வியாழன், 2 செப்டம்பர், 2010

ஒரு லைட் பல்பு மாற்ற 35000 ரூபாய்



நம்பினால் நம்புங்கள், நம்பாவிட்டால் போங்கள். ஆனால் இது உண்மை. வீட்டில் ஒரு லைட் பல்பு மாற்ற 35000 ரூபாய் செலவு.

அமெரிக்க சஞ்சிகைகளில் அடிக்கடி வரும் ஒரு பிரபலமான கேள்வி. ஒரு லைட் பல்பு மாற்றுவதற்கு எவ்வளவு பேர் வேண்டும் என்று கேட்பார்கள். இதில் ஏதோ ஒரு ஜோக் இருக்குதுன்னு நம்புகிறேன். ஆனா அது என்னன்னு என்னுடைய மரமண்டைக்கு இன்னமும் புரியவில்லை. தெரிந்தவர்கள் யாராவது சொன்னால் ஆயுளுக்கும் அவர்களுக்கு நன்றியுடன் இருப்பேன். பயப்படாதீங்க. என்னுடைய ஆயுள் அவ்வளவு ஜாஸ்தியா இருக்காது. (76 வயசுக்காரன் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போகிறான்?)

நம்ம சப்ஜக்ட்டுக்கு வருவோம். நேற்று என் நண்பர்  (என் வயசுதான்) ஒருவரை எலும்பு முறிவு ஆஸ்பத்திரியில் பார்த்தேன். என்ன இங்க வந்திருக்கீங்க, என்ன சமாசாரம் என்று விசாரித்தேன்.

அவர் சிரித்துவிட்டு வீட்டில் ஒரு பல்பு மற்றினேன் என்றார்.

அதுக்கு இங்க எதுக்கு வந்திருக்கீங்க என்றேன்.

அவர் அது பாருங்க, ஒரு ஸ்டூல் மேல ஏறி நின்னு பல்பு மாத்தினேனுங்களா, அந்த ஸ்டூல் சாய்ந்து நான் கீழே விழுந்துட்டேன். இடுப்பு எலும்பில் விரிசல் ஏற்பட்டு விட்டது. இங்க வந்து அதுக்கு ஒட்டுப்போட்டு ரிப்பேர் செய்தேன். இன்னிக்கு செக்கப்புக்கு வந்திருக்கேன் என்றார்.

அடடா, அப்படியா ஆய்ட்டுது, வருந்துகிறேன் என்று சொல்லிவிட்டு, சரி, இதுக்கு எவ்வளவு செலவு ஆச்சு என்று கேட்டேன்.

அவர் முப்பத்தியைந்தாயிரம் ஆச்சு என்றார்.

இப்ப கணக்கு புரிஞ்சுதுங்களா?

என் வீட்டிலும் ஒரு பல்பு ப்யூஸ் ஆகிவிட்டது. முப்பத்தியைந்தாயிரம் ரூபாய் வேண்டும். பதிவர்கள் யாராவது உதவ முடியுமா?

38 கருத்துகள்:

  1. Good Joke Sir. I appreciate your efforts in typing and being social even in this age. Keep up!!

    பதிலளிநீக்கு
  2. மகன்கள், மகள்கள் இல்லாமல் தனியே வசிக்கும் வயசானவங்களை பத்தி எழுதி இருக்கீங்க. சீரியஸ் விஷயத்தை கூட உங்க நகைசுவை டச்சோடு அருமை.

    -----------------------------------

    நண்பர்களே! மருந்தில்லா இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

    என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

    நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
    ----------------------------------

    நீங்களும் வாங்க ஐயா! புது பதிவுகளை போட்டிருக்கேன்.

    பதிலளிநீக்கு
  3. ஒரு
    டியூப் லைட்டே
    பல்பு மாற்றுகிறதே!

    (அய்யா கோவிச்சுக்கக் கூடாது, இது 35000 செலவு செய்து பல்பு மாத்துரவங்களுக்கு...)

    பதிலளிநீக்கு
  4. இனிமேல் யாரும் பல்பு மாத்தாதீங்க! ஒரு எலக்ட்ரீஷியனை அழைச்சிட்டு வந்து ஐம்பது ரூபா கொடுத்தா, அத்தோட முடிஞ்சிடும்! :-)

    அந்த பல்பு மாத்துற ஜோக்கு எனக்கும் புரியலே ஐயா! நானும் அகில உலக மரமண்டைகள் சங்கத்துலே மெம்பராச் சேர்ந்துக்கறேனே!

    பதிலளிநீக்கு
  5. Ha ha!!Nice!Aanalum avar konjam jaakirathaiya irunthirukkalaam!!!selava vidunga!Avaroda vali romba perisillaya?

    பதிலளிநீக்கு
  6. //. பயப்படாதீங்க. என்னுடைய ஆயுள் அவ்வளவு ஜாஸ்தியா இருக்காது. (76 வயசுக்காரன் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போகிறான்?)
    //

    அதிரடியா தலைப்பு வைக்கிறீங்க ம்ம்ம்ம்


    ஆயுட்காலம் என்பது வயதை வைத்து அல்ல. நீண்ட நாட்கள் வாழ்வீர்கள் ஆயிரம் -பத்தாயிரம் பதிவுகள் எழுதுவீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. :)). வில்லங்கமான பதிலுக்கான கேள்வியாச்சுங்களே.

    பதிலளிநீக்கு
  8. மனுஷனுக்கு தன்னம்பிக்கை வேனும் சார் .. வயசை அடிக்கடி நினைக்காதீங்க . நினைக்காட்டி நல்ல ஜாலியா போகும் , அப்படி நினைச்சா அது கஷ்டமா போகும் அவ்வளவுதான்...!!

    பதிலளிநீக்கு
  9. பெரியவர்கள் இதுபோன்ற வேலைகளுக்கு தகுந்த நபர்களைக் கொண்டு செய்யவேண்டும்.
    தேவை இல்லாமலோ ரிஸ்க் எடுக்கவேண்டுவதில்லை. பணம் மிச்சம் பிடிக்கும் எண்ணத்தில் ஏதாவது செய்து
    பின்னர் அது தவறிப்போய் இவ்வாறு விபத்தில் முடிகிறது. இதை தவிர்க்கலாமே.
    அது சரி , உங்களுக்கு வயசு ஆயிற்று என்று நான் நினைக்க வில்லை.
    மனதளவில் நீங்கள் இளமையாய் இருக்கும் சான்றுகள் பல் உண்டு.
    இளசுகளுக்கு தாசி அபரஞ்சி கதையை வலையில் எழுதி புகழ் பெற்றவராயிற்றே! :)

    பதிலளிநீக்கு
  10. பெரிசு! (எனக்கு வயசு 55 ),
    பல்பு ஜோக்:
    1 பல்ப மாத்த எத்தனை வலையர்கள் தேவை?
    45
    ஒருவர் மாற்றிவிட்டு வலயத்தில் இடுகை இடுவதற்கு
    14 நபர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட அனுபவத்தை பின்னுட்டம் இடுவதற்கு
    29 நபர்கள் இடுகையில் உள்ள இலக்கணப்பிழைய சுட்டி காண்பிக்க
    ஆக மொத்தம் 45 வலையர்கள் தேவை ஒரு பல்ப மாத்த

    பதிலளிநீக்கு
  11. சார்வாள் சார்வாள், எங்க தெருவுல ரெண்டுநாளா லைட்டு எரியல, கொஞ்சம் வந்து பாருங்க, பஞ்சாயத்து போர்டுல சொல்லி ஏதாவது வாங்கிக்கலாம்!

    பதிலளிநீக்கு
  12. நான் நிறைய பல்ப் வாங்கி இருக்கேன். வேணா ஒரு கூடை அனுப்பி வைக்கிறேன்:)

    பதிலளிநீக்கு
  13. சார்..நல்ல நகைச்சுவை மிளிரும் பதிவு .// இன்னும் எவ்வளவு நாள் இருப்பேன்..//. என்ன சார் இதெல்லாம்.அதெல்லாம் கிழவர்கள் பேச்சல்லவா! எழுத்திலும், கருத்திலும் இளமை கொழிக்கும் நீங்கள் சொல்லலாமா? வயசில் சதமடித்துவிட்டு, "நூறு வயசில் ஒரு யோசனை"ன்னு... பதிவு போடப் போறீங்க பாருங்க!

    பதிலளிநீக்கு
  14. அன்னு said:

    //Good Joke Sir. I appreciate your efforts in typing and being social even in this age. Keep up!!//

    ரொம்ப நன்றி, அன்னு.

    பதிலளிநீக்கு
  15. நண்டு நொரண்டு ஈரோடு,
    என்னது நான் யாரா?
    கலாநேசன்,
    சைவகொத்தபரோட்டா,

    ஆகிய அன்புள்ளங்களுக்கு,

    நன்றி,நன்றி,நன்றி,நன்றி,

    பதிலளிநீக்கு
  16. சேட்டைக்காரன் சொன்னது;

    //அந்த பல்பு மாத்துற ஜோக்கு எனக்கும் புரியலே ஐயா! நானும் அகில உலக மரமண்டைகள் சங்கத்துலே மெம்பராச் சேர்ந்துக்கறேனே!?//

    என்னங்க இது தெரியலயா? அநியாயமா இருக்கு?

    பதிலளிநீக்கு
  17. தென்றல்,
    பிரியமுடன் பிரபு,
    யாசவி,
    உங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வானம்பாடிகள் சொன்னது:

    //:)). வில்லங்கமான பதிலுக்கான கேள்வியாச்சுங்களே.//

    அப்படீன்னா அதைக் கட்டாயம் தெரிஞ்சுக்கோணுமுங்களே! ஏதாச்சும் ஒரு க்ளூ கொடுக்கப்படாதுங்களா? ராத்திரியெல்லாம் தூங்கவே இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  19. ஜெய்லானி சொன்னது:

    //மனுஷனுக்கு தன்னம்பிக்கை வேனும் சார் .. வயசை அடிக்கடி நினைக்காதீங்க . நினைக்காட்டி நல்ல ஜாலியா போகும் , அப்படி நினைச்சா அது கஷ்டமா போகும் அவ்வளவுதான்...!!//

    அது பாருங்க ஜெய்லானி, "ஜாலி" அப்பப்ப ஓவராப்போய்டுதுங்க. அதுக்கு பிரேக் போடத்தான் வயசை அடிக்கடி சொல்லிக்கிடறதுங்க. வேறொண்ணுமில்லீங்க, நான் இன்னும் யூத்தாத்தான் பீல் பண்றனுங்க.

    பதிலளிநீக்கு
  20. கக்கு மாணிக்கம், ஜெய்லானிக்கு நான் போட்டிருக்கும் எதிர் வினையைப் பார்க்கவும். இன்னும் என்னுடைய இளமையைப் பற்றி சந்தேகம் இருந்தா டாஸ்மாக்குக்கு வாங்க. "நீயா-நானா" போட்டி வச்சுடுவோம் :)- எப்படீ?

    பதிலளிநீக்கு
  21. விஷ்ணு சொன்னது:

    //பெரிசு! (எனக்கு வயசு 55 )//

    அய்யோ, பெரிசுன்னு கூப்பிடாதீங்கையா, என்னமோ கெழவனைக்கூப்பிடற மாதிரி இருக்குது.

    "சீனியர்" னா கொஞ்சம் கவுரதயா இருக்கும். பாத்துக்குங்க, உங்களுக்கும் ஒரு காலம் வரும்???

    பதிலளிநீக்கு
  22. ப.ரா. சொன்னது:

    //சார்வாள் சார்வாள், எங்க தெருவுல ரெண்டுநாளா லைட்டு எரியல, கொஞ்சம் வந்து பாருங்க, பஞ்சாயத்து போர்டுல சொல்லி ஏதாவது வாங்கிக்கலாம்//

    அதென்னய்யா "சார்வாள்". இத எங்கய்யா புடிச்சீங்க. அவாள்லாம் வேண்டாம், சும்மா "சார்" னாலே போதும்.

    ஆமா, உங்க போட்டோவ ஹரித்துவார்ல புடிச்சு என்'ற பதிவுல போட்டனே, பாத்தீங்களா? ஒரு தேங்க்ஸ் கெடயாதா?

    பதிலளிநீக்கு
  23. ஆர் கோபி சொன்னது:

    //நான் நிறைய பல்ப் வாங்கி இருக்கேன். வேணா ஒரு கூடை அனுப்பி வைக்கிறேன்:)//

    ஸகூல்ல வாங்குவமே, அந்த பல்புகளா, கோபி, அது எங்கிட்டயே நெறய இருக்குதுங்களே, உங்களுக்கு வேணும்னாலும் அனுப்பறேன்.

    பதிலளிநீக்கு
  24. மோகன்ஜி சொன்னது:

    //நூறு வயசில் ஒரு யோசனை//

    நல்ல தலைப்பா இருக்கே, எங்கயாச்சும் ரிஜிஸ்டர் பண்ணி வச்சுக்கணும், வேற யாராச்சும் யூஸ் பண்ணீரப்படாது பாருங்க. இந்த மாதிரி தலைப்புகளை ரிஜிஸ்டர் பண்றதுக்குன்னு ஒரு அமைப்பு நம்ம பதிவுலகில கண்டிப்பா வேணுமுங்க.

    ரொம்ப நன்றி, மோகன்ஜி.

    பதிலளிநீக்கு
  25. நீங்க ஆனியயையே சாரி பல்பையே மாத்தவேனா சார்.

    பதிலளிநீக்கு
  26. ராஜவம்சம் சொன்னது:

    //நீங்க ஆனியயையே சாரி பல்பையே மாத்தவேனா சார்.//

    நீங்க சொன்னதுக்கப்புறம் ஆணி, பல்பு, லொட்டு, லொசுக்கு, ஒண்ணையும் தொடமாட்டேனே. நாரு பேரு நல்ல வார்த்தை சொன்னா கேட்டுக்கோணும், அதான் நல்ல பிள்ளைக்கு அழகு.

    பதிலளிநீக்கு
  27. நல்ல நகைச்சுவையோட சொல்லியிருக்கீங்க.. நல்லாயிருந்தது பதிவு..

    பதிலளிநீக்கு
  28. உங்களுக்கு உன்மையிலே பல்ப் மாத்தனும்னா சொல்லுங்க நான் மாற்றி தருகிறேன்.(பல்ப் எனக்கு அல்ல வீட்டுக்குனு எல்லாம் மொக்கை போட கூடாது.)

    பதிலளிநீக்கு
  29. /// (76 வயசுக்காரன் இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கப்போகிறான்?)///
    அப்படியெல்லாம் சொல்லாதீங்க ..நீங்க இன்னும் 100 வருஷம் வரைக்கும் இருப்பீங்க ..

    பதிலளிநீக்கு
  30. //இங்க வந்து அதுக்கு ஒட்டுப்போட்டு ரிப்பேர் செய்தேன். இன்னிக்கு செக்கப்புக்கு வந்திருக்கேன் என்றார்.///

    அது சரி .. கீழ விழுந்தாலும் நக்கல் போகல பாருங்க .. ஓட்டுப்போட்டு ரிப்பேர் செய்யுறாராம்.. உங்க வீட்டுலயும் பல்பு போயடுட்சா..?

    பதிலளிநீக்கு
  31. நல்ல பதிவு அய்யா. தனியா இருக்கிற வயசானவங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  32. யதார்த்தமான நகைச்சுவை இழையோடும், சிந்திக்க வைக்கும் பதிவு!

    மேலோட்டமாக நகைச்சுவையாக இருந்தாலும் உள்ளுக்குள் ஆழ்ந்த அர்த்தமும் சிறிது சோகமும் இருக்கிறது ஒரு சின்ன தீப்பொறியில் இருக்கும் வீரியம் போல!

    பதிலளிநீக்கு
  33. மனோ சாமிநாதன் சொன்னது:

    //யதார்த்தமான நகைச்சுவை இழையோடும், சிந்திக்க வைக்கும் பதிவு!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, மனோ சாமிநாதன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  34. ப.செல்வகுமார் சொன்னது:

    //அது சரி .. கீழ விழுந்தாலும் நக்கல் போகல பாருங்க .. ஓட்டுப்போட்டு ரிப்பேர் செய்யுறாராம்..//

    "இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வது அஃதொப்பதில்"

    கஷ்டம் வரும்போது அதை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் எப்படி சொல்லியிருக்கிறார் பாருங்கள!

    பதிலளிநீக்கு
  35. ப.செல்வகுமார் சொன்னது:

    //அப்படியெல்லாம் சொல்லாதீங்க ..நீங்க இன்னும் 100 வருஷம் வரைக்கும் இருப்பீங்க ..//

    உங்க வாழ்த்துக்கு ரொம்ப ரொம்ப நன்றி செலவகுமார். எனக்கு ஒண்ணும் 100 என்ன, அதுக்கு மேலயும் இருக்கிறதுக்கு ஆட்சேபணை இல்லை. என்ன, வேற குடும்பம் இருந்தா நல்லா இருக்கும் :)-

    பதிலளிநீக்கு