பெரும்பாலான ஆசிரியர்களுக்கு உண்டான ஒரு கெட்ட குணத்தை எவ்வளவு பேர் அறிவீர்கள் என்று எனக்குத்தெரியவில்லை. அது உண்மையிலேயே கெட்ட குணம்தானா என்றும் நிச்சயமாக சொல்வதற்கில்லை. இருந்தாலும் என் மனச்சாட்சி என்னை மிகவும் நச்சரிப்பதால் இந்த உணர்வை வெளியேற்றியே ஆகவேண்டும் என்ற சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளேன். அதற்குத்தான் இந்தப்பதிவு.
நான் ஏறக்குறைய ஒரு இருபது ஆண்டுகள் விவசாய இளநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்திருக்கிறேன். என்னுடைய முப்பதாவது வயதில் இந்த ஆசிரியவேலை ஆரம்பித்தது. என்னுடைய இளம் வயதில் ஒருவன் ஒரு வேலையை நல்ல முறையில் செய்து முடித்தான் என்றால், அவனுடைய பெற்றோர்களோ, ஆசிரியர்களோ அவனைப் பெரிதாகப் பாராட்ட மாட்டார்கள். அவன் செய்த காரியத்தில் குறை ஒன்றும் சொல்லாமல் இருந்தாலே அதைப்பாராட்டு என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் எவ்வளவு நல்ல மார்க்கு வாங்கியிருந்தாலும், "சரி, அடுத்த தேர்வில் இன்னும் அதிக மார்க்குகள் வாங்கு" என்றுதான் சொல்வார்களே தவிர அந்த மார்க்கைப் பாராட்ட மாட்டார்கள்.
இந்த மாதிரி ஏன் பெரியவர்கள் அன்று நடந்துகொண்டார்கள் என்றால், ஒருவனைப் பாராட்டிவிட்டால் அவனுக்கு தலைக்கனம் வந்துவிடும். பிறகு அவன் மெத்தனமாக நடந்து கொள்வான், அது அவன் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது அன்றைய காலத்து கருத்து. ஆகவே பாராட்டு ஒருவனின் முன்னேற்றத்திற்குத் தடையாக அமைந்து விடும் என்பதினால் ஒருவரும் பாராட்டை சம்பந்தப்பட்டவனின் முன்பாகச் சொல்லமாட்டார்கள். அவனில்லாதபோது அடுத்தவர்களிடம் அவனைப்பற்றி உயர்வாகப் பேசுவார்கள். அக்கம்பக்கத்தவர் அவனைப்புகழ்ந்தாலும் கூட அதை பெருந்தன்மையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அவன் என்ன உலகத்தில் யாரும் செய்யாததைச் செய்து விட்டான் எட்றுதான் சொல்வார்களே தவிர அந்த புகழ்வார்த்தைகளை அப்படியே ஏற்றுக்கொண்டவர்கள் அந்தக்காலத்தில் கிடையாது.
வயதானவர்களும் அப்படித்தான் யார் என்ன செய்தாலும் அதில் குறைதான் கண்டுபிடிப்பார்களே ஒழிய ஒரு வார்த்தை கூட நன்றாகச் செய்தாய் என்று வராது. அதனாலேயே இளைஞர்கள் யாரும் வயசானவர்களை மதித்து ஒன்றும் சொலவதில்லை. அப்போதும் என்னை யாரும் மதித்து ஒன்றையும் சொல்வதில்லை என்று புலம்புவார்களே தவிர அதற்கு என்ன காரணம் என்று யோசிக்கமாட்டார்கள்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேனென்றால் எனக்கும் இந்த வியாதி இருக்கிறது. குறிப்பாக ஒரு நல்ல பதிவைப்பார்த்தால் "நல்ல பதிவு" என்று ஒரு டெம்பிளேட் கமென்ட் மட்டும்தான் போட மனது வருகின்றதே ஒழிய, அதை நாலு வார்த்தைகளால் பாராட்டுவோமே என்கிற மனது வரமாட்டேன் என்கிறது. நோய் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டபடியால் அதற்கு வைத்தியம் செய்வது சுலபம்தானே. வைத்தியம் ஆரம்பித்து விட்டேன்.
சரியாச் சொன்னிங்க....(இந்த விசயத்தில் நான் முரண்படுகிறேன்னு தான் கமென்ட் போடணும்னு நினைத்தேன். ஆனா இறுதி வரிகளை படிக்கும் போது கமென்ட் இப்படி மாறிடுச்சு)
பதிலளிநீக்குநீங்களும் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். இப்பவும்
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவுக்கு ஆசிரியராக இருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கிறது.
ஒரு சில விதிவிலக்கான நல்ல மனம் கொண்ட
ஆசிரியர்களும் எனக்கு அமைந்திருக்கிறார்கள்.
ஆக, உங்க இடுகை மிக முக்கியமான செய்தியுடன்
அதாவது 'நீங்கள் மற்ற பதிவர்களின் பதிவுகளைப்
பாராட்டத் தயாராகிவிட்டீர்கள்' என்பதை விளக்குவதாக
இருக்கிறது. ஆகவே, இது நல்ல, மிக நல்ல பதிவு சார்!
கலாநேசன் சொன்னது:
பதிலளிநீக்கு//சரியாச் சொன்னிங்க....(இந்த விசயத்தில் நான் முரண்படுகிறேன்னு தான் கமென்ட் போடணும்னு நினைத்தேன். ஆனா இறுதி வரிகளை படிக்கும் போது கமென்ட் இப்படி மாறிடுச்சு)//
பதிவு போட்ட சூடு ஆறுவதற்குள் கமென்ட் போட்டுவிட்டீர்கள், கலாநேசன். நன்றிகள் பல.
Nizamudeen said:
பதிலளிநீக்கு//நீங்களும் ஆசிரியராக இருந்திருக்கிறீர்கள். இப்பவும்
உங்கள் வலைப்பூவுக்கு ஆசிரியராக இருக்கிறீர்கள்.
நீங்கள் சொல்வதில் உண்மையும் இருக்கிறது.
ஒரு சில விதிவிலக்கான நல்ல மனம் கொண்ட
ஆசிரியர்களும் எனக்கு அமைந்திருக்கிறார்கள்.
ஆக, உங்க இடுகை மிக முக்கியமான செய்தியுடன்
அதாவது 'நீங்கள் மற்ற பதிவர்களின் பதிவுகளைப்
பாராட்டத் தயாராகிவிட்டீர்கள்' என்பதை விளக்குவதாக
இருக்கிறது. ஆகவே, இது நல்ல, மிக நல்ல பதிவு சார்!//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி, நிஜாமுதீன்.
ஆஜர் சார்! :-)
பதிலளிநீக்கு//நோய் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டபடியால் அதற்கு வைத்தியம் செய்வது சுலபம்தானே. வைத்தியம் ஆரம்பித்து விட்டேன்.//
பதிலளிநீக்குஆஹா! ஆஹா! இதைதானே ஐயா, உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்த்தேன். இனி நிறை குறைகளை நன்கு சொல்வீர்கள் என்று நினைக்கின்றேன்.
அப்துல் கலாம் போன்ற சில நல்ல ஆசிரியர்களும் இருக்கிறார்கள் ஐயா! அதனால் தான் ஆசிரியர் பணிக்கே ஒரு பெருமை ஏற்பட்டுள்ளது. நீங்க என்ன சொல்றீங்க ஐயா?
சமரசம் இல்லாமல் எல்லாவிசயங்களையும் நையப்புடைக்கும் உங்கள் தைரிய எழுத்துக்கு என் ராயல் சல்யூட் ஐயா.
பதிலளிநீக்குGood teacher is defeated by his student,good father is defeated by his son.
பதிலளிநீக்குபுது டெம்ப்ளேட் சூப்பர். தமிழ்மணம் வோட்டிங் பட்டன் குறுக்க வருது பாருங்க. கொஞ்சம் சரி பண்ணுங்க. அல்லது அது ஒரு டெக்னிக்கா? படிக்கிறவங்க வோட்டிங் பட்டன கிளிக் பண்ணனும்னு நடுவுல நினைவூட்டுகிறீர்களா:)
பதிலளிநீக்குபதிவுல நீங்க சொல்ற மேட்டர் ரொம்பப் பெரிய விஷயம். உங்கள் பதிவிற்கு நேர்வினையாக (எதிர்வினை இல்ல சார், நேர்வினை) நான் ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.
நன்றாக வந்திருந்தால். எனக்கு பிடித்துவிட்டால் நான் மனமார பாராட்டி எழுதி விடுவேன்.
பதிலளிநீக்குஅதுதான் நாம் பிறருக்கு செய்யும் உபகாரம் இங்கு.இதில் ஏன் கஞ்சத்தனம் ??
நல்ல விஷயமுங்க. நானும் கூடிய வரை கடைப்பிடிக்கிறது.
பதிலளிநீக்குசூப்பர் சார்! இங்கு அமெரிக்காவில் குழந்தைகள் சும்மா சுமாராக ஏதாவது செய்தாலே கிரெட் அது இது எனப் பாராட்டிவிடுகின்றனர் இதனால் அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் வளர்கின்றனர்.பல்கலைகழகங்களில் நோபல் பரிசு வாங்கன பேராசிரியரிடம் சாதாரணமாக விவாதிக்கின்றனர். ஆனால் நமக்கு, சாகும் வரை, நாம் செய்வது அல்லது சொல்வது சரியா என அவநம்பிக்கை.குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை மிக முக்கியம்.அதற்கு நாமும் குழந்தைகளை பாராட்டி வளர்க்க வேண்டும். அடக்கமின்மை அடுத்தவரை பாதிக்கும். ஆனால் அவநம்பிக்கை அக்குழந்தையையே பாதிக்கும். நாமும் குழந்தைகளை சரியான விசயங்களில் பாராட்டி வளர்க்க வேண்டும்.
பதிலளிநீக்குஅப்போ என்ன மாதிரி யாருமே இல்லாத டீ கடைல டீ ஆத்தீட்டு இருக்கிர எங்க கடைக்கும் வருவீங்கனு சொல்லுங்க ரொம்ப சந்தோசம்.
பதிலளிநீக்குஅருமையான பதிவு ஐயா...
கிறுக்கன்
//ஒரு நல்ல பதிவைப்பார்த்தால் "நல்ல பதிவு" என்று ஒரு டெம்பிளேட் கமென்ட் மட்டும்தான் போட மனது வருகின்றதே ஒழிய, அதை நாலு வார்த்தைகளால் பாராட்டுவோமே என்கிற மனது வரமாட்டேன் என்கிறது//
பதிலளிநீக்குபொதுவாகவே மனிதர்களிடம் இருக்கும் குணாதிசயம் பிறரைப் பாராட்ட முனைவதில்லை என்பதே. அதற்கு பரந்த மனம் வேண்டும்.
ஆனாலும், தன் குறையென்று ஒன்றைத் கண்டபின், அதைப் பட்டவர்தனமாய் ஒப்புக்கொள்ள மிகப் பரந்த மனம் வேண்டும். அது உங்களிடம் இருக்கிறது. ஒரு தொண்ணூறு வயது மூதாட்டியின் வாழ்க்கை தந்த படிப்பினைகளை இன்று என் வலைப்பூவில் எழுதி இருக்கிறேன். பாருங்கள்.
சேட்டைக்காரன் சொன்னது:
பதிலளிநீக்கு//ஆஜர் சார்! :-)//
பாத்தீங்களா? நம்ம டெக்னிக்க நம்ம கிட்டயே காட்டறீங்களே? நியாயமா?
ஆனா உலகத்தில எப்பவும் தீட்டின மரத்திலேயே பதம் பாக்கிறதுதான் வழக்கம். ஆனா நல்லா பதம் பாக்கறீங்க!
என்னது நானு யாரா? சொன்னது:
பதிலளிநீக்கு//ஆஹா! ஆஹா! இதைதானே ஐயா, உங்ககிட்ட இருந்து எதிர்ப்பார்த்தேன். இனி நிறை குறைகளை நன்கு சொல்வீர்கள் என்று நினைக்கின்றேன்.//
செஞ்சுடறேன், தம்பி.
ஜோதிஜி சொன்னது:
பதிலளிநீக்கு//சமரசம் இல்லாமல் எல்லாவிசயங்களையும் நையப்புடைக்கும் உங்கள் தைரிய எழுத்துக்கு என் ராயல் சல்யூட் ஐயா.??
மிகவும் நன்றி ஜோதிஜி அவர்களே.
Rajamani said:
பதிலளிநீக்கு//Good teacher is defeated by his student,good father is defeated by his son.//
This is the Natural Law.
Gobi Ramamoorthy said:
பதிலளிநீக்கு//புது டெம்ப்ளேட் சூப்பர். தமிழ்மணம் வோட்டிங் பட்டன் குறுக்க வருது பாருங்க. கொஞ்சம் சரி பண்ணுங்க. அல்லது அது ஒரு டெக்னிக்கா? படிக்கிறவங்க வோட்டிங் பட்டன கிளிக் பண்ணனும்னு நடுவுல நினைவூட்டுகிறீர்களா:)//
அப்படியெல்லாம் ஒண்ணுமில்லீங்க. இந்த தமிழ் மணத்தை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லைங்க. லேஅவுட்ல போயி ரொம்ப மாத்தறதுக்கு பயமா வேற இருக்குதுங்க. எப்படியோ நரி இடமாப்போனாலுஞ்சரி, வலமாப்போனாலுஞ்சரி, மேல வுழிந்து புடுங்காமப் போனாப்போதும்னு இருக்கனுங்க. வேற என்ன சொய்யறதுங்க.
//பதிவுல நீங்க சொல்ற மேட்டர் ரொம்பப் பெரிய விஷயம். உங்கள் பதிவிற்கு நேர்வினையாக (எதிர்வினை இல்ல சார், நேர்வினை) நான் ஒரு பதிவு எழுத இருக்கிறேன்.//
எழுதுங்க, எழுதீட்டு ஒரு வார்த்தை போட்டா நல்லா இருக்குமுங்க.
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//நன்றாக வந்திருந்தால். எனக்கு பிடித்துவிட்டால் நான் மனமார பாராட்டி எழுதி விடுவேன்.
அதுதான் நாம் பிறருக்கு செய்யும் உபகாரம் இங்கு.இதில் ஏன் கஞ்சத்தனம்??//
ரொம்ப கரெக்ட்டு மாணிக்கம், ஆனா பாருங்க சின்ன வயசுல இருந்து பழகின கஞ்சத்தனம் அவ்வளவு சீக்கிரம் போக மாட்டேங்குதே?
வானம்பாடிகள் சொன்னது:
பதிலளிநீக்கு//நல்ல விஷயமுங்க. நானும் கூடிய வரை கடைப்பிடிக்கிறது.//
நானும் உங்க மாதிரி பண்ண முயற்சிக்கிறேனுங்க.
Thenali said:
பதிலளிநீக்குநீங்க சொல்றது ரொம்ப உண்மைங்க. ஆனா தன்னம்பிக்கை வளர்கிற நேரத்துல கொஞ்சம் அடக்கமின்மையும் வரத்தான் செய்கிறது. வேறு வழியில்லை.
கிறுக்கன் சொன்னது:
பதிலளிநீக்கு//அப்போ என்ன மாதிரி யாருமே இல்லாத டீ கடைல டீ ஆத்தீட்டு இருக்கிர எங்க கடைக்கும் வருவீங்கனு சொல்லுங்க ரொம்ப சந்தோசம்.
அருமையான பதிவு ஐயா...//
கட்டாயம் வந்துடறேனுங்க, காத்தால மூணு மணிக்குத்தான் எனக்கு கொஞ்சம் ஓய்வா இருக்குமுங்க. சர்க்கரை இல்லாம ஒரு டீ போட்டு வச்சுடுங்க, சரீங்களா?
மோகன்ஜி சொன்னது:
பதிலளிநீக்கு//பொதுவாகவே மனிதர்களிடம் இருக்கும் குணாதிசயம் பிறரைப் பாராட்ட முனைவதில்லை என்பதே. அதற்கு பரந்த மனம் வேண்டும்.//
உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி. மனிதன் ஒவ்வொரு நாளும் தன்னை மேம்படுத்திக்கொள்ள முயல வேண்டும் என்று நான் கருதுகிறேன். அதனுடைய விளைவுதான் இந்த பதிவு.
சார், ஒங்க புண்ணியத்துல நான் ஒரு பதிவு போட்டுக்கிட்டேன்!
பதிலளிநீக்குhttp://ramamoorthygopi.blogspot.com/2010/09/blog-post_2540.html
//ஒருவனைப் பாராட்டிவிட்டால் அவனுக்கு தலைக்கனம் வந்துவிடும். பிறகு அவன் மெத்தனமாக நடந்து கொள்வான், அது அவன் முன்னேற்றத்தை தடுக்கும் என்பது அன்றைய காலத்து கருத்து.//
பதிலளிநீக்குஇந்தக்காலத்திலும் அதேதான்,,
எப்படின்னா தொழில்ல இத அமுல்படுத்தினா ஆளுங்க நாம் இல்லைன்னா இந்த கம்பெனி அவ்வளவுதான், ஓனரு வாயலே வந்துருச்சி அப்படின்னு ஒரு கெத்து வந்துருதுங்க எல்லாருக்குமான்னா இல்லை, ஒரு சிலருக்குத்தான்:))
அப்புறம் ஒருநாளைக்கு அவங்க செய்யர தவறு, அதனால ஏற்படற இழப்பு என பிரித்துப்போட்டு காண்பித்தால்தான் சரியாகிறது.))
அதனால நானு பிரதிபலன் பார்க்காம யாராவது செயல்பட்டா அதை பாராட்டுகிறேன். அதனால் உங்களுக்கு வந்திருக்கிறது வியாதி அல்ல.
அல்லது எனக்கும் அதே வியாதி:)
//குறிப்பாக ஒரு நல்ல பதிவைப்பார்த்தால் "நல்ல பதிவு" என்று ஒரு டெம்பிளேட் கமென்ட் மட்டும்தான் போட மனது வருகின்றதே ஒழிய, அதை நாலு வார்த்தைகளால் பாராட்டுவோமே என்கிற மனது வரமாட்டேன் என்கிறது//
பதிலளிநீக்குசரியாச் சொன்னிங்க.
மிக சரியாக சொன்னீர்கள் சார் !
பதிலளிநீக்குஉங்களுடைய கருத்துகள் மிகச்சரியானவை அய்யா. பலபேர் அப்படித் தான் இருக்கிறார்கள்.
பதிலளிநீக்குகோபி சொன்னது:
பதிலளிநீக்கு//சார், ஒங்க புண்ணியத்துல நான் ஒரு பதிவு போட்டுக்கிட்டேன்!//
என்னைவிட நல்லா எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள். மத்த பதிவுகளையும் பார்த்தேன். அனைத்தும் நன்றாக இருக்கின்றன.
நிகழ்காலத்தில் சொன்னது:
பதிலளிநீக்கு//இந்தக்காலத்திலும் அதேதான்,,
எப்படின்னா தொழில்ல இத அமுல்படுத்தினா ஆளுங்க நாம் இல்லைன்னா இந்த கம்பெனி அவ்வளவுதான், ஓனரு வாயலே வந்துருச்சி அப்படின்னு ஒரு கெத்து வந்துருதுங்க எல்லாருக்குமான்னா இல்லை, ஒரு சிலருக்குத்தான்:))
//
தொழில் துறையில் இந்த முறை எப்படி செயல்படும் என்பதைப் பற்றிய அனுபவம் எனக்கு இல்லை. அங்கு எப்படி செயல்படவேண்டும் என்று சொல்வதற்கு தனி நிபுணர்கள் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சே.குமார், கோவை2தில்லி,கீதா6,
பதிலளிநீக்குஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி.
ஐயா நம்மைப் போன்ற வயதானவர்களுக்கு தொடர்ந்து கணினி முன் உட்கார்ந்து படிப்பது சிரமமாக உள்ளது. மேலும் தொடர்ந்து கணினி முன் உட்கார்ந்திருந்தால் வீட்டில் நிலைமை சரியில்லாமல் போய்விடுகிறது.
பதிலளிநீக்குஎனவே, அதிகாமான பதிவுகளைப் படித்து பின்னூட்டம் எழுதமுடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா.
மொத்தத்தில் மிக நல்ல பதிவு.
//rajamani said...
Good teacher is defeated by his student,good father is defeated by his son.//
நல்ல கருத்து.
அமைதி அப்பா சொன்னது:
பதிலளிநீக்கு//ஐயா நம்மைப் போன்ற வயதானவர்களுக்கு தொடர்ந்து கணினி முன் உட்கார்ந்து படிப்பது சிரமமாக உள்ளது. மேலும் தொடர்ந்து கணினி முன் உட்கார்ந்திருந்தால் வீட்டில் நிலைமை சரியில்லாமல் போய்விடுகிறது.
எனவே, அதிகாமான பதிவுகளைப் படித்து பின்னூட்டம் எழுதமுடியாமல் போய்விடுகிறது. இந்தக் காரணத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள் ஐயா.
மொத்தத்தில் மிக நல்ல பதிவு.//
நம்மால் முடிந்ததைச் செய்வோம். செய்யமுடியாததற்கு வருந்த வேண்டியது இல்லை. நம் மன அமைதிதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை மறக்கவேண்டாம்.
நம்மால் முடிந்ததைச் செய்வோம். செய்யமுடியாததற்கு வருந்த வேண்டியது இல்லை. நம் மன அமைதிதான் எல்லாவற்றையும் விட முக்கியமானது என்பதை மறக்கவேண்டாம்.
பதிலளிநீக்குஅற்புதம் ஐயா.
நன்றிகள் பல, ஜோதிஜி.
பதிலளிநீக்குநான் நடைமுறையில் சாத்தியமானவைகளை மட்டுமே தொடர்பவன். ஆகாயத்தில் பறக்க ஆசைதான். ஆனால் நம்மால் முடியாதல்லவா. அதையே நினைத்து வருந்துவதால் ஆகப்போவதென்ன?
நல்லாதான் சொல்லியிருக்கீங்க உண்மையும்கூட அதுதான்.
பதிலளிநீக்குஅருமை. அப்படின்னு ஒரு மூன்றெழுது.
முடித்தது அன்றைய கணக்கு. பார்க்கச்சென்ற வலைத்தளத்துக்கு.
இப்படிதானே எல்லாரும் செய்கிறார்கள். உங்களையும் சேர்த்துதான் அப்படின்னு நான் சொல்லவில்லை என்னையும் சேர்த்துதான்னு சொல்லுறேன்.
இனியாவது விளக்கமாக நாளெழுத்த இல்ல இல்லை நாழுவரியாவது கூடப்போடுவோம் சரியா டாக்டர்..
அப்பாடி எவ்ளோ எழுதிட்டேன்..
ஆக இப்ப்போதிலிருந்தே தொடங்கிட்டேன்..
அன்புடன் மலிக்கா சொன்னது:
பதிலளிநீக்கு//நல்லாதான் சொல்லியிருக்கீங்க உண்மையும்கூட அதுதான்.//
பல பதிவுகளையும் படிக்கும்போது, எல்லாவற்றையும் படித்து விடவேண்டும் என்கிற ஒரு உத்வேகத்தில் செயல்படுகிறோம். அந்த வேகத்தில் ஆற அமர யோசித்து கருத்துகள் சொல்ல நேரம் போதுவதில்லை. எல்லாப்பதிவுகளையும் நம்மால் படித்து முடிக்க முடியாது என்ற ஞானோதயம் வரும்போதுதான் நமக்குப் பிடித்த சில பதிவுகளுக்காவது விரிவான, உண்மையான கருத்துக்கள் சொல்லலாமே என்று தோன்றும்.
"நல்ல பதிவு' !!
பதிலளிநீக்குநன்றி, தருமி அவர்களே.
பதிலளிநீக்கு//நோய் இருக்கிறது என்பது தெரிந்துவிட்டபடியால் அதற்கு வைத்தியம் செய்வது சுலபம்தானே.
பதிலளிநீக்குநீங்க எந்த டாக்டருன்னே விளங்க மாட்டீங்கிது. அதுக்கு ஒரு பதிவ போடுங்களேன்.
ந.ர.செ.ராஜ்குமார் சொன்னது:
பதிலளிநீக்கு//நீங்க எந்த டாக்டருன்னே விளங்க மாட்டீங்கிது. அதுக்கு ஒரு பதிவ போடுங்களேன்.//
அய்யய்யோ, நானு ஒரு மண்ணாங்கட்டி டாக்டருங்கோ, நீங்க கலாட்டா பண்ற மாதிரி நானு மனுசங்களுக்கோ, மனுசங்க மனசுக்கோ வைத்தியம் பண்ற டாக்டரு இல்லீங்கோ.
மண்ணாங்கட்டி டாக்டருன்னு உங்களை கிண்டல் பண்றதா நெனைக்காதீங்கோ, நெஜமாலுமே நானு மண்ணாங்கட்டி டாக்டருதாங்க. Ph.D. பட்டம் Soil Science அப்படீங்கற சப்ஜெக்டுல வாங்கினேனுங்க. அப்ப மண்ணாங்கட்டி டாக்டர்தானுங்க?
இந்த மண்ணாங்கட்டி டாக்டர் விசயத்துக்கு ஒரு பதிவு எதுக்குங்க?