சனி, 20 நவம்பர், 2010

அதிர்ஷ்டம் என் பக்கம்

பதிவுலக நண்பர்களுக்கு,

இன்று எனக்கு வந்த ஈமெயிலைப் பாருங்கள்.

எப்படிப்பட்ட அதிர்ஷ்டம் காலையில் கோழி கூப்பிடும் முன்பாகவே என் வீட்டுக்கதவைத் தட்டுகிறது பார்த்தீர்களா?

எழுநூற்றைம்பது ஆயிரம் பவுண்ட் என்றால் இந்திய மதிப்பில் எவ்வளவு இருக்கும்? பதட்டத்தில் கையும் ஓடமாட்டேன் என்கிறது. காலும் ஓடமாட்டேன் என்கிறது. இந்தப் பாழாப்போன கால்குலேட்டர் இந்நேரம் பார்த்து கைக்கு கிடைக்கமாட்டேன் என்கிறது. சார், சார், யாராவது உதவிக்கு வாங்களேன். ஒரு பவுண்ட் என்றால் எத்தனை ரூபாய் சார்? எண்பது ரூபாயா? அப்போ எழுநூற்றைம்பது ஆயிரம் பவுண்ட்டுக்கு, ஐயோ, ஐயோ, ஆறு கோடி ரூபாயா? யாராச்சும் சொல்லுங்களேன் சார், கணக்கு சரிதானா?

ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ ! ஐயோ !

இந்த ஆறு கோடி ரூபாயை வச்சுட்டு நான் என்ன பண்ணுவேன், வீட்ல வக்கறதுக்கு எடம் பத்தாதே? பாங்குல போட்டா இன்கம்டாக்ஸ்காரன் கணக்கு கேப்பானே? ஐயோ, நான் என்ன பண்ணுவேன் ஏது பண்ணுவேன்? ஒண்ணுமே புரியலயே? நாகேஷ் இருந்தாலாவது பொலம்பறதுக்கு தொணைக்கு வருவார், அவரும் போய்ச்சேந்துட்டாரே?

யாராச்சும் ஏதாச்சும் ஐடியா கொடுத்து என்னைக் காப்பாத்துங்களேன்? வர்ற பணத்தில பாதி கொடுக்கிறேன், பாதி என்ன, பூராத்தையும் கொடுத்து விடுகிறேன். உதவி பண்ணுங்கையா !

----------------------------------------------------------------------------------------

E-mail Promo Notification

MICROSOFT [noreply@microsoft.net]

Sent: Sat 20-Nov-10 1:46 AM

To: undisclosed-recipients:

MICROSOFT END OF YEAR NOTIFICATION

This is to inform you that you have been selected for a cash prize of seven hundred and fifty thousand Pounds (Ј750,000.00) in Microsoft End of year award held in United Kingdom, with

REF No: L/200-26937

BATCH No: 2010MJL-01

Do fill out your details for payment:

1.Full Name 2.Full Address 3.Marital Status 4.Occupation 5.Age 6.Sex 7.Nationality 8.Country Of Residence 9.Telephone Number

PROGRAM CO-ORDINATOR

Dr.Pinkett Graffin

TEL:+44-758-789-2992

Email: prinnket.graffin@vista.aero

-------------------------------------------------------------------------------------------

எவ்வளவு தத்ரூபமா இருக்கு பாத்தீங்களா?

45 கருத்துகள்:

 1. அப்பிச்சி,அப்பிச்சி,அப்பிச்சி,
  எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரு வாங்கிக்கொடுத்துடுங்க, அப்பிச்சி, அப்பறம் ஆயுசுக்கும் உங்க கிட்ட ஒண்ணும் கேக்கமாட்டேன்.

  பதிலளிநீக்கு
 2. ஆமா சார்..பெரிய அமொவுண்டா இருக்கு.. சாதாரண மக்கள் எண்ணுவதே கஷ்டம்...

  இதுக்கு ஒரே ஒருத்தர் இருக்காரு.. இந்த மாறீ சின்ன அமொவுண்டை கேண்டில பண்ண...

