புதன், 4 ஜனவரி, 2012

2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.



மனித மனம் எப்போதும் இன்பத்தையே விரும்புகிறது. துக்கத்தை வெறுக்கிறது. இது இயற்கை. ஆனாலும் இன்பம் துன்பம் இரண்டமே கலந்துதான் வாழ்க்கை அமைகின்றது. இதில் துன்பத்தை விலக்கி இன்பத்தை மட்டுமே அனுபவிப்பது என்று எனது பதிவுலக வாழ்க்கையில் அனுபவ பூர்வமாக தெரிந்து கொண்டவைகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

யாரோ ஒருவன் சொன்னானாம். “என் உயிரே போவதாக இருந்தாலும் சரி, நான் இந்த சுகத்தை பூரணமாக அனுபவிக்கப்போகிறேன்.”

நான் அப்படியெல்லாம் உயிரை விடுவதாக இல்லை. ஆனாலும் உயிரை விடாமலேயே இன்பமாக இருக்க பல வழிகள் இருக்கும்போது எதற்காக வீணாக உயிரை விடுவானேன்.

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்என்கிற பரந்த மனப்பான்மையின் காரணமாக அந்த வழிகளை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.  

   1.   வம்பு பேசுதல்.

இரண்டு நண்பர்கள் பேசினால் அவர்கள் பேசுவது மூன்றாவது நண்பனைப்பற்றித்தான் என்று ஒரு பொன்மொழி உண்டு. காரணம் இந்த மாதிரி வம்பு பேசுதில் உள்ள இன்பம் வேறு எதைப் பற்றி பேசுவதிலும் இல்லை. அந்த மூன்றாவது நண்பன் உண்மையான நண்பனாக இருந்தால், மற்ற இருவரும் அவனைப்பற்றி பேசி இன்புற்றார்கள் என்று தெரிந்தால் மிகவும் சந்தோஷப்படவேண்டும்.

இந்தக் காரணத்தினால்தான் நண்பர்கள் எங்காவது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் அங்கு தவறாது ஆஜர் ஆகி விடவேண்டும். இல்லையென்றால் அன்றைய தாளிப்புக்கு நீங்கள்தான் கருவேப்பிலை.

   2.   அடுத்தவர் சண்டையை வேடிக்கை பார்த்தல்.

இதில் நமக்கு ஒரு பாதிப்பும் இல்லை. வெறும் இன்பம் மட்டுமே. அதிலும் நிஜ உலகத்தில் நடப்பவைகளை விட பதிவுலகத்தில் நடக்கும் சண்டைகளே அதிக சுவாரஸ்யமும் பரபரப்பும் உள்ளவை. நமக்கு எந்த விதமான ரிஸ்க்கும் கிடையாது. இதில் ஒரே வருத்தம் என்னவென்றால் தற்சமயம் பழைய மாதிரி சண்டைகள் அடிக்கடி நடப்பதில்லை. முற்போக்கு பதிவர்கள் இந்த நிலையை மாற்ற முயற்சிகள் எடுத்தால் நன்றாக இருக்கும்.

   3.   டெம்ப்ளேட்/எமோடிகான் பின்னூட்டங்கள் போடுதல்.

ஆஹா, இதில் இருக்கும் த்ரில் + இன்பம் வேறு எதிலும் கிடையாது. இந்த கமென்ட்டுகளைப் பார்க்கும் பதிவர்கள் உடனே கயிற்றை எடுத்துக்கொண்டு புளியமரத்தை தேடிக்கொண்டு ஓடவேண்டும்.

   4.   மொக்கைப் பதிவுகள் போடுதல்.

அந்தப் பதிவுகளைப் படிக்கும் வாசகர் அதன் பிறகு பதிவுலகையை திரும்பிப் பார்க்கக் கூடாது. எவ்வளவுக் கெவ்வளவு மொக்கை போடுகிறாரோ அந்த அளவு அவர் பிரபலமாவார். அதனால் வரக்கூடிய இன்பமே இன்பம். (அடுத்த பதிவர் சங்கமத்தில் அதிக மொக்கை போட்டவர்களுக்கு ஒரு விருது கொடுக்குமாறு அமைப்பாளர்களைக் கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் மொக்கைகள் அதிகரிக்கும்). அப்படி கொடுக்காவிட்டால் மொக்கைப் பதிவர்கள் சங்கமம் என்று தனியாக ஆரம்பிக்கப்படும் என்று எச்சரிக்கிறேன்.

   5.   பதிவர்கள் சந்திப்பு.

இவை நடந்தால் எல்லோருக்கும் ஆனந்தமே. கலந்து கொண்டால் நல்ல விருந்து சாப்பிடலாம். கலந்து கொண்டாலும்  கொள்ளாவிட்டாலும் நாலைந்து பதிவுகளுக்கு மேட்டர் தேத்தி விடலாம். என்ன ஒரு இன்பமான நிகழ்வு. வம்பு பேசுவதற்கும் நல்ல, நல்ல ஆட்களின் அறிமுகம் கிடைக்கும். ஏன் ஈரோட்டிலும் நெல்லையிலும் மட்டும் இந்த சந்திப்பு நடக்கவேண்டும். மற்ற ஊர்க்காரர்களுக்கு மானம் ரோஷம் இல்லையா? மற்ற இடங்களிலும் நடந்தால் அப்புறம் பதிவர்களுக்கு எழுத விஷயத் தட்டுப்பாடே இருக்காது. இதுதான் டாப் இன்பமான சமாசாரம்.

   6.   ஓசியில் சினிமா பார்த்தல்.

பிரிவியூ ஷோவிற்கு அழைப்பிதழ் கிடைத்து பஜ்ஜி காப்பியுடன் சினிமா பார்க்கும் இன்பமே இன்பம். என்ன ஒரே பின்விளைவு என்றால் அதைப் பற்றி உயர்வாக ஒரு விமர்சனம் நம் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எழுதி பதிவில் போடவேண்டும்.

2013 ம் வருடத்திற்கான இன்பமாக இருப்பது பற்றிய வழிகள் அடுத்த வருடப் பிறப்பு அன்று பதிவிடப்படும்.

20 கருத்துகள்:

  1. கேள்வி: ஏன் சார், இந்த வயசில இப்படி?

    பதில்: பின்ன எப்ப ? உசுரு போனதுக்கு அப்புறமா?

    பதிலளிநீக்கு
  2. தலைப்பே ஒருவித சந்தோஷத்தை கொடுக்கின்றது - இதை வச்சே 2012ஐ ஓட்டிடலாம் !
    Dr.ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
  3. இன்பத்திற்கான வழிகள் எளிதாகத்தானே இருக்கு
    சொல்லிப்போன விதமும் அழகாக இருக்கு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
    த.ம 4

    பதிலளிநீக்கு
  4. ////பிரிவியூ ஷோவிற்கு அழைப்பிதழ் கிடைத்து பஜ்ஜி காப்பியுடன் சினிமா பார்க்கும் இன்பமே இன்பம். என்ன ஒரே பின்விளைவு என்றால் அதைப் பற்றி உயர்வாக ஒரு விமர்சனம் நம் மனச்சாட்சியை அடகு வைத்துவிட்டு எழுதி பதிவில் போடவேண்டும்.
    ////

    ஹி.ஹி.ஹி.ஹி சரியாகச்சொல்லியுள்ளீர்கள்

    மொக்கை பதிவுகளுக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் என்றும் இருக்கு பாஸ் அருமையான பகிர்வு

    பதிலளிநீக்கு
  5. //Ramani said...

    இன்பத்திற்கான வழிகள் எளிதாகத்தானே இருக்கு
    சொல்லிப்போன விதமும் அழகாக இருக்கு
    அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து
    த.ம 4//

    ஆனா பாருங்க, சுலபமான வழியை நிறையப் பேர் தேர்ந்தெடுப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  6. Rathnavel said...

    நல்ல பதிவு.
    மகிழ்ச்சி.
    நன்றி ஐயா.

    நன்றி, ரத்னவேல். எப்படியாச்சும் வாரத்திற்கு ரெண்டு பதிவாச்சும் போடலேன்னா, பதிவுலகம் ஜாதிப்பிரஷ்டம் பண்ணீடுவாங்களே!

    (ஜாதிப்பிரஷ்டம் = சரியான வார்த்தையான்னு சந்தேகமா இருக்கு. யாராச்சும் தெளிவுபடுத்தினா நல்லாயிருக்கும்)

    பதிலளிநீக்கு
  7. //ஆகாயமனிதன்.. said...

    தலைப்பே ஒருவித சந்தோஷத்தை கொடுக்கின்றது - இதை வச்சே 2012ஐ ஓட்டிடலாம் !
    Dr.ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !//

    இதை வச்சே 2012ஐ ஓட்டிடலாம்-அதுதான் மெய்ன் ஐடியாங்க.

    பதிலளிநீக்கு
  8. வாரம் 2 பதிவு போட்டாகணுமா? இப்பவாவது சொல்லித் தந்தீங்களே, நன்றிங்க!

    பதிலளிநீக்கு
  9. @Palaniappan Kandaswamy said...
    கேள்வி: ஏன் சார், இந்த வயசில இப்படி?

    பதில்: பின்ன எப்ப ? உசுரு போனதுக்கு அப்புறமா?
    //

    கோயமுத்தூர் குசும்பு!!!!...

    பதிலளிநீக்கு
  10. 2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.
    வாழ்த்துகள்...

    அருமையான எளிய வழிமுறைகளை
    இயம்பியதற்குப் பாராட்டுக்கள் ஐயா..

    பதிலளிநீக்கு
  11. //இராஜராஜேஸ்வரி said...

    2012 ம் வருடத்தில் இன்பமாக இருக்கப் போகிறேன்.
    வாழ்த்துகள்...

    அருமையான எளிய வழிமுறைகளை
    இயம்பியதற்குப் பாராட்டுக்கள் ஐயா..//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  12. மிகவும் சிறப்பான கருத்துகளை பதிவு செய்து இருக்கிறீர்கள் உண்மையில் பாராட்டுகளும் நன்றி களும்

    பதிலளிநீக்கு
  13. உங்க ஐடியா சூப்பர் சார். நானும் ஃபாலோ பண்றேன்.

    பதிலளிநீக்கு
  14. இரண்டு மூன்று பதிவுககளையும் தொடர்ச்சியாக படித்து வந்த போது கேட்க நினைத்த கேள்வி

    ஏனிந்த கொல வெறி?

    பதிலளிநீக்கு
  15. தாங்கள் தான் "கும்மி அடிப்போர் சங்க கௌரவ செயலாளர் " என்பதை இங்கே நினைவு கூறுகிறேன்.
    மறந்துபோச்சா??? சென்ற வருட ,அதற்கும் முந்தய உங்கள் பதிவுகளை பார்க்கவும்.

    அதுசரி....இனிது இனிது ஏகாந்தம் இனிது......இதை நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்.
    இன்பம், துன்பம் என்ற வரையறைகளை கடந்த மன அமைதிதானே இயல்பானது?

    பதிலளிநீக்கு
  16. //கக்கு - மாணிக்கம் said...

    தாங்கள் தான் "கும்மி அடிப்போர் சங்க கௌரவ செயலாளர் " என்பதை இங்கே நினைவு கூறுகிறேன்.
    மறந்துபோச்சா??? சென்ற வருட ,அதற்கும் முந்தய உங்கள் பதிவுகளை பார்க்கவும்.

    அதுசரி....இனிது இனிது ஏகாந்தம் இனிது......இதை நான் சொல்லியா உங்களுக்கு தெரியவேண்டும்.
    இன்பம், துன்பம் என்ற வரையறைகளை கடந்த மன அமைதிதானே இயல்பானது?//

    வருகைக்கு நன்றி.

    வர வர மறதி அதிகமாகின்றது. என் கௌரவ செயலாளர் பதவியை கௌரவத் தலைவராக உயர்த்தும்படி கேட்டுக் கொள்கிறேன். தலைவர்னா சும்மா தூங்கலாம்.

    ஏகாந்தமாக இருப்பதால்தான் ஜோதிஜி சொன்ன மாதிரி இந்த கொலவெறி. ஜோதிஜி சொன்னதைப் பார்க்க அடுத்த பின்னூட்டத்திற்குப் போகவும்.

    பதிலளிநீக்கு
  17. //ஜோதிஜி திருப்பூர் said...

    இரண்டு மூன்று பதிவுககளையும் தொடர்ச்சியாக படித்து வந்த போது கேட்க நினைத்த கேள்வி

    ஏனிந்த கொல வெறி?//

    பதிவுலகத்தை ஏதாச்சும் பண்ணீடறதா ஏகோபித்த முடிவு பண்ணியாச்சு. அதனால்தானுங்க இந்த கொலவெறி.

    அப்புறம் திரும்பவும் பேர மாத்திட்டனே, கவனிச்சீங்களா?

    பதிலளிநீக்கு
  18. Nejamave mudiyale! pathivulahathile oorugaa aahaama irukanumna naama anga ooruha poduranvangala irukanum.... Apdiya Ayya?

    பதிலளிநீக்கு