திரு வைகோ அவர்கள் இன்று ஒரு பதிவை என்னுடைய பார்வைக்கு கொண்டு வந்தார்கள்.
அதனுடைய சுட்டி இதோ: http://sivamgss.blogspot.in/2016/12/blog-post_24.html
அந்தப் பதிவு திருமதி கீதா சாம்பசிவம் அவர்களுடையது. அதில் திரு வைகோ அவர்கள் போட்டுள்ள பின்னூட்டங்களை அனைவரும் கட்டாயம் படிக்கவேண்டும்.
நான் இதுநாள் வரை எந்த ஜோசியரிடமும் போனது கிடையாது. இதை நான் பெருமைக்காக சொல்லவில்லை. இதற்குக் காரணம் என் சித்தப்பா ஒருவரே. அவர் ஜோசியம் பார்த்தே வாழ்க்கையைத் தொலைத்தவர். அவருடைய வாழ்க்கையைப் பார்த்துத்தான் இந்த ஜோசியத்தினால் பலன் ஒன்றும் இல்லை என்ற தெளிவு எனக்குள் ஏற்பட்டது.
ஜோசியம் பார்ப்பவர்களை நான் ஒன்றும் விமரிசிக்க மாட்டேன். அது அவர்கள் விருப்பம். அதனால் அவர்கள் பயனடைந்திருந்தால் எனக்கு சந்தோஷமே. ஆனாலும் எனக்கு ஜோசியம் தேவையில்லை என்ற கருத்தில் நான் தெளிவாக இருக்கிறேன். கற்றவர்களின் மனதை என்னால் மாற்ற முடியாது என்று நான் நன்கறிவேன். ஆனாலும் என் கருத்துகளை நான் இங்கே எந்தப் பிரதி பலனும் எதிர்பார்க்காமல் பதிவு செய்கிறேன்.
இதற்குப்பின்னால் கொடுக்கப்பட்டவை ஒரு மீள் பதிவே.
http://swamysmusings.blogspot.com/2012/09/blog-post_7946.html
ஜோதிடம் வாழ்விற்கு அவசியமா?
கடவுள் தத்துவம் எப்படி ஒரு மனிதனின் நம்பிக்கையைப் பொருத்தவிஷயமோ, அதே மாதிரி ஜோசியமும் ஒவ்வொருவருடையநம்பிக்கையைப் பொருத்த விஷயம்.
ஜோசியம் உண்மையா, பொய்யா என்பதைவிட ஜோசியம் மனிதவாழ்வில் எவ்வளவு இடம் பிடித்திருக்கிறது, ஏன் மக்களுக்கு ஜோசியம் அவசியப்படுகின்றது என்பதுதான் சிந்திக்கத் தகுந்த பொருள்.
சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் அனைத்தும் பலவிதமானகதிர்வீச்சுகளை வெளிப்படுத்துகின்றன. இவை மனிதனை பல வகையில்பாதிக்கின்றன. கண்ணுக்குத் தெரியும் பாதிப்புகள், கண்ணுக்குத் தெரியாதபாதிப்புகள் இரண்டும் இதனுள் அடக்கம். இந்த பாதிப்புகள்ஒவ்வொருவருக்கும், அவரவர்கள் ஜாதகப்பிரகாரம் வேறுபடுகின்றனஎன்பதுதான் ஜோதிடத்தின் அடிப்படை சித்தாந்தம்.
இந்த வேறுபாடுகளை, ஜோதிட சாஸ்திரம் வகைப்படுத்திவைத்திருக்கிறது என்று ஜோசியர்கள் ஆணித்தரமாகக் கூறி மக்களைநம்ப வைத்திருக்கிறார்கள். இந்தக் கருத்தை தீவீரமாக ஆதரிக்கும்சாதாரண மக்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போய்ஜோசியத்தை நம்பாதீர்கள் என்று சொன்னால், சொன்னவர்களை அடிக்கவருவார்கள்.
என்னுடைய வாழ்க்கையில் நடந்தவைகளை இந்த ஜோசியர் அப்படியேபுட்டுப்புட்டு வைத்தார் என்று சொல்பவர்கள் அநேகம். ஆனால்எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம்பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள். நம் வாழ்வில்நடந்தவைகள்தான் நமக்கே தெரியுமே, அதை அந்த ஜோசியன் வாயால்கேட்பதில் என்ன பயன்? ஆனால் அவர்கள் எதிர்பார்ப்பதுவும், நம்புவதும்என்னவென்றால் – நம் கடந்த காலத்தை இவ்வளவு துல்லியமாகசொல்பவன், எதிர்காலத்தைப் பற்றி சொல்வதில் பாதிக்குப் பாதியாவதுபலிக்காதா என்ற நம்பிக்கைதான்.
சரி, அவன் நம் எதிர்காலத்தைப் பற்றி சொல்வது உண்மை என்றேவைத்துக்கொள்வோம். அதனால் என்ன பயன் என்று யோசித்துப்பார்க்கவேண்டும். ஜோசியத்தை நம்புகிறவர்கள் சொல்லும் ஒருஉதாரணம்- இருட்டில் போகிறவனுக்கு ஒரு விளக்கு இருந்தால்கொஞ்சம் வழி நன்றாகத் தெரியுமல்லவா? வழியில் உள்ள குண்டுகுழிகளில் விழாமல் தப்பிக்கலாம் அல்லவா? அப்படி எல்லாத்தடங்கல்களையும் ஜோசியம் மூலம் தாண்டி விடலாம் என்று வைத்துக்கொண்டால் ஏன் ஜோசியத்தை நம்புகிறவர்களுக்கு கஷ்டம் வருகிறது?
இதற்கு அவர்கள் சொல்லும் பதில் - ஜோசியன் சொன்ன பரிகாரத்தைநான் சரியாகச் செய்யவில்லை என்பதாகும். ஜோசியம் பார்க்கும்எல்லோருடைய கஷ்டங்களையும் பரிகாரங்கள் மூலம் விலக்கிவிடமுடியும் என்றால் இப்போதுள்ள ஜோசியர்கள் போதுமா? தவிரஅனைத்து மக்களும் கஷ்டங்கள் இல்லாமல் வாழலாமே?
இந்த மாதிரி கேள்விகளும் விளக்கங்களும் இருந்து கொண்டேதான்இருக்கும். மனது உறுதியாக இருப்பவர்கள் நடப்பது நடந்தே தீரும்என்று ஒரே கொள்கையில் நிற்பார்கள். அவர்களுக்கு ஜோசியம்தேவையில்லை. மன உறுதி இல்லாதவர்கள் எப்பொழுதும் ஏதாவதுஊன்றுகோலைத் தேடிக்கொண்டே இருப்பார்கள்.
Some get old; some get matured; where do we stand? At times ignorance is a bliss.
"வகுப்பறை" பக்கம் சென்றிருக்கிறீர்களோ? ஜோசியத்தில், ஜாதக பலன்களில் நிறைய வகுப்பெடுக்கிறார் அந்த வலைப்பூ ஆசிரியர். நீங்கள் இதுவரை அந்தப் பக்கம் சென்று பார்த்ததில்லை என்றால், அதன் சுட்டி கீழே!
http://classroom2007.blogspot.in/
விளக்கம்: சிரங்கு பிடித்தவன் கையும் இரும்பு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது என்பது பழைய பழமொழி. அத்துடன் மௌஸ் பிடித்தவன் கையும் என்று சேர்த்துக்கொள்ளவேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன் சும்மா இருக்கமுடியாமல் டெம்ப்ளேட்டை நோண்டினேன். பிறகு பார்த்தால் எல்லா ஓட்டுப்பட்டைகளும் காணாமல் போய்விட்டன. எல்லாவற்றையும் ஒரு மாதிரி கண்டுபிடித்து தேத்தினேன். ஆனா இந்த தமிழ்மணம் ஓட்டுப்பட்டை மட்டும் எனக்கு தண்ணி காட்டிக்கொண்டு இருக்கிறது.
சப்மிட் பண்ணினால் ஏற்றுக்கொள்கிறது. இந்தப் பதிவு தமிழ்மணம் திரட்டியில் தெரிகிறது. ஆனால் ஓட்டுப்பட்டை சரியாக இயங்கமாட்டேன் என்கிறது. என்ன செய்வது என்று தெரியவில்லை. சனியன் ஒழிகிறது என்று விட்டுவிட்டேன். முன்பொரு முறை இவ்வாறு நடந்து ஒரு பத்து நாள் கழித்து சரியாகியது. இப்ப என்ன பண்ணுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
ஒவ்வொரு தலைப்பாகப் பிடித்து உங்கள் எண்ணக்களை பதிவு செய்கிறீர்கள். ரசிக்கிறேன்.
What you have written about astrology is correct. In the last para of your writings, you have mentioned that 'One who has mental determination' will not apt Astrology. Can you explain in detail or brief what type of mental determination, One should have? Do you think it is possible for a family man, who is having all sorts of desires over and above his capacities, to have such decisions. Mental determination is a state of mind of those who are very clear in what they are doing and they just restrict themselves to what's happening as you said. Such people are very few and it cannot be a general one. So, for a common man only Temples, Navagrahas, astrology, etc. are the only remedy. One can believe these things and cannot understand because they are occult faculties. At times the prayers via Astrology are answered. Truth is stranger than Fiction. It's all in the game.
அது போல ஒவ்வொரு மனிதனுக்கும் ஏதாவது ஊன்றுகோல் அவ்வப்போது தேவைப்படும். அது ஆண்டவனாக இருக்கலாம், மத குருவாக இருக்கலாம், குடும்ப வைத்தியராக இருக்கலாம், ஜோதிடராக இருக்கலாம், அல்லது வீட்டுப் பெரியவராக இருக்கலாம். இத்தகைய ஆறுதல் தேடாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.
எந்த ஊன்றுகோலும் தேவையில்லை என்று இருப்பவர்கள் அரிது. ஆனால் எதிலும் அளவோடு இருக்கவேண்டியது அவசியம். தமிழ் நாட்டில் பல திருமணங்கள் ஜோதிடர்களின் பலவித கணிப்புகளினால் தடைப்பட்டுக் கிடக்கின்றன. பல இளைஞர்கள் மத குருமார்களிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். இவர்களெல்லாம் விழிப்படைய வேண்டும் என்பதுதான் என் ஆசை.
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி, டாக்டர்.
என(ம)து நிலை இது தான். உண்மையும் கூட. பலர் விழிப்புணர்வு பெறட்டும்.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
\\ஆனால் எதிர்காலத்தில் நடப்பவைகளைப் பற்றி அவர் சொன்னதெல்லாம் பலித்ததா என்று கேட்டால் மழுப்புவார்கள்.\\ எங்கள் பாட்டனார் காலத்திலிருந்து எண்கள் காலம் வரை பல கணிப்புகள் துல்லியமாகவே நடந்துவந்திருக்கின்றன. நான் 2 MB மட்டுமே உள்ள ஒரு சோதிட சாப்ட்வேரை நிறு பார்த்தேன், அப்படியே நடக்க ஆரம்பித்ததைப் பார்த்து பயந்து போய் பார்ப்பதை விட்டு விட்டேன். சாகும் நாள் தெரிந்து விட்டால் வாழும் நாள் நரகம் என்பதால்!!
சார், நீங்க இன்றைய பதிவுக்கு சொன்ன சஜஸ்ஷன் படி கடைசியில் சில விளக்கங்களைச் சேர்ந்துள்ளேன், படித்துப் பாருங்கள். நன்றி.
ஜோசியம்/ கைரேகை அப்படின்னுகிட்டு... எனக்கு ஒண்டுமே விளங்கலை - இந்த ஜோசியம் அப்படின்னா என்ன?
நீங்கள கோவை எனபதால், "எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது"...இப்படித்தான் காலியாக இருக்கும் என்று சொல்கிறீர்களா?
///எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்வது///
அது ஒரு வேலீல போற வம்புல மாட்டீட்ட விவகாரமுங்க. இந்த தலைப்பில ஒரு பதிவு இருந்துச்சு. அதில கமென்ட் போடாட்டி நரகத்துக்கு போவீங்கன்னு இருந்துச்சு. சரீன்னு கமென்ட்ட போட்டுட்டு அவங்க கிளிக் பண்ணச்சொன்னபடி பண்ணினா,நம்ம பிளாக்குல ஒரு பதிவு ஏறிடுச்சு. ஒடனே அதை அளிச்சுப்புட்டனுங்க. அப்படியும் கூகுள்காரன் காட்டிக் கொடுத்துப்புட்டானா?
இதுதான் வம்பை விலை கொடுத்து வாங்கற சமாச்சாரமுங்க. மன்னிச்சுக்கோங்க.
எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எவ்வாறு Blogger ல் தமிழில் Type செய்தால்..இப்படித்தான் காலியாக இருக்கும்! இதனால், எந்தவொரு மென்பொருளையும் பயன்படுத்தாது எந்த கிரகத்தையும் டைப் பண்ணமுடியாது. அப்படிதான் நினைக்கட்டுமே மக்கள்...
coimbatorebalu www.ramanswamiji.com.
coimbatorebalu www.ramanswamiji.com.