ஞாயிறு, 28 நவம்பர், 2010

விவசாயம் பற்றி

விவசாயம் பற்றி



உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!! என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா? இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?
அதிகமான அதிக பிரசங்கி கேள்விகளுக்கு மன்னிக்கவும்...

மேலே கொடுத்துள்ள குறிப்பு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் கேட்டது. அங்கேயே பதில் சொல்ல இடம் போதாதாகையால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.

முதலில் சொல்ல விரும்புவது: இதைத்தொடர் பதிவாகப் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகவே யாரும் பயப்படவேண்டாம். விவசாயத்தைப்பற்றி ஏற்கனவே நிறையப்பேர் பலப்பல கருத்துக்களைச் சொல்லி பரம்பரை விவசாயிகளையே குழப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் நான் சேரமாட்டேன்.

இன்றைய காலகட்டத்தில் முன் அனுபவமில்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் அரசியல்தான். அது மட்டுமல்லாமல் போட்ட முதலுக்கு பலமடங்கு லாபம் மொடுக்கும் தொழில் அது ஒன்றுதான். பரம்பரை விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விவசாயத்தை விட முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் பேரே விவசாயத்தில் லாபம் கண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். சொஞ்சம் பேர் வரவுக்கும் செலவுக்கும் சரியாய்ப் போய் வாழ்க்கை நடத்துகிறார்கள். மீதிப்பேர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய கார்ப்பரேட் ஆட்களெல்லாம் விவசாயம் செய்ய ஆரம்பித்து, துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிய கதைகளெல்லாம் இங்கு உண்டு.

விவசாயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விவசாயம் செய்யலாமா என்று கேட்பவருக்கு என் ஆலோசனை என்னவென்றால்: நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர், எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக விவசாயத்தில் ஈடுபடலாம்.

என்னை டெக்னிகல் அட்வைசராகப் போடுவதாயிருந்தால் பத்து வருட நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் கன்சல்டிங்க் பீஸ் நோட்டீஸ் கொடுத்த நாளிலிருந்து பேங்கில் செலுத்தி விடவேண்டும். என்னுடைய அக்கவுன்ட் நெம்பரும் கன்சல்டிங்க் பீஸ் விவரங்களும் வேண்டுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் தெரியப்படுத்தப்படும்.

25 கருத்துகள்:

  1. என்ன அநியாயம் ? உங்க பீஸை சொல்றதுக்கே ஒரு லட்சமா? அப்போ உங்க பீஸ் எவ்வளவுங்க?

    பதிலளிநீக்கு
  2. Prabhu said...

    //என்ன அநியாயம் ? உங்க பீஸை சொல்றதுக்கே ஒரு லட்சமா? அப்போ உங்க பீஸ் எவ்வளவுங்க?//

    நீங்களே கணக்குப் போட்டுக்குங்க.

    பதிலளிநீக்கு
  3. //Prabhu said...என்ன அநியாயம் ? உங்க பீஸை சொல்றதுக்கே ஒரு லட்சமா? அப்போ உங்க பீஸ் எவ்வளவுங்க?//
    இதில் என்னங்க அநியாயம்? நாம் ஸ்பெக்ட்ரம் காலத்தில் இருக்கிறோம்.

    நீரா ராடியா ரூ 60 கோடியை ஆலோசனைத் தொகையாகப் பெற்றிருக்கிறார் ராசாவிடம்.
    வாழ்க பணநாயகம்!!!

    பதிலளிநீக்கு
  4. இந்த டீலிங் நல்லா இருக்கும் போல இருக்கு, உங்களுக்கு மட்டும் :)))))

    பதிலளிநீக்கு
  5. எல்லோருக்கும் நன்றியுடன் ஒரு நற்செய்தி. டீலிங்க் முடிந்து பணம் கைக்கு வந்தவுடன் இந்தப் பதிவுக்கு கமென்ட் போட்ட அனைவருக்கும் பணம் பங்கிட்டு தரப்படும்.

    பதிலளிநீக்கு
  6. இந்திய விவசாயத்தின் பரிணாம வளர்ச்சி பற்றி நீங்கள் ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும். சுதந்திரம் அடைந்த போது ஏற்பட்ட உணவு பற்றாக்குறை, அப்போதைய நெற் பயிரின் தன்மை(Photoperiodism,duration of crop, yield) , Dee Gee Woo ஜீன் உள்ள ரகத்தை நாம் ஏற்று கொள்ள வேண்டிய கட்டாயம், முக்கியமாக உரம் என்றால் என்ன?(உரம் என்பதை ஏதோ பேரழிவு ஆயுதமாக பிரச்சாரம் செய்கிறார்கள்), நவீன விவசாயத்தில் நாம் கவனமாக செயல் படுத்த வேண்டியவை போன்றவை பற்றி தாங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  7. இது உங்களின் விவசாயம் குறித்து ஆதங்கம் என்று எடுததுக் கொள்வதா? இல்லை இப்போது இருக்கும் நிலவரம் அப்படி ராசா என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?

    பதிலளிநீக்கு
  8. ஜோதிஜி said...

    இது உங்களின் விவசாயம் குறித்து ஆதங்கம் என்று எடுததுக் கொள்வதா? இல்லை இப்போது இருக்கும் நிலவரம் அப்படி ராசா என்று சொல்லாமல் சொல்கிறீர்களா?//
    விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பெரும்பாலான விவசாயிகளின் நிலை திருப்தியாக இல்லை. அந்த ஆதங்கத்தில்தான் இந்தப்பதிவு போட்டேன்.
    அடுத்து இதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் கேட்கக்கூடும். எனக்கு பதில் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  9. சதுக்க பூதம் said..

    //நவீன விவசாயத்தில் நாம் கவனமாக செயல் படுத்த வேண்டியவை போன்றவை பற்றி தாங்கள் எழுதினால் நன்றாக இருக்கும்//

    என்னை விவசாய வகுப்பு எடுக்கச்சொல்கிறீர்கள். அதற்குத்தான் விவசாயக் கல்லூரிகள் இருக்கின்றனவே.

    இருந்தாலும் விவசாய ஆரய்ச்சித்துறையில் வேலை செய்து ரிடையர் ஆகி வீட்டில் சும்மா உட்கார்ந்து கொண்டு, பென்சன் வாங்கிக்கொண்டிருப்பது ஒரு குற்ற உணர்வைத் தருகின்றது. என் மகள்களும் இதை அடிக்கடி சுட்டிக்காட்டுகிறார்கள்.

    ஒன்று செய்கிறேன். இந்தப்பதிவில் கேள்வி-பதில் பகுதி ஆரம்பிக்கிறேன். அதில் வரும் கேள்விகளுக்கு அவ்வப்போது பதில் எழுதுகிறேன்.

    பதிலளிநீக்கு
  10. என்னிடம் நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர் உள்ளனர்.

    \\கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை\\ இது தான் இருக்கிறதுலயே கடினமானதுன்னு நினைக்கிறேன். ஏன்னா எங்க கூலியாட்கள் தடையில்லாமல் கிடைப்பாங்கன்னு தெரியலை. :-((

    பதிலளிநீக்கு
  11. குறும்பன் said...

    என்னிடம் நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர் உள்ளனர்.

    \\கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை\\ இது தான் இருக்கிறதுலயே கடினமானதுன்னு நினைக்கிறேன். ஏன்னா எங்க கூலியாட்கள் தடையில்லாமல் கிடைப்பாங்கன்னு தெரியலை. :-(
    --------------------------------
    நண்பரே, என்னுடைய குறும்பை ரசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அதே சமயத்தில் விவசாயத்தை வெற்றிகரமாகச் செய்வதற்கு வேண்டியவைகளை சுறுக்கமாக சொல்லிவிட்டேன்.

    வேலையாட்கள் பிரச்சினைக்கு முக்கிய காரணம் கட்டுப்படியாகக் கூடிய கூலியை விவசாயி கொடுக்க முடியாமையே. அதற்கு காரணம் விளைபொருள்களுக்கு நல்ல விலை கிடைக்காததே. அதற்குக்காரணம் அரசாங்கக் கொள்கைகளே.

    இப்படியே ஆராய்ந்து கொண்டு போனால் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்புகளைப் புரிந்து கொள்வதற்குள்ளேயே நம் ஆயுள் முடிந்துவிடும். அப்புறம் எங்கே விவசாயம் செய்வது ? எங்க வாழ்வது? ரொம்ப ரொம்ப சிக்கலான விவகாரமுங்க விவசாயம் !

    பதிலளிநீக்கு
  12. //என்னை விவசாய வகுப்பு எடுக்கச்சொல்கிறீர்கள். அதற்குத்தான் விவசாயக் கல்லூரிகள் இருக்கின்றனவே//
    விவசாய கல்லூரியில் படிக்காதவர்களுக்கு நவீன விவசாயம் என்றால் என்ன என்று உண்மையிலேயே புரிந்து கொள்ள வழி இருக்கும் என்று நினைத்தேன். தங்களை போன்று விவசாய துறையில் அனுபவமிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மைகளை மற்றவர்களுக்கு புரியும் படி விளக்கினால் மிக நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  13. சதுக்க பூதம் said...

    //என்னை விவசாய வகுப்பு எடுக்கச்சொல்கிறீர்கள். அதற்குத்தான் விவசாயக் கல்லூரிகள் இருக்கின்றனவே//

    //விவசாய கல்லூரியில் படிக்காதவர்களுக்கு நவீன விவசாயம் என்றால் என்ன என்று உண்மையிலேயே புரிந்து கொள்ள வழி இருக்கும் என்று நினைத்தேன். தங்களை போன்று விவசாய துறையில் அனுபவமிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மைகளை மற்றவர்களுக்கு புரியும் படி விளக்கினால் மிக நன்றாக இருக்கும் என்று நினைத்தேன்.//

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அதற்கு தகுந்த வழி கேள்வி-பதில் பகுதிதான் அதை விரைவில் ஆலம்பிக்கிறேன்.

    ஒரு சிறிய விளக்கம். தமிழ்நாடு விவசாயப் பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்புக்காக வகுப்புகள் நடத்துவது தவிர, விவசாயிகளுக்காக பலவிதமான பயிற்சி வகுப்புகள் நடத்துகிறார்கள். இதில் விவசாயகளுக்கு போக்குவரத்து செலவு கூடக் கொடுக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  14. //உங்கள் ஆதங்கம் புரிகின்றது. அதற்கு தகுந்த வழி கேள்வி-பதில் பகுதிதான் அதை விரைவில் ஆலம்பிக்கிறேன்//
    மிக்க நன்றி sir. விவசாயம் பற்றி உண்மையிலேயே புரிதலை விரும்புவர்கள் அந்த பகுதியை பயன் படுத்தி பயனடைவார்கள் என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு
  15. விவசாயம் என்றதும் ஆவலோடு வந்தேன். ஏமாந்துபோனேன்.

    ஆதங்கம் புரிகிறது. இதே பிரச்னைகளால்தான் என் பெற்றோரும் விளைநிலத்தை வெறுமே போட்டு வைத்துள்ளனர்.

    எனினும், தங்கள் அனுபவங்களை வைத்து, ஒரு சிறு வீட்டுத் தோட்டம், இயற்கை விவசாய முறையில் உருவாக்குவது எப்படி என்று எழுதினால் என்னைப் போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு உதவியாக இருக்கும். நன்றி.

    பதிலளிநீக்கு
  16. //விவசாயம் நம் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லிக்கொள்கிறோம். ஆனால் பெரும்பாலான விவசாயிகளின் நிலை திருப்தியாக இல்லை. // உண்மைதான் சார்!
    அது மட்டுமில்லாமல் பல விவசாய நிலங்கள் கட்டிடங்கள் கட்டுமிடங்களாக மாறி வருகின்றன. பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் விவசாயம் என்றோ மறைந்திருக்கும்!

    பதிலளிநீக்கு
  17. விவசாயம் என்பது படிப்பதால் வர வேண்டியது அல்ல, உழைப்பதால் வர வேண்டியது

    பதிலளிநீக்கு
  18. நன்றி ஐயா எட்ட நில் என்று குட்டி சொல்லிவிட்டீர்கள்!!!

    கிறுக்கன்

    பதிலளிநீக்கு
  19. கிறுக்கன் said...
    நன்றி ஐயா எட்ட நில் என்று குட்டி சொல்லிவிட்டீர்கள்!!!கிறுக்கன்//

    நண்பரே, உங்கள் கமென்ட்டை புதிதாக யாராவது படித்தால் நான்தான் உங்களை எட்டி நிறகச் சொன்னேன் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள். அந்த மாதிரி அவமரியாதை இந்த வயதில் நான் யாருக்கும் செய்யமாட்டேன்.

    விவசாயத்தைவிட்டு எட்டி நில் என்றுதான் சொன்னேன். தயவு செய்து இந்தப் பாயின்ட்டை உறுதிப்படுத்திவிடுங்கள். இல்லையென்றால் என்னுடைய மானம் கப்பலேறிவிடும்.

    பதிலளிநீக்கு
  20. ஹுஸைனம்மா said...

    //விவசாயம் என்றதும் ஆவலோடு வந்தேன். ஏமாந்துபோனேன்.//

    ஐயோ, நான் என்ன செய்வேன்? விவசாயக்குடும்பத்திலிருந்து வந்த நீங்களே இப்படிச்சொன்னால் எப்படி? நான் உண்மையைத்தானே சொன்னேன். உண்மையைக்கண்டு ஏமாந்து போனேன் என்று சொன்னால் நான் என்ன செய்வேன்.

    என் பாட்டி அடிக்கடி சொல்லும் பழமொழி: "மூத்தோர் சொல்லும் முதுநெல்லிக்காயும் முன்னே கசக்கும் பின்னே இனிக்கும்"

    என்னையும் மூத்தோர் வரிசையில் சேர்க்கலாமில்லையா?

    பதிலளிநீக்கு
  21. "
    நண்பரே, உங்கள் கமென்ட்டை புதிதாக யாராவது படித்தால் நான்தான் உங்களை எட்டி நிறகச் சொன்னேன் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள். அந்த மாதிரி அவமரியாதை இந்த வயதில் நான் யாருக்கும் செய்யமாட்டேன்.

    விவசாயத்தைவிட்டு எட்டி நில் என்றுதான் சொன்னேன். தயவு செய்து இந்தப் பாயின்ட்டை உறுதிப்படுத்திவிடுங்கள். இல்லையென்றால் என்னுடைய மானம் கப்பலேறிவிடும்."

    ஆமா விவசாயத்தில் இருந்துதான்ன்ன்......

    பதிலளிநீக்கு
  22. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது என்று இதைத்தான் சொல்வார்களோ?

    பதிலளிநீக்கு
  23. எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக

    பதிலளிநீக்கு
  24. தாராபுரத்தான் said...

    //எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக//

    அப்படிச் செய்யறவங்களும் இருக்காங்க, இன்கம்டாக்ஸ் அட்ஜஸ்மென்ட்டுக்காக.

    பதிலளிநீக்கு