ஞாயிறு, 20 டிசம்பர், 2015

பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்.

                               Image result for பதற்றம்

மனிதனின் வாழ்க்கையில் பிரச்சினைகள் இல்லாத நேரம் ஏது? நமது அன்றாட நிகழ்வுகளில் சில, நாம் எதிர்பார்ப்பதற்கு நேர் மாறாகவும் நடக்கக்கூடும். அத்தகைய தருணங்களில் நம்மையும் அறியாமல் பதற்றம் தொற்றிக் கொள்ளும். சிலர் வீட்டில் இதனால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படுவதுண்டு. திடீரென வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது கூட பதற்றத்திற்கு காரணமாக இருக்கும் !

குடும்பத்தலைவிக்கு காலையில் கண் விழித்தது முதல் பதற்றமும் பின் தொடரும். குழந்தைகளைப் பள்ளிக்குச் செல்ல தயார் படுத்துவதிலிருந்து கணவர் அலுவலகம் புறப்படும் வரை எல்லாவற்றிற்கும் ஈடு கொடுத்துப் பணியாற்ற வேண்டும். பள்ளிக்கும் அலிவலகத்திற்கும் உரிய நேரத்திற்குச் செல்ல பஸ், கார் போன்ற வாகனங்கள் முறையாக வந்து செல்ல வேண்டுமே என்கிற கவலை பதற்றமாக உருமாறும் ! சாலைகளில் எந்தவிதமான தடங்கல் விபத்து இன்றி பயணிக்க வேண்டுமென்ற ஆர்வம் கூட பதற்றத்திற்கு இடம் கொடுக்கும். இதே போல்தான் ரெயில் மற்றும் விமானப் பயணங்களின் போதும் பதற்றம் தொற்றிக்கொள்ளும்.

படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு பயம்; தேர்வு முடிவுகளில் பதற்றம் தோன்றுவதை கண்கூடாகப் பார்க்கலாம். படித்து முடித்தபின் வேலைக்கான நேர்முகத்தேர்வுக்கு செல்லும்போது ஏற்படும் பதற்றம் சொல்லி மாளாது. உடல் நலமின்றி சிரம்பஃபடுபவர்கள் மருத்துவரைப் பார்க்கும் வரை பதற்றத்துடனேயே வரிசையிர் உட்கார்ந்து இருப்பார்கள். திருமணமான புதிதில் கணவன் வீட்டிற்கு முதன் முதலாகச் செல்லும் மணப்பெண்ணின் பதற்றம் கொஞ்ச நஞ்சம் அல்ல!

ஒரு சிலர் 'எனக்கு கவலைப்பட ஏதுமில்லை' என்று வீராப்பு பேசுவர். இது போன்றவர்களுக்கு ஏற்படும் மிகச்சிறிய சறுக்கலும் அவர்களது நிலைப்பாட்டை புரட்டிப் போட்டுவிடும்.

நம் உடல், மனம், பணம், குடும்பம், வேலை தொடர்புடைய பல கவலைகள் எல்லோருக்குமே இருந்தாலும், அதை மிகைப்படுத்தி, பதற்றப்படுவதே பெரும்பாலோரின் வழக்கமாக உள்ளது.தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் பதற்றம் ஏற்படுவது சகஜமாக உள்ளது. இதனால் அவர்களது எண்ணங்களில், செயல்களில் ஒருவித தடுமாற்றம் தோன்றுகிறது. முடிவில் கவலை, கோபம், பயம் போன்ற தேவையற்ற உணர்ச்சிகளால் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

 பதற்றம் தோன்றுவதற்கான அறிகுறிகள்

o     மனதளவில் அதிகப்படியான அழுத்தம்.

o     எந்த ஒரு பிரச்சினையையும் சற்று முகைப் படுத்திப் பார்க்கும் போக்கு.

o     எதிலும் பரபரப்பு, எளிதில் கோபமடைதல்.

o      பிறரிடம் எரிந்து விழும் குணம்.

o      வியர்த்துக்கொட்டுதல்.

o      வயிற்றில் பரபரப்பு, வாந்தி வரும் உணர்வு, அடிக்கடி மலம் சிறுநீர்        கழிக்கும் உணர்வு.

o      உடல் சோர்வு அடைதல்.

o     கைகால் நடுக்கம்.

o     தூக்க உணர்வு மேலோங்குதல்.

o    சிறிய செயல்களுக்காக மனம் நோந்து போதல்.

o    எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்ய முடியமல் திணறுதல்.


பதற்றம் ஏன் ஏன் தோன்றுகிறது என்பதற்கு சரியான காரணங்கள் அறியப்படவில்லை. சிலருக்கு இது பரம்பரை காரணமாகவும் ஏற்படலாம் என்று தெரிகிறது. நமது எண்ணங்கள், உணர்ச்சிகள் ஆகியவற்றிற்காகச் செயல்படும் மூளைப்பகுதியில் உள்ள நரம்பு செல்களின் செயல்பாட்டில் உள்ள குறைகள் காரணமாக இருக்க க்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மிகப்பெரிய மனத்துயர், நெருங்கியவரின் உறவுகளில் இழப்பு, உடல் பாதிப்பு போன்றவையும் காரணமாக இருக்கலாம். மது, காப்பி, டீ போன்றவற்றை அளவுக்கு மீறிப் பயன்படுத்துவதாலும் பதற்றம் உண்டாகக் கூடும். சிலருக்கு இளம் வயதிலும், பொதுவாக 35 வயதிலும் பதற்றம் காணப்படுகிறது. ஆண்களை விட பெண்களே அதிகம் பாதிப்படைகிறார்கள்.

