சனி, 30 டிசம்பர், 2017

33. தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பது.

                                            Image result for மாடு பிடித்தல்

ஆனாலும் சும்மா சொல்லப்படாது. நம் இந்தியர்கள் வாய்ச்சொல்லில் அசகாய சூரர்கள். தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிப்பதில் கை தேர்ந்தவர்கள்.

நான் அப்போதே சொன்னேன். ஆனா காசை வாங்கிட்டு இந்த அதிகாரிகள்தான் அனுமதி அளித்தார்கள் என்று எப்போதும் எதிர்க் கட்சிக்காரன் சொல்லிக்கிட்டுத் தான் இருப்பான்.

ஆனா இவனும் அந்தக் காசில் பங்கு வாங்கிக்கொண்டு வாயையும் **ச்சையும் மூடிக்கொள்வான்.

எப்படியோ இந்திய ஜனத்தொகையில் 14 பேரை சில நொடிகளில் குறைத்தாய் விட்டது.

என்ன பரிதாபம் என்றால் இதுவும் சில நாட்களில் மறந்து போகும். கும்பகோணம் பால் மணம் மாறாத சிறார்களின் மறைவை விடவா இது கொடியது?

10 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ரொம்பவும் குழப்பி விட்டு விட்டேனோ? மும்பை ஹோட்டல் தீ விபத்து செய்தியை இதற்குள் எல்லோரும் அறிந்திருப்பார்கள் என்று நினைத்து விட்டேன். மன்னிக்கவும்.

      நீக்கு
  2. மும்பை ஹோட்டல் தீ விபத்து செய்தி படித்த நினைவு இருக்கிறது. ஆனால் நீங்கள் குறிப்பிடுவது அதைத்தான் என்று விளங்கிக்கொள்ள முடியவில்லை. ஜல்லிக்கட்டு படம் வேறு குழப்பிவிட்டது!

    :))

    பதிலளிநீக்கு
  3. மும்பை தீ விபத்து - இறந்தவர்களில் பலர் பெண்கள்....

    காசு வாங்கிக் கொண்டு கட்டிடங்களை கட்ட அனுமதித்து, பிறகு இப்படி நடந்த பின் வருந்துவதில் பயன் என்ன...

    பதிலளிநீக்கு
  4. டாக்டரைப் புரிந்து கொள்ள வேண்டும்

    பதிலளிநீக்கு
  5. மும்பை ஹோட்டல் தீ விபத்தில் 15 பேர் இறந்து 100 அதிகமானோர் காயம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
    ஜல்லிக்கட்டு படம் பொருத்தமானதே விபத்து வேண்டும் என்று மெரினாவில் புர்ச்சி நடத்தினார்களாம்.

    பதிலளிநீக்கு
  6. வேதனைதான். ஒன்றைவிட ஒன்று கொடியதாக நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  7. ஆம் குழப்பமாய் இருந்தது எதை பற்றி என்று பார்த்த பின் மீண்டும் படித்தேன் .

    பதிலளிநீக்கு
  8. மும்பை ஹோட்டல் தீ விபத்தை நான் படிக்கவில்லை. நான் ஜல்லிக்கட்டில் இறக்கப்போகும் மக்களுக்காக (இதோ பொங்கல் வந்தாச்சே) இப்போதே முன்'கூட்டியே இடுகை போட்டுவிட்டீர்களோ என்று நினைத்தேன்.

    வளர்ந்த நாடுகளுக்குத்தான் 10 பேர் பலி என்பதே மிகப் பெரிய செய்தி (அவர்களது முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் குறையோ என்று கடுமையாக ஆராய்வார்கள்). நம்ம ஊர்ல 100 பேர் பலி என்பதெல்லாம் பெரிய செய்தியா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொல்வது உண்மைதான். கோயில் கூட்ட நெரிசலில் 150 பேர் மரணம் என்று பேப்பரில் செய்தியைப் பார்த்தால் அப்படியா என்று அடுத்த பக்கத்துக்கு தாவுபவர்கள்தானே இங்கு அதிகம்.

      நீக்கு