புதன், 9 மார்ச், 2016

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் !

                                                  Image result for பதிவர்கள்

ஒரு காலத்தில் (இப்பத்தானுங்க 2015 ல, அதாவது பத்து மாசத்துக்கு முன்னால) நான் இருந்த இருப்பன்ன? இன்றிருக்கும் இருப்பென்ன? நினைச்சுப் பாக்கவே ரொம்பவும் வேதனையாக இருக்கிறது.

 நான் ஒரு பதிவு போட்டா ஆயிரம் பேருக்குக் குறையாமப் பாப்பாங்களே.

31-5-15 அன்று நான் எழுதிய "அந்தக் காலத்து சினிமாத் தியேட்டர்கள்." என்ற பதிவிற்கு வந்த பார்வையாளர்கள் 1523 பேர்கள். மூன்று நாட்களுக்கு முன்னால் நான் எழுதியிருக்கும் "தேவலோக நகர்வலம்" என்ற பதிவிற்கு வந்திருக்கும் பார்வையாளர்கள் வெறும் 260 பேர்கள். இத்தனைக்கும் அந்தப் பதிவு நல்ல நகைச்சுவையான பதிவு.

பதிவர்கள் எல்லாம் எங்கே காணாமல் போனார்கள்?

ஆனால் இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் என் தமிழ்மணம் ரேங்க் 10 ல் இருக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் 260 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்திருக்கும் ஒரு தளம் பத்தாவது ரேங்கில் இருக்கிறது என்றால், நூறு, இருநூறு ரேங்கில் இருக்கும் தளங்களுக்கு எத்தனை பார்வையாளர்கள் வந்திருப்பார்கள்?

நான் நினைப்பது என்னவென்றால் இன்னும் ஓரிரு வருடங்களில் பதிவு எழுதுபவர்கள் என்னைப்போன்ற சில கிழடுகள் மட்டுமே இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

15 கருத்துகள்:

  1. கடைசி வரியில் மட்டும் ஒரு திருத்தம்
    தங்களைப் போல் ஆர்வமுள்ளவர்களும்
    விஷயமுள்ளவர்களும்
    இளமைத் துடிப்பானவர்கள்
    மட்டுமே இருப்பார்கள்

    பதிலளிநீக்கு
  2. பார்வையாளர்களையோ, தமிழ்மணம் ரேங்கையோ பற்றியெல்லாம் கவலைப்படாமல் எழுதிக்கொண்டே இருங்கோ சார்.

    தங்களுக்கு நகைச்சுவை உணர்வும், எழுத்துத்திறமையும், கற்பனை வளமும், எழுதும் ஆர்வமும் நிறையவே உள்ளன.

    எனக்குத் தெரிந்து, வயதாக வயதாக இவை தங்கள் ஒருவருக்கு மட்டுமே ஒளிர்கின்றன. இது இறைவன் கொடுத்த வரம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் எழுதுங்கள் அய்யா...உங்களோடு நாங்கள் இருக்கிறோம் ....

    பதிலளிநீக்கு

  4. ஐயா! இப்போது எல்லோரும் Facebook மற்றும் Google+ க்கு சென்றுவிட்டார்கள். அதனால் தான் வருகையாளர்கள் குறைந்து விட்டனர். அதனாலென்ன. ‘என் கடன் பதிவிடுதே’ என தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் இருக்கிறோம் படித்து கருத்திட.

    பதிலளிநீக்கு
  5. இதையெல்லாம் கணக்குப் பார்க்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  6. கணக்கை வைத்து ஒரு பதிவு ஸூப்பர் ஐயா தொடர்ந்து எழுதுங்கள் ரசிப்பவர்கள் மீண்டும் வருவார்கள் அந்த நம்பிக்கை போதும்.
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் கிழடு என்று யாரும் சொல்லவில்லை. அது தான் பழனி சிட்டுக்குருவி லேகியம் சாப்பிட்டு விட்டீர்களே. தேவலோக சோமபாணம் + காமதேனு பால் எல்லாம் சாப்பிட்டு சும்மா ஜம் என்று இருக்கிறீர்கள்.

    ஜெயகுமார்

    பதிலளிநீக்கு
  8. தமிழ்மணம் படுத்துகிறது. வேறு பதிவர் திரட்டி ஒன்றை தரப்போவதாக DD சொல்லிக் கொண்டே இருக்கிறார். எப்போது அது தயாராகுமோ!

    பதிலளிநீக்கு
  9. எத்தனை பேர் படிக்கிறார்கள், தமிழ் மணம் ரேங்க் என்ன என்பது பற்றிய கவலையெல்லாம் எதற்கு? உங்களுக்குப் பிடிக்கும் வரை எழுதிக் கொண்டு இருங்கள். உங்கள் பதிவுகளை ரசிக்கும் சிலர் எப்படியும் தொடர்ந்து வருவார்கள்......

    பதிலளிநீக்கு
  10. நீங்க தொடர்ந்து எழுதுங்க பலர் படிக்க காத்து இருக்கின்றார்கள் திரட்டியை தேடாதீர்கள்)))

    பதிலளிநீக்கு