ஞாயிறு, 27 நவம்பர், 2011

மனதுக்கு வயதாவதில்லைஉடலுக்குத்தான் வயதாகும், மனதுக்கு வயதில்லை. மனதை இளமையாக வைத்துக்கொண்டால் உடலும் இளமையாக இருக்கும்.

இந்த பொன்மொழிகளை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். அவை உண்மையென்று நம்பிக்கொண்டும் பலர் இருக்கக் கூடும். இந்த நம்பிக்கை ஓரளவுக்குத்தான் சரி. வாழ்க்கையில் சலிப்பும் சோர்வும் வந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் இவை. இதைப் புரிந்து கொள்ளாமல் என் நண்பர் ஒருவர் (75 வயது) தன்னை 30 வயது இளைஞனாக நினைத்துக் கொண்டு 300 கி.மீ. தனியாக, காரில் தானே ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கு 15 வருடங்களுக்கு முன் பை-பாஸ் ஆபரேஷன் செய்திருக்கிறது.

அங்கு ஒரு கல்யாணத்திற்காகப் போனார். கல்யாணத்தன்று காலை 4 மணிக்கு மார்பு பகுதியில் கனமாக இருப்பதாக உணர்ந்தார். உடனே பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று டெஸ்ட் பண்ணினார். ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. உடனடி வைத்தியம் செய்ததில் ஓரளவு சரியாக ஆகிவிட்டது. அங்கு ஒரு டிரைவரைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அன்று இரவே மறுபடியும் தொந்திரவு வந்து பக்கத்திலிருந்த ஒரு நண்பரின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.

கடந்த மூன்று நாட்களாக நான் அவருடன் இருந்து கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எல்லாப் பரிசோதனைகளும் முடிந்தபிறகு டாக்டர்கள் சொன்னது என்னவென்றால், அவருக்கு வயதாகிவிட்டது, அதை மனதில் கொள்ளாமல் சிறு வயதுக்காரனைப் போல் அலைந்ததுதான் அவருடைய இப்போதைய தொந்திரவுகளுக்கு காரணம், இனி மேல் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை வயதுக்கு தகுந்த மாதிரி குறைத்துக்கொள்ள வேண்டும், இவ்வாறு சொல்லி விட்டார்கள்.

இந்த அனுபவத்தை ஏன் இங்கு பகிர்ந்து கொண்டேன் என்றால், வயதானவர்கள் தங்களை மனதிற்குள் இளைஞனாக நினைத்துக் கொள்ளலாம், ஆனால் தங்கள் நடவடிக்கைகளை வயதுக்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொண்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நலமாக இருக்கும் என்பதற்காகத்தான்.

15 கருத்துகள்:

 1. என்னைப் போன்ற எழுபது வயதானவர்களுக்கு தேவையான தகவலும் அறிவுரையும்.
  நன்றி
  சகாதேவன்

  பதிலளிநீக்கு
 2. வயதானவர்கள் தங்களை மனதிற்குள் இளைஞனாக நினைத்துக்கொள்ளலாம், ஆனால் தங்கள் நடவடிக்கைகளை வயதுக்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொண்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நலமாக இருக்கும் என்பதற்காகத்தான்.///

  சரியாக சொன்னீர்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 3. மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
  வயதானவர்களுக்கான நல்ல எச்சரிக்கை.
  நன்றி.
  vgk

  [ ஆனாலும் அந்தப் படம் சூப்பர் என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை, சார் ]

  பதிலளிநீக்கு
 4. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள்.
  வயதானவர்களுக்கான நல்ல எச்சரிக்கை.
  நன்றி. vgk
  [ ஆனாலும் அந்தப் படம் சூப்பர் என்று என்னால் சொல்லாமல் இருக்க முடியவில்லை, சார் ]//

  அதுதான் மனது இளமையாக இருப்பதன் அடையாளம். சரிதானுங்களே?

  பதிலளிநீக்கு
 5. //வை.கோபாலகிருஷ்ணன் said...
  தமிழ்மணத்தில் என் வோட்: 5 vgk//

  மிக்க நன்றி நண்பரே.

  பதிலளிநீக்கு
 6. //சகாதேவன் said...
  என்னைப் போன்ற எழுபது வயதானவர்களுக்கு தேவையான தகவலும் அறிவுரையும்.
  நன்றி
  சகாதேவன்//

  சரியாகச் சொன்னீர்கள், சகாதேவன்.

  கடவுள் கிருபையால் உடல் நலமாக இருக்கும் பெரும்பாலானோர் வாழ்க்கை ஓட்டத்தில் தங்களுக்கு வயதாகி விட்டதை உணருவதில்லை. மேலும் பலர் தங்களுக்கு வயதாகி விட்டதை மறைக்கவே விரும்புகின்றனர். அந்த எண்ணத்தில் செய்த ஒரு செயல்தான் இந்த மாதிரி தனிமையாக தூரப் பயணம் மேற்கொண்டது.

  இந்த மனப்பான்மையை மாற்றிக்கொள்வது தேவையானது. இந்தப் பதிவு ஒரு வகையில் எனக்கே அறிவுறுத்துவுதற்காகவும் மற்றவர்களுக்கும் ஒரு அனுபவமாக அமையட்டும் என்ற நோக்கில்தான் எழுதினேன்.

  பதிலளிநீக்கு
 7. நண்டு @நொரண்டு -ஈரோடு, மகாதேவன்,
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 8. இது பலவகைகளில் எல்லோருக்கும் ஒரு எச்சரிக்கை பகிர்வு. நன்றி டாக்டர் சார் !!

  பதிலளிநீக்கு
 9. நீங்கள் சொல்வது உண்மைதான். மனதில் இளமை இருக்கலாம் ஆனால் இளைஞன் செய்வதையெல்லாம் செய்யக்கூடாது என்பது எழுதப்படாதவிதி. நல்ல பதிவைத் தந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
  நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
  இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
  ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

  இங்கே சொடுக்கவும்

  ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
  அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

  அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
  தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  பதிலளிநீக்கு