இரண்டு நாட்களுக்கு முன் ஒரு பழைய நண்பர் வீட்டுக்கு வந்தார். அவரை ஒரு 50 வருடங்களாக அறிமுகம் என்றாலும் நெருங்கிப் பழகியதில்லை.
என் வீடு அவருக்கு எப்படித் தெரிந்தது என்றால் இரண்டு மாதத்திற்கு முன் என் வீட்டிலிருந்து கொஞ்ச தூரத்தில் நானும் இன்னொரு நண்பரும் வந்து கொண்டிருந்தபோது நேர் எதிரில் அவர் வந்தபடியால் பேசவேண்டியதாயிற்று. என் கூட வந்த நண்பருக்கும் அவர் தெரிந்தவர்தான். அன்று என் நாக்கில் சனி பகவான் இருந்திருக்கிறார். ஒரு மரியாதைக்காக என் வீடு பக்கத்தில்தான் இருக்கறது, வாங்களேன், ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று அழைத்தேன். அவரும் ஆஹா, பேஷா வருகிறேன் என்று சொல்லி எங்களுடனே வீட்டுக்கு வந்தார்.
எங்கள் வீட்டு அம்மாவிடம் சொல்லி அவருக்கு ஒரு காப்பி கொடுத்தேன். நாங்கள் இருவரும் முன்பே அன்னபூர்ணாவில் காபி குடித்துவிட்டுத்தான் திரும்பிக் கொண்டிருந்தோம். அவர் காபி சாப்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தோம். முக்கால்வாசி அவர் பேசினார். நாங்கள் இருவரும் சேர்ந்து கால்வாசி பேசினோம். எல்லாம் அவருடைய சுயபுராணம்தான். ஒரு மணி நேரத்தில் ஏறக்குறைய அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தைச் சொல்லி முடித்துவிட்டார். எப்படியோ கஷ்டப்பட்டு அதைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஒரு மணி நேரம் கழித்து அவர் புறப்பட்டுச் சென்றார். அவர் போன பிறகு என் நண்பர் சொன்னார், நான் கண்ணால் ஜாடை காட்டினேனே, அதைப்புரிந்து கொள்ளாமல் இவரை எதற்கு வீட்டிற்கு கூப்பிட்டீர்கள் என்று கூறினார்.
சரி, எப்படியோ இந்த முறை தெரியாமல் நடந்துகொண்டேன், இனிமேல் ஜாக்கிரதையாக இருந்து கொள்கிறேன் என்று கூறினேன். அப்புறம் அவரும் போய்விட்டார். இரண்டு நாட்களுக்கு முன் அவர் போன் செய்து வீட்டில் இருக்கிறீர்களா என்று கேட்டார். போனை எடுத்த பிறகு நான் வீட்டில் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். நான் வீட்டிற்கு வருகிறேன் என்று கூறிவிட்டு என் பதிலுக்கு கூட காத்திராமல் போனை கட் செய்து விட்டார். அப்புறம் என்ன செய்யமுடியும்? விதிப்பிரகாரம் நடக்கட்டும் என்று முடிவு செய்தேன். பதினைந்து நிமிடத்தில் அவர் வந்துவிட்டார்.
பிறகு ஒரு காபி (வீட்டம்மா கருணையுடன்) கொடுத்தேன். காபி குடித்துவிட்டு சுமார் ஒன்றரை மணி நேரம் பேசிக்கொண்டிருந்தோம். அதாவது அவர் பேசினார், நான் “ஊம்” கொட்டிக்கொண்டிருந்தேன். நடுவில் நான் பேச முயற்சித்தால் அவர் விடுவதில்லை. மொதல்லே இதைக்கேளுங்க என்று சொல்லி என்னைப்பேச விடுவதில்லை.
என்ன பேசினாரென்றால் முழுவதும் சுயபுராணம்தான். அவர் வேலைக்குச் சேர்ந்ததில் இருந்து இன்று வரையில் நடந்த அத்தனை கதைகளையும் சொல்லி விட்டார். இதில் பாதி கதைகள் போன தடவை வந்தபோதே சொன்னவை. ஒரு கட்டத்தில் புறப்படுகிறேன் என்று சொன்னவர் திரும்பவும் விட்டுப்போனதை சொல்ல ஒரு அரை மணி நேரம் எடுத்துக்கொண்டார்.
கடைசியாக விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். ஒரு மரியாதைக்காக வாசல் வரை சென்றேன். அங்கே நின்றுகொண்டு மீண்டும் அரை மணி நேரம் பேசினார். கடைசியாக அப்பப்போ நேரம் இருக்கும்போது வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார்.
எனக்கு இப்போதைய பெருங்கவலை என்னவென்றால் அடுத்த தடவை இவர் வந்தால் எப்படி தப்பிப்பது என்பதுதான். நண்பர்கள் யாராவது யோசனை கூறினால் அவர்களுக்கு கோயில் கட்டி கும்பிடுகிறேன் என்று உறுதி கூறுகிறேன்.
நேரா சொல்லிடுங்க. பெரிய கடியா இருக்கீங்க, முடியலை முடிச்சிக்குவோம். :-)
பதிலளிநீக்குஇதுக்குத்தான் தனக்குத்தானே சூனியம் வச்சுக்கிறதுன்னு சொல்றது.
பதிலளிநீக்குதெகா சொன்னது:
பதிலளிநீக்கு//நேரா சொல்லிடுங்க. பெரிய கடியா இருக்கீங்க, முடியலை முடிச்சிக்குவோம். :-) //
ஏனுங்க அப்படிச்சொல்லி அவரு ஏடாகூடமா எதாச்சும் செஞ்சுட்டார்னா அந்தப்பாவம் நம்மளைப் புடிச்சுக்காதுங்களா?
அப்படிச் சொல்லுறதுதான் honest, மனசிக்குள்ளர வைச்சு புழுங்குவதைக் காட்டிலும் உங்களுக்கு ஒத்து வராத ஆளைத்தானே வெட்டி விடுறீங்க - அப்படிச் சொல்லலைன்னா அவருக்கும் நேரக் கொலை உங்களுக்கும் அதே... ஏன் ரெண்டு பேரையும் ஏமாத்திக்கிட்டு??
பதிலளிநீக்கு//ஏனுங்க அப்படிச்சொல்லி அவரு ஏடாகூடமா எதாச்சும் செஞ்சுட்டார்னா //
ஏதாவது அவரு வருத்தமாகி செஞ்சிக்குவாருங்கிறீங்களா...
தெகா சொன்னது:
பதிலளிநீக்கு//அப்படிச் சொல்லுறதுதான் honest, மனசிக்குள்ளர வைச்சு புழுங்குவதைக் காட்டிலும் உங்களுக்கு ஒத்து வராத ஆளைத்தானே வெட்டி விடுறீங்க - அப்படிச் சொல்லலைன்னா அவருக்கும் நேரக் கொலை உங்களுக்கும் அதே... ஏன் ரெண்டு பேரையும் ஏமாத்திக்கிட்டு??
ஏதாவது அவரு வருத்தமாகி செஞ்சிக்குவாருங்கிறீங்களா...//
அப்படித்தான் பண்ணோணுங்கோ. இந்த மாதிரி ஆளுங்களுக்கு அந்த மாதிரி சுயமரியாதையெல்லாம் இருக்காதுன்னு நெனைக்கறேனுங்க.
சொல்லிப்போட்டு ரிசல்ட் என்ன ஆகுதுன்னு எழுதறனுங்க.
என்னமோ போங்க....
பதிலளிநீக்குஅன்பின் அய்யா
பதிலளிநீக்குதெகா கூறியபடி நாசுக்காக கழட்டி விடுங்க - அதான் சரி
நட்புடன் சீனா
ஐயா,
பதிலளிநீக்குஇந்த மாதிரி நேரங்களில் மொத்தமே இரண்டு வழிகள்தான்.
ஒன்று: உண்மையை சொல்லி விடுவது (அவர் போன் செய்தால், ஆமாம் அதான் போன தடவையே பேசிட்டோமே? இப்போ ஏதாவது புதுசா இருக்கா? : அதாவது இது போன்ற உண்மையை அவர் தாங்க கூடியவராக இருந்தால்).
