ஞாயிறு, 19 டிசம்பர், 2010

இயற்கை விவசாயம்


இயற்கை விவசாயம்

இயற்கை விவசாயம் நடைமுறைக்கு சாத்தியமா? அதனால் அதிகரித்து வரும் இந்திய மக்களுக்கான உணவை உற்பத்தி செய்ய முடியுமா? தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்வது சாத்தியம்தானா?

இயற்கை விவசாயத்தை ஆதரிப்பவர்கள் இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் முடியும் என்று ஒரே பதிலை சொல்வார்கள். அதற்கு எதிர்வாதம் செய்து ஒரு முடிவுக்கு வருவது சாத்தியமல்ல. என்ன செய்யலாம் என்றால் அவர்களை அவர்களின் போக்கிலேயே விட்டு விடுவதுதான் ஒரே வழி. உண்மையில் இயற்கை விவசாயம் லாபகரமாக இருந்தால் விவசாயிகள் அதைக் கடைப்பிடிப்பதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்காது. அப்படி அந்த முறை ஒத்து வரவில்லையென்றால் விவசாயிகளே அந்த முறையை தள்ளி விடுவார்கள்.

சுதந்திர நாடான இந்தியாவில் பேச்சுரிமை தாராளம். யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசலாம். சில தலைப்புகள் கவர்ச்சிகரமானவை. அதில் இயற்கை விவசாயமும் ஒன்று. இதைப்பற்றி அவ்வப்போது எழுதுவேன்.

7 கருத்துகள்:

  1. தொடர்ந்து எழுதுங்கள்.படிக்க ஆவலுடன் காத்திருக்கின்றோம்.

    பதிலளிநீக்கு
  2. // யார் வேண்டுமானாலும் எதைப்பற்றியும் பேசலாம். சில தலைப்புகள் கவர்ச்சிகரமானவை. அதில் இயற்கை விவசாயமும் ஒன்று//
    இது தாங்க உண்மை ,

    பதிலளிநீக்கு
  3. இயற்கை விவசாயம் பெருமளவில் பாராட்டப்பட்டாலும், பெரும்பரப்பில் செய்வதற்கு அது ஏற்றதல்ல என்ற மாற்றுக் கருத்தையும் கேட்டிருக்கிறேன். இது குறித்து தங்களின் கருத்துக்களையும் அனுபவங்களோடு எழுதினால் பயன்பெறுவோர் உண்டு. எழுதுங்கள். மிகவும் ஆர்வத்தோடு காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. இயற்கை விவசாயம் பற்றிய நடுநிலையான வார்த்தைகளை உங்களிடம் எதிர்பார்க்கிறோம். உங்கள் துறை விவசாயம் என்பதால் இன்னமும் கூடுதல் மரியாதையுடன் காத்திருக்கிறோம்..

    பதிலளிநீக்கு