செவ்வாய், 10 ஜனவரி, 2017

ஜல்லிக் கட்டும் நானும்

           
                              Image result for ஜல்லிக்கட்டு படம்
எங்க ஊர்ல ஜல்லிக்கட்டு கிடையாது. ஆதலால் நான் இதுவரை ஜல்லிக்கட்டை நேரில் பார்த்தது இல்லை. டிவியில் பார்த்ததுதான்.

இதுவரை நான் பார்த்த ஜல்லிக்கட்டு டிவிக்களில் என்னைக் கவர்ந்தது மாட்டின் கொம்பு குத்தி மனிதனின் குடல் வெளிவருவதைத்தான். ஆனாலும் அடுத்தவன் சாவதைப் பார்ப்பதில் மனிதனுக்குள்ள ஆர்வத்தை மெச்சத்தான் வேண்டும்.

மனித மனத்திற்குள் எப்படிப்பட்ட குரூர அல்லது வக்கிர எண்ணங்கள் குடி கொண்டிருக்கின்றன என்பதை ஜல்லிக்கட்டுதான் பூரணமாக வெளிக்கொணர்கிறது. இதுதான் தமிழனின் வீர விளையாட்டு என்று எல்லோரும் பீற்றிக் கொள்கிறார்கள். இது ஒரு நல்ல ஜோக்குதான்.

ஆனாலும் ஜல்லிக்கட்டு நடப்பதை நான் வரவேற்கிறேன். ஊரில் சும்மா திரியும் வெட்டிப் பயல்களுக்கு ஒரு நல்ல வேலை அன்றுதான் கிடைக்கிறது. நடக்கட்டும்.

9 கருத்துகள்:

  1. ஜல்லிக்கட்டு நான் நிறையமுறை பார்த்திருக்கிறேன். அதில் ஈடுபடுபவர்களுக்கும், அதற்காக மாடு வளர்ப்பவர்களுக்கும் உள்ள ஆர்வம் மிக மிக அதிகம். அதனால் வரும் சண்டைகளும் அதிகம்.

    'தமிழனின் வீரவிளையாட்டு', 'ஏறு தழுவுதல்' --- இதெல்லாம் அரசியல்.

    பதிலளிநீக்கு
  2. தமிழர்கள் உணர்ச்சிமயமானவர்கள். ஒண்ணு, வம்பு வளர்த்து அக்கப்போரோ, அலப்பறையோ பண்ணிக்கிட்டு இருக்கணும், இல்லேன்னா, கண்டதுக்கெல்லாம் கண்ணீர் சிந்தி, சென்டிமெண்ட் மயமாக ஷோ காட்டணும். இல்லேன்னா, வீரத்தைப் போய், கையாலாகத விலங்குகளிடம் காட்டணும். ஆட்டையும், கோழியையும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், நல்ல நாள், கெட்ட நாட்களில், மாங்கு மாங்குன்னு மாங்கிற பயபுள்ளைக, ஒரு சிங்கத்தையையோ, சிறுத்தையையோ, புலியையோ திங்க முன்வருவார்களா? இதுமாதிரிதான் ஜல்லிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமிழர்களை பற்றி நுணுக்கமாக சரியாக ஆராய்ந்து வைத்திருக்கிறீர்கள்.
      போராட்டத்தில் பலர் பேசுவதை கேட்டால் சின்னதிரை நாடக சென்டிமெண்ட் வசனங்கள்.

      நீக்கு
  3. டாஸ்மாக் குடிக்காதவங்க விளையாடட்டும். but கரும்பு வியாபாரம் ஆகலைன்னு உழைத்துக் களைத்தவர்கள் காத்திக்கிட்டுதா இருக்காங்க. Nobody cares (including me).

    பதிலளிநீக்கு
  4. சிவகுமாரனின் கவிதைகள் பதிவில் அவர் எழுதி இருப்பதைப் படித்தீர்களா

    பதிலளிநீக்கு

  5. இது ஒரு repeat பின்னூட்டம் தான் ... தங்கள் கருத்து மிகவும் ரசிக்கத்தக்கதே..!


    தாக்குப் பின் தாரம் படத்தில் MGR -ஒரு காளையை தனி ஆளாக தான் அடக்குவதாக காட்டப்பட்டது ..அதே போல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திலும் ஜெமினி கணேசன் ஒரு காளையை தனி ஆளாக தான் அடக்குவதாக காட்டப்பட்டது ...ஒரு மனிதக்கும்பல் ஒரு காளையை மிரள மிரள விரட்டுவது எப்படி தனி மனிதன் 'வீரத்தின் ' அடையாளமாகும் ..எனக்கு " தொல்காப்பியம்/புறநானூறு
    திராவிடர்களின் கலாச்சாரம் " என்பதெல்லாம் ஒன்றும் தெரியாது ..என் கேள்வி வெறும் commonsense ("பகுத்தறிவு " ) சம்பந்தப்பட்டது மட்டுமே !

    மாலி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாட்டின் கொம்பில் அல்லது கழுத்துப்பகுதியில் பரிசைக் கட்டிவிடுவார்கள் (அல்லது வெற்றி பெற்றவர்களுக்குத் தனியேயும் பரிசு தரப்படலாம்). அதை அடக்குவது, வெற்றி பெறுவது ஒருவர்தான் இருக்கமுடியும். ஆனால் முயற்சிப்பவர்கள் 5-10 பேர் இருக்கலாம். கடைசியில் திமிலைப் பிடித்து, கொம்பையும் வசப்படுத்தி மாட்டை அடக்குபவர் ஒருவர்தான். காளை மிரள மிரள ஓடுவது என்பது உங்கள் point of view. அது வாடிவாசலிலிருந்து காளை வசப்படுத்துபவர்களிடமிருந்து தப்பித்து அது வெளியேறிச் செல்லவேண்டும் (அல்லது பவுண்டிலேயே யாரும் அடக்க முடியாமல் நிற்கவேண்டும்.. இதை நான் பார்த்ததில்லை). (வெகு வெகு சிலர், இதில் மாடுகளுக்கு சாராயத்தைப் புகட்டுவார்கள். இதை exceptionஆகத் தவறு செய்கிறவர்கள் என்ற அளவில் விட்டுவிடலாம்) இது நிறைய சமயத்தில், சேவல் சண்டையைப் போல், pride சம்பந்தப்பட்டது... (என் காளையை ஒருத்தன் அடக்கிட்டானா...) சண்டைகளுக்குக் காரணமாக இருப்பது. நான் பார்த்த அளவில் ஒரு சமூகம்தான் இதில் ஈடுபடுவதைக் கண்டிருக்கிறேன்.

      நீக்கு
  6. சல்லிக்கட்டு அரசியல்...
    தென் தமிழகத்தான் என்ற முறையில் நான் சல்லிக்கட்டு விரும்பி...
    வேண்டும் சல்லிக்கட்டு...


    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  7. மாட்டோடு சண்டை போடுவதற்காக நடத்திய போராட்டமே ஒரு நல்ல ஜோக்கு தான்.

    பதிலளிநீக்கு