இரண்டு: சந்திப்பை தள்ளிப் போடுவது (அடடே, பாருங்க, நான் வெளிய கிளம்பும்போது சரியாய் போன் பண்றீங்களே? நாளைக்கு பாப்போமா? - இந்த மாதிரி ஒரு நான்கு தடவை செய்தால் போதும் - அவரே புரிந்து கொள்வார்).
அடகடவுளே....இதை மிக எளிதாக சமாளிக்கலாம். இதற்காகவா ஒருத்தர் வருத்தப்படவேண்டும்?
பதிலளிநீக்குஇது போன்ற மனிதர்களை ,சந்தர்பங்களை எல்லோரும் ஒரு நேரம் சந்தித்தே ஆகவேண்டுகிறது.
1 வீட்டில் போன் மணி அடித்தாலோ, மொபைல் போன் அடித்தாலோ யார் எந்த எண்ணிலிருந்து அழைகிறார்கள்
என்று தெரிந்து கொண்டு போனை எடுக்கலாம். தேவையற்ற அழைப்புக்களை, பிறரை பேச வைத்து தவிர்த்து விடலாம்.
2 கண்டவர்களிடமும் வீடு போன் எண்கள்.மொபைல் எண்களை தந்துவிட்டு இப்படி அவஸ்தை பட வேண்டாமமே.
3.வீட்டிற்கு தேடி வந்து விட்டால், முந்திரி கொட்டையாக முதலில் எட்டி பார்க்காமால் பிறரைகொண்டு பார்க்க செய்து ,
'தேவை இலாதவர் 'என்று தெரிந்தால் தேவையான (முன்கூட்டியே சொல்லிவைத்து) சாக்கு போக்குகளை சொல்லி அனுப்பிவிடலாம்.
4.எதிபாராமல், "அவரை" பார்க்க நேரிட்டால் "பயங்கர தலை வலி நான் படுத்துக்கொள்கிறேன் " என்று ஆக்டிங் வுட்டு
சுருட்டி படுத்துக்கொண்டால், மனிதர் பிறகு வர நினைக்க மாட்டார்.
5. எங்கள் பக்கம் வந்து நாளாச்சி. வருவதே இல்லை . இப்படியே தொடர்ந்தால் 'அந்த " நண்பருக்கு பதிலாக நானும்
பன்னிகுட்டியும் வந்து இம்சையை தந்துகொண்டிருப்போம். அவ்வளவுதான் .

அய்யா..! ஒங்கள நெனைச்சா எனக்கு பாவமா இருக்கு...!;;))
பதிலளிநீக்குஎன்ன சார் ..இதெல்லாம் ஒரு பிரச்சனையா?...
பதிலளிநீக்கு“எனக்கு பல்லு ஆடுது..ஒரு 1 லட்சம் கொடு..பல்லு மொளச்சதும் திருப்பி தரேன்.. உங்கள விட்டா எனக்கு யாரும் தெரியாது.....நீதான் எங்க குலசாமி!!”-னு ஒரு போடு போடுங்க...
நடக்கிறத பார்த்துட்டு, அப்புறம் சொல்லுங்க சார்..
அறுவை அப்படிங்கற லேபிள்'லயே ஓர் இடுகை
பதிலளிநீக்குஅறுவையாய், இல்ல இல்ல, அருமையாய்
போட உதவியிருக்கிறாரே உங்க நண்பர்,
அவருக்கு நன்றி சொல்லுங்க.
அப்புறம், அவர் சொன்ன சுயபுராணம்
எதையாவது அடுத்து, இடுகையிடலாமே!
சீனா அய்யா சொன்னது:
பதிலளிநீக்கு//அன்பின் அய்யா
தெகா கூறியபடி நாசுக்காக கழட்டி விடுங்க - அதான் சரி
நட்புடன் சீனா //
அப்படித்தான் பண்ணோணுங்க.
வருகைக்கு நன்றி.
rk guru said:
பதிலளிநீக்கு//என்னமோ போங்க....//
வாங்க குரு, என்னாச்சும் செஞ்சுடலாங்க.
King Viswa said:
பதிலளிநீக்கு//இந்த மாதிரி நேரங்களில் மொத்தமே இரண்டு வழிகள்தான்.//
ராஜா சொல்லீட்டா அத மீற முடியுமா? பண்ணீடறனுங்க.
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்குநல்ல நல்ல ஐடியாவெல்லாம் குடுத்திருக்கீங்க, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப, ரொம்ப நன்றிங்க. ஏன் அஞ்சு தடவை நன்றி தெரியுமுங்களா, உங்க பின்னூட்டம் அஞ்சு தடவ வந்துருக்குது. அதுக்காகத்தான் அஞ்சு நன்றிகள்.
//எங்கள் பக்கம் வந்து நாளாச்சி. வருவதே இல்லை . இப்படியே தொடர்ந்தால் 'அந்த " நண்பருக்கு பதிலாக நானும்
பன்னிகுட்டியும் வந்து இம்சையை தந்துகொண்டிருப்போம். அவ்வளவுதான்.//
வந்துட்டேன், வந்துட்டேன், வந்துட்டேன், வந்துட்டேன், வந்துட்டேன்.
இப்ப பண்ற இம்சையே தாங்க முடியல, இதுக்கு மேல இம்சை கொடுத்தா தாங்க முடியாதுங்க.
இப்பவே ஒரே கமென்ட் அஞ்சு தடவை வருது. எச்சா இம்சை கொடுக்கறதுன்னா எத்தனை தடவை போடுவீங்க? அப்பறம் இந்த மாதிரி ஒரே கமென்ட்ட பல தடவை வரவழைக்கறது எப்படீங்க> அந்த டெக்னிக்கை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்குடுங்க.
தமிழ் அமுதன் சொன்னது:
பதிலளிநீக்கு//அய்யா..! ஒங்கள நெனைச்சா எனக்கு பாவமா இருக்கு...!;;))//
உங்க மாதிரி பல நண்பர்களின் ஆதரவு இருக்கறப்ப எப்படியாவது சமாளிச்சுடறனுங்க.
பட்டாபட்டி said:
பதிலளிநீக்குஎன்ன சார் ..இதெல்லாம் ஒரு பிரச்சனையா?...
//“எனக்கு பல்லு ஆடுது..ஒரு 1 லட்சம் கொடு..பல்லு மொளச்சதும் திருப்பி தரேன்.. உங்கள விட்டா எனக்கு யாரும் தெரியாது.....நீதான் எங்க குலசாமி!!”-னு ஒரு போடு போடுங்க...
நடக்கிறத பார்த்துட்டு, அப்புறம் சொல்லுங்க சார்..//
நல்ல ஐடியா, பட்டா. அப்பிடி கொடுத்துட்டாருன்னா பாதி உங்களுக்கு. நீங்க ஊரிக்கு வரப்போ கொடுத்துடறேன். ஆமா, எப்ப ஊருக்கு வர்றீங்க?
Nizamudeen said:
பதிலளிநீக்கு//அறுவை அப்படிங்கற லேபிள்'லயே ஓர் இடுகை
அறுவையாய், இல்ல இல்ல, அருமையாய்
போட உதவியிருக்கிறாரே உங்க நண்பர்,
அவருக்கு நன்றி சொல்லுங்க.
அப்புறம், அவர் சொன்ன சுயபுராணம்
எதையாவது அடுத்து, இடுகையிடலாமே!//
வாங்க நிஜாமுதீன், நல்ல ஐடியாவா இருக்குங்க, அப்படியே பண்ணீடரனுங்க.
என்னைப் பார்த்ததும் உடனே //என் வீடு பக்கத்தில்தான் இருக்கறது, வாங்களேன், ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று //அழைப்பீர்களா?
பதிலளிநீக்குதருமி சொன்னது:
பதிலளிநீக்கு//என்னைப் பார்த்ததும் உடனே //என் வீடு பக்கத்தில்தான் இருக்கறது, வாங்களேன், ஒரு காபி சாப்பிட்டு விட்டுப் போகலாம் என்று அழைப்பீர்களா?//
என்னங்க இப்படிக்கேட்டுட்டீங்க. உங்களையெல்லாம் பாத்தா உட்டுடுவமா? ஊட்டுக்குக் கூட்டீட்டுப்போயி ஆனை பிரியாணி போட்டுடுவோமில்ல. வாங்க, வாங்க, கொங்கு நாடு விருந்தோம்பலுக்கு பேர் போனதுங்க.