  அவருடைய பெயர் ராசா..
  அமைச்சரா இருந்துக்கிட்டு, இப்ப சும்மாத்தான் இருக்காரு..
  ஹி..ஹி

  பதிலளிநீக்கு
 3. அப்பிச்சி,அப்பிச்சி,
  அப்படியே எனக்கும் ஒண்ணு வாங்கிக்கொடுத்துடுங்க, அப்பிச்சி, எனக்கு வாங்கிக் கொடுக்கலீன்னா அழுதுடுவேன்?

  பதிலளிநீக்கு
 4. வாங்க, பட்டாபட்டி, காலைலயே வந்து நல்ல ஐடியா கொடுத்திருக்கீங்க.ரொம்ப நன்றிங்க.
  அமைச்சருக்குத்தான் இப்ப ஒண்ணும் வேலை இல்லாம சும்மாதான இருப்பாரு. ஒரு நடை போய் பாத்துடறனுங்க.

  பதிலளிநீக்கு
 5. Prabhu said...

  //அப்பிச்சி,அப்பிச்சி,அப்பிச்சி,
  எனக்கு ஒரு ரோல்ஸ் ராய்ஸ் காரு வாங்கிக்கொடுத்துடுங்க, அப்பிச்சி, அப்பறம் ஆயுசுக்கும் உங்க கிட்ட ஒண்ணும் கேக்கமாட்டேன்.//

  உனக்கு இல்லாமயா, கண்ணு, உன் தம்பிக்கும் சேத்து ரெண்டா வாங்கீடலாம், பேராண்டி.

  பதிலளிநீக்கு
 6. எனக்கு ஒரு பட்டுப்புடவை வாங்கிக்கொடுங்க.

  பதிலளிநீக்கு
 7. //வர்ற பணத்தில பாதி கொடுக்கிறேன், பாதி என்ன, பூராத்தையும் கொடுத்து விடுகிறேன். உதவி பண்ணுங்கையா//

  பூராத்தையும் கொடுத்து விடுகிறேன்னு சொல்றீங்க! அப்ப கண்டிப்பா இதில விள்ளங்கம் இருக்கும்னு நீங்களே சொல்றீங்க! இந்த வம்புக்கே நான் வரலப்பா! அப்புறம் இருக்கிறதும் போச்சுடா நொல்லக்கண்ணான்னு ஆயிடும்!

  எப்படி இருக்கீங்க ஐயா! சௌக்கியங்களா?

  பதிலளிநீக்கு
 8. உங்க பதிவ படிக்கிற ஒவ்வொருத்தருக்கும்ஆயிரம் பவுண்ட் குடுக்கலாமே...

  பதிலளிநீக்கு
 9. என்னது நானு யாரா? said...

  //பூராத்தையும் கொடுத்து விடுகிறேன்னு சொல்றீங்க! அப்ப கண்டிப்பா இதில விள்ளங்கம் இருக்கும்னு நீங்களே சொல்றீங்க! இந்த வம்புக்கே நான் வரலப்பா! அப்புறம் இருக்கிறதும் போச்சுடா நொல்லக்கண்ணான்னு ஆயிடும்!//

  அப்படி நான் எங்கயாச்சும் வில்லங்கம்னு சொன்னேனா? உண்மைக்கு இந்தக்காலத்துல மதிப்பு அவ்வளவுதான் :)-

  //எப்படி இருக்கீங்க ஐயா!
  சௌக்கியங்களா?//

  எப்படியோ, கலைஞர் புண்ணியத்துல நல்லா இருக்கறனுங்க, தம்பி. கலைஞர் இங்க எங்க வந்தார்னு புரியலீங்களா? அவருதானுங்க எங்களுக்கு படி (Pension) அளக்கறாரு?

  பதிலளிநீக்கு
 10. கலாநேசன் said...

  //உங்க பதிவ படிக்கிற ஒவ்வொருத்தருக்கும்ஆயிரம் பவுண்ட் குடுக்கலாமே..//

  எனக்கும் ஆசைதான். எதுக்கும் ஹோம் டிபார்ட்மென்டைக் கேட்டுட்டு முடிவு எடுக்கிறேனே?

  பதிலளிநீக்கு
 11. //அப்படி நான் எங்கயாச்சும் வில்லங்கம்னு சொன்னேனா? உண்மைக்கு இந்தக்காலத்துல மதிப்பு அவ்வளவுதான் :)-//

  அப்படின்னா எதுக்கு பூரா பணத்தையும் கொடுக்க சம்மதிக்கிறீங்க! இதிலிருந்தே தெரியலையா அதில பிரச்சனை இருக்குன்னு.

  //கலைஞர் புண்ணியத்துல நல்லா இருக்கறனுங்க//

  இன்னமும் அவர் புண்ணியம் சேர்க்க ஆசைப்படுறாருங்க! உங்களுக்கும் நிசமாலுமே அதிர்ஷடம் அடிக்கப்போகுது. ஒரு 3 மாசம் பொறுத்துக்கோங்க! அப்புறம் பாருங்க! உங்களுக்கு எந்த மாதிரி அதிர்ஷடம் கிடைக்குதுன்னு! :-)

  பதிலளிநீக்கு
 12. rajeevdesai.blogspot.com/2010/11/462000000000that-is-462-bn-mother-of.html ithayum sitha nerum ellorum padiyungal

  பதிலளிநீக்கு
 13. என்னது நானு யாரா? said...

  //அப்படின்னா எதுக்கு பூரா பணத்தையும் கொடுக்க சம்மதிக்கிறீங்க! இதிலிருந்தே தெரியலையா அதில பிரச்சனை இருக்குன்னு.//

  ஹூஹும்? நல்லதுக்கு காலமில்லாமப்போயிடுச்சே. இந்த உலகம் எப்படி உருப்படப்போகுது?

  பதிலளிநீக்கு
 14. LK said...

  //எனக்குப் பாதி//

  அதெல்லாம் முடியாது. பூராவும் உங்களுக்குத்தான்.

  பதிலளிநீக்கு
 15. எனக்கு ஒரு Toyota Prado வாங்கி தந்நு விட்டு மிகுதியை stock market இல போடுங்க
  ;)))

  பதிலளிநீக்கு
 16. எனக்கு இந்த மாதிரி இது வரைக்கும் ஒரு பத்து மின்னஞ்சல் வந்தாகிவிட்டது. அப்போ நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி இல்லையா?

  பதிலளிநீக்கு
 17. Gopi Ramamoorthy said...

  //எனக்கு இந்த மாதிரி இது வரைக்கும் ஒரு பத்து மின்னஞ்சல் வந்தாகிவிட்டது. அப்போ நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி இல்லையா?//

  ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டசாலிதானுங்க. அது சரி, அத்தனை பணத்தையும் என்ன செஞ்சீங்க?

  பதிலளிநீக்கு
 18. nis said...

  //எனக்கு ஒரு Toyota Prado வாங்கி தந்நு விட்டு மிகுதியை stock market இல போடுங்க ;)))//

  பண்ணீடறனுங்க.

  ஆறு நெறய பாலா ஓடுது, அம்மா குடி, அய்யா குடி, ஊரெல்லாம் குடிங்க?????

  பதிலளிநீக்கு
 19. சார் எனக்கும் இதே மாதிரி ஒரு நூறு மெயில் வந்திருக்கு. நமக்கு அப்படி ஒண்ணும் பெரிய பணத்தாசை இல்லாததால பெருந்தன்மையா விட்டுட்டேன்.

  பதிலளிநீக்கு
 20. எனக்கு வேண்டாம், எனக்கு வேண்டவே வேண்டாம். எனக்கும் இந்த மாதிரி மின்னஞ்சலில் வந்த பௌண்ட், டாலர் எல்லாத்தையும் வாரி வழங்கிட்டு இருக்கேன். இதுல இன்னும் வேறயா? : ))))

  பதிலளிநீக்கு
 21. எனக்கு ரொம்ப ஆசை இல்லை. ஒரு கோடி ய நம்ம பக்கம் தள்ளுங்க.

  பதிலளிநீக்கு
 22. தத்தா உண்மைலேயே நீங்க அதிர்ஷ்டசாலிதான் .,
  இத விட இவுங்க பண்ணுற தொல்லை தாங்க முடியல ..!!

  பதிலளிநீக்கு
 23. இந்த மாதிரி போன்ல கூட இப்பல்லாம் வருது!
  உஷாரா இருக்கணும்!

  பதிலளிநீக்கு
 24. பரவாயில்லை. எல்லாரும் ரொம்ப உஷாராத்தான் இருக்காங்க. அதுக்காகத்தான் இந்தப் பதிவப்போட்டேன். எல்லோருக்கும் நன்றி.
  ஆயிரம் பேருக்கு அனுப்பினால் ஒருத்தன் மாட்டமாட்டானா என்றுதான் அவனுக தூண்டில் போடறானுங்க. சும்மா என்ன பதில் அனுப்பினாலும் போதும், எப்படியாச்சும் வலைல மாட்டி உட்ருவானுங்க.

  பதிலளிநீக்கு
 25. மெயில் அனுப்பிச்சவனை நினைக்க பரிதாபமா இருக்கு சார்...:-)

  பதிலளிநீக்கு
 26. ஸாதிகா said...
  //மெயில் அனுப்பிச்சவனை நினைக்க பரிதாபமா இருக்கு சார்...:-)//

  நாம என்ன சாதாரண ஆளா? இந்த மாதிரி எத்தனை தில்லுமுல்லு வேலைகளை இந்தக் கையாலயே செய்திருப்போம்? நம்ம கிட்டயா இந்த வேலை??

  எப்டீடீடீடீடீடீடீடீடீடீடீ!!!!!!!!!!!!!

  பதிலளிநீக்கு
 27. மாதேவி said...
  //எனக்கும் ஒருபங்கு வையுங்க. ஹ...ஹா//

  பொண்ணுங்களுக்கு பங்கு வைக்கலீன்னா போச்சு, மானம், மரியாதை எல்லாம் காத்துல பறந்துடும். கட்டாயம் பங்கு வைக்கறேன். வில்லங்கம் வந்தா அதிலயும் பங்கு கொடுக்கலாம் இல்லையா?

  பதிலளிநீக்கு
 28. ஒரு லாட்டரி அடிச்சதுக்கே இத்தன அக்கப்போரா? எங்ளூக்குலாம் இதுவரைக்கும் 10க்கு மேலே அடி்சிருக்கு,தெரியும்ல? அதையே எப்பிடி கமுக்கமா உக்காந்து எண்ணிக்கிட்டு இருக்கோ்ம்? அத்த விட்டுப்புட்டு......

  பதிலளிநீக்கு
 29. அவங்க பணத்த அனுப்புற செலவு ஒரு 2000 பவுண்டு கேட்டிருப்பாங்களே? இன்னும் கேக்கலியா? (வேண்ணா இந்த மெயிலுக்கு ரிப்ளை பண்ணீப் பாருங்க)

  பதிலளிநீக்கு
 30. பன்னிக்குட்டி ராம்சாமி said...

  //ஒரு லாட்டரி அடிச்சதுக்கே இத்தன அக்கப்போரா? எங்ளூக்குலாம் இதுவரைக்கும் 10க்கு மேலே அடி்சிருக்கு,தெரியும்ல? அதையே எப்பிடி கமுக்கமா உக்காந்து எண்ணிக்கிட்டு இருக்கோ்ம்? அத்த விட்டுப்புட்டு......//

  இந்த ஐடியாவுக்காகத்தான் காத்திட்டிருந்தேன் பரா. ரொம்ப தேங்க்ஸ்.

  பதிலளிநீக்கு
 31. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //அவங்க பணத்த அனுப்புற செலவு ஒரு 2000 பவுண்டு கேட்டிருப்பாங்களே? இன்னும் கேக்கலியா? (வேண்ணா இந்த மெயிலுக்கு ரிப்ளை பண்ணீப் பாருங்க)//

  பரா, ஒரு பழமொழி கேள்விப்பட்டிருப்பீங்க. தமிள்ல சொன்னா அசிங்கமா இருக்கும். இங்கிலீசுல சொல்றேன். அர்த்தம் புரியுதான்னு பாருங்க.
  Fence going chamelion, orgsn put, pricking, umbrellawing.

  அர்த்தம் புரியலேன்னா வெக்கப்படாம கேளுங்க, சொல்றேன்.

  உங்க ஐடியாவக்கேட்டா அந்தப்பழமொழி மாதிரி ஆகிடும்.

  பதிலளிநீக்கு
 32. புரியுதது சார், வேலில போற ஓணான புடிச்சி... ஹி...ஹி....

  அப்போ உங்களுக்கு பணம் வேணுமா வேணாமா?

  பதிலளிநீக்கு
 33. கடைசீல..அந்த ஏழு தங்கக் குடம் மாதிரி ஆயிடப் போறது..பார்த்து.....

  நாம என்ன கேட்கலாம்?

  ஐப்பசீல கேட்கறேன்..ஒரு ஆடி மட்டும் வாங்கித் தாங்க, அது போதும். ஈரேழு ஜன்மத்துக்கும் மறக்க மாட்டேன்..

  பதிலளிநீக்கு
 34. ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

  //கடைசீல..அந்த ஏழு தங்கக் குடம் மாதிரி ஆயிடப் போறது..பார்த்து.....
  நாம என்ன கேட்கலாம்?
  ஐப்பசீல கேட்கறேன்..ஒரு ஆடி மட்டும் வாங்கித் தாங்க, அது போதும். ஈரேழு ஜன்மத்துக்கும் மறக்க மாட்டேன்.//

  ஆடி வேணாங்க, அது நல்லா இல்ல, அந்த முதலாளி சிடுமூஞ்சி. ரோல்ஸ் வாங்கீக்குங்க. அங்கதான் ரிசப்ஷன்ல சூபர் பிகருங்க இருக்குதுங்க. புக் பண்ணீடட்டுங்களா?

  பதிலளிநீக்கு
 35. பன்னிக்குட்டி ராம்சாமி said...
  //புரியுது சார், வேலில போற ஓணான புடிச்சி... ஹி...ஹி....//

  பரவாயில்ல, கிட்னி நல்லா வேலை செய்யுது :)-

  //அப்போ உங்களுக்கு பணம் வேணுமா வேணாமா?//

  வாளப்பளம் வேண்டாங்கற கொரங்கு உண்டா?
  என்ன, வாளப்பளத்த உரிச்சு, வாய்க்குள்ள போட்டு, ஒரு குச்சியால உள்ள தள்ளினா, முளுங்கீக்குவனுங்க.

  பதிலளிநீக்கு
 36. தாராபுரத்தான் said...

  //அய்யா நானும் ஒருத்தன் இருக்கேன்.//

  ஐயா, உங்களுக்கில்லாமையா ? :)-

  பதிலளிநீக்கு
 37. //அவருடைய பெயர் ராசா..
  அமைச்சரா இருந்துக்கிட்டு, இப்ப சும்மாத்தான் இருக்காரு.. ஹி..ஹி //

  இது அவருக்கு தெரியுமா? சார், மறந்து போய்க்கூட இந்த அமைச்சரை தேடிறாதீங்க. இருக்கற பணத்தையும் சேர்த்து எடுத்துக்க போறாரு!! :)

  பதிலளிநீக்கு
 38. ம.தி.சுதா said...

  //ஐயாவும் மாட்டிக்கிட்டாரா...???//

  மாட்டலீங்க, பதிவர்கள் நாலு பேரு சொன்னதக் கேட்டதால தப்பிச்சுட்டனுங்க.

  பதிலளிநீக்கு
 39. ம.தி.சுதா said...

  //ஐயாவும் மாட்டிக்கிட்டாரா...???//

  இல்லீங்க, தப்பிச்சுட்டனுங்க.

  பதிலளிநீக்கு