ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஆசை இருக்கு தாசில் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க

இந்தப் பழமொழியை அநேகமாக எல்லோரும் அறிந்திருக்கலாம்.

அறிந்திருக்கவில்லை என்றால் இப்போது அறிந்து கொள்ளவும்.

சிறுவயது முதலே எனக்கு ஊர் சுற்றிப் பார்ப்பது மிகவும் விருப்பமான சமாச்சாரம். ஆனா அப்போவெல்லாம் ஊர் சுற்றுவதற்கு வேண்டிய காசு இல்லை, இப்போ காசு இருக்கிறது ஆனால் சுதந்திரம் இல்லை.

அதற்கு முன் இந்தப் பாட்டை ஒரு முறை பாடிப் பார்த்துக்கொள்ளவும்.



நல்ல ஓட்டலுக்குப் போய் எல்லாவற்றையும் ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற ஆசை ஒரு காலத்தில் இருந்தது. அன்றைக்கு கல்லைத் தின்றாலும் செரிக்கக் கூடிய தெம்பு இருந்தது. குறிப்பா பல்லு நல்லா இருந்தது. என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அன்றைக்கு கையில காசு இல்லை.

இன்னைக்கு காசு இருக்குது, பல்லு இல்லே, பசி இல்லே. ரெண்டு தோசை முருகலாச் சாப்பிட்டா நடு ராத்தியில நெஞ்சு கரிக்குது. எழுந்திரிச்சி அரை ஸ்பூன் பெருங்காயத்தை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சாத்தான் சரியாகுது.

இந்த லட்சணத்தில ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை. இரண்டு நாளைக்கு முன்னால தெரிஞ்ச டிராவல்ஸ்காரன் போன் பண்ணி, துபாய் போறேன்னு சொன்னீங்களே, வாரீகளா என்று கேட்டான். எப்பவோ சொல்லி வச்சது. இப்ப போன் பண்ணறான். இதைக் காதில் கேட்ட என் சகதர்மிணி என்ன போன் என்றாள்.

நான் இந்த டிராவல்ஸ்காரன் துபாய் வர்றியான்னு கேக்கறான், ரெண்டு பேரும் போகலாமா என்றேன். நான் வரலை என்றாள். அப்ப நான் மட்டும் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நான் வராத இடத்திற்கு நீங்களும் போக க்கூடாது அப்படீன்னுட்டாள்.

இந்த மாதிரி அக்கிரமம் உலகத்தில் உண்டா?  இங்கிலீசுல ஒரு பழமொழி சொல்லுவாங்க.  Dog in the manger policy அப்படீன்னு. நாய் போயி மாட்டுக்காடில உக்காந்துட்டு தானும் வைக்கோல சாப்பிடாம மாட்டையிம் வைக்கோல சாப்பிட உடாம வம்பு பண்ணுமாம். அந்த மாதிரி ஆயிப்போச்சுங்க என் கதை.

24 கருத்துகள்:

  1. என் இளமைக்காலத்தில் வெளியான + எனக்கு மிகவும் பிடித்தமான ’வறுமை நிறம் சிகப்பு’ என்ற படத்தில் வரும் இந்தச் “சிப்பி இருக்குது ... முத்துமிருக்குது ... திறந்து பார்க்க நேரமில்லடி ... ராஜாத்தி’ என்ற பாட்டை இன்றுவரை ஒரு ஆயிரம் தடவைகளாவது நான் ரஸித்துக்கேட்டிருப்பேன். இன்று 1001 முறையாகக் கேட்டு மகிழ்ந்தேன்.

    என் மனது அப்படியே என் ராஜாத்தியின் நினைவலைகளில் சிக்கிக்கொண்டு விட்டது. அதிலிருந்து மீண்டு வந்த பிறகே மீண்டும் என் கருத்துக்களைச் சொல்ல இருக்கிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  2. //அப்போவெல்லாம் ஊர் சுற்றுவதற்கு வேண்டிய காசு இல்லை, இப்போ காசு இருக்கிறது ஆனால் சுதந்திரம் இல்லை.//

    ’கல்லைக்கண்டால் நாயைக்காணோம். நாயைக் கண்டால் கல்லைக்காணோம்’ என்பது போல உள்ளது.

    நாய்தான் வைக்கோல் போருக்குள் படுத்துள்ளது எனக் கடைசியில் சொல்லிவிட்டீர்களே ! :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  3. //அன்றைக்கு கல்லைத் தின்றாலும் செரிக்கக் கூடிய தெம்பு இருந்தது. குறிப்பா பல்லு நல்லா இருந்தது. என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அன்றைக்கு கையில காசு இல்லை.

    இன்னைக்கு காசு இருக்குது, பல்லு இல்லே, பசி இல்லே. ரெண்டு தோசை முருகலாச் சாப்பிட்டா நடு ராத்தியில நெஞ்சு கரிக்குது. எழுந்திரிச்சி அரை ஸ்பூன் பெருங்காயத்தை வாயில் போட்டு ஒரு டம்ளர் வெந்நீர் குடிச்சாத்தான் சரியாகுது.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    ’பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா?’ நகைச்சுவைக் கதைதான் என் நினைவுக்கு வந்தது. http://gopu1949.blogspot.in/2014/07/vgk-26.html அதில் நீங்க எழுதியுள்ள பின்னூட்டம்:

    //பழனி. கந்தசாமி July 20, 2015 at 5:49 PM
    இதையெல்லாம் நான் ஒரு வாரமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறேன்.//

    >>>>>

    பதிலளிநீக்கு
  4. //இந்த லட்சணத்தில ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை. இரண்டு நாளைக்கு முன்னால தெரிஞ்ச டிராவல்ஸ்காரன் போன் பண்ணி, துபாய் போறேன்னு சொன்னீங்களே, வாரீகளா என்று கேட்டான். எப்பவோ சொல்லி வச்சது. இப்ப போன் பண்ணறான். //

    http://gopu1949.blogspot.in/2014/12/13.html இதோ இந்த என் பதிவினைப் பார்த்துவிட்டுத்தான், முழுவதும் துபாய் தங்கத்திலேயே செய்யப்பட்ட கார் ஒன்றை வாங்கவேண்டி, துபாய் செல்ல வேண்டும் என்ற வெறி உங்களுக்கு ஏற்பட்டு, அந்த டிராவல்ஸ்காரனிடம் சொல்லி வச்சீங்க. அதில் தாங்கள் கொடுத்துள்ள கமெண்ட்ஸ் இதோ:

    //பழனி. கந்தசாமி December 30, 2014 at 3:17 AM
    எத்தனைகோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்சம் பணம் சேர்ந்தவுடன் துபாய் சென்று அந்தத் தங்கக் காரை வாங்கி விட்டுத்தான் மறு வேலை.//

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. //நான் வராத இடத்திற்கு நீங்களும் போகக்கூடாது அப்படீன்னுட்டாள்.//

    சபாஷ் ! ஒரே போடு போட்டு உங்களை இப்படி அடக்கிட்டாங்களே !!

    ’மன அலைகள்’ அத்தனையும் அருமையான பகிர்ந்துகொண்டுள்ளீர்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி. விடுங்கோ சார்.

    துபாய்க்கு போக முடியாமல் சதியும் விதியும் சதி செய்து விட்டபோதிலும், இன்று இரவு என் பதிவுப்பக்கம் வர மறந்துடாதீங்க. அங்கு உங்களுக்கு மிகப்பெரிய விருந்தே என்னால் படைக்கப்பட உள்ளது. அன்புடன் VGK

    ooooo

    பதிலளிநீக்கு
  6. அடடா.... பரவாயில்லை விடுங்கள்....

    பல சமயங்களில் நாம் நினைத்ததை செய்ய முடிவதில்லை.

    பாடல் - மிகவும் ரசித்து கேட்ட/கேட்கும் பாடல். மீண்டுமொரு முறை இங்கே கேட்க முடிந்தது. நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பெரும்பாலானவர்களின் நிலை இதுதான்
    வாய்ப்பிருக்கும்போது வசதி இருக்காது
    வசதி வந்தபோது உடல் அனும்திக்காது
    நன்றி ஐயா
    தம +1

    பதிலளிநீக்கு
  8. //அப்ப நான் மட்டும் போய்ட்டு வரட்டுமான்னு கேட்டேன். நான் வராத இடத்திற்கு நீங்களும் போக க்கூடாது அப்படீன்னுட்டாள். //

    ஐயா! தங்கள் துணைவியாரிடம் தங்கள் விருப்பத்தை ஏற்கும்படி செய்ய, துபாயில் உள்ள 95 க்கும் மேற்பட்ட தங்க நகைகள் விற்கும் கடைத்தொகுதிகள் (Malls) பற்றி எடுத்து சொல்லிப் பாருங்களேன். நகைகளை வாங்காவிட்டாலும் அவைகளை பார்க்கும் ஆசை எல்லா பெண்களுக்கும் உண்டே

    பதிலளிநீக்கு
  9. துபாயில் உங்க பங்காளிங்க யாராவது இருக்காங்களா. அல்லது கில்லர்ஜி (கொல்லர்ஜி) இருக்கார்னு வீட்டுக்காரம்மா பயப்படுறாங்க போல இருக்கு.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. இந்த தலைப்பில் உள்ள பழமொழியை அறிந்திருக்கவில்லை. நாய் பெற்ற தெங்கம்பழம் - Dog in the manager policy... இதுபோல் உங்கள் பதிவுகளில் வேறு பாடங்களையும் சிறிதுசிறிதாக சொல்லிக் கொடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  11. / ஊர் சுத்திப் பாக்கணும்னு ஆசை/
    துபாயின் தட்ப வெட்ப நிலை அவ்வளவு உகந்தது அல்ல. மாறாக சிங்கப்பூர் செல்லுங்கள். நன்றாக சுற்றிப் பார்க்கலாம்.தங்கள் துணைவியாரும் மறுக்க மாட்டார்கள்.
    உங்கள் பதிவும் வாசகர்களின் பின்னூட்டங்களும் சுவையாக உள்ளன - பாபு

    பதிலளிநீக்கு
  12. சக்தி இருக்கும்போதே, வாய்ப்பு கிடைக்கும்போதே அனுபவித்து விடவேண்டும் என்று தெரிகிறது!

    பதிலளிநீக்கு
  13. வரவர இந்த மனைவிகளின் அட்டகாசம் தாங்கவில்லை. இதைத்தான் நான் வயோதிகம் என்பது நாம் செய்யாத குற்றத்துக்கு அனுபவிக்கும் தண்டனை என்று எழுதி இருந்தேனே

    பதிலளிநீக்கு
  14. வாழ்க்கை வண்டி ஓடும்போது பல மேடு பள்ளங்கள்!
    திரு. மணிசங்கர் சொன்ன குட்டி துபாய்க்கு வாருங்களேன்!
    (குட்டி துபாய் = மயிலாடுதுறை தொகுதி)

    பதிலளிநீக்கு
  15. முனைவர் ஐயாவுக்கு வெல்கம் டூ துபாய்
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  16. ஒடம்பு ஒத்துழைக்காம(சாப்பாட்டு விஷயத்துல) இருக்கலாம். ஆனா இந்த மனசு.. கொஞ்சம்கூட மாறாம அப்படியே இருக்கு பாத்தீங்களா அதே ஆசையோட! அதுக்கு நேத்திக்கு ஒரு வார்த்தை, இன்னிக்கு ஒரு வார்த்தைன்னு கெடயாது !

    பதிலளிநீக்கு
  17. அடடா....கொஞ்சம் பாவமாக இருக்கிறது..ஆனால் இப்ப்டை ஒரு பதிவைத்தருகிறதே..என்ன செய்ய...

    பதிலளிநீக்கு