சனி, 21 ஆகஸ்ட், 2010

சும்மா இருப்பதே சுகம்

நான் ஒரு நல்ல சோம்பேறி. இதைச்சொல்ல நான் வெட்கப்படவில்லை. ஆன்மீகப் பெரியோர்கள் பலர் சும்மா இருப்பதே சுகம் என்று சொல்லிப் போயிருக்கிறார்கள். ஆகையினால் சோம்பேறியாய் இருப்பதில் தவறு ஒன்றுமில்லை.


அப்படியானால் ஆபீஸில் எப்படி ஆணி பிடுங்கி முன்னேறினீர்கள் என்றால், அது ஒரு பெரிய ரகசியம். உங்களிடம் மட்டும் சொல்கிறேன். வெளியில் சொல்லவேண்டாம். நான் சோம்பேறிதானே தவிர என் மூளை கொஞ்சம் ஷார்ப். இதை மற்றவர்கள்தான் சொல்லவேண்டும். இருந்தாலும் தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் தன்னைப்பற்றி சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது என்று நன்னூலில் சொல்லியிருக்கிறது. அந்தக் குணத்தினால் மற்றவர்கள் ஒரு நாள் முழுவதும் செய்யும் வேலையை நான் இரண்டு மணி நேரத்தில் முடித்துவிட்டு மீதி நேரம் முழுவதும் சோம்பிக்கழிப்பேன். அப்போது என்ன செய்வீர்கள் என்று கேட்காதீர்கள். அது பெரிய அரசு இரகசியம். அதை வெளியிட்டால் அரசு கவிழ்ந்து விடும்.

சரி. இதெல்லாம் இப்ப என்னத்துக்குன்னு கேக்கறீங்களா? ஒரு பதிவில படிச்சேன். மூணு நாளு பதிவு எழுதலீன்னா அந்தப்பதிவரை எல்லோரும் மறந்து விடுவாங்கன்னு. அதுக்காகத்தான் இந்த பதிவு. நாலு நாள் கம்ப்யூட்டர் ரிப்பேர். இன்னும் நாலு நாளைக்கு கல்யாணம். அதனால கேதார் பயணக்குறிப்புகள் தாமதம்.

ஆகவே இந்த மொக்கைப்பதிவு.

வாழ்க மொக்கைப் பதிவர்கள்.

22 கருத்துகள்:

 1. இதுக்கு நீங்க சும்மாவே இருந்திருக்கலாம். நான் சும்மா சொன்னேன்.........

  பதிலளிநீக்கு
 2. கலாநேசன் said:

  //இதுக்கு நீங்க சும்மாவே இருந்திருக்கலாம். நான் சும்மா சொன்னேன்.........//

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கலாநேசன்.

  உங்கள் நகைச்சுவையை ரசிக்கிறேன்.

  இரும்பு புடிச்சவன் கையும் சிரங்கு பிடிச்சவன் கையும் சும்மா இருக்காதுங்கறதைக்
  கேள்விப்பட்டிருப்பீங்க. அது கூட "பதிவெழுதறவன் கையும்" அப்டீங்களதையும் சேத்தீக்கலாம்.

  பதிலளிநீக்கு
 3. சாமி அண்ணே! உங்க நகைசுவை எப்பவுமே டாப்பு! அந்த "அரசு ரகசியம்" சொல்லி மத்தவங்களுக்கு வெச்சிடாதீங்க ஆப்பு!

  நான் உங்க தீவிர ரசிகன். இப்பத்தான் புதுசா கடை திறந்திருக்கேன். கடைக்கு வாங்க! சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு படிச்சு பாத்து சொல்லுங்க! வருவீங்க இல்ல?

  பதிலளிநீக்கு
 4. ஒரு வகையில பதிவுகள படிச்சிட்டு மட்டும் இருக்குறதுதான் சுகமோ ..?

  பதிலளிநீக்கு
 5. //ஆகவே இந்த மொக்கைப்பதிவு.//

  ஐயா இது மொக்கை பதிவு இல்லை...இல்லை..இல்லை...

  பதிலளிநீக்கு
 6. சும்மா சொல்லப் படாது.ரொம்ப நல்லாவே இருந்தது.
  சும்மா சொல்லலை.. நிஜமாவே சொல்றேன்!

  அன்புடன்..
  ஆர்.ஆர்.ஆர்

  பதிலளிநீக்கு
 7. சும்மா இருக்க ஆசை தான்....வயிற்றுக்கு எதாவது பதில் வைத்து இருக்கிறர்களா இதை சொன்னவர்கள் ?

  பதிலளிநீக்கு
 8. //Lables:சும்மா//
  சார்- சும்மாதான் படிச்சேன்.
  சும்மா சொல்லக்கூடாது-
  சும்மாவே எழுதியிருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 9. என்னது நானு யாரா சொன்னது;

  //சாமி அண்ணே! உங்க நகைசுவை எப்பவுமே டாப்பு! அந்த "அரசு ரகசியம்" சொல்லி மத்தவங்களுக்கு வெச்சிடாதீங்க ஆப்பு!//

  ஏதோ அந்த மாதிரி நெற்றி வேர்வை நிலத்தில் விழ பாடுபட்டதனாலதான் 76 வயசுலயும் பதிவு எழுதிக்கிட்டு இருக்கிறேன் அப்பு.

  அப்டி பாடுபட்டதெயெல்லாம் பதிவுல போடோணும். எப்படியும் இன்னும் அஞ்சு வருசத்துக்குள்ள போட்டுடுவேன். சின்னதுக எல்லாம் படுச்சு பொளச்சுக்கிடட்டுமே.

  //நான் உங்க தீவிர ரசிகன். இப்பத்தான் புதுசா கடை திறந்திருக்கேன். கடைக்கு வாங்க! சரக்கெல்லாம் எப்படி இருக்குன்னு படிச்சு பாத்து சொல்லுங்க! வருவீங்க இல்ல? //

  வந்து பாத்துட்டனுங்க.

  தீவிர ரசிகன்னு சொல்றீங்க, எதாச்சும் தீக்குளிச்சுட மாட்டீங்களே? வேணுமின்னா பாலாபிஷேகம் பண்ணுங்க. எங்கூட்டுக்கு தெனம் ஒரு லிட்டர் போதுமுங்க.

  பதிலளிநீக்கு
 10. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது:

  //ஒரு வகையில பதிவுகள படிச்சிட்டு மட்டும் இருக்குறதுதான் சுகமோ ..//

  இது மட்டும் இல்ல செந்தில், சொகத்துக்கு வேற நெறய வளிக இருக்கு. சொன்னா சிறுசுகளையெல்லாம் கெடுக்குறான் இந்தக் கெளவன்னு போலீஸ் புடிச்சுட்டுப்போயிடும்.

  பதிலளிநீக்கு
 11. ஜெய்லானி சொன்னது:

  //ஐயா இது மொக்கை பதிவு இல்லை...இல்லை..இல்லை...//


  நன்றி, ஜெய்லானி. இல்லைன்னு மூணு தடவை சொல்லீருக்கறதுதான் எங்கயோ ஒதைக்குது.

  பதிலளிநீக்கு
 12. ஆர்.ஆர்.ஆர். சொன்னது:

  சும்மா சொல்லப் படாது.ரொம்ப நல்லாவே இருந்தது.
  சும்மா சொல்லலை.. நிஜமாவே சொல்றேன்!

  அன்புடன்..
  ஆர்.ஆர்.ஆர்//

  நெஜமாவா :)-

  பதிலளிநீக்கு
 13. ssk said:

  //சும்மா இருக்க ஆசை தான்....வயிற்றுக்கு எதாவது பதில் வைத்து இருக்கிறர்களா இதை சொன்னவர்கள் ?//

  இப்படி சொன்ன காலத்துல வயிற்றுப்பாட்டுக்கு கவலை இல்லாமல் இருந்த காலம். ராஜாக்கள் அவர்களுக்காகவே சத்திரங்கள் கட்டி வைத்திருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 14. ராம்ஜி யாஹு, நிஜாமுதீன்,
  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. ///தீவிர ரசிகன்னு சொல்றீங்க, எதாச்சும் தீக்குளிச்சுட மாட்டீங்களே? வேணுமின்னா பாலாபிஷேகம் பண்ணுங்க. எங்கூட்டுக்கு தெனம் ஒரு லிட்டர் போதுமுங்க.///

  பாலபிஷேகம் செஞ்சா, பால்லெல்லாம் கீழ இல்ல போகுங்க ஐயா! அது Waste தானே!

  உங்க பதிவுகளை படிச்ச பின்னாடி, உங்க ரகிக பட்டாளத்துக்கு, சிரிச்சி சிரிச்சி வயிறு வலி வர்றதா தினம், நம்ப தகுந்த வட்டாரத்தில இருந்து எனக்கு தகவல் வந்தவண்ணம் இருக்கு.

  நான் வேணா, அப்படி வயிறு வலி வராம இருக்க, இயற்கை மருத்துவத்தில என்ன வழின்னு ஒரு பதிவு எழுதி போட்டுடறேன். எப்படிங்க ஐயா, நம்ப ஐடியா!

  கூப்பிட்டதும், நம்ப கடை பக்கம் வந்து, பதிவ படிச்சு கருத்து சொன்னதுக்கு நன்றீங்க! உங்க ஆதரவை, தொடர்ந்து தரணும்னு கேட்டுகிறேனுங்க!

  பதிலளிநீக்கு
 16. //நான் ஒரு நல்ல சோம்பேறி//

  கெட்ட சோம்பேறின்னு வேற ஒண்ணு இருக்கா?

  //இன்னும் நாலு நாளைக்கு கல்யாணம்//

  இன்னுமா?

  பதிலளிநீக்கு
 17. //தன்னைப்பற்றி அறியாதவர்களிடம் தன்னைப்பற்றி சொல்வது தற்புகழ்ச்சி ஆகாது//

  அண்மையில்தான் இதைப்பற்றி சிந்தித்தேன், நன்னூலில்
  சொல்லப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 18. உலகத்துலயே சும்மா இருக்கறதுதான் கஷ்டமான வேலை! அது நம்மால முடியாது! சீக்கிரம் உங்கள் பத்ரி-கேதார் பயணம் பற்றி எழுதுங்கள் - இல்லைன்னா உங்கள சும்மா விடமாட்டோம்!!

  வெங்கட்.

  பதிலளிநீக்கு
 19. வெங்கட்-நாகராஜ் சொன்னது:

  //உலகத்துலயே சும்மா இருக்கறதுதான் கஷ்டமான வேலை! அது நம்மால முடியாது! சீக்கிரம் உங்கள் பத்ரி-கேதார் பயணம் பற்றி எழுதுங்கள் - இல்லைன்னா உங்கள சும்மா விடமாட்டோம்!!
  வெங்கட். //

  நடுவுல ஒரு பவர் யூனிட் பிரேக்டவுன். நாலைஞ்சு கல்யாணங்கள். சும்மா இருந்தா நம்ம பிளாக்கை ஓரம் கட்டீடுவாங்க. அதுக்காகத்தான் சும்மா ஒரு பதிவுங்க. கேதார் யாத்திரை வந்துகொண்டே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 20. என்னது நானு யாரா? சொன்னது:

  //பாலபிஷேகம் செஞ்சா, பால்லெல்லாம் கீழ இல்ல போகுங்க ஐயா! அது Waste தானே! //

  தம்பி,நான் சொன்னத நீங்க சரியாப்புரிஞ்சிக்கல. சாமிக்கு பாலபிஷேகம் பண்ண பால் கொண்டு போறீங்க, நீங்களா அபிஷேகம் பண்றீங்க, அய்யரு கிட்டதானே கொடுக்கறீங்க.

  அந்த மாதிரி பாலைக்கொண்டுவந்து எங்கூட்ல கொடுத்துட்டீங்கன்னா அபிஷேகம் நாங்களே பண்ணீக்குவமுங்க. என்ன, மேல ஊத்தறதுக்குப் பதிலா உள்ள ஊத்திக்குவோம்.

  பதிலளிநீக்கு