அனைவருக்கும் வணக்கங்கள்.
நிஜமா நாளைக்குத்தான் பொங்கல். இன்றைக்கு போகி. இது தமிழர் பண்டிகையா இல்லையா என்ற ஆராய்ச்சி நமக்கு வேண்டாம். இன்று சங்கராந்திப் பொங்கல் என்று ஒன்று வைப்பார்கள். மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.
நான் சொல்ல வந்தது என்னவென்றால் இன்று கிராமங்களில் ஊருக்கு வெளியே சொக்கப்பனை கொளுத்துவார்கள். இது என்னவோ சிறுவர்களின் விளையாட்டு என்று பலர் கருதினாலும் இதில் உள்ள தத்துவத்தை எல்லோரும் புரிந்து கொண்டால் நன்மை பயக்கும்.
சொக்கப்பனையில் வேண்டாத பொருட்களை எல்லாம் போட்டு எரிப்பார்கள். இது ஒருவகையில் வீட்டை சுத்தம் செய்யும் காரியம். இதனுடன் கூடவே மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும்.
என்னுடைய ஆசைக் கனவு இது.
இனிய காலை வணக்கம் ஐயா,
பதிலளிநீக்குதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
சொக்கப்பனை எரித்தல் மூலம் எம் மன அழுக்குகளையும் களைவது தொடர்பில் அருமையாகச் சொல்லியிருக்கிறீங்க. இன்றைய காலத்தில் சொக்கப் பனை எரித்தல் எனும் விடயத்தினைக் காண்பதே அபூர்வமாகி விட்டது.
சொக்கப்பனை கொளுத்துவதின் உண்மைத் தத்துவம் அதுதானே.
நீக்குஅய்யா அவர்களுக்கு வணக்கம்!
பதிலளிநீக்கு//மனிதர்கள் தங்கள் மனதில் சேர்ந்திருக்கும் வேண்டாத எண்ணங்களையும் அந்த சொக்கப்பனையில் போட்டு எரித்து விட்டால் நாடு நலம் பெறும். என்னுடைய ஆசைக் கனவு இது.//
தங்கள் ஆசைக் கனவு நிறைவேறட்டும். உளங்கனிந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
என்னுடைய ஆசைக் கனவு இது.//
பதிலளிநீக்குபொங்கல் சிறப்புப் பதிவு அருமை
தங்கள் ஆசை நிறைவேற எனக்கும் ஆசை
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
இனிய பொங்கல் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
த.ம 4
நன்றிகள் பல.
நீக்குஐயா இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநட்புடன் ,
கோவை சக்தி
நன்றியும் வாழ்த்துக்களும்.
நீக்குநல்லதொரு பகிர்வு. தங்கள் ஆசை நிறைவேறட்டும்.
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
நீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குஎங்கள் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
நன்றி, ரத்னவேல்.
நீக்குஇனிய பொங்கல் வாழ்த்துகள் ஐயா..
பதிலளிநீக்குஉங்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
நீக்கு//மேல் விபரம் வேண்டுபவர்கள் திருமதி இராஜராஜேஸ்வரியின் தளத்திற்கு சென்று பார்த்துக்கொள்ளவும்.//
பதிலளிநீக்குhttp://jaghamani.blogspot.com/2011/12/blog-post_21.html
வசந்தத் திருநாள் பொங்கல்...
நன்றி ஐயா..
உங்கள் பதிவை எதிர்பார்த்து முன்பே எழுதி விட்டேன். பதிவிட்டதற்கு நன்றி.
நீக்குஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
பதிலளிநீக்குநாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
[நன்றி: ஆண்டாள்]
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்
ஹரி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
பதிலளிநீக்குநாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெலூடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குட நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
[நன்றி: ஆண்டாள்]
அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துகள்
ஹரி
நன்றி ஹரி அவர்களே. ஏன் நீங்கள் அறிவு ஜீவி இல்லையென்கிறீர்கள்? நான் சொல்லுகிறேன், நீங்கள் அறிவு ஜீவிதான்.
நீக்குபொங்கல் வாழ்த்துக்கள் ..சொக்கப்பனை கொளுத்துவதை படித்தவுடன் வயிறு எரிகிறது,
பதிலளிநீக்குஅவ்வளவு அழுக்கு மனத்துள்!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும்
பதிலளிநீக்குஇனிய பொங்கல் தொடரும் பண்டிகை வாழ்த்துக்கள்.
நன்றி சார்,
பதிலளிநீக்குநான் அறிவுஜீவி என்று சொன்னால் அதை ஒத்துகொள்ள மாட்டேன். எந்தரோ மகானு பாவுலு அந்தரிகி வந்தனமுலு என்று சொல்லவே என்னை அறிவுஜீவி இல்லை என்று சொன்னேன் .
மாயனை என்ற பாசுரத்தில், வாயினால் பாடி , மனத்தினால் சிந்திக்க, உத்தராங்க பூர்வாங்க கர்மங்களை, தீயினில் தூசு ஆக்கும் செப்படி வித்தையை ஆண்டாள் சொல்லி தருகிறாள்.
தங்களின் உடல்நலத்திற்காக ஆண்டவன் தாள் பணிகிறேன்.