ஞாயிறு, 14 மே, 2017

4.நதிமூலம்-4                                        Image result for flowers images
காலை 3 மணிக்கு எழுந்திருந்து கணிணி முன்பு உட்கார்ந்து மின்னஞ்சல் உருவாக்கி இன்டர்நெட்டுக்குள் போனால் ஒரு நிமிடத்திற்குள் இந்த மின்னஞ்சல் போய்விடும். பிறகு மீதி உள்ள 14 நிமிடத்தை என்ன செய்வது? ஏதாவது செய்யலாம் என்று வலைத்தளங்களுக்குள் பிரவேசித்தேன். சிறிது காலம் ஒன்றும் திசை தெரியாமல் குழம்பி பிறகு ஒருவாறாக இன்டர்நெட்டின் நுணுக்கங்களை புரிந்து கொண்டேன். குறிப்பாக கூகுள் தேடுதளம் மிகவும் உபயோகமாக இருந்தது. பலவிதமான பொருள்களைப்பற்றி தேடியதில் பல விஷயங்கள் தெரிந்துகொண்டேன்.

இளைஞர்கள் (60+) எவ்வாறு உடல்நலத்தை பேணுவது என்பதில் இருந்து விமானம் எப்படி பறக்கிறது என்பதுவரை பார்த்தபிறகு வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் ஒரு துண்டு பிரசுரம் எங்கள் குழு கூட்டத்தில் விநியோகித்தார். அதில் அவர் ஆரம்பித்து நடத்திவரும் ஒரு வலைத்தளம் (வலைத்தளமா அல்லது வலைப்பூவா, எனக்கு சரியாகத்தெரியவில்லை) பற்றி குறிப்பிட்டிருந்தார். அதைத்தேடி கண்டுபிடித்து பார்த்தேன். மிகவும் அழகான மலர்களின்(?!) படங்கள் (நம் தமிழ் கலாசாரப்படி பெண்களும் மலர்கள்தானே) மற்றும் பல செய்திகள் சுவையாக வெளியிட்டிருந்தார்.

சில காலம் இதைப்பார்த்த பிறகு சலிப்பு ஏற்பட்டு இது மாதிரி வேறு தளங்கள் இருக்கிறதா என்று தேடினேன். தேடும்போதுதான் தெரிந்தது – உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் எல்லாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள், அவர்களுக்கு குடும்பம் உண்டா, அப்படி இருந்தால் அதை யார் கவனிக்கிறார்கள், இந்த கணிணி நோண்டுவேலை செய்வதற்கு யார் செலவு செய்கிறார்கள் இப்படிப்பட்ட அபத்தமான கேள்விகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த தளங்களில் என்னதான் இருக்கிறது என்று பார்த்தேன். பார்த்ததில்.....

வளரும்....

15 கருத்துகள்:

 1. //தேடும்போதுதான் தெரிந்தது – உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் இந்த வேலைதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று. இவர்கள் எல்லாம் சாப்பாட்டிற்கு என்ன செய்வார்கள், அவர்களுக்கு குடும்பம் உண்டா, அப்படி இருந்தால் அதை யார் கவனிக்கிறார்கள், இந்த கணிணி நோண்டுவேலை செய்வதற்கு யார் செலவு செய்கிறார்கள்?//

  அருமையான தேடல். மறுக்கவே முடியாத கண்டுபிடிப்புகளும் அதற்கான கேள்விகளும். சபாஷ்.

  இதில் 2-3 வகையறாக்கள் உள்ளனர் என்பது என் கணிப்பு.

  1) 60+ 70+ 80+ வயதினைக் கடந்தவர்கள். இவர்களில் ஒரு சாரார் தன் அனைத்துக் கடமைகளையும் செவ்வனே முடித்து விட்டு, உடலும் ஆரோக்யமாக இருந்து, கடைசியாக தான் வாங்கிய சம்பளத்தை விட இன்று மிக அதிகமாக பென்ஷன் வாங்குவோர்.

  தன் பொழுது போக்குக்காகவும், பேச்சுத்துணைக்காகவும், மூளைத் துருப்பிடிக்காமல் இருப்பதற்காகவும் வலைப்பக்கம் வருபவர்கள்.

  இவர்களில் சிலர் என்ன சொல்ல வருகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. ஏதோ சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் வளவளன்னு பதிவு கொடுப்பார்கள்.

  இவர்களில் சிலராலும், இவர்களில் சிலரின் எழுத்துக்களாலும், பாதிப்புக்கு உள்ளாவோர் மிக அதிகமாகும். இவர்களிடம் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அல்லது அவர்களை அடையாளம் கண்டு அவர்களின் வலைப்பதிவுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும்.

  >>>>>

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //80+ வயதினைக் கடந்தவர்கள் கடைசியாக தான் வாங்கிய சம்பளத்தை விட இன்று மிக அதிகமாக பென்ஷன் வாங்குவோர்.
   தன் பொழுது போக்குக்காகவும், பேச்சுத்துணைக்காகவும், மூளைத் துருப்பிடிக்காமல் இருப்பதற்காகவும் வலைப்பக்கம் வருபவர்கள். //
   இது ஐயாவையே குறிப்பிட்டு காட்டுகிறது.
   --
   Jayakumar

   நீக்கு
 2. 2)

  25 வயதுக்குள் உள்ள இளைஞர்கள். இவர்களில் பெரும்பாலோர் இன்னும் வாழ்க்கையில் செட்டில் ஆகாமல், பெற்றோர்கள் பணத்தினை அட்டைபோல உறிஞ்சிக் கொண்டு சுகமான தேடல்களில் ஈடு பட்டு வருபவர்கள்.

  இவர்களில் பலரும் கவிஞர் எனத் தன்னைத்தானே சொல்லிக்கொண்டு திரிவார்கள். கவிதைகள் என்ற பெயரில் ஏதேதோ கிறுக்கித் தள்ளுவார்கள். அவற்றில் பெரும்பாலும் காதலும் சோகமும் கலந்தே இருக்கும்.

  அவற்றைப் படித்தால் நமக்கு ஒரு எழவும் புரியாது.

  >>>>>

  பதிலளிநீக்கு
 3. 3)

  25க்கு மேல் 60 வயதுக்குள் உள்ள பதிவர்களில் பெரும்பாலானோர் தன் ஆபீஸில் ஓ.பி. அடிப்பவர்கள். இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஆபீஸ் கணினியில் மட்டுமே பதிவுகள் வெளியிடுவார்கள். இதில் சிலர் தினமுமேகூட பதிவு வெளியிட்டுக் கொண்டே இருப்பார்கள். இவர்களில் சிலர் ஆபீஸில் ஓவர் டைம் வேலை செய்தும் பதிவு வெளியிடுவார்கள். அதில் இரட்டிப்பு லாபம் அவர்களுக்கு உண்டு.

  இதெல்லாம் என் சிற்றறிவுக்கு எட்டிய மிகத்துல்லியமான் ஆராய்ச்சிகளும், மிகச்சரியான கண்டு பிடிப்புகளும் ஆகும். இதில் வெகு சிலர் மட்டும் விதி விலக்காகவும் இருக்கலாம். அவர்களிடமிருந்து அதிகமாக பதிவுகளே வருவது இல்லை. இந்த விதிவிலக்கான ஆசாமிகள் ஆடிக்கொரு நாள் அமாவாசைக்கு ஒருநாள் மட்டுமே பதிவு தருவார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபு சார்.. சரியான சந்தேகப்பேர்வழி, கூர்ந்து கவனிப்பவரைத்தான் பணம் ஹேண்டில் பண்ணும் இடத்தில் வேலைக்கு அமர்த்தியிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் எழுதியிருப்பதில் எனக்குச் சந்தேகம் உண்டு.

   இப்போதெல்லாம், 25-35 யாருக்கும் ஓ.பி. அடிக்க நேரம் இருக்காது. அப்போதுதான் கற்றுக்கொள்ளும் (ஆபீசில்) வயது. அதற்கு அப்புறம், 45 வயது வரை வேலைவாங்கும், தன்னுடைய பெர்ஃபார்மென்ஸைக் காட்டும் நேரம். அதிலும் உழைப்பு அதிகம். 45க்குமேல், மற்றவர்களிடம் தன்னுடைய இடத்தை இழக்காமல் வேறு வழியில்லாமல் உழைக்கும் நேரம். 55க்கு அப்புறம்தான், 'சரி தூக்கறயா.. தூக்கிக்கோ. நான் போக ரெடி' என்று சொல்லும் நேரம் என்று சொல்லலாம் என்று பார்த்தால், அப்போதுதான் பசங்களின் வாழ்க்கையில் முக்கியமான நேரம். எங்க சார் ஓ.பி. அடிப்பது. ஒருவேளை அரசுப் பணியில் இருப்பவர்கள் செய்யலாம்.

   நீக்கு
 4. //மிகவும் அழகான மலர்களின்(?!) படங்கள் (நம் தமிழ் கலாசாரப்படி பெண்களும் மலர்கள்தானே) மற்றும் பல செய்திகள் சுவையாக வெளியிட்டிருந்தார்.//

  ’பெண் பூக்கள்’ என்ற தலைப்பினிலேயே ஒருவர் கவிதை நூல் எழுதி எனக்கு அன்பளிப்பாக அளித்திருந்தார். அதனை நான் மதிப்புரை செய்து ஒரு தனிப் பதிவும் வெளியிட்டுள்ளேன். இதோ இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2015/10/blog-post_31.html

  தாங்கள் பார்த்தால் அவற்றின் மணத்திலேயே மனம் மயங்கி, மயக்கம் போட்டு விழுந்து விடுவீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. அன்னையர் தினத்தின்போது பெண் பூக்களைப் பற்றிய பதிவு அவசியம்தான்! பூதானே காயாகவும் கனியாகவும் ஆக முடியும்!

  -இராய செல்லப்பா நியூஜெர்சி (விரைவில் சென்னை)

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் எப்படி பிளாக்குகளின் உலகத்தில் நுழைந்தீர்கள் என்பது படிக்க சுவாரசியமாக இருக்கிறது.

  உலகத்தில் உள்ள எதுவும் கம்ப சூத்திரமல்ல. ஆர்வம், முயற்சி இருந்தால் எதையும் கற்றுக்கொண்டுவிடலாம்.

  ரெண்டு இடுகைகளையும் சேர்த்து எழுதலாம்.(அதாவது இன்னும் கொஞ்சம் நீளமாக இடுகை இருக்கலாம்) தொடர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. ஆ...3 மணிக்கே...வா..அய்யா..3மணிக்கு முழிக்கக்கூடாதுன்னு ஒரு பதிவை படிச்சுனே.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நினைவிலிருந்தால் அந்தப் பதிவின் சுட்டி கொடுக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

   நீக்கு
 8. இன்றுதான் டமில்மனத்தில் பார்த்து இவ் புளொக் கண்டுபிடித்து இங்கு வதேன்... வந்த வேகத்தில் வோட் பண்ணிவிட்டேன்ன்ன்.
  //இளைஞர்கள் (60+) ///
  இது சூப்பர்:).

  பதிலளிநீக்கு
 9. வலைத்தளங்களில் என்ன பார்த்தீர்கள் என அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு