வெள்ளி, 9 ஜூலை, 2010

மக்கள் திருந்தவே மாட்டார்களா?

இந்தச் செய்தியைப் படிக்கவும்.

நன்றி: தினத்தந்தி

பிரபல நடிகை சத்யப்பிரியா சென்னை தியாகராயநகர் ராமானுஜர் தெருவில் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் தியாகராயநகரில் உள்ள ஒரு ஓட்டலில் டிபன் வாங்குவதற்காக தனது காரில் வந்தார்.

ஓட்டல் வாசலில் காரில் காத்திருந்தபோது அவரது கவனத்தை திசை திருப்பி காரில் வைத்திருந்த அவரது கைப்பையை மர்ம ஆசாமி ஒருவன் கொள்ளையடித்து சென்று விட்டான். ரோட்டில் பத்து ரூபாய் நோட்டுக்களை சிதற விட்டு, அந்த ரூபாய் நோட்டுகள் உங்களுடையதா என்று மர்ம ஆசாமி ஒருவன் கேட்டான். உடனே அந்த ரூபாய் நோட்டுகளை காரில் இருந்து இறங்கி நடிகை சத்யப்பிரியா பொறுக்கிக்கொண்டு இருந்தார். (இதைத்தான் "பொறுக்கி" என்று கூறுவது)

அப்போது அந்த மர்ம ஆசாமி சத்யப்பிரியாவின் காரில் இருந்த அவரது கைப்பையை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். அந்த கைப்பைக்குள் ரூ. 60 ஆயிரம் ரொக்கப்பணம், வங்கி கிரெடிட் கார்டுகள், வங்கி ஏ.டி.எம் கார்டுகள் மற்றும் டிரைவிங்க் லைசன்சும் இருந்த்தாக நடிகை சத்யப்பிரியா போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

எனக்குத் தெரிந்து இந்த டெக்னிக் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் மக்கள் திருந்துவதாகக் காணவில்லை.

14 கருத்துகள்:

  1. சரியாச் சொன்னீங்க. நம்மது இல்லைன்னு தோணவே தோணாது. கிடைச்சத சுருட்டணும்.

    பதிலளிநீக்கு
  2. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இவர்களுக்கு போதாது. தன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், வசதிகள் இருந்தும்,
    காரில் அமர்ந்துள்ள அந்த அம்மையாருக்கு "தெருவில் கிடக்கும் ரூபாய்களும் தன்னுடையதே" என்ற பேராசை.
    தன்னுடையது இல்லை என்று தெரிந்தாலும் கிடைத்தவரைக்கும் லாபம் என்று எண்ணி 'பொறுக்கினால் "
    பையில் உள்ளதும் போய்விட்டது. சினிமா காரர்கள் களுக்கு தலையில் காலியாகவே இருக்கும் என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  3. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இவர்களுக்கு போதாது. தன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், வசதிகள் இருந்தும்,
    காரில் அமர்ந்துள்ள அந்த அம்மையாருக்கு "தெருவில் கிடக்கும் ரூபாய்களும் தன்னுடையதே" என்ற பேராசை.
    தன்னுடையது இல்லை என்று தெரிந்தாலும் கிடைத்தவரைக்கும் லாபம் என்று எண்ணி 'பொறுக்கினால் "
    பையில் உள்ளதும் போய்விட்டது. சினிமா காரர்கள் களுக்கு தலையில் காலியாகவே இருக்கும் என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  4. எவ்வளவுதான் சம்பாதித்தாலும் இவர்களுக்கு போதாது. தன்னிடம் இவ்வளவு பணம் இருந்தும், வசதிகள் இருந்தும்,
    காரில் அமர்ந்துள்ள அந்த அம்மையாருக்கு "தெருவில் கிடக்கும் ரூபாய்களும் தன்னுடையதே" என்ற பேராசை.
    தன்னுடையது இல்லை என்று தெரிந்தாலும் கிடைத்தவரைக்கும் லாபம் என்று எண்ணி 'பொறுக்கினால் "
    பையில் உள்ளதும் போய்விட்டது. சினிமா காரர்கள் களுக்கு தலையில் காலியாகவே இருக்கும் என்பதற்கு இது மற்றொரு உதாரணம்.

    பதிலளிநீக்கு
  5. பாருங்க பணம் பத்தும் செய்யும் அதுக்குதான் இந்த பழமொழி

    பதிலளிநீக்கு
  6. என்னதான் பணம் படைத்தவர்களாயிருந்தாலும் ஓசியில் சில நோட்டுகள் கிடைத்தால் யாருக்குத்தான் ஆசை வராது!

    மேலும் இத்தகைய சமயங்களில் நம்முடைய புத்தியையும் சலனப்படுத்திவிடக்கூடிய கைதேர்ந்தவர்கள்தான் இந்த திருட்டுக் கலைஞர்கள்!!

    பதிலளிநீக்கு
  7. இதைத்தான் சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பதுன்னு சொல்லுவாங்களோ !

    சத்யப்ரியா பணப்ப்ரியாவாக மாறினதும் பணம் பறிபோனது

    பதிலளிநீக்கு
  8. யாரோ எல்லாத்துக்கும் ஆசைப்படுனு சொல்லிட்டாங்களாம், அதனோட எஃபெக்ட் போல:)

    பதிலளிநீக்கு
  9. யாரோ எல்லாத்துக்கும் ஆசைப்படுனு சொல்லிட்டாங்களாம், அதனோட எஃபெக்ட் போல:)

    பதிலளிநீக்கு
  10. எல்லோருக்கும் நன்றி. நான் இந்தப் பதிவைப்போட்டதின் நோக்கம் நாமும் எப்போதாவது இப்படிப்பட்ட சூழ்நிலைக்கு ஆட்படும்போது மனதை சலனப்படாமல் பாதுகாத்துக் கொள்ளத்தான்.

    பதிலளிநீக்கு
  11. நம் மக்களுக்கு செய்தித்தாளில் இது போன்ற நிகழ்வுகள் ஒரு செய்தியாகமட்டும்தான் தெரிகிறது. தாங்கள் அனுபவப்பட்டு பொருள் இழந்த பின்னர்தான் புத்தி தெளிவடைகிறது.
    எவ்வளவுமுறை மக்கள் 100 விழுக்காடு வட்டி விளம்பரத்தை நம்பி பைனான்ஸ் கம்பெனிகளில் முதலீடு செய்து நஷ்டப்பட்டாலும் மக்கள் திருந்தமாட்டேனென்கிறார்கள். அதுபோன்றுதான் இந்த 10 ரூபாய் விஷயமும்.
    மா.மணி.

    பதிலளிநீக்கு
  12. நாமும் எச்சரிக்கையாய் இருக்கத்தான் இந்த இடுகை
    போட்டிருக்கிறீர்கள். பயனுள்ள இடுகையே! நன்றி!

    பதிலளிநீக்கு