திங்கள், 11 டிசம்பர், 2017

29. பிட் காயின் வேண்டுபவர்கள் அணுகவும்.


பிட் காயினைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லையென்று நம்புகிறேன். இனி உலக முழுவதும் பிட் காயின்தான் புழக்கத்திற்கு வரப்போகிறது.

இதன் விலை 2017 ம் ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தது இப்போது 15000 டாலராக இருக்கிறது. என்ன ஒரு வளர்ச்சி பார்த்தீர்களா? 2016 ம் ஆண்டில் ஒரு 100 பிட் காயின் வாங்கிப் போட்டிருந்தால் இன்று நீங்கள் ஒரு கோடீஸ்வரர்தான்.

இந்த விவகாரத்தில் ஒரே ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த பிட்காயின் எங்கே கிடைக்கும் என்பதுதான். இப்படி மக்கள் வகை தெரியாமல் திண்டாடுகிறார்களே என்று நான் இதைப் பற்றி ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன்.

ரகசியமாக விசாரித்ததில் இந்த பிட் காயினை ஒரே ஒருவர்தான் தயாரிக்கிறார் என்பதுவும் அவர் வட துருவத்தில் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்தில் தன் கம்ப்யூட்டருடன் வசிக்கிறார் என்பதுவும் தெரிய வந்தது. அவருக்கு பல இடங்களில் ரகசிய ஏஜண்டுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதுவும் தெரிய வந்தது.

இதில் ஒருவர் எனக்கு தற்செயலாக அறிமுகம் ஆனார். அவர் எனக்கு எவ்வளவு பிட்காயின் வேண்டுமானாலும் வாங்கிக்கொடுக்கிறேன் என்று உறுதி அளித்திருக்கிறார். இன்றைய தேதியில் ஒரு பிட்காயினின் விலை 10 லட்சம் ரூபாய். தேவைப் படுபவர்கள் எவ்வளவு பிட்காயின் வேண்டுமோ அவ்வளவிற்கான தொகையை என்னுடைய ஸ்டேட் பேங்க் கணக்கில் கட்டிவிட்டு அந்த விபரத்தை எனக்குச் சொன்னால் அவர்களுக்கு இந்த பிட் காயின்கள் அனுப்பி வைக்க முடியும். 

பிட்காயின்களை நேரில் பார்க்கமுடியாது. அவைகள் உங்களுக்கு ஒரு கணக்கு ஆரம்பித்து அந்தக்கணக்கில் இந்த பிட்காயின்களை சேர்த்து விடுவோம். இந்தக்கணக்கு விபரங்கள் எங்கள் கம்பயூட்டரில் மிகவும் பத்திரமாகப் பாதுகாக்கப்படும். இதன் விலை ஏற ஏற உங்கள் பிட்காயின்களின் மதிப்பும் ஏறிக்கொண்டே போகும். இந்த பிட்காயின்களின் மதிப்பை எண்ணிக்கொண்டே நீங்கள் மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கலாம்.

இன்னும் சில மாதங்கள் அல்லது வருடங்கள் கழித்து இந்த பிட்காயின் என்னும் கோபுரம் சீட்டுக்கட்டு கோபுரம் மாதிரி சரிந்து விடும். ஆனால் எங்களிடம் வாங்கிய பிட்காயின்கள் அப்படியே இருக்கும். அதில் எந்த வித மாற்றமும் ஏற்படாது. அப்போது தங்கள் பிட்காயினுக்கு பணம் வேண்டுபவர்கள் அன்றைய மதிப்பு எவ்வளவோ அந்த நிலவரத்திற்கு பணம் பெற்றுக்கொள்ளலாம். (எங்களுடைய கணிப்பு - அன்றைய தேதியில் ஒரு பிட்காயின் ஏறக்குறைய நூறு ரூபாய் இருக்கும்)

நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்பிக்கையோடு எங்களிடம் பிட்காயின் வாங்கி பயனடையுங்கள்.

வாழ்க பிட்காயின். வாழ்க இவ்வைகயம்.

11 கருத்துகள்:

 1. இப்போ கேள்விப்படற செய்திகளைப் பார்த்தால், வங்கியில் டெபாசிட் செய்துள்ள பணத்தையே, 'இவ்வளவு ஜாஸ்தியாகிடுத்து, இந்த வருஷம் இவ்வளவு இன்டெரெஸ்ட்' என்று வெறும்ன சந்தோஷப்படணும்போல் இருக்கு. பணத்தை எடுக்கமுடியாது போல செய்திகள் வருது. இதுல நீங்க 'பிட்காயின்' வேற சொல்லித் தர்றீங்க.

  எங்க பிட்காயின் கிடைக்கும்னு நீங்க ஆராய்ச்சி செய்து வச்சிருக்கீங்க. ரொம்ப மகிழ்ச்சி. அதைவிட, எங்க அந்த 10 லட்சம் ரூபாய் கிடைக்கும்னு ஆராய்ச்சி செய்து சொன்னீங்கன்னா, நாங்க இன்னும் பயனுறுவோம். விரைவில் சொல்லுங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏனுங்க, எல்லாத்துக்கும் நானேதான் வழி சொல்லிக்கொடுக்கணுமா? இது நியாயமா? நீங்களும் கொஞ்சம் யோசீங்களேன்.

   நீக்கு
 2. இந்த பிட் காய்ன்பற்றிய செய்திகள் ஏதும்புரிவதில்லை நகைச்சுவை தவிர்த்து அது பற்றிய தெளிவு ஏற்படும்படி செய்ய வேண்டுகிறேன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 1. எனக்கும் ஒன்றும் புரியவில்லை.
   2. மொத்தத்தில் இது ஒரு ஏமாத்து வித்தை என்பது மட்டும் புரிகிறது.
   3. தவிர இதைத் தெரிந்து கொண்டு நம்மைப் போன்றவர்களுக்கு ஆகப்போவது ஒன்றுமில்லை.

   நீக்கு
 3. சரி சரி நீங்க பிட்காயின் வாங்க வேண்டாம். வெங்காயம் வாங்கி லாபம் அடையுங்கள். பெரிய வெங்காயமும் சின்ன வெங்காயமும் எப்படி ஏறி இறங்காமல் இருக்குது பார்த்தீங்களா?
  --
  Jayakumar

  ​​

  பதிலளிநீக்கு
 4. சரி சரி நீங்க பிட்காயின் வாங்க வேண்டாம். வெங்காயம் வாங்கி லாபம் அடையுங்கள். பெரிய வெங்காயமும் சின்ன வெங்காயமும் எப்படி ஏறி இறங்காமல் இருக்குது பார்த்தீங்களா?
  --
  Jayakumar

  ​​

  பதிலளிநீக்கு
 5. 2017 ஆண்டு துவக்கத்தில் 1000 டாலராக இருந்தத பிட் காயி இப்போது 15000 டாலராக மதிப்பு உயர்ந்து நம்பிக்கையை தருகிறது :)

  பதிலளிநீக்கு
 6. :))) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்தி - பிட் காயின் பற்றி!

  பதிலளிநீக்கு
 7. Bit adikka nalla theriyum! athu enna bitcoin?
  ithu vera bitta?

  பதிலளிநீக்கு