ஞாயிறு, 18 டிசம்பர், 2011

ஈரோடு பதிவர் சங்கமம் 2011

பதிவர் சங்கமத்திற்கு போய்விட்டு இப்போதுதான் வீடு திரும்பினேன். (மாலை 4.30). இருநூறு பேருக்கு மேல் பதிவர்கள் மற்றும் இணைய ஆர்வலர்கள் வந்திருந்தார்கள். இணையத்தில் சீரிய முறையில் பணியாற்றிய பதினைந்து பதிவர்களை பரிசு கொடுத்து மேடையில் அமர்த்தி அவர்களுடைய சேவைகளைக் குறிப்பிட்டு பாராட்டினார்கள். திரு ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் தலைமை தாங்கி சிறப்பான தலைமையுரை ஆற்றினார்கள்.

நான் எடுத்த சில புகைப்படங்கள்.
(படங்களை கிளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்.)

கூட்டம் நடந்த ஹால்-






விருந்தினரின் ஒரு பகுதி-வலது ஓரத்தில் சிகப்பு ஜிப்பாவுடன் இருப்பவர்தான் பிரபல பதிவர் "தருமி" அவர்கள்.



வரவேற்புரை-




ஈரோடு கதிர் (விழா நாயகன்) சிறப்பு பதிவர்களை அறிமுகப்படுத்துகிறார்-


சிறப்பு பதிவர்கள் மேடையில்


தலைமையுரை - ஸ்டாலின் குணசேகரன்


செயலாளர் பாலாஜி நன்றி கூறுகிறார்


இனி நம்ம ஐட்டங்கள்.

காலை டிபன் - நான் சாப்பிட்ட இட்லிகளும் பூரிகளும்.




சீனா அய்யாவும் ஜாக்கி சேகரும்


மதிய உணவு-

சைவம்


நம்மோடது


தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.


அனைவருக்கும் வணக்கம். விவரங்கள் அதிகம் வேண்டுமென்பவர்கள் கதிர் பதிவு போடும் வரை பொறுத்திருக்கவும்.

21 கருத்துகள்:

  1. //ஈரோடு கதிர் (விழா நாயகன்)//

    ஆமாங்ணா... மாப்பு இந்த வருசமும் அல்லாத்தையும் நல்லா கவனிச்சிருக்காரு... உங்க அல்லார்த்துக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்!!

    பதிலளிநீக்கு
  2. சூப்பர் சார். சூடான பதிவு தான். சுடச்சுட இன்றே கொடுத்து அசத்தி விட்டீர்கள். பாராட்டுக்கள். vgk

    பதிலளிநீக்கு
  3. மனம் நிறைய மகிழ்ச்சியை வரவழைத்தது இந்தப் பதிவு.. பதிவர் சங்கமத்தில் கலந்துகொள்ளமுடியாத ஏக்கத்தை பதிவின் வாயிலாக தீர்த்துவிட்டீர்கள்.. பகிர்வுக்கு நன்றி அன்பு சகோதரரே..!

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் ஐயா..

    பதிவர் சங்கமத்திற்க்கு வந்திருருந்து உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியடைந்தேன்

    போட்டோ ஒவ்வொன்றும் அருமை.

    நம் அனைவரையும் ஒன்றிணைத்த ஈரோடு பதிவர் குழுமத்திற்க்கு மிக்க நன்றிகள்

    அன்புடன்
    சம்பத்குமார்
    தமிழ்பேரன்ட்ஸ்

    பதிலளிநீக்கு
  5. அருமை ஐயா
    உங்களின் ஆர்வம் & வேகம் பாராட்டுதலுக்கு உரியது.

    பதிலளிநீக்கு
  6. படங்கள் இணைப்பு அருமை... தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.....

    பதிலளிநீக்கு
  7. வணக்கம்! ஈரோடு வந்து உங்களைப் போன்றவர்களை சந்திக்க நினைத்தேன்.சூழ்நிலை வர இயலாமல் போய் விட்டது.கட்டுரைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  8. அடடா...மிஸ் பண்ணிட்டனே.....உங்க பதிவு சூப்பர்.

    பதிலளிநீக்கு
  9. //தமிழ்நாட்டின் மூத்த பதிவரைப் பார்த்துக் கொள்ளுங்கள்.(நடுவில் இருப்பவர்) போனால் வராது.//

    சூப்பர் சார், மிகவும் இளைஞர் ஆக அல்லவா தெரிகிறார். மகிழ்ச்சி.

    படத்தில் காட்டியுள்ள பூரிகளுக்காக மட்டும்
    தமிழ்மணத்தில் 2 ஆவது வோட்

    and

    இட்லிகளுக்காக இன்ட்லியில் 10 ஆவது வோட்
    என்னுடையவை.

    அன்புடன் vgk

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் ஐயா,
    விழா இடம் பெற்ற இடம், பரிமாறப்பட்ட உணவு, அறிமுகம் பற்றிய அருமையான விளக்கப் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

    தமிழகத்தின் மூத்த பதிவர்..
    சாதத்தை போட்டு வைத்திட்டு சாப்பிடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறாரே!

    பதிலளிநீக்கு
  11. படங்கள் விளக்கக் குறிப்புக்களோடு அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  12. //நிரூபன் said...
    தமிழகத்தின் மூத்த பதிவர்..
    சாதத்தை போட்டு வைத்திட்டு சாப்பிடாமல் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறாரே!//

    உணவுக்கு வணக்கம் சொல்லுகிறார்.

    பதிலளிநீக்கு
  13. பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா. கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு வாழ்த்துகள். படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  14. அருமையான பதிவு.
    அருமையான புகைப்படங்கள். நேரில் பார்த்தது போன்ற உணர்வு.
    நாங்கள் கலந்து கொள்ள முடியாததை பெரிய இழப்பாக கருதுகிறோம்.
    நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  15. சார் நீங்கள் மேடையில் பேசிய போது பார்த்தேன். நேரில் பேச முடியாமல் போய் விட்டது. நகைச்சுவையாய் பேசினீர்கள்

    பதிலளிநீக்கு
  16. ஈரோடு பதிவர் சந்திப்பில் எடுத்த போட்டோக்கள் அருமை அய்யா. பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  17. ஈரோடு பதிவர் சந்திப்பு கண்டு மகிழ்ந்தோம்.

    பதிலளிநீக்கு