புதன், 17 மே, 2017

5. நதிமூலம்-5

Image result for அவதாரங்கள்

உலகம் உய்வதற்காக பல அவதார  புருஷர்கள் நம் நாட்டில் அவதரித்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தற்காலத்திற்கு பொருத்தமானவர்கள் அல்ல. தற்கால சமூகத்தை புணருத்தாரணம் செய்ய அவதரித்துள்ள அவதார புருஷர்கள் இன்றைய இன்டர்நெட் வலைத்தளங்களில்தான் இருக்கிறார்கள்.
அவர்கள் செய்யும் சேவையை நீங்களே அனுபவித்தால்தான் அதனுடைய பூரண இனபத்தைப்பெற முடியும். இருந்தாலும் என்னால் முடிந்த வரையில் விவரிக்கிறேன்.

மனிதனுக்கு எப்போதும் அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம். இந்த வலைத் தளங்கள் இந்த ஆசையை பூரணமாக நிறைவேற்றுகின்றன.

உதாரணத்திற்கு ஒரு தளத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்று சொல்கிறேன்.

‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’

நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம். 

ஆஹா தேச சேவை செய்ய இப்படியும் ஒரு வழி இருக்கிறதா, இத்தனை நாள் நமக்கு தெரியாமல் போய்விட்டதே, நம் ஓய்வு நாளை பயனுள்ளதாய் கழித்து போகுமிடத்திற்கு புண்ணியம் தேடிக்கொள்வோம் என்று முடிவு செய்து இந்த வலைத்தளத்தை ஆரம்பித்துள்ளேன்.

எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை. எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமா பாதகத்திலிருந்து மீண்டு விட்டேன்      (அதாவது சீட்டு விளையாடுவதிலிருந்து) என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன். இது சந்தோஷத்தை கொடுக்குமா அல்லது கஷ்டத்தை கொடுக்குமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

இதுதான் இந்த வலைத்தளத்தின் நதிமூலம்..............தொடரும்..

Image result for அவதாரங்கள்

8 கருத்துகள்:

  1. நதிமூலம்-5 ...... அருமையோ அருமை.

    //‘’நான் இன்று காலையில் எழுந்தேன். பல் விளக்கினேன். காபி குடித்தேன். நாயைக்குளிப்பாட்டினேன். நானும் குளித்தேன். டிபன் சாப்பிட்டேன். என் சமையல் அறையில் கரப்பான் பூச்சி வந்தது. கம்ப்யூட்டரில் இதை எழுதினேன். ........ இப்படியே இரவு தூங்கப்போவது வரை விலாவாரியாக விவரித்து விட்டு, பிறகு தூங்குவார்கள் (என்று நினைக்கிறேன்)’’

    நல்ல வேளை அதற்குப்பிறகு நடப்பவற்றை தற்சமயம் விவரிப்பதில்லை. அதைப்பற்றியும் விவரிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அல்லது அப்படி எழுதியவை என் கண்ணில் படாது போயிருக்கலாம். //

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    பிற பதிவர்கள் பற்றிய உங்களின் கருத்துக்களை நன்கு துல்லியமாக துணிச்சலுடன் எடை போட்டு, சும்மா புட்டுப்புட்டு வைத்துள்ளது பாராட்டத்தக்க நடவடிக்கையாகத்தான் உள்ளது.

    இதற்கான தங்களின் துணிவுக்குப் பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. //எப்படியோ, பொழுது போவதற்கு ஒரு வழி பிறந்தது. மேலும் என் மாமனார் வீட்டார் நான் பஞ்சமா பாதகத்திலிருந்து மீண்டு விட்டேன் (அதாவது சீட்டு விளையாடுவதிலிருந்து) என்ற சந்தோஷமும் அடையவும் இந்த வேலை காரணமாய் அமைந்தது. ஆகவே எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கலாம் என்று இந்த வலைத்தளத்தை ஆரம்பித்திருக்கிறேன்.//

    கேட்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது.

    //எவ்வளவு நாள் நடக்கும், எத்தனை பேர் இதைப்பார்ப்பார்கள் என்றெல்லாம் எனக்கு யோசனை இல்லை.//

    அப்படியும் இப்படியுமாக ஆயிரம் பதிவுகளுக்கு மேல் கொடுத்து மிகப் பெரிய சாதனை செய்துள்ளீர்கள். இந்தத் தங்களின் பதிவு எண்: 1040 ஆகும்.

    மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    தங்களின் இந்த மகத்தான சேவை நம் நாட்டுக்கும், நம் வலையுலகுக்கும் அவசியமான தேவை என்பதை மட்டும் மறக்க வேண்டாம்.

    தொடரட்டும் தங்களின் தங்கமான இந்த சேவை.

    பதிலளிநீக்கு
  3. தேசபக்தி செய்யும் வழியைக் கண்டுகொண்டது மகிழ்ச்சி.

    அதைவிட, பதிவு என்று ஒன்று எழுதினால், படம் போடவேண்டும் (சம்பந்தம் இருக்கோ இல்லையோ) என்பதை அறிந்து படத்தைச் சேர்த்ததற்கும் பாராட்டுக்கள். (ம்.. எத்தனையோ படங்கள் இருக்கின்றன... சரி சரி... உங்கள் விருப்பம்)

    "அடுத்தவர்களின் அந்தரங்கங்களை அறிந்து கொள்வதில் அலாதி ஆனந்தம்" - உண்மைதான் சார். இது மனித பலவீனம் என்று நினைக்கிறேன். அதனால்தான், கிசு கிசு பாணியில் எழுதினால் எல்லோரும் படிக்கின்றார்கள் (பத்திரிகைகளும் இதனை எழுதுகின்றன).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் படங்களும் ஒன்றே என்ற தத்துவத்தில் படங்கள் சேர்க்கப்படுகின்றன.

      நீக்கு
  4. துணிச்சலாக ஒத்துக்கொள்ளும் உங்களின் பாணி ரசிக்கத்தக்கது. எழுதுங்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  5. நதிமூலம் கட்டுரையில், எல்லா நதிகளும் சென்று சேரும் இடம் ஒன்றே என்பதை உருவகமாக காட்டும் படத்தை வெளியிட்டது மிகப் பொருத்தமானதே.

    இராய செல்லப்பா நியூஜெர்சி (மிகமிக விரைவில் சென்னை)

    பதிலளிநீக்கு

  6. ​ஐயா
    பஞ்ச மா பாதகங்கள் ​என்று அடிக்கடி சொல்கிறீர்கள். அவை யாவை? கூகிளில் தேடியபோது ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொல்கிறார்கள். நீங்கள் நினைப்பது எவை?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. jk22384 உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"5. நதிமூலம்-5":

    ​ஐயா
    பஞ்ச மா பாதகங்கள் ​என்று அடிக்கடி சொல்கிறீர்கள். அவை யாவை? கூகிளில் தேடியபோது ஒவ்வொருவர் ஒவ்வொன்று சொல்கிறார்கள். நீங்கள் நினைப்பது எவை?

    கொலை, களவு, பொய் பேசுதல், நம்பினவருக்குத் துரோகம் செய்தல், பிறன் மனை விழைதல் இவ்வைந்துமே பஞ்சமகா பாதகங்களாகும். வேறு விதமாகச்சொல்பவர்கள் தவறாகச்சொல்கிறார்கள் என்று அறியவும்.

    பதிலளிநீக்கு