ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பழமைபேசியின் நூல் அறிமுக விழாவும் பதிவர் சந்திப்பும்

பழமைபேசியின் "ஊர்ப்பழமை" புத்தக வெளியீட்டு விழாவை ஒட்டி ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற்றது. இது ஒரு Informal சந்திப்பு என்பதால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றியும் பேசவில்லை. வந்திருந்தோரின் புகைப்படங்கள் காணவும். நானே புதிதாகையாலும் புது முகங்களை பெயருடன் ஞாபகம் வைத்துக்கொள்வது என்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டதாலும் யாருடைய பெயரையும் கொடுக்கவில்லை.







ஏதோ என்னால் முடிந்த கைங்கர்யம், ஏழைக்குத்தகுந்த எள்ளுருண்டை.

19 கருத்துகள்:

  1. முந்திக் கொண்டு தந்த இந்த விசயங்களைப் போலவே விழாவிற்கும் நீங்கள் தான் முதலில் சென்று இருப்பீர்கள் போல.

    வாழ்த்துகள் ஐயா.

    எள்ளூருண்டை எப்போதுமே சுவை தானே?

    பதிலளிநீக்கு
  2. தங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. அட சாமி.. அந்த வெள்ளைச் சட்டைக்கும், வெள்ளை வேட்டிக்கும், வெள்ளை மீசைக்கு செம பொருத்தம் போங்க

    பதிலளிநீக்கு
  4. எள்ளுருண்டைகளை சுவைத்துக்கொண்டு உங்கள் பதிவைப் பார்த்தேன்! எது அதிக சுவை என்பதை நான் சொல்லவேண்டுமா?

    பதிலளிநீக்கு
  5. வருவதற்காக மிகவும் முயற்சி செய்தேன்.. உங்களை எல்லாம் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்க வில்லை..

    பதிலளிநீக்கு
  6. பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி சொன்னது:

    //வருவதற்காக மிகவும் முயற்சி செய்தேன்.. உங்களை எல்லாம் பார்க்கும் அதிர்ஷ்டம் கிடைக்க வில்லை..//

    உங்களை எதிர்பார்த்தேன். (ஏமாற்றம்)
    பட்டாபட்டி ஆகஸ்ட்டில் கோவை வருவதாக ஒரு முறை குறிப்பிட்டிருந்தார். அப்போது இது மாதிரி ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  7. ஜோதிஜி said:

    //முந்திக் கொண்டு தந்த இந்த விசயங்களைப் போலவே விழாவிற்கும் நீங்கள் தான் முதலில் சென்று இருப்பீர்கள் போல.

    வாழ்த்துகள் ஐயா.

    எள்ளூருண்டை எப்போதுமே சுவை தானே?//

    நன்றி. கூட்டம் நடந்த இடம் மாற்றத்தினால் நான் மூன்றாவதாகப் போய்ச்சேர்ந்தேன்.

    நான் வருகிற 21ம் தேதி திருப்பூர் லக்ஷ்மி கல்யாண மண்டபத்திற்கு ஒரு கல்யாண நிச்சயத்திற்கு மதியம் 12 மணி அளவில் வருவதாக இருக்கறேன். உங்களுக்கு சௌகரியப்பட்டால் 11 -12 மணியில் சந்திக்கமுடியமா?

    பதிலளிநீக்கு
  8. ஈரோடு கதிர் சொன்னது:

    //அட சாமி.. அந்த வெள்ளைச் சட்டைக்கும், வெள்ளை வேட்டிக்கும், வெள்ளை மீசைக்கு செம பொருத்தம் போங்க//

    நன்றி கதிர்.
    உங்களைத்தான் முதலில் சந்தித்து போட்டோவும் எடுத்தேன். பதிவில் அதுதான் முதலில் போட்டிருக்கிறேன்.

    எல்லோருடைய போட்டோக்களையும் பெயருடன் பதிவிட ஆசைப்பட்டேன். என்னுடைய ஞாபகசக்தி என் காலைவாரிவிட்டது. சரி, போட்டோக்களாவது இருக்கட்டும் என்று போட்டிருக்கிறேன்.

    வெள்ளை உடை என் இல்லாளின் கைவண்ணம்.

    பதிலளிநீக்கு
  9. ஒருவழியாக ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டிங்க.
    :)

    பதிலளிநீக்கு
  10. .இது எப்ப சார் நடந்தது?..

    கோவையிலா?...


    சொல்லவேயில்ல...

    பதிலளிநீக்கு
  11. பட்டாபட்டி சொன்னது:

    //.இது எப்ப சார் நடந்தது?..
    கோவையிலா?...
    சொல்லவேயில்ல...//

    ஒரு காக்கா கால்ல கட்டி ஓலை அனுப்பிச்சமே, வந்து சேர்லயா?

    இது என்ன பதிவர் சந்திப்புங்க? ஜுஜுபி. நீங்க வர்றப்ப மொதல்வரக் கூப்பிட்டு கோவையே குலுங்கறாப்பல ஒரு பெரிய விழா எடுத்துப்புடலாங்க, அது சரி, எப்ப வர்றீங்க?

    பதிலளிநீக்கு
  12. கோவி கண்ணன் சொன்னது:

    //ஒருவழியாக ஜோதியில் ஐக்கியம் ஆகிட்டிங்க.
    :)//

    எண்ணைக்காவது ஒரு நாள் ஐக்கியமாகித்தானே ஆகணும்?

    பதிலளிநீக்கு
  13. ஐயா உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி... நான் புகைப்படம் பதிவேற்ற நினைத்துக் கொண்டிருந்தேன். தாங்களே அதை பதிவேற்றிவிட்டீர்கள். நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  14. தங்களை சந்தித்ததில் மகிழ்ச்சிங்க அய்யா..

    பதிலளிநீக்கு