திங்கள், 18 டிசம்பர், 2017

31. காதல் கல்யாணம்

                                      Image result for காதலர்கள் படங்கள்
ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்க்கை நடத்துவதுதான் இல்லறம். ஆனால் அந்த வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்குவது பணம். பணம் இல்லையேல் முற்றும் துறந்த முனிவர்களினால் கூட வாழ முடியாது.

தற்போது செய்தித்தாள்களில் பிரபலமாக இருக்கும் கௌசல்யா-சங்கர் காதலை எடுத்துக்கொள்வோம். அவல்களின் கல்யாணம் நடக்கும்போது கௌசல்யாவிற்கு 18 வயது, சங்கருக்கு 21 வயது. அப்போதுதான் இருவரும் மேஜர் ஆகியிருக்கிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். சங்கரின் குடும்பம் ஏழ்மையின் விளிம்பில்தான் இருந்தது என்று யூகிக்கிறேன்.

காதல் சினிமாவில் வேண்டுமானால் உயர்வாகக் காட்டப்படலாம். ஆனால் யதார்த்த த்தில் காதல் கல்யாணங்கள் பெரும்பாலும் தோல்வியில்தான் முடிகின்றன.

இந்த நிலையில் அவர்கள் எந்த அடிப்படையில் கல்யாணம் செய்து கொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை. காதல், சாதி வெறி ஆகியவை ஒருபுறம் இருக்க, அவர்கள் கல்யாணம் செய்துகொண்டு வாழ்வதற்கான பொருளாதார பலம் அவர்களுக்கு இல்லை. அந்த நிலையில் தங்களுக்கு கல்யாணம் அவசியமா என்ற சிந்தனை வராதா?

எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டார்கள்?

இது எனக்கு ஒரு புரியாத புதிராக இருக்கிறது.

3 கருத்துகள்:

 1. உணர்ச்சிகள். அவர்கள் தங்கள் திருமணத்தை ஐந்தாறு வருடங்கள் தள்ளிப் போட்டிருந்தால் இத்தனை விபரீதங்கள் நிகழ்திந்ருக்காதோ என்னவோ. அவர்கள் வாழ்வாதாரத்துக்கும் வழி பிறந்திருக்கும். அல்லது வேறு மாற்றங்களும் நிகழ்ந்திருக்கலாம். அதே சமயம் வயதில் மூத்தவர்கள் ஒரு உயிரை எடுக்குமளவு உணர்ச்சி வசப்பட்டதுதான் கொடுமை.

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கருத்து சரிதான். அந்த வயது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது சுலபமல்ல. வயது அதிகமாகும்போதுதான் பக்குவம் ஏற்படும். வேலை பார்க்காத ஆணோ பெண்ணோ கள நிலவரத்துக்குத் திரும்பும்போது காதல் என்ற மாயையின் சாயம் வெளுத்துப்போகும். ஜாதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.

  பெரும்பாலும் படித்தவர்களிடையே காதலைத் தவிர, பொருளாதார கன்சிடரேஷனும் இருக்கு என்பது என் அனுமானம்.

  பதிலளிநீக்கு
 3. பக்குவமில்லாத வயதில் எடுக்கும் அவசர முடிவுகள் எத்தனையோ இழப்புக்களைக் கொடுத்து விடுகிறது ஐயா.

  பதிலளிநீக்கு