ஞாயிறு, 22 ஆகஸ்ட், 2010

அநியாயம், அக்கிரமம், இதைக்கேட்பாரில்லையா?

டிஸ்கி: இந்தப்பதிவு பெண்களுக்கு எதிராகப் போடப்பட்ட ஆணாதிக்கப்பதிவு இல்லை என்று சொல்லிக்கொள்கிறேன்.



திரட்டிகளில் பதிவுகளை மேய்வது என்னுடைய ஒரு பொழுது போக்கு. கடந்த சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி? வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி? இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.

ஆகவே பெண்கள் சமையல் குறிப்புகள் எழுதுவதற்குத்தான் லாயக்கு என்று அவர்களே முடிவு எடுத்துவிட்டார்கள். இதில் ஆண்கள் சொல்வதற்கோ, செய்வதற்கோ என்ன இருக்கிறது. ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்.

அடுத்தது. ஏதோ பெண்களுக்கு மட்டும்தான் சமையற்கலையை ஒட்டுமொத்த குத்தகைக்கு விட்டமாதிரி தெரிகிறது. இது மிகவும் தவறான எண்ணம். ஆண்களுக்கும் சமைக்கத் (பெண்களைவிட நன்றாக) தெரியும். பதிவர் ஜெய்லானி போட்ட சமையல் குறிப்பை எல்லோரும் பார்த்திருப்பீர்கள். அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன். (பின்னூட்டங்களைப் பார்த்துவிட்டு ஒரு முடிவு எடுக்கிறேன்).

26 கருத்துகள்:

  1. சமைத்து அசத்துங்கள். வேறு பல தளங்களிலும் பெண்கள் எழுதுகிறார்கள். அப்புறம் அதென்ன ஆணாதுக்கப்பதிவு??

    பதிலளிநீக்கு
  2. விவசாயி ,வேளாளர், பட்டமும் உண்டு.
    மேய்ந்து வருவது சரிதான் .திருமண விழாவுக்கு சமைப்பது பெண் இல்லை .ஓய்வு உண்டு அதனால் நன்றாக சமையுங்கள் . எனக்கும் அனுப்பி வையுங்கள்

    பதிலளிநீக்கு
  3. //ஏதாவது சொல்லப்போனால் ஆணாதிக்கவாதிகள் என்ற பட்டம் சூட்டுவார்கள்//

    சரியா பாயிண்டை பிடிச்சிட்டீங்க ..கோ அஹட் ..


    உதாரணத்துக்கு என்னை காட்டி விட்டீங்களே.. கூட்டு சதின்னு யாராவது வந்து கும்மிரப்போறாங்க (( நா என்னைய சொன்னேன் ))

    பதிலளிநீக்கு
  4. உங்க சமையலை ருசிக்க ( ??? ) நானும் ஆவலா இருக்கேன் ..

    பதிலளிநீக்கு
  5. // அதைத் தொடர்ந்து நானும் சமையல் குறிப்புப் போடலாம் என்று இருக்கிறேன்//

    தாராளமா:)!

    //இது மிகவும் தவறான எண்ணம்.//

    ஆமாமாம். டிபார்மெண்டை மாற்றிக்கலாம்னு சொல்ல மாட்டேன். அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். ஹாய்யா சரிங்கிறோம்:)!

    பதிலளிநீக்கு
  6. கலாநேசன் சொன்னது:

    //சமைத்து அசத்துங்கள். வேறு பல தளங்களிலும் பெண்கள் எழுதுகிறார்கள். அப்புறம் அதென்ன ஆணாதுக்கப்பதிவு?? //

    நிஜமாகவே நல்லா சமைப்பேனுங்க.

    பதிலளிநீக்கு
  7. Nidurali said:

    //விவசாயி ,வேளாளர், பட்டமும் உண்டு.
    மேய்ந்து வருவது சரிதான் .திருமண விழாவுக்கு சமைப்பது பெண் இல்லை .ஓய்வு உண்டு அதனால் நன்றாக சமையுங்கள் . எனக்கும் அனுப்பி வையுங்கள்//

    நீடூர் எங்க இருக்குதுங்க, பக்கத்தில இருக்கிற ஒரு பெரிய ஊரைச் சொன்னீங்கன்னா கப்புன்னு புடிச்சுக்குவேன். அப்பறம் பாருங்க, தினமும் பார்சல்தான்.

    பதிலளிநீக்கு
  8. ஜெய்லானி சொன்னது:

    //உதாரணத்துக்கு என்னை காட்டி விட்டீங்களே.. கூட்டு சதின்னு யாராவது வந்து கும்மிரப்போறாங்க //

    தாய்க்குலம் அப்படி வந்தா சொல்லியனுப்புங்க. அடி வாங்கறதுக்கு நானும் வந்துடறேன்.

    பதிலளிநீக்கு
  9. யூர்கன் க்ருகியர் சொன்னது:

    //நல்ல முடிவு !//

    இதுக்குத்தான் சேம்சைடு கோல் போடறதுன்னு சொல்றது.

    பதிலளிநீக்கு
  10. ராமலக்ஷ்மி சொன்னது:

    //ஆமாமாம். டிபார்மெண்டை மாற்றிக்கலாம்னு சொல்ல மாட்டேன். அப்படியே எடுத்துக்கொள்ளுங்கள். ஹாய்யா சரிங்கிறோம்:)!//

    பயிந்துக்குவமா, ஒரு கை (ஒரு கை என்ன, ரெண்டு கையிலும்) பார்க்கிறோம்

    பதிலளிநீக்கு
  11. ஆண்கள்தான் நளபாகத்தில் சிறந்தவர்கள் ... அதனால் அவசியம் எழுதுங்கள் ஐயா ..

    பதிலளிநீக்கு
  12. ஐயா! ஒரு நல்ல விஷயத்தை எடுத்து சொல்லி இருக்கீங்க! பெண்கள் சிலர், மாற்று சிந்தனையோட இருக்காங்க. நல்லா கதை, கவிதைன்னு எழுதி அசத்துறாங்க!

    ஆனா பெருவாரியன பெண்கள், நீங்க சொன்ன மாதிரியே தான் இருக்காங்க. Role Playing - ன்னு சொல்லுவாங்க இதை!

    தன் ரோல் இது தான். அதுக்கு ஏத்த மாதிரி நடந்துகிட்டா போதும். இதுக்கு மேல நாம புதுசா ஒன்னும் செய்ய வேணாம்னு விட்டுடறாங்க.

    இதனால தான் பல பிரச்சனைகள் வர்றது. ஜாதி, பிரச்சனையாகட்டும், வரதட்சனை கொடுமையாகட்டும், தன் ரோலை தாண்டி சிந்திக்காத விளைவுகளே!

    மனம் விரியட்டும்! மனிதம் மளரட்டும்!!! புது சிந்தனையை விதைச்சி இருக்கீங்க! நீங்க சமைச்சு அசத்துங்க! நாங்க சாப்பிட்டு அசத்தறோம் (நீங்க சமைச்சு போடற பதிவ சொன்னேன்)

    பதிலளிநீக்கு
  13. /எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி? வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி?//

    என் பதிவுகள் நீங்க படிக்கிறதில்லைன்னு தெள்ளத் தெளிவாத் தெரியுது!!

    பதிலளிநீக்கு
  14. சொல்லிக் கொடுங்கள், கற்றுக் கொள்கிறோம்...!
    நன்றி.

    பதிலளிநீக்கு
  15. ஹுஸைனம்மா சொன்னது:

    //என் பதிவுகள் நீங்க படிக்கிறதில்லைன்னு தெள்ளத் தெளிவாத் தெரியுது!! //

    இல்லீங்க. உங்க பதிவுகளைப்
    படிச்சுட்டுத்தான் இருக்கிறேன். பின்னூட்டம் போடறதில்லை. காரணம் பயம் கலந்த மரியாதை. பொதுவா நான் அறிமுகம் இல்லாத பெண்கள்னா கொஞ்சம் ஒதுங்கிப்போகிற சுபாவம்.

    இப்ப நீங்க அறிமுகம் ஆயிட்டீங்க. இனி பாருங்க உங்க பிளாக்குல கலக்கிடறோம்.

    பிளாக் உலகத்துல உங்க மாதிரி பெண்கள் கொஞ்சம் பேர்தான் இருக்கீங்க.

    பதிலளிநீக்கு
  16. பாரதசாரி சொன்னது:

    //start with some sweet dish please... //

    இருக்கிறதிலேயே ஸ்வீட் செய்யறதுதான் ரொம்ப, ரொம்ப சுலபமான சமையலுங்க.

    சர்க்கரை, நெய், அப்பறம் சமையல் ரூம்ல இருக்கற எதாச்சும் மாவு,(எந்த கருமாந்தர மாவாயிருந்தாலும் பரவாயில்லை, மாவு வெள்ளைக்கலர்ல இருக்கோணும், அவ்வளவுதான். சபீனா கிளீனிங்க் பவுடர எடுத்துடக்கூடாது, அது பிரவுன் கலர்ல இருக்கும்) அப்புறம் இன்னொண்ணுங்க, மாவுல கருப்பு, கருப்பா எதாச்சும் இருக்குதான்னு பாத்துக்கோணும். அதையும் சேத்திப்பண்ணினா, நான்-வெஜ் ஸ்வீட் கெடைக்கும்.

    இவ்வளவுதானுங்க வேணும். ஸ்வீட் ரெடியாயிருமுங்க.

    கோலப்பொடி வெள்ளையாத்தான் இருக்கும், ஆனா அது மணலாட்டம் இருக்கும், அதனால அதை தவறுதலா எடுக்க சான்ஸ் இல்லை.

    பதிலளிநீக்கு
  17. K.R.P.செந்தில் said:

    //ஆண்கள்தான் நளபாகத்தில் சிறந்தவர்கள் ... அதனால் அவசியம் எழுதுங்கள் ஐயா .. //

    ஆனா அதை பெண்கள் ஒத்துக்கொள்வதே இல்லை. நாங்க இல்லைன்னா நீங்க பட்டினதான் அப்படீங்கிற ரேஞ்சுலதான் இருக்காங்க.

    ஒரு டிப்ஸ் வேணுமே செந்தில். இனட்லியில் உங்களை பாலோ பண்ணனும்னா என்ன செய்யவேண்டும்?

    பதிலளிநீக்கு
  18. சமையல் நல்லா இருந்தா “நள்பாகம்” அப்படின்னு தான் சொல்றாங்க - அதுமாதிரி நீங்களும் அசத்துங்க!

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  19. வெங்கட் நாகராஜ் சொன்னது:

    //சமையல் நல்லா இருந்தா “நள்பாகம்” அப்படின்னு தான் சொல்றாங்க - அதுமாதிரி நீங்களும் அசத்துங்க!
    வெங்கட்.//

    அசத்திப்போடறனுங்க.

    பதிலளிநீக்கு
  20. ///அப்புறம் இன்னொண்ணுங்க, மாவுல கருப்பு, கருப்பா எதாச்சும் இருக்குதான்னு பாத்துக்கோணும். அதையும் சேத்திப்பண்ணினா, நான்-வெஜ் ஸ்வீட் கெடைக்கும்.///

    ரொம்ப தமாஷ்! ஹ!ஹா!ஹா!

    எப்படிங்க ஐயா! என்ன மாதிரி காமெடி செய்றீங்க! இது, பிறவில இருந்தே இப்படி தானா? ரொம்ப ரசிச்சி சிரிச்சேன்.

    புது பதிவு போட்டுட்டேன். படிச்சு பாத்து கருத்து சொல்லுங்க!

    பதிலளிநீக்கு
  21. எவ்வளோவ் சமையல் கலை புத்தகங்கள் வந்திருக்கு. எல்லாத்துலேயும் சொல்லி வைச்சா மாதிரி தலைப்பு 'சமைத்துப் பார்' தான் இருக்கு.
    சாப்பிட்டுப் பார்..ருசித்துப் பார்னு ஏனுங்க இல்ல..
    அநியாயம்..அக்கிரமம் இதைக் கேட்பாரில்லையா?

    பதிலளிநீக்கு
  22. “சில நாட்களாக நான் பார்த்தது என்னவென்றால் எந்தப்பெண் பதிவரின் தளத்துக்கு சென்றாலும் அவர்கள் எழுதுவது கத்தரிக்காய் சாம்பார் வைப்பது எப்படி? வெண்டைக்காய் பொரியல் செய்வது எப்படி? இப்படியே போய்க் கொண்டிருக்கிறது.”/

    கருத்துக்களும் கவிதைகளும் சிந்தனையுமாய் ஜொலிக்கின்ற பெண்களின் வலைத்தளங்களை நீங்கள் பார்த்ததேயில்லை என்று தெரிகிறது!

    அப்புறம் சமையல்களுக்கென்று வலைத்தளங்களில் எழுதுவது அத்தனை சுலபமானது என்றா நினைத்து விட்டிர்கள்? இருப்பதிலேயே மிகவும் சிரமமான கலை சமையல் கலைதான். இதில் பாராட்டு கிடைப்பது மிக மிக கஷ்டம்!

    இன்னும் புராணங்களிலேயே இருந்தால் எப்படி? கலியுக நளன்களும் பீமன்களும் அவரவர் இல்லங்களின் சமையலறையை குத்தகை எடுத்துக்கொண்டு இல்லத்தரசிகளுக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கலாமே?

    பதிலளிநீக்கு
  23. மனோ சாமிநாதன் சொன்னது:

    //கருத்துக்களும் கவிதைகளும் சிந்தனையுமாய் ஜொலிக்கின்ற பெண்களின் வலைத்தளங்களை நீங்கள் பார்த்ததேயில்லை என்று தெரிகிறது!//

    இல்லைங்க, இனி பார்கிறேனுங்க

    //அப்புறம் சமையல்களுக்கென்று வலைத்தளங்களில் எழுதுவது அத்தனை சுலபமானது என்றா நினைத்து விட்டிர்கள்? இருப்பதிலேயே மிகவும் சிரமமான கலை சமையல் கலைதான். இதில் பாராட்டு கிடைப்பது மிக மிக கஷ்டம்!//

    ஆமாங்க. நான் ஏதோ சும்மா தமாசுக்கு எழுதிப்போட்டனுங்க.

    //இன்னும் புராணங்களிலேயே இருந்தால் எப்படி? கலியுக நளன்களும் பீமன்களும் அவரவர் இல்லங்களின் சமையலறையை குத்தகை எடுத்துக்கொண்டு இல்லத்தரசிகளுக்கு கொஞ்சமாவது ஓய்வு கொடுக்கலாமே?//

    பண்ணீட்டு இருக்கறனுங்க.

    பதிலளிநீக்கு
  24. உண்மையிலேயே ஒரு வெடிச்சிரிப்புச் சிரித்தேன். உங்கள் மறுமொழியைப் பார்த்தது :-)

    பதிலளிநீக்கு