பதற்றத்தை கட்டுப்படுத்த வழியுண்டா?

o    ஆரம்ப நிலையிலுள்ள பதற்றத்தை அறிவுசார் நடத்தை மாற்றுச் சிகிச்சை (Cognitive Behaviour Therapy) மூலம் சரி செய்யலாம்.

o    பதற்றத்தை நீக்கக்கூடிய சில மருந்துகள், மனச்சோர்வை நீக்கும் மருந்துகள் உள்ளன. இவற்றை உரிய மருத்துவர் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

o    வேலையுனூடே சற்று இளைப்பாறுதல், மூச்சுப்பயிற்சியில் ஈடுபடுதல், Bio-Feed Back எனப்படும் நம் உறுப்புகளின் இயக்கத்தைக் கண்காணித்துக் கட்டுப்படுத்தல் முறைகள் ஆகியன நல்ல பயன் தரும்.

o    தினமும் உடற்பயிற்சி, சமச்சீர் உணவு போன்றவை பதற்றத்தைக் குறைக்க உதவும்.

இவர்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு முகவும் தேவையானது.

தகவல்: பொன்மொழி பிரபு, மனமகிழ் ஆலோசனை மன்றம், கோவை. தங்க மங்கை இதழ், ஜூன், 2015

தகவல் உதவி: முனைவர்  சி.ஆர்.எல். நரசிம்மன், ஓய்வு பெற்ற மண்ணியல் துறைப் பேராசிரியர், தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகம், கோவை.(கைபேசி- 8754005750)      

14 கருத்துகள்:

 1. பதறிய காரியம் சிதறும் என்பது
  மிகச் சரியான அனுபவ மொழிதான்
  என்ன செய்வது இன்றை போட்டி உலகில்
  அனைத்து நிகழ்வுகளும் பதட்டத்தை கூட்டும்படிதான்
  இருக்கிறது.நாமும் அதன் போக்கில் போய்
  அவதிப்படத்தான் செய்கிறது
  பயனுள்ள பகிர்வு.பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பயனுள்ள பதிவு.அனைவரும் முயற்சித்துப் பார்க்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. பதற்றம் தணிப்போம்
  பயனுள்ள பதிவு ஐயா
  நன்றி
  தம +1

  பதிலளிநீக்கு
 4. ஐயா

  தாங்கள் anxiety என்ற ஆங்கில வார்த்தைக்கு நேராக பதற்றம் என்ற சொல்லைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறேன். சரிதானே?

  முதலாவது தலைப்பு சரியில்லை. பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்கவேண்டும் என்கிறீர்கள். பதற்றத்தைக் கட்டுப்படுத்தவேண்டும் என்று தலைப்பு வைத்திருக்க வேண்டும்.

  பதற்றம் தன் செயலாலோ, மற்றவர் செயலாலோ, அல்லது சுட்டி காட்ட முடியாத வேறு காரணிகளாலோ ஏற்படலாம். அது தவிர்க்க முடியாதது. ஆனால் அதைக் கட்டுப் படுத்தலாம்.அதுவே தங்கள் பதிவின் நோக்கம். கட்டுப் படுத்துவது மூலம் வேண்டாத நிகழ்வுகளைத் தவிர்க்கலாம்.

  பதற்றம் கோபம் மகிழ்ச்சி துக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்காதவன் ஒன்று பைத்தியக்காரனாக இருக்க வேண்டும் அல்லது துறவி ஆக இருக்க வேண்டும். சாதாரண மனிதன் இவற்றை ஒரு அளவுக்கு மேல் மீறாமல் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கலாம்.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 5. மன்னிக்கவும். என்னுடைய மேற்கூறிய பின்னூட்டம் கூறியதையே தாங்களும் கூறுகிறீர்கள் என்பதை இரண்டு முறை படித்தபின் தெளிவானேன். தாங்களும் பதற்றத்தைக் கட்டுப்படுத்த வழிமுறையைத் தான் கூறியுள்ளீர்கள் தவிர்க்க அல்ல.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 6. இன்றைய வாழ்கையின் உண்மை நிலை இதுவே! நன்றி நண்பரே! தெளிவாக உரைத்தீர்!

  பதிலளிநீக்கு
 7. ஏற்கனவே நான் எழுதின கருத்துரை காணோமே

  பதிலளிநீக்கு
 8. இவற்றையெல்லாம் படித்ததும் நான் பதறிப்போனேன் .... ஏனெனில் எனக்கும் இதுபோன்ற பதட்டங்கள் அடிக்கடி ஏற்படுவது உண்டு என்பதால் ..... முடிவாக இப்போதெல்லாம் சும்மா இருப்பதே சுகம் என்பதைத் தெரிந்துகொண்டுள்ளேன்.

  பகிர்வுக்கு நன்றிகள், சார்.

  பதிலளிநீக்கு
 9. நாளை எனக்கு ஆடிட்! ஸோ வெறுப்பாக இருக்கிறது!!!!!!!

  பதிலளிநீக்கு
 10. பதறாத காரியம் சிதறாது என்று சுருக்கமாகக் கூறலாம் அல்லது நீட்டி முழக்கியுக் கூறலாம்

  பதிலளிநீக்கு
 11. இனி வரும் அவசர உலகில் இது தவிர்க்க முடியாதது ஐயா.
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு