளாறு காரணமாக சொல்லி விட்டேன். நீங்கள் முன்பே சொன்னது போல நகைச்சுவையை நகைச்சுவையாகவே எடுத்துக் கொள்கிறேன். கட்டுரையின் ஆரம்பத்தில் நீங்கள் சொன்ன “பூனைக்குட்டி விசுவாசம்” என்றால் என்னவென்று தெரியவில்லை. கூகிளில் மற்றும் அகராதிகளில் எங்கு தேடியும் விளக்கம் கிடைத்த பாடில்லை. தேடிக் கொண்டு இருக்கிறேன். நீங்களே சொல்லிவிடவும். அல்லது ஒன்றரைப் பக்கத்திற்கு ஒரு பதிவாக எழுதினாலும் சரி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொன்னதில் தவறு ஏதும் இல்லை, தமிழ் இளங்கோ. பூனைக்குட்டியின் சுபாவம் தெரிந்தவர்களின் பின்னாலேயே ஒரு பாசத்துடன் போய்க்கொண்டிருக்கும். இதைத்தான் பூனைக்குட்டி விசுவாசம் என்பார்கள். இது ஒரு புகழுரை. நட்பின் அன்னியோன்யத்தைக் குறிக்கும் சொல்.

      நீக்கு
  5. முயற்சி செய்தால்தான் என்ன?

    ஒவ்வொரு படியிலும் திரும்பிவிடலாம் என்கிற வசதி இருக்கும்போது பயப்படவேண்டாமே...

    நானும் திரு. தமிழ் இளங்கோவின் கருத்துக்கு ஒத்துப்போகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடியாதது என்று ஒன்றும் இல்லை. இதில் உள்ள சிரமங்களை நன்கு அறிந்துள்ளேன். இது என் சீரான வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும். எனக்கு அப்படி சிரமப்படுவதில் விருப்பம் இல்லை.

      நீக்கு
    2. மின்நூலாக வெளியிடுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது என்று நினைக்கிறேன்.

      நீக்கு
    3. முயல்கிறேன், தமிழ் இளங்கோ. உங்கள் அன்பிற்கு மீண்டும் நன்றி.

      நீக்கு
  6. நகைச்சுவையாக சொன்னாலும் உங்கள் பதிவுகளில் ஓர் கருத்து இருக்கிறது! முயற்சித்து பார்க்கலாம்! அதே சமயம் புத்தகம் போடலாமே தவிர விற்பனையை யோசிக்க வேண்டியிருக்கிறது! நன்றி!

    பதிலளிநீக்கு
  7. தங்கள் மேல் உள்ள அன்பின் காரணமாகவும், தங்களது எழுத்தின்மீதான ஈர்ப்பின் காரணமாக திரு தமிழ் இளங்கோ அப்படி கூறியிருக்கலாம். எங்களது சிந்தனையும் அதுவே. அதே சமயம் தாங்கள் கூறிய கருத்தும் ஏற்கும்படி உள்ளது. எது எப்படியாயினும் தொடர்ந்து எழுதுங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்த சவாலையும் ஏற்று அதை வெற்றிகரமாக நடத்திக்காட்ட முடியும் என்ற தைரியம் கொண்டிருந்தவன்தான் நான். அப்படி பல சவால்களைச் சந்தித்திருக்கிறேன். அந்த வயது வேறு. இன்று என் உடல் நிலை மனநிலை ஆகியவற்றின் அடிப்படையில் என்னால் எது முடியும் எது முடியாது என்ற தெளிந்த சிந்தனையுடன் இருக்கிறேன். உங்கள் அன்பிற்கு நன்றி. புத்தகம் போடுவதில் வரும் லாப நஷ்டங்கள் இன்று எனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் அதற்குத் தேவையான மன ஊக்கம் குறைந்து விட்டது. என்னால் தூக்க முடியாத சுமையை என் தலையில் ஏற்றிக்கொண்டு சிரமப்பட விருப்பமில்லை. இதுதான் என் நிலை.

      நீக்கு
  8. தங்களைப் பற்றி இப்பதிவில்தான் தெளிவாகப் புரிந்து கொண்டேன்.

    தங்கள் கருத்து - தங்கள் உரிமை!
    எனவே, நூலாக வெளியிடாதது உங்கள் விருப்பமே!

    அன்பர்கள் குறிப்பிட்டதைப் போல்,
    மின்னூல் ஆக வெளியிடலாம்.

    நன்றி!

    பதிலளிநீக்கு
  9. மின்னூலாக வெளியிடலாம்... உங்களால் முடியும்!

    பதிலளிநீக்கு
  10. புத்தகம் போட்டால்
    கையைச் சுட்டுக் கொள்ளத்தான் வேண்டும்
    ஆனாலும் ஐயா
    இப்போது நாம் எழுதுவதெல்லாம்
    காற்றில் எழுதும் எழுத்துக்கள் தானே
    கையில் பிடிக்க இயலாதே
    தங்களின் எழுத்துக்களை,அச்சிட்டு
    ஒரு முறையேனும்
    நூலாய் படித்துப் பாருங்கள்
    அதன் மகிழ்ச்சி புரியும்
    நன்றிஐயா
    தம+1

    பதிலளிநீக்கு
  11. ஒருமுறை முயன்று பார்க்கலாம்
    அதை நானும் வாங்கலாம்
    புத்தக விலை 99 வைக்கலாம்
    நண்பர்களுக்கு கொடுக்கலாம்
    அவர்களும் படிக்கலாம்
    ஒருவேளை லாபம் கிடைக்கலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் தெளிவாக இருக்கிறேன். இந்த உடும்பு புடிக்கற வேலை எனக்கு வேண்டாம். என் நண்பர்கள் என் பதிவையே படிக்கிறதில்லை. என் நண்பர்கள் கொடுத்த புத்தகங்களையும் நானும் படிப்பதில்லை. புத்தகம் படிக்கும் பழக்கமே வழக்கொழிந்து போன நிலையில் நானும் இன்னும் சில மரங்களை வீணாக்க வேண்டுமா? மாட்டேன்.

      நீக்கு