ஞாயிறு, 13 மார்ச், 2016

இன்னும் ஒரு புதுப்பெண்டாட்டி

நான் அடிக்கடி புதுப்பெண்டாட்டி கட்டுவது உங்களுக்குத் தெரியும். அந்த வழக்கப்படி முந்தாநாள் ஒரு புதுப்பெண்டாட்டி கட்டினேன். இதோ என் புதுப்பெண்டாட்டியின் போட்டோ.

                                             Image result for samsung galaxy a7 gold

அவளுடைய முன்னழகையும் பின்னழகையும் பாருங்கள்.

என் பழைய பெண்டாட்டி (மொபைல் போன் என்று புரிந்து கொள்ளவும்) நன்றாகத்தான் இருந்தாள். இருந்தாலும் அவளைக் கட்டி இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் அவள் மீது லேசாக சலிப்பு வர ஆரம்பித்தது. செய்தித்தாள்களில் இவளைப் பற்றி முழுப்பக்க விளம்பரங்களை வர ஆரம்பித்தன. அவைகளைப் பார்த்து இவள் மேல் ஒரு மோகம் வந்து விட்டது.

இப்போது நான் கொஞ்சம் தைரியசாலியாகி விட்டேன். எப்போதுமே தைரியசாலிதான் என்பது உங்களுக்குச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இருந்தாலும் இப்போது தைரியம் அப்படியே பொங்கிப் பிரவகிக்கிறது.

ஆன்லைனில் புகுந்து விளையாடுகிறேன். அமேசான் தளத்திற்குப் போய் இதன் விலை என்னவென்று பார்த்தேன். வெறும் 23000 ரூபாய்தான். சே, பிச்சைக்காசு. உடனே ஒன்று அனுப்புடா என்றேன். அவ்வளவுதான், என் பேங்க் கணக்கில் இருந்து 23000 ரூபாய் அடுத்த நொடியில் காணோம். மொபைல் போனில் செய்தி மேல் செய்தி.

உங்கள் ஆர்டருக்கு நன்றி.

இதோ உங்கள் போனைப் பேக் செய்து விட்டோம்.

இதோ உங்கள் போன் கூரியர் ஆபீசுக்குப் போய்விட்டது.

இதோ உங்கள் போன் கோயமுத்தூர் வந்து விட்டது.

இதோ உங்கள் போன் இன்னும் சில மணிகளில் உங்களுக்கு வந்து சேரும்.


இப்படியாக வரிசையாக குறுஞ்செய்திகள். ஆனாலும் அமேசான்காரன் கொடுக்கிற காசுக்கு நல்லா ஜால்ரா போடறான்.

கடைசியாகப் போன் பார்சல் வந்தே விட்டது. திறந்து பார்த்தேன். போன் முழுசாக இருந்தது. இதில் பழைய போனில் இருக்கும் சிம் கார்டைப் போட முடியாதாம். அதற்கென்று இப்போது புதிதாக வந்திருக்கும் "நானோ சிம்" கார்டைத்தான் போடவேண்டுமாம், அதை டெலிபோன் ஆபீசில் போய் வாங்கிப் போட்டு டெஸ்ட் பண்ணினேன்.

சிம் போடும் முறையே புதிதாக இருந்தது.


                      

போனின் பக்கத்தில் ஒரு சிறு துளை இருக்கிறது. இதைப் பார்க்க ஒரு பூதக் கண்ணாடி வேண்டும். அந்த துளைக்குள் அவன் கொடுத்துள்ள ஒரு ஊசியை சொருகி அழுத்தினால் ஒரு ட்ரே வெளி வரும். படத்தைப் பார்க்கவும். அதில் சிம் கார்டை வைத்து ஜாக்கிரதையாக போனுக்குள் அழுத்தவேண்டும். இரண்டு சிம் கார்டுகளுக்கும் அப்படியேதான்.

எப்படியோ போனை ரெடி பண்ணி ஆத்துக்காரியுடன் பேசி விட்டேன். அவளுக்கு நான் இந்தப் புதுப் பெண்டாட்டியைக் கட்டினது சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஆனாலும் வேறு வழியில்லாததால் சகித்துக்கொண்டிருக்கிறாள்.

இப்போது இந்த போனில் இருக்கும் நுணுக்கங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். முதல் அனுபவம், லண்டனில் இருக்கும் என் மச்சினன் பையனுடன் விடியோ கால் முறையில் பேசினேன். இன்னும் என்னென்னமோ இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகப் பார்க்கவேண்டும்.

13 கருத்துகள்:

  1. இன்னும்பல பயன்பாடு இருக்கு ஐயா முயன்று பாருங்கள் மொத்தவித்தையும் இறக்கினால் பொண்டாட்டி பல அனுபவம் தருவாள்))))

    பதிலளிநீக்கு
  2. புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  3. இவளைப்போன்ற டிட்டோவான ஒருத்தியைத்தான் (SAMSUNG SMART PHONE) நான் துபாயிலிருந்து தள்ளிக்கொண்டு வந்துள்ளேன்.

    புதுவாழ்க்கை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆச்சு.

    இவளிடம் ஏதேதோ கவர்ச்சிகள் அதிகம் உள்ளது என்பதில் சந்தேகம் இல்லைதான்.

    இருப்பினும் பழைய ஆளுடன் எனக்கிருந்த ஒரு அட்டாச்மெண்ட் ஏனோ இவளிடம் இல்லை.

    அவள் (பழையவள்) என் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்து ஈடுகொடுத்து வந்தாள்.

    இந்தப்புதியவள் இழுக்கும் இழுப்புக்கெல்லாம் நான் அனுசரித்துப் போக வேண்டியுள்ளது.

    உங்களுக்கு எப்படியோ போகப்போகத்தெரியும். எனினும் வாழ்த்துகள். எஞ்ஜாய் ! :)

    பதிலளிநீக்கு
  4. உங்கள் பதிவுகளை நான் ரெம்ப நாட்களாக படித்து கொண்டு வருகிறேன் இதுவரை கமெண்ட் எழுத தோணியதில்லை ஏனென்றால் நீங்கள் வயதில் பெரியவர் இந்த பதிவை படித்ததும் ஒரு சிறு மனவருத்தம் பெண்களை இழிவாக பேசியதுபோல் தோன்றுகிறது.
    தவறாக இருந்தால் மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதை ஒரு நகைச்சுவையாகத்தான் பதிவு செய்தேன். இந்த மாதிரிப் பதிவுகளை வார்த்தைக்கு வார்த்தை பார்க்கக் கூடாது. வேறு யாராவது ஒருவர் உங்கள் கருத்தையே சொன்னால் இந்தப் பதிவை எடுத்து விடுகிறேன்.

      நீக்கு
  5. ஆஹா இனி மொபைலைப் பற்றிய விடயங்களை தொடர்ந்து காண ஆவலுடன் நானும்.....
    தமிழ் மணம் 6

    பதிலளிநீக்கு
  6. புதிய கைப்பேசி வாங்கியமைக்கு வாழ்த்துக்கள்! வழக்கம் போல் உங்கள் பதிவை இரசித்தேன்!

    பதிலளிநீக்கு