செவ்வாய், 29 மார்ச், 2016

கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கம்

Image result for பார்க்


பதிவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு


வருகிற ஸ்ரீதுன்முகி வருடம் சித்திரை மாதம் ஒன்றாம் தேதி (அதாவது 14-4-2016, வியாழக்கிழமை) கோவையில் ஒரு மகத்தான தமிழ் மறுமலர்ச்சித் திருவிழா நடக்கவிருக்கிறது. அதாவது தாய்த்தமிழை வளர்ப்பதற்காக ஒரு சங்கம் துவக்குகிறோம். இந்தச்சங்கத்திற்கு "கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கம்" என்று பெயர் வைத்திருக்கிறோம்.

கிறுக்கர்கள் என்றால் கிறுக்குபவர்கள் அதாவது பேப்பரில் அல்லது சுவர்களில் அல்லது இணையத்தில் கிறுக்குபவர்கள் என்று அர்த்தம். அதாவது எழுத்தாளர்கள் அல்லது இந்த பதிவர்கள் மாதிரி என்று வைத்துக்கொள்ளலாம். வேறு அர்த்தம் கொள்பவர்கள் தமிழ் விரோதிகள்.

இந்தச் சங்கத்தில் சேர எந்த வித சந்தாவும் தேவையில்லை. ஒரே தகுதி, அவர்கள் தாங்கள் கிறுக்கர்கள் என்று ஒப்புக்கொள்ளவேண்டும். அவ்வளவே.

இந்த சங்கத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் 13-4-2016 தேதிக்குள் அவர்களுடைய விண்ணப்பத்தை கீழ்க்கண்ட பதிவருக்கு அனுப்பி வைக்கவேண்டும்.

கிறுக்கர் பழனி.கந்தசாமி, மன அலைகள் பதிவு, மேற்பார்வை "கூகுள் பிளாக்கர்".

தாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

துவக்க விழா 14-4-2016 அன்று சாய்பாபா காலனி இராமலிங்கம் காலனி நகராட்சி பூங்காவில் நடைபெறும். அனைத்து உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டு இந்த சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்.

27 கருத்துகள்:

  1. "கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கம்" தோன்றி வெற்றிபெற வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் உறுப்பினரை வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறோம்.

      நீக்கு
  2. ஐயா! இந்த சங்கம் கோவையில் உள்ளவர்களுக்கு மட்டும் தானா இல்லை மற்ற ஊரில் உள்ள ‘கிறுக்கர்களும்’ உறுப்பினராக சேரலாமா?

    கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச் சங்கத்தின் துவக்கவிழா நன்முறையில் நடைபெற வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசித்துப் பார்த்ததில் கிறுக்கர்களுக்குள் இந்த மாதிரி வட்டார வித்தியாசங்கள் தேவையில்லை என்று தோன்றியதால் அனைத்துப் பிரதேச மக்களும் வரவேற்கப்படுகிறார்கள்.

      நீக்கு
  3. ஐயா

    எனக்கு ஒரு சந்தேகம்.

    கிருக்கலா கிறுக்கலா எது சரி. சின்ன ர போட்டால் சுவர் கிருக்கல். பெரிய ற போட்டால் மறை கழண்ட கிறுக்கல் என்று இது வரை ஊகித்திருந்தேன்.

    பெர்ய ற போட்ட கிறுக்கர்கள் சங்கத்தில் உப்புக்கு சப்பாணியாக என்னையும் போட்டுக்கொள்ளுங்கள்.ஏன் எனில் நான் கிருக்குவது இல்லை.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்புக்குச் சப்பாணியாகப் போட முடியாது. ஒப்புக்குச் சப்பாணியாக வேண்டுமானால் போட்டுஃகொள்ளலாம். சம்மதம்தானே.

      "கிருக்கு" என்ற வார்த்தை செந்தமிழில் இல்லை. கொச்சைத்தமிழில் இருக்கலாம். இந்த மாதிரி பிரச்சினைகளை எல்லாம் தீர்க்கத்தான் கிறுக்கர்கள் தமிழ்ச்சங்கம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.

      நீக்கு
    2. நன்றி. ர ற மயக்கம் தெளிந்தது. 40 வருட கேரள வாழ்க்கையால் வந்த வினை. இங்கு நாஞ்சில் நாட்டில் இது சகஜம். உதாரணம் றோஸ்.

      --
      Jayakumar

      நீக்கு
    3. "கோவை (கிறுக்கர்கள்) தமிழ்ச்சங்கம்" நகைச்சுவையோடு வெற்றி நடை போட வாழ்த்துக்கள்? ’கிறுக்கன்’ என்பதே சரி.

      நீக்கு
    4. கிறுக்கர்களை மரியாதைக்குறைவாக கிறுக்கன் என்று சொல்வதை ஆட்சேபிக்கிறேன்.

      நீக்கு
    5. நான் கிறுக்கனுக்கு ‘று’ ‘ரு’ என்பதைச் சொன்னேன். ’று’ தான் சரி என்று சொல்லி இருக்க வேண்டும்.

      நீக்கு
  4. துவக்கவிழா நேரம் ( காலை/மாலை ) சொல்லப்படவில்லையே அய்யா! தேர்தல் நேரம்;முன் அனுமதி பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலையில் வைத்தால்தான் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் சோபிக்கும். ஆகவே மாலை 5 மணிக்கு என்று வைத்துக்கொள்வோம். எப்படியும் 7 மணிக்காவது ஆரம்பித்து விடலாம் இல்லையா?

      நீக்கு
  5. வர வர எது சீரியஸ் பதிவு எது கிறுக்கல் என்பதே புரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயசான பிறகு இந்த மாதிரி சந்தேகங்கள் வருவது இயல்புதான்.

      நீக்கு
  6. ஐயா வெளிநாடு வாழ் கிறுக்கர்களும் இணையலாமா ?
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  7. விழாவை இரத்து செய்து விடுங்கள் அய்யா ,எந்தக் கிறுக்கன் தன்னை கிறுக்கன் என்று ஒத்துக் கொள்வான் :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கிறுக்கன் என்பதை ஒத்துக்கொண்டு இந்தச் சங்கத்தை தனி ஆளாகவே நடத்துவேன்.

      நீக்கு
  8. பதில்கள்
    1. சங்கத்தில சேர்ந்து முதல் கூட்டத்திற்கு வந்தீங்கன்னா எல்லா கிறுகிறுப்பும் போய்விடும். கிறுக்கு மட்டுமே மிஞ்சும்.

      நீக்கு
  9. தேதி குறிப்பிட்டீர்கள். அது தமிழ் புத்தாண்டு தினமல்லவா? சங்கம் வளர வாழ்த்துக்கள். எழுதுபவர்கள் மட்டும்தானா அல்லது தொடர்ந்து வாசிப்பவர்களுமா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழ் புத்தாண்டு தினம் என்று தெரிந்துதான் விழா ஏற்பாடு செய்திருக்கிறோம்.

      தன்னை "கிறுக்கன்" என்று ஒப்புக்கொள்பவர்கள் யாராக இருந்தாலும் ஜாதி, மத, தேச வேறுபாடு இன்றி சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். தமிழ் பேசத் தெரிந்தால் போதும்.

      நீக்கு
  10. உங்களை விட பெரிய கிறுக்கனாவதற்கு முயற்சி பண்றேன் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்

      நீக்கு