புதன், 30 செப்டம்பர், 2015

புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு திருவிழா – சில குறிப்புகள்.

                    Image result for விழாக்கள்
எனக்குத் தெரிந்த சில குறிப்புகளை இங்கே, விழா அமைப்பாளர்களின் பார்வைக்கு வைக்கிறேன்.

       1.  வரவேற்பும் தங்குவதற்கு ஏற்பாடும்:

இது பற்றி தீவிரமாக சிந்திக்கப்பட்டு விழாக் குழுவினர் வழிமுறைகளை வகுத்திருப்பார்கள் என்று நம்புகிறேன். வெளியூரிலிருந்து வருபவர்கள் யார் யாருக்கு தனி அறை வேண்டும் என்பதைக் கேட்டறிந்து அந்த மாதிரி அறைகள் ஏற்பாடு செய்யலாம். அதற்கு முன் என்ன மாதிரி அறைகள் கிடைக்கும் என்று தெரிவிப்பது அவசியம். தவிர, புதுக்கோட்டை வந்து சேர்ந்ததும் தொடர்பு கொள்ளவேண்டிய விழா குழுவினரின் பெயரும் கைபேசி எண்ணும் கொடுத்தல் பயனுள்ளதாக இருக்கும்.

   2.   பதிவர்களின் கைப்பைகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு.

வெளியூர் பதிவர்கள் கொண்டு வரும் பைகளை விழா மண்டபத்தில் யாராவது வாங்கி ஒரு இடத்தில் வைத்திருந்து அவர்கள் போகும்போது திருப்பிக் கொடுக்கலாம். இல்லாவிடில் அவர்கள் அந்தப் பைகளை தங்களுடனேயே தூக்கிக்கொண்டு விழா முடிவு வரை அலையவேண்டும்.

3. உணவு ஏற்பாடுகள்.

தலை வாழை இலை போட்டு பதினெட்டு வகை பலகாரங்கள் பரிமாறுவது என்பது தமிழர் பண்பாடாக இருக்கலாம். ஆனால் இந்த மாதிரி கூட்டங்களில் அந்த மாதிரி பரிமாறுவது கஷ்டமான காரியம். இப்பொழுது பஃபே முறை சகஜமாகி விட்டது. அவரவர்களுக்குத் பிடித்தமானவற்றை தேவையான அளவு வாங்கிச் சாப்பிடுவது எளிது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால் ஒரே இடத்தில் உணவு வகைகளை வைத்து விட்டு எல்லோரையும் வரிசையில் போய் வாங்கவேண்டுமாறு ஏற்பாடு செய்தால் வரிசை நீண்டு நிற்க வேண்டிய நேரம் அதிகமாகும்.

இரண்டு அல்லது மூன்று இடங்களில் உணவுகளை வைத்து விட்டால் கூட்டம் பிரிந்து நெரிசலைத் தவிர்க்கலாம். இதற்கு கூடுதல் பாத்திரங்கள் தேவைப்படும். உணவு சப்ளை செய்யும் ஒப்பந்ததாரர் இந்த ஏற்பாட்டிற்கு ஒப்புக்கொள்ள மாட்டார். காரணம் இந்த ஏற்பாட்டில் கூடுதல் பாத்திரம் மற்றும் ஆள் செலவு பிடிக்கும்.அவரை முதலிலேயே இந்த நிபந்தனைகளுக்கு தயார் செய்வது அவசியம்.

தவிர ஒப்பந்ததாரர் மூலம் உணவு ஏற்பாடு செய்திருந்தால் அவர் சொல்லியிருந்த நபர்களை விட 25 சதம் குறைவாகத்தான் உணவு கொண்டு வருவார். கடைசியில் சாப்பிடுபவர்களுக்கு உணவு இருக்காது. தவிர ஒவ்வொருவருக்கும் குறைந்த அளவே உணவு கொடுப்பார். இந்த நுணுக்கங்களை கவனித்து சரி செய்யவேண்டும்.
ஆங்காங்கே நாற்காலிகள் போடப்பட்டிருந்தால் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இருக்கும். தவிர பதிவர்கள் சிறு சிறு குழுக்களாக உணவு உண்டு கொண்டே பேசி மகிழவும் ஏதுவாக இருக்கும்.
இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் பஃபே முறைக்கு ஏற்ற மாதிரி உணவுகள் இருக்கவேண்டும். சாதம் தனியாகவும் சாம்பார், ரசம், தயிர் தனியாகவும் இருந்தால் அவைகளைப் பிசைந்து சாப்பிட முடியாது. ஆகவே கலந்த சாதங்களாக இருந்தால் நல்லது. கூடுமானவரை சாப்பிடுவதற்கு எளிதான உணவுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும். “டிரைஉணவு வகைகள் தவிர்க்கப்படவேண்டியவை.

    4.   வரவுப்பதிகை:

இதை நண்பர் திரு ரமணி அவர்கள் கூறியபடி மூன்று அல்லது நான்கு மாவட்டங்களுக்கு ஒருவர் வீதம் ஏற்பாடு செய்தால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கலாம்.

    5.   நேரம் பகிர்வு

எந்த விழாவாக இருந்தாலும் முக்கியமான நிகழ்ச்சிகளை மதிய உணவிற்கு முன்னால் வைத்தால்தான் சோபிக்கும். உணவு இடைவேளை 2 மணிக்கு வைத்தாலும் நல்லதுதான். அதற்குப் பிறகு நடக்கும் எந்த நிகழ்ச்சியையும் மக்கள் ஆழமாக கவனிக்க மாட்டார்கள். இந்த உண்மையை விழா அமைப்பாளர்கள் மனதில் கொள்ளவேண்டும். குறிப்பாக பதிவர் அறிமுகங்கள் உணவு இடைவேளைக்கு அப்புறம் இருந்தால் பதிவர்கள் அதிக நேரம் எடுத்துக்கொண்டால் கூட கவலைப்பட வேண்டியதில்லை.


நிகழ்ச்சி நிரல் தயாரிப்பாளர்கள் இந்தக் குறிப்புகளை ஏற்கெனவே அறிந்து, கடைப்பிடித்திருக்கலாம். அப்படியென்றால் சந்தோஷம். இல்லையென்றால் முடிந்தவரை கடைப்பிடிக்க முயலலாம்.

15 கருத்துகள்:

 1. உங்கள் கருத்துக்களாவது பரிசீலிக்கப் படட்டும்

  பதிலளிநீக்கு
 2. அன்புள்ள அய்யா,

  தங்களின் அனுபவத்தால் அரிய பல நல்ல ஆலோசனைகள் கூறியுள்ளீர்கள்.

  நன்றி.
  த.ம.4

  பதிலளிநீக்கு
 3. அருமையான ஆலோசனைகள்
  விரிவான மனம் திறந்த பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 4. ஆக்கபூர்வமான யோசனைகள். இதெல்லாம் விழாக்குருவினர் திட்டமிட்டு செயல்படுத்தி விழா சிறப்பாக நடத்துவார்கள் என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 5. முனைவர் அய்யா சொல்கிறாமதிரி பதிவர்களின் கைப்பைகளுக்கு ஒரு பாதுகாப்பு ஏற்பாடு அவசியம் செய்யவேண்டும். எப்படியும் கோவில் சர்ச் மசூதி ஆகியவை தொடர்புடைய இடங்கள் என்றால் செருப்பை வெளியில் தான் விட்டு விட்டு வரவேண்டும். சென்ற முறை இப்படி இருந்ததாக நியாபகம். இங்கும் செருப்பை வெளியில் தான் விடனும் என்று நினைக்கிறேன்.

  கோவிலுக்கு போகும் போது, பலர் செறுப்புகள், விலை உயர்ந்த ஸ்னிக்கர்கள் ஆகிவற்றை கையில் உள்ள பையின் உள்ளே வைத்துதான் எடுத்து செல்கிறார்கள். இல்லாவிட்டால் சாமி கும்பிடமுடியாது! செருப்பின் விலை தான் நம் கண்முன்னே நிற்கும்.

  அதே மாதிரி, இங்கேயும் நமது செருப்புகளை நமது பையின் உள்ளே வைத்து டோக்கன் போட்டு ஒரு ஆளிடம் கொடுப்போம். இதை விழா குழு கவனிக்கணும்- டோக்கன் போட இடம். இல்லாவிட்டால் அந்த பெரிய பையையும் கூடவே கையில் வைத்துக்கொண்டு எல்லா இடங்களுக்கும் நாம் அலையவேண்டும். முக்கியமாக காலைக்கடன்கள் கழிக்கும் போதும் கூடவே பெட்டியையும் எடுத்து செல்வது கொடுமையிலும் கொடுமை. எனவே, நமது பெரிய பைகளுக்கு டோக்கன் போட ஒரு இடமும் நம்பகமான ஆளும் தேவை! ஆமாங்க முக்கியமா நம்பகமான ஆள் தேவை. இல்லையென்றால் நம் மனது வலைப்பதிவக்ர்கள் விழாவில் இருக்காது. அந்த ஆள் மீது தான் இருக்கும்!

  பதிலளிநீக்கு
 6. ஐயா

  கூட்டமாக கூடி விழா கொண்டாடுவது 3 வகைப்படும்.

  1. கல்லூரி மற்றும் ஆய்வுக்கூடங்கள் நடத்தும் seminar மற்றும் workshop வகையறா.

  2. வீட்டு விசேசங்களான கல்யாணம் etc.

  3. கம்பெனி மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக்குழு போன்றவை.

  ஒன்றாவதில் நிகழ்ச்சி நிரல் கட்டாயம் உண்டு. நிகழ்ச்சிகள் சரியாக நடைபெற தனித்தனி குழுக்களும் காணப்படும்.

  இரண்டாவதில் நிகழ்சிகள் பொது. குழு இல்லை. பொறுப்பு யாராவது இருப்பார். முக்கியமான நிகழ்சிகள் மட்டும் சமயத்தில் நடைபெறும். ஒரே சமயத்தில் பல நிகழ்சிகளும் நடைபெறும். உ-ம் மாப்பிள்ளை அழைப்பு + காலை டிபன்.

  மூன்றாவதில் ஒரு தலைவர் (சேர்மன் காரியதரிசி) கூடியுள்ளவர்களுக்கு முக்கியமான முடிவுகள் விவரங்கள் தெரிவிப்பார். வந்தவர்கள் அதைக் கேட்டு விட்டு சாப்பிட்டுச் செல்லலாம்.

  நீங்கள் பதிவர் விழாவை முதல் பட்டியலில் சேர்க்கிறீர்கள்.
  ஆனால் அமைப்பாளர்கள் மூன்றும் கலந்த ஒன்றாக நடத்த தீர்மானித்து இருக்கிறார்கள்.

  இது கல்லூரி நண்பர்கள்

  மச்சி ஞாயிற்றுக் கிழமை நம்ம பார்ட்டி இருக்கு, அதான் சீனு வீட்டு மொட்டை மாடியில். நீ என்ன பண்றே கொஞ்சம் காசு நீயும் போடு. நம்ம குமார் என்னவோ புதுக்கவிதை புத்தகம் போட்டிருக்கானாம். அதையும் நாம வெளியிடறோம். பின்னே தண்ணி சாப்பாடு கட்டாயம் உண்டு. நம்ம ஜமாவையும் கூப்பிட்டு இருக்கோம். நீயும் கூப்பிடு. எல்லாரும் கொண்டாடுவோம்.

  என்பது போல் உள்ளது.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 7. About 150 bloggers only are participating. A marriage Hall has been arranged. So everybody can be seated and served on tables. As for the programme only a skeleton detail has been published. If need arises a time bound schedule can be published.

  There are only two important organizers viz D D and Muthu Nilavan. Please let them decide in peace about the course of the function. Leave small details like footwear deposit etc. for the time being. These will resolve automatically..

  Jayakumar

  பதிலளிநீக்கு
 8. வலைப்பதிவர் சந்திப்பு விழாவை முன்னின்று நடத்தும் விழாக்குழுவினர் கடந்த சந்திப்புகளில் கிடைத்த அனுபவங்களை மனதில் இருத்தி, எல்லா ஏற்பாடுகளையும் குறையின்றி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இருப்பினும் தங்களது ஆலோசனைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டியவகளே.

  பதிலளிநீக்கு
 9. வருமுன் காப்பதுதான் நல்லது என்றபடி நல்ல ஆலோசனைகள்.

  பதிலளிநீக்கு
 10. வணக்கம் அய்யா.வலைப்பதிவர் சந்திப்புத்திருவிழாவிற்கு விழாக்குழு சார்பாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.நன்றி.

  பதிலளிநீக்கு
 11. நல்ல யோசனைகள்.....

  விழா சிறப்புற நடைபெற அனைவரும் யோசித்துக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிற்து.

  பதிலளிநீக்கு
 12. நல்ல கன கச்சிதமான வரவேற்கப்பட வேண்டிய யோசனைகள் ஐயா

  பதிலளிநீக்கு