டிஸ்கி: இந்தப்பதிவு யாரையும் புண்படுத்துவதற்காகப் போடப்பட்ட து அல்ல. அந்த வாசகத்தைப்படித்தவுடன் எனக்குத் தோன்றிய உணர்வை வெளிப்படுத்தினேன். ஒரு நண்பர் இது தேவையில்லையே என்று கருத்து தெரிவித்தார். இனிமேல் இந்த மாதிரி பதிவுகள் போடுவதில்லையென்று அவருக்குச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
இன்று ஒரு பதிவில் படித்தது.
//ஒரு பிரபலமான எழுத்தாளனுக்கு ஒரு படத்தைப் பற்றி மதிப்புரை எழுதுவதற்காக டிக்கட் எடுத்துக் கொடுக்கவே ஆள் இல்லை என்கிற போது இந்த சமூகத்திலிருந்து எனக்கு என்ன கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள்?//
இது எந்திரன் சினிமாவைப் பற்றி ஒரு பதிவர் எழுதியது. ஆஹா, எப்படிப்பட்ட தேசீயப்பிரச்சினை இது. யாராவது உடனடியாக இந்தப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லுங்க அப்பு.
என்னங்க நீங்க, வெவரம் புரியாமப் பேசறீங்க. இவரு அந்தச் சினிமாவுக்கு மதிப்புரை எழுதிப் போட்டுட்டாருன்னா, இந்திய நாட்டில இருக்கிற அத்தனை பிரச்சினைகளும் (லஞ்சம் உட்பட) தீர்ந்து போகுமில்லீங்களா?
பதிலளிநீக்குஆணவத்தின் உச்ச கட்டம்.
பதிலளிநீக்குஎந்திரன் மதிப்புரையைப் படித்தால் நம் நாட்டில் தேனும் பாலும் ஆறாக ஓடும்.
பதிலளிநீக்குஇந்தப்பதிவு ஒரு குசும்பு புடிச்ச பதிவு. அந்த பிளாக்கைப் படிச்ச உடனே தோணினதைப்பதிந்து விட்டேன். அவ்வளவுதான். அந்தப்பதிவிலேயே பின்னூட்டம் போடலாமென்றுதான் பார்த்தேன். ஆனா மகராசன் கெட்டிக்காரன். பின்னூட்டத்தை முடக்கி வைத்துள்ளார். இவர்கள் எல்லாம் எதற்கு பொது அரங்கத்துக்கு வர வேண்டும். நான் என்ன வேண்டுமென்றாலும் எழுதுவேன். நீ படிச்சுட்டு பொச்சையும் வாயையும் மூடிக்கொண்டு போ என்றுதானே அர்த்தம்.
பதிலளிநீக்குமிக...மிக...அவசியமான பிரச்சனைதான், பாவம்.
பதிலளிநீக்குஐயா! யாரிடமவது சண்டைக்குப் போய்கிட்டுடே இருக்கீங்க. இது நல்லதுக்கு இல்லை! சொல்லிட்டேன். அம்புடுதேன்.
பதிலளிநீக்குஎவனோ என்னமோ எழுதறான். விட்டுத் தள்ளுங்க! உங்க வயசுக்கு உடலையும் மனசையும் போட்டு அலட்டிக்காதீங்க!
படிக்கும் போதே தெரிந்தது . இது நீங்கள் 'குசுன்பாக ' இட்டபதிவு தான் என்று. அந்த மாகா எழுத்தாளன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். அதுசரி, நீங்களும் அங்கே போய் அவைகளை படிப்பதுண்டா ?? யார் சொன்னது உங்களுக்கு வயசு ஆகி விட்டது என்று ? ஜாமாயுங்கள்!
பதிலளிநீக்குஎங்கே செல்லும் இந்த பாதை யாரோ யாரோ அறிவாரோ.....
பதிலளிநீக்குதமிழ்நாட்டில் எழுத்தாளனுக்கு உரிய மரியாதை இல்லை.கேரளாவில் ஓகே
பதிலளிநீக்குநீங்க ரொம்ப குசும்பு பிடிச்ச ஆளா இருக்கீங்களே.
பதிலளிநீக்குஐயா நான் பின்னூட்டம் போட்ட பிறகுதான் மற்ற பின்னூட்டங்களை ஒரு நோட்டம் விட்டேன். நாலாவது பின்னூட்டத்தில் நீங்களே ஒத்துகிட்டத பார்த்தேன், அதையும் உங்க கவனத்துக்கு கொண்டுவரேன்.
பதிலளிநீக்குஎன்னது நானு யாரா? சொன்னது:
பதிலளிநீக்குஉங்களுடைய அக்கறைக்கு மிக்க நன்றி தம்பி. இனி மேல் இந்த மாதிரியான பதிவுகளைத் தவிர்க்கிறேன்.
இந்தப்பதிவைத் தூக்கினால் வேறு சந்தேகங்கள் வரும். போனவை போகட்டும், வருபவை நன்றாக இருக்க வேண்டுவோம்.
http://voipadi.blogspot.com/2010/09/blog-post_15.html
பதிலளிநீக்கு***************************************
DrPKandaswamyPhD சொன்னது…
தகவல்கள் சேகரித்ததில் தெரிய வந்தது. இந்தப்பூச்சிகளை மருந்து அடித்து ஒழிக்க முடியாது. இந்தப்பூச்சிகளைத் தின்னும் இன்னொரு பூச்சி இருக்கிறதாம். அதை வெளி நாட்டிலிருந்து இப்போதுதான் தருவித்திருக்கிறார்களாம். அந்தப் பூச்சிகளைப் பெருக்கி இந்த கள்ளிப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் விட்டால் அவை இந்தக்கள்ளிப்பூச்சிகளை சாப்பிட்டு அழித்துவிடும் என்று சொல்கிறார்கள். இதற்கு Biological control என்று பெயர்.
என்னவோ கொக்கு தலையில் வெண்ணை வைத்து கொக்கைப் பிடிக்கிற மாதிரி தெரிகிறதா? இந்த விவரம் மிகவும் விவரமான ஒருவரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டது.
என்னுடைய சொந்த அனுபவம். நல்ல மழை பெய்தால் இவை அழிந்து விடுகின்றன.
**************************************
நன்றி , திரு கந்தசாமி அய்யா அவர்களே. இப்படியே ஒவ்வொரு பூச்சியா விட்டுட்டே இருந்தா கடைசியா கொசு மாதிரி மனுசன கடிக்க ஆரம்பிச்சுரும் அப்படின்னு தோணுது. நீங்கள் சொல்வது மாதிரி "பிள்ளையார் பிடிக்க குரங்காயிருமோனு தோணுது".
ஆனால் பல தேசிய பிரச்சினைகளுக்கு இடையே நம்மை ஞாபகம் வைத்து வந்ததிற்கும், பதில் உரையை அளித்ததற்கும் நன்றிகள் அய்யா!
அவரோட அழும்பு தாங்க முடியல..தட்ட கேக்க ஆள் இல்லாம போயிட்டு இருக்கு..இவர் பேசாம கேரளா இல்ல பிரான்ஸ் க்கு migrate ஆயிடலாம்...அங்க எந்திரன் டிக்கெட் ஈசி ஆ கிடைக்கும்...
பதிலளிநீக்குஆஹா..நீங்க இப்படி பதிவு போட்டுட்டிங்க...அடுத்து உங்கள பத்தி அவரே ஒரு வாசகர் கடிதம் எழுதி, கெட்ட வார்த்தைல திட்டி ஒரு கட்டுரை போட்டுடுவார்...
பதிலளிநீக்குhaha ha ha
பதிலளிநீக்குஎன்ன சார் டிக்கட் எடுக்கமுடியலையா? கவலையே படாதீங்க, உங்கள மாதிரி ஆளுங்களுக்காகத்தான் நாங்க அப்பவே எந்திரன் கதைய ரிலீஸ் பண்ணி வெச்சிருக்கோம், வந்து படிச்சிட்டு படம் பாத்த திருப்தியில அப்படியே விமர்சனத்த எழுதிடுங்க, என்ன நாஞ்சொல்றது?
பதிலளிநீக்குSridhar said:
பதிலளிநீக்கு//ஆஹா..நீங்க இப்படி பதிவு போட்டுட்டிங்க...அடுத்து உங்கள பத்தி அவரே ஒரு வாசகர் கடிதம் எழுதி, கெட்ட வார்த்தைல திட்டி ஒரு கட்டுரை போட்டுடுவார்...//
அப்படியும் நடக்குமுங்களா?
ஐயா!
பதிலளிநீக்குஇந்தத் தலைப்பில் ஒரு "சாருவுக்கு" என்ற சொல்லைச் சேர்த்திருந்திருந்தீர்களானால் உங்களை எங்கேயோ கொண்டு போயிருப்பார்கள்.
.
ஆ.. அரிய சந்தர்பத்தைத் தவற விட்டு விட்டீர்கள்.
எனக்கு தேசிய பிரச்சினை எல்லாம் வேண்டாம்க ..
பதிலளிநீக்குஅப்புறம் ஒரு சின்ன தகவல் ..
உங்க ப்ளாக் ஓபன் ஆகும்போது வைரஸ் வார்னிங் வருது ..
chrome browser நான் பயன்படுத்துறேன் .. அது ஏன் அப்படின்னு கண்டுபிடிச்சு அது வராம பார்த்துகோங்க ..!!
ப.செல்வகுமார் சொன்னது:
பதிலளிநீக்கு//உங்க ப்ளாக் ஓபன் ஆகும்போது வைரஸ் வார்னிங் வருது ..
chrome browser நான் பயன்படுத்துறேன் .. அது ஏன் அப்படின்னு கண்டுபிடிச்சு அது வராம பார்த்துகோங்க ..!!//
தகவலுக்கு நன்றி. அது என்னன்னு பார்த்துடறனுங்க.
நான் AVG antivirus போட்டிருக்கனுங்க. ஒரு பிளாக்குல பார்த்னுங்க. அது என்னமோ இந்த தமிழ்10 ங்குற ஓட்டுப்பெட்டி வச்சிருந்தா இந்த மாதிரி எச்சரிக்கை வருதுன்னு ஒருத்தர் எழுதியிருந்தாருங்க. எப்படியும் அதை சரி பண்ணீடறனுங்க.
யோகன் பாரிஸ் சொன்னது:
பதிலளிநீக்குஎன்னங்க, எங்களையெல்லாம் மறந்துட்டீங்க போல இருக்குன்னு நெனச்சனுங்க. வந்ததுக்கு ரொம்ப ரொம்ப நன்றிங்க. சௌக்கியந்தானுங்களே?
எனக்கு யாரு பேர்லயும் வேற்றுமை இல்லீங்க. ஆனா ஒருத்தரு ஒட்டுமொத்த சமூகத்தின் பேரில் குறை சொல்லுகிறாரே என்கிற ஆதங்கத்தில் இந்த பதிவ போட்டனுங்க. மத்தபடி வேற எதுவும் எனக்கு வேண்டாங்க.
யோகன்-பாரிஸ் சொன்னது:
பதிலளிநீக்கு//உங்களை எங்கேயோ கொண்டு போயிருப்பார்கள்.//
ஐயா, நான் இப்போது இருக்கும் இடத்திலேயே நன்றாகவும் சௌக்கியமாகவும் இருக்கிறேன். வேறு எங்கும் போக விருப்பமில்லை.
(நகைச்சுவையை ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்)