நீங்க வீட்டு வாரும் போது இதை வாங்கிட்டு வா என்று ஒரு லிஸ்ட் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்....
பதிலளிநீக்குசௌந்தர் said:
பதிலளிநீக்கு//நீங்க வீட்டு வாரும் போது இதை வாங்கிட்டு வா என்று ஒரு லிஸ்ட் கொடுங்கள் அப்புறம் பாருங்கள்..//
அடுத்த தடவை இதை முயற்சி செய்கிறேன்.
சார் , வீட்ல ஒரு சிங்கம்மும் , அனகோண்டா பாம்பும் வாங்கி வழங்க ஒரு பய வரமாட்டான் .(பின் விளைவுகளுக்கு நிவாகம் பொறுப்பல்ல )
பதிலளிநீக்குஇல்லைனா அடுத்து போன் வந்தா எடுத்து "பிளீஸ் செக் தா நம்பர் யு ஹவ் டயல்டு " அப்படின்னு சொல்லிட்டு கட் பண்ணிடுங்க
பதிலளிநீக்குவீட்டு என்ட்ரன்ஸ்ல டேக் டைவர்சன்னு ஒரு போட போட்டு வைங்க
பதிலளிநீக்குமங்குனி அமைச்சர் சொன்னது:
பதிலளிநீக்குமூணு மணி மணியான யோசனைகள் சொல்லீருக்கீங்க. ரொம்ப,(1) ரொம்ப,(2) ரொம்ப(3) தேங்க்ஸுங்க.
ஒவ்வொண்ணா ட்ரை பண்ணலாமா இல்லே மூணையும் ஒண்ணாவே ட்ரை பண்ணலாமான்னு யோசனை பண்ணீட்டு இருக்கனுங்க. எதுக்கும் நாலு பேர கேட்டுட்டு ஒரு முடிவு பண்ணறனுங்க.
(அட..இந்த சுக்கு மாணிக்கத்துக்கு அவரே தேவலை போல் இருக்கே! உங்க ஃப்ரெண்ட் சொன்னதை இரண்டு தடவை தான் சொல்றாரு..ஸார் ஐந்து தடவை சொல்றாரே!!)
பதிலளிநீக்குஅது சரி..சூப்பர் ஐடியா!!
உங்க ஃப்ரெண்டுக்கு நீங்களே காஃபி போட்டுக் கொடுத்துப் பாருங்களேன்!!
மனுஷன் மறந்துப் போய் கூட தலை வெச்சுப் படுக்க மாட்டார்!!!
அந்த வென்னீரைக் குடிச்ச வேதனையில ஏன் திரும்பி வரார்?
இங்க எனக்குப் புடிக்காத ஆளுங்கள இந்த மாதிரி வென்னீரைக் கொடுத்து தான் விரட்டறது, நம்ம வளக்கம்!!!!!
“ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி” சொன்னது:
பதிலளிநீக்கு(அட..இந்த சுக்கு மாணிக்கத்துக்கு அவரே தேவலை போல் இருக்கே! உங்க ஃப்ரெண்ட் சொன்னதை இரண்டு தடவை தான் சொல்றாரு..ஸார் ஐந்து தடவை சொல்றாரே!!)
அது சரி..சூப்பர் ஐடியா!!
உங்க ஃப்ரெண்டுக்கு நீங்களே காஃபி போட்டுக் கொடுத்துப் பாருங்களேன்!!
மனுஷன் மறந்துப் போய் கூட தலை வெச்சுப் படுக்க மாட்டார்!!!
அந்த வென்னீரைக் குடிச்ச வேதனையில ஏன் திரும்பி வரார்?
இங்க எனக்குப் புடிக்காத ஆளுங்கள இந்த மாதிரி வென்னீரைக் கொடுத்து தான் விரட்டறது, நம்ம வளக்கம்!!!!!
“ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி”
பதிலளிநீக்குஇந்தப் பிளாக்கருக்கு என்ன கோபமோ தெரியலீங்க. நானும் ஒரு மணி நேரமா போராடிப் பாக்கறேன், உங்க கமென்ட் ஒழுங்கா பப்ளிஷ் ஆக மாட்டேங்குது. இந்த சுக்குதான் ஏதோ சூனியம் வச்சுட்டாருன்னு சந்தேகப்படறனுங்க.
அவரு கமென்ட் மட்டும் ஒரு தடவ போட்டா அஞ்சு தடவ பப்ளிஷ் ஆகுது. என்ன வேலை பாருங்க?
“ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி” சொன்னது:
பதிலளிநீக்கு//உங்க ஃப்ரெண்டுக்கு நீங்களே காஃபி போட்டுக் கொடுத்துப் பாருங்களேன்!!
மனுஷன் மறந்துப் போய் கூட தலை வெச்சுப் படுக்க மாட்டார்!!!//
காலைல 3 மணிக்கு எந்திரிக்கரனுங்களா? அப்ப ஒரு புரூ காப்பி பால் பவடர்ல போட்டுக் குடிச்சுருவனுங்க. காப்பி நல்லாவே போடுவனுங்க. நீங்க ஒரு நாளைக்கு வந்து குடிச்சுப்பாருங்க. அந்தக்காப்பியை நம்ம பிரண்டுக்குக் கொடுத்தா, தினமும் வந்துடுவாருங்க. வேற யோசனை பண்ணலாமுங்க.
அவருக்கு இந்தப்பதிவை பின்னூட்டங்களுடன் ஒரு காப்பி எடுத்து அவரு வரப்ப கொடுத்து படிக்கச் சொல்லலாம்னு தோணுதுங்க. தண்ணிக் காப்பிக்குப் பதிலா பேப்பர் காப்பி. எப்படீங்க நம்ம ஐடியா?
நம்ம ஆளுங்களோட கமென்ட்ட படிச்சுட்டு அப்புறம் நம்மு ஊட்டுத் திசையிலேயே தலை வச்சுக்கூட படுக்க மாட்டாருங்க.
இது என்ன பிரமாதம், அடுத்த முறை வரும் போது ஏற்கனவே அவர் பேசியதில் இருந்து எடுத்துச் சொல்லி, அன்னிக்கு நீங்க சொன்னது புரியல திரும்ப சொல்லுங்க என்று சொல்லிவிட்டு தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும், திரும்ப திரும்ப அவர் பேசியதை ரீப்பீட் செய்யச் சொன்னால் அவராகவே முடிவுக்கு வந்துவிடுவார்
பதிலளிநீக்குநிஜமாகவே இது போன்ற அறுவை விருந்தாளிகள் கவலை அளிக்க்கூடியவர்கள்தான். முடிந்தவரை அவரை தவிர்க்கப்ப் பாருங்கள், அதற்கும் சரிவரவில்லையெனில் நேரடியாகவே சொல்லிவிடுவது நல்லது.
பதிலளிநீக்குஅவருக்கு ஃப்ளாக் எழுத சொல்லி கொடுத்துடுங்க...
பதிலளிநீக்குபதிவுலகத்துக்கு நல்லது (?) பண்ண மாதிரியும் ஆச்சு, நாமளும் தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.
http://vaarththai.wordpress.com
Chidambaram Soundarapandian said:
பதிலளிநீக்கு//அவருக்கு ஃப்ளாக் எழுத சொல்லி கொடுத்துடுங்க...
பதிவுலகத்துக்கு நல்லது (?) பண்ண மாதிரியும் ஆச்சு, நாமளும் தப்பிச்ச மாதிரியும் ஆச்சு.//
வாங்க சௌந்தரபாண்டியன், கருத்துக்கு நன்றி. அவரு வீட்டுக்கு வந்தப்பவே சொல்லீட்டாருங்க. நான் இந்தக் கம்ப்யூட்டர் ஒண்ணைத்தான் படிக்காம உட்டுட்டேன் அப்படீன்னு.
எங்ககிட்ட இருக்கு நல்ல யோசனை..வீட்டில் இருக்கும் போது சொல்லுங்க வருகிறேன்.
பதிலளிநீக்கு