புதன், 10 மே, 2017

3.நதிமூலம்-3


        Image result for usa flag

அமெரிக்கா ஒரு சொர்க்கபுரிதான். ஆனால் என்னதான் சொர்க்கமாய் இருந்தாலும் பேசுவதற்கு ஆள் இல்லாவிட்டால் அது நரகம்தானே. என் நண்பருக்கு இந்த விஷயம் நன்றாகத்தெரியும். ஆகவே அமெரிக்கா போவதற்கு முன்பே என்னிடம் ஒரு எழுதா ஒப்பந்தம் போட்டு விட்டுத்தான் போனார். அது என்னவென்றால் தினமும் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சலில் இங்குள்ள நாட்டு நடப்புகளை (அதாவது ஊர் வம்புகள்)  அனுப்ப வேண்டும். நானும் இதற்கு ஒப்புக்கொண்டேன். ஆனால் இந்த மின்னஞ்சல் அனுப்புவதற்கு நான் பட்ட கஷ்டங்களை பிறகு எழுதுகிறேன்.

என்னுடைய கணிணியில் இன்டர்நெட் தொடர்பு இல்லை. என் மகளுடைய இன்டர்நெட் தொடர்பில் கொஞ்ச நாள் மின்னஞ்சல் அனுப்பி வந்தேன். பிறகு அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் வந்தபடியால் நானே ஒரு இன்டர்நெட் இணைப்பு வாங்கிக்கொள்ளலாம் என்று முடிவு செய்து நமது அரசு வழங்கும் இணைப்பை வாங்கினேன். நீண்ட நாள் பழக்கத்தினால் எது மலிவாக கிடைக்குமோ அதைத்தான் வாங்கிப்பழக்கம். அப்படி வாங்கியதுதான் 280 ரூபாயில் ஒரு வருடத்திற்கு 50 மணி நேர பேக்கேஜ். இன்டர்நெட் பேக்கேஜில் இரண்டு விதமான செலவுகள் உண்டு. ஒன்று உபயோகிக்கும் நேரத்திற்கான செலவு.  அதாவது இந்த 50 மணி நேரத்திற்கு 280 ரூபாய் என்றால் ஒர் மணி இன்டர்நெட் உபயோகித்தால் ரூபாய் 5.60 அம்பேல். இரண்டாவது நாம் இன்டர்நெட் உபயோகிக்கும் நேரத்திற்கு உண்டான தொலைபேசி கட்டணம். இது பகலில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.9.60 ஆகும். அதாவது 7 -1/2 நிமிடத்திற்கு ஒரு யூனிட் சார்ஜ்.

என்னைப்போன்ற தாராள மனசுக்காரங்களுக்காக அரசு பெரிய மனசு பண்ணி இதில் இரண்டு வசதிகள் செய்து கொடுத்திருக்கிறது. உபயோகித்தவர்களுக்கு தெரியும். ஒன்று இரவு 11 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் இன்டர்நெட் உபயோகித்தால் இன்டர்நெட் சேவைக்கான கட்டணம் இல்லை. மேலும் இரவு 10.30 மணியிலிருந்து காலை 7.30 மணி வரை இன்டர்நெட் உபயோகித்தால் தொலைபேசி கட்டணம் பாதிதான் ஆகும் அதாவது ஒரு மணிக்கு ரூ.4.80 தான். 15 நிமிடங்களுக்கு ஒரு யூனிட் சார்ஜ். நான் என்ன செய்திருப்பேன் என்று யூகிப்பது ஒன்றும் அப்படி கடினமான விஷயம் அல்ல.

வழக்கமாகவே எனக்கு காலையில் 3 மணிக்கு விழிப்பு வந்துவிடும். ஆகவே இந்த சலுகைக்கட்டணத்தை உபயோகிப்பதில் எனக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை.

பிறகு....

7 கருத்துகள்:

 1. இப்போதுள்ள டிசைனில், பழைய இடுகைகளை (அதாவது முந்தையது) பார்ப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. இதுலவேற நதிமூலம்-3 ன்னு போட்டிருக்கீங்க. எங்க 1,2லாம் படிக்கலையா அல்லது எல்லாமே மீள்பதிவான்னு சந்தேகம்வேற வருது.

  'எது மலிவோ அது' - இந்தக் குணம்தான் சிறந்த குணம் என்பது என் கருத்து. நான் அதைத்தான் ஃபாலோ பண்ணுகிறேன். பலர் இதை, 'கஞ்சத்தனம்' என்று சொல்வார்கள். அதைப்பற்றி என்ன கவலை. அப்படி இருப்பதனால்தான், பொதுவாக நீர் வற்றும்போது, நம் கிணற்றில்மட்டும் நீர் கொஞ்சமாவது இருக்கும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்கள் சிரமத்தை மிகுந்த சிரமப்பட்டு நீக்க முயற்சித்திருக்கிறேன். பதிவுலகிற்கு திரும்ப வருவதில்லை என்ற மசான வைராக்கியம் காரணமாக பதிவு கொஞ்சம் ஒட்டடை அடிக்காமல் இருந்து விட்டேன். இப்பத்தான் ஒட்டடைக் கம்பு வாங்கி வந்திருக்கிறேன். இனி குப்பையெல்லாம் கிளீனாகி விடும்.

   நீக்கு
  2. ஏன் அப்படி நினைக்கிறீங்க. இதுதானே எல்லோரும் ஒருவரோடு ஒருவர் எலெக்டிரானிக்ஸ் பேச்சு பேசும் இடம்.

   நீக்கு
 2. 'எது மலிவோ அது' - நல்ல கொள்கை. பதிவு ஷார்ட் + ஸ்வீட் அருமை. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 3. எது மலிவோ அது! பெரும்பாலானவர்களின் கொள்கை இதுவாகத்தான் இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 4. இப்போதெல்லாம் எது காஸ்ட்லியோ அதற்குத்தான் மதிப்பு.

  பதிலளிநீக்கு
 5. ​அது ஒரு கனாக்காலம். இணைய இணைப்பு இருந்தவர்கள் எனக்கு எல்லாம் தெரியும் என்று நடந்த காலம். கூகிள் ஜிமெயில் போன்றவை இல்லாத காலம், யாஹூவும் அல்டவிஸ்தாவும் கோலோச்சிய காலம். hotmail account உள்ளவனைப் பார்த்து பொறாமைப்பட்ட காலம்.

  அப்படிப்பட்ட காலத்திலேயே இணையத்தில் நீங்கள் இருந்திருப்பது குறித்து வியக்கிறேன். அனுபவங்கள் பதிவின் மூலம் வெளி வரட்டும். வாழ்த்துகள் மீண்டும் பதிவுலகில் புத்துணர்ச்சியோடு நுழைந்தமைக்கு.

  Jayakumar

  பதிலளிநீக்கு