செவ்வாய், 12 டிசம்பர், 2017

30. பிட் காயின் எனும் மகா மோசடி


பிட்காயின் வேண்டுமா என்று நான் ஒரு பதிவு போட்டிருந்தேன். அது ஒரு நையாண்டிப் பதிவு என்பது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் பதிவில் பலர் இந்த பிட்காயினைப் பற்றி விவரமான பதிவு ஒன்று போடுங்கள் என்று விருப்பப்  பட்டிருந்தார்கள்.

அவர்களுக்காக நேற்று இரவு முழுவதும் விழித்திருந்து ஆராய்ச்சி செய்ததில் எனக்குத் தெரிய வந்த சில உண்மைகளை இங்கே பகிர்கின்றேன்.

1. மிக மிக அரிய மூளை உள்ள ஒருவன் இதில் ஈடுபட்டிருக்கிறான். பிட்காயின் என்பது அவன் மூளையில் உதித்த ஒரு பக்கா ஃப்ராடு ஐடியா.

2. பிட்காயின் என்பது ஒரு மாயை. ஒரு வித ஏமாற்று வழிகள் மூலம் அப்படி ஒன்று இருப்பதாக பலரை நம்ப வைத்திருக்கிறான். நம்ம ஜனங்கள்தான் இப்படிப்பட்ட ஏமாற்றுத் திட்டங்களில் பலாப் பழத்தை மொய்க்கும் ஈக்கள் மாதிரி தங்கள் பணத்தைக் கொண்டு போய் கொட்டுவார்களே.

நம் ஊரில் நடந்த ஈமு கோழித்திட்டம் நல்ல உதாரணம்.

3. இந்த பிட்காயினை உற்பத்தி செய்பவர்கள் ஊரில் உள்ள இளிச்சாவாயன்களைக் கண்டு பிடித்து அவர்கள் தலையில் இந்த பிட்காயின்களைக் கட்டுகிறார்கள். 

4. அந்த இளிச்சவாயன்கள் சாதாரண இளிச்சவாயன்கள் இல்லை. பெரிய பெரிய பிசினஸ் மேக்னட்டுகள். அவர்களுக்கு உள்ள ஒரே கவலை, அவர்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத பணத்தை எப்படி பத்திரப்படுத்துவது என்பதுதான்.

5. அவர்களுக்கு இந்த பிட்காயின் ஒரு வரப்பிசாதமாக வாய்த்தது. இதில் பணத்தைப் போட்டால் பணம் எங்கிருக்கிறது என்று ஒருவருக்கும் தெரியாது.

6. இவர்கள் போடும் பணம் எங்கே போகிறது என்று அந்த ஒரிஜினல் பக்காத் திருடனுக்கு மட்டுமே தெரியும்.

7. இந்த பிட்காயினைக் கொண்டு ஆயிரம் வித்தைகள் செய்யலாம் என்பது அண்டப்புளுகு.

8. இந்த பிட்காயினுக்கு விலை நிர்ணயம் செய்வது அந்த பக்காத்திருடனே.

9. இந்தப் பிட்காயினுக்காக தனி ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ் ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்ஐ நடத்துபவர்களும் வடிகட்டின அயோக்கியர்களே.

10. அவர்கள் காசுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத்துணிந்தவர்கள்.

11. ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  என்ன வேலை செய்யும்? பிட்காயினை ஒருவன் விற்கிறான் என்றால், யாராவது வாங்குபவர்கள் இருக்கிறார்களா என்று பார்ப்பார்கள். அப்படி இரண்டு பார்ட்டிகளும் கிடைத்து விட்டால் இவனிடம் இருந்து அவனுக்கு இந்த பிட்காயினைக் கைமாற்றி விட்டு இவனுடைய கமிஷனை எடுத்துக்கொள்வான்.

12. இந்த வியாபாரத்தில் ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்  ஒரு புரோக்கர் மட்டுமே. பிட்காயின் செல்லுமா செல்லாதா என்பதற்கு அவன் எந்தக் கேரன்டியும் தரமாட்டான். எல்லா ஸ்டாக் எக்ஸ்சேன்ஜ்களும் இந்த விதமாகத்தான் செயல்படுகின்றன.

இந்த உலகமகாத் திருட்டு இன்னும் சில நாட்களில் அம்பலமாகப்போகிறது. பார்த்து அனுபவியுங்கள். பதிவர்கள் யாரிடமும் இந்த பிட்காயின் வாங்கும் அளவிற்கு வசதி இல்லையாதலால் அவர்கள் எந்த வருத்தமும் பட வேண்டியதில்லை.

7 கருத்துகள்:

  1. சமீபத்துல படித்தது - ஒருத்தனிடம் அவனால் செலவழிக்கமுடியாத சமயத்தில் (வயதான நோயாளி) அவனிடம் 1 ரூபாய் இருப்பதும் 1 கோடி இருப்பதும் ஒன்றுதான். அசையமுடியாத நோயாளிக்கு, 100 சதுர அடி வீடும், 2 ஏக்கர் வீடும் ஒன்றுதான்.

    அதுமாதிரி, அரசாங்கத்தை ஏமாத்தறதுக்காக பணக்காரர்(கள்) கண்டுபிடித்த இந்த பிட்காயின் - விளம்பரங்களின்மூலம் எல்லோரிடமும் மோகத்தைத் தோற்றுவிக்கிறது.

    ஓரளவு எல்லாத்தையும் கவர் பண்ணிட்டீங்க பிட்காயின் விஷயத்துல.

    பதிலளிநீக்கு
  2. ஈமு கோழிகள் நான்கு ஐந்து வருடங்கள் பிறகுதான் நின்றது. இந்த பிட் காயின் 2009 வருடம் துவங்கியது. எத்தனை நாள் தாக்கு பிடிக்குமோ பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. There is no connection between emu and bitcoin. Bitcoin is a crypto currency which uses math for making the transactions anonymous. A currency's credibility is established by a Government which is powerful. For bitcoins, the power comes from its anonymous nature and unbreakable secrecy (cannot be duplicated) and its limited availability. There can only be a maximum of 20 million bitcoins created. There are already about 17 million in distribution. Mining of bitcoins is more difficult than mining Gold since Bitcoin requires enormous amount of computing power.

    Bitcoin was created for one reason. And the very fundamental reason is now broken. Hence it looks like a fraudulent currency. Bitcoin itself cannot have a value unless its bought using a real currency. So, its the greedy people who are causing the price hike for bitcoin now. If all the money in the world is going to be converted into bitcoins, then 20 million coins are not enough. People are expecting that it would happen. Hence, the price of a bitcoin can go as high as million dollars. Its not the problem created by bitcoin developer. Its how things are evolving. If you want to support digital India, then India also has to come up with similar technology in the future. Imagine, if everyone in the world could use the same currency how that would impact the world?

    பதிலளிநீக்கு