புதன், 2 செப்டம்பர், 2015

நானும் ஒரு பரிசு பெற்றேன்.

                                     

பதிவுலக ஜாம்பவான், சிறுகதை மன்னன், பின்னூட்டத்திலகம், பதிவுலகில் முதல் முறையாக சிறுகதை விமரிசனப்போட்டி வைத்து பரிசுகளை வாரி வழங்கிய வள்ளல், இரண்டாம் முறையாக பின்னூட்டப்போட்டி வைத்து பரிசுகளை வாரி வழங்கப்போகும் வள்ளல், பழம்பெரும் பதிவர் திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களைத் தெரியாத யாரும் பதிவுலகில் இருக்கமாட்டார்கள். அடியேனும் அப்படி ஒரு பிரபலமானவன்தான் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தால் என் மனச்சாட்சி ஒத்துக்கொள்ள மாட்டேன் என்கிறது. அதனால் அவருடன் எடுத்துக்கொண்ட படத்தைப் போடுவதுடன் திருப்தி அடைகின்றேன்.

                                         Image result for திரு வை. கோபாலகிருஷ்ணன், பதிவர்

அப்படிப்பட்ட பதிவர் அறிவித்த பின்னூட்டப்போட்டியில் அவருடைய 750 பதிவுகளுக்கும் வெற்றிகரமாகப் பின்னூட்டம் போட்டு முடித்து விட்டேன்.
அதற்கு அங்கீகாரமாக திரு வைகோ அவர்களிடமிருந்து அத்தாட்சிக் கடிதம் வந்து விட்டது. கீழ்க்கண்ட மின்னஞ்சலைப் பார்க்கவும். தவிர அவருடைய பதிவையும் பார்க்கவும்.

இந்த செய்தியை இங்கு நான் பதிவிடக் காரணம்,  இதுவரை இந்தப் போட்டிக்கு முயற்சிக்காதவர்களும், முயற்சி செய்து பாதியில் நிற்பவர்களும் உடனடியாக ஊக்கத்துடன் முயற்சித்து இந்தப் பரிசை பெறவேண்டும் என்ற ஆசையே. போட்டியின் முடிவு நாள் 31-12-2015. இன்னும் நான்கு மாதங்கள் இருக்கின்றன. இப்போது ஆரம்பித்தாலும் போட்டியில் வெற்றி பெற வாய்ப்புகள் இருக்கின்றன.

திரு வைகோ அவர்கள் எனக்கு இந்த வெற்றியைத் தந்ததற்கு என் மனமார்ந்த நன்றிகள்.

வை.கோபாலகிருஷ்ணன் has left a new comment on the post "ஊட்டமளிக்கும் பின்னூட்டங்கள் - நிறைவுப்பகுதி - 12/...": 

முனைவர் திரு. பழனி. கந்தசாமி ஐயா அவர்களுக்கு:

அன்புடையீர்,

வணக்கம்.

வெற்றி ! வெற்றி !! வெற்றி !!!

HEARTIEST CONGRATULATIONS & BEST WISHES FOR WINNING IN MY NEW CONTEST ! 

VERY GREAT ACHIEVEMENT !! :)

என் வலைத்தளத்தினில் இந்தப் பதிவினில் 31.03.2015 அன்று வெளியிடப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு இணங்க, தாங்கள் என் வலைத்தளப் பதிவுகளுக்கு ஆரம்பம் முதல் தொடர்ச்சியாக பின்னூட்டங்கள் அளித்து வெற்றிகரமாக முடித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. 

இதுவரை, 2011 ஜனவரி முதல் 2015 மார்ச் வரையிலான 51 மாதங்களில், வெளியிடப்பட்டுள்ள என் வலைத்தளப் பதிவுகள் அனைத்திலும் (1 to 750) தங்களின் மதிப்புமிக்கப் பின்னூட்டங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுள்ளன. 

தங்களின் ஆர்வம், விடாமுயற்சி, ஈடுபாடு முதலியன என்னை மிகவும் நெகிழ வைக்கின்றன. மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி. 


தங்களின் இந்த சாதனைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

இந்த என் 'அனைத்துப் பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இடும் போட்டி'யில் முன்னணியில் வந்துள்ள தங்களுக்கான அதிகபட்ச இரட்டிப்புப் பரிசுத்தொகையான (Rs. 500*2 = Rs. 1000) ரூபாய் ஆயிரம் வெகு விரைவில், (On or before 10.10.2015) தங்களை நேரில் சந்தித்து என்னால் அளிக்கப்படும் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 

என்றும் அன்புடன் VGK 


-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-17 கருத்துகள்:

 1. தாங்களும் ஒரு பிரபல பதிவர் என்பதில் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. சிறுகதை மன்னன் திரு வை.கோ அவர்கள் அறிவித்த பின்னூட்ட போட்டியில் அவரது 750 பதிவுகளுக்கும் பின்னூட்டம் இட்டு முதலிடம் பெற்று பரிசைத் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் ஐயா! இந்த பரிசைத் தரும் திரு வை.கோ அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கு இவ்வளவு பொறுமை உண்டென்று நினைக்கவில்லை. வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துகள் ஐயா தொடர்ந்து கருத்துரை எழுதி மீண்டும் பரிசு பெற வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 4. மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களிடமிருந்து மின்னஞ்சல். மகிழ்ச்சியான தகவல். முனைவர் அய்யாவிற்கு வாழ்த்துக்கள். ரொம்பவும் பொறுமைசாலிதான் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 5. பொறுமை(யாய் பொறு)ப்பாய் முயன்று....
  சாதனை முடித்தீர்கள் வென்று!!!

  பதிலளிநீக்கு
 6. திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நிகர் அவரே. அவருடன் தங்களுடைய சந்திப்பு நெகிழ வைத்தது. வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. 750 பதிவுகளைப் படித்துப் பின்னூட்டம் போடுவது சாதாரண காரியமல்ல. மிகப் பெரிய சாதனைக்குப் பாராட்டுக்கள் சார்!

  பதிலளிநீக்கு
 8. ஐயா

  750 + மற்றவர்களுக்கு இட்டது ஒரு 250, ஆக மொத்தம் 1000. அதாவது ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி, தவறு ஆயிரம் பின்னூட்டம் இட்ட அபூர்வ கந்தசாமி ஐயா என்று பட்டம் கொடுக்கிறேன்.

  சரிதானே?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 9. ஆயிரம் பொற்காசுகள்!
  அவ்வளவும் உங்களுக்கா? சொக்கா, இது அடுக்குமா? நியாயமா?

  பதிலளிநீக்கு
 10. சாதனையாளரான தங்களுக்கு என் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

  இதைத் தனிப்பதிவாகவே வெளியிட்டு சிறப்பித்துள்ளதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.

  அன்புடன் VGK

  பதிலளிநீக